Sunday 22 September 2019

பூசலார்   திடுக்கிட்டார் .  தம்   மனதிற்குள்   ஆலயம்   எழுப்புவது   தன்னையன்றி    ஓர்  ஈ   எறும்பு  கூட   அறியாதே    மன்னவர்   எவ்வாறு   அறிந்தார்   என்று   அதிசயித்து    'மன்னவா   ஆலயமா ?  தடுமாறினார் .  அரசன்   இரவு   தன்   கனவில்  ஈசன்   தோன்றி   கூறியதை   பூசலாரிடம்   வியப்புடன்   தெரிவித்தார் .  கும்பாபிஷேகத்தை   காணவே   தான்   அவசரமாக   விடிகாலையிலேயே   கிளம்பி   ஆலயத்தில்   பிரவேசிக்கும்   ஐயனை   மனம்   குளிர   தரிசிக்க   வந்ததாக   அரசன்   ஆச்சர்யத்துடன்   தெரிவித்தார் .  பூசலார்   கண்கள்   கண்ணீரை   சொரிந்தது .  அவரால்   உணர்ச்சியை   கட்டுப்படுத்த   இயலவில்லை .  மன்னவா   நான்    ஆலயம்   எழுப்ப   பேராவல்   கொண்டது   உண்மை .  ஆனால்   அது   நிறைவேறாது   போனதால்   என்   மனதிலேயே   ஆலயம்    எழுப்பினேன் .  என்   ஏமாற்றம்   தணிய   அவ்வாறு   செய்து   இப்போது   கட்டி   முடிந்து   கும்பாபிஷேகம்    நடக்கும்   தருவாயில்      இருப்பதாக    கூறி  விட்டு   இதோ   தயாராக    இருக்கிறது  .  அர்ச்சகர்கள்   தயாராகி   கொண்டிருக்கிறார்கள் .   எம்பெருமான்   என்னையும்   ஒரு   பொருட்டாக   மதித்து   உன்னையும்   அனுப்பி   இருக்கிறாரே !   கண்களில்   நீர்   ததும்ப   உணர்ச்சி  வசப்பட்டு           மன்னரை   நீயும்   தரிசிக்க   வேண்டாமா ?  என்று   கூறி   அவர்   கையை   தன்   மார்பில்   வைத்து   அவரை   அணைத்து   கொண்டார் .

No comments:

Post a Comment