Wednesday 31 July 2019

தொண்டை   நாட்டில்   திருவொற்றியூர்   என்னும்   இடத்தில்   சேணியர்   குலம்   சேர்ந்த   கலியன்   என்பவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  ஒற்றியூர்   உடையாரிடம்   அளவு   கடந்த  பக்தி   கொண்டிருந்தார் .  தம்   செக்கில்   ஆட்டிய   எண்ணெய்   கொண்டு   அவர்   ஆலயத்தில்    இரவும்   பகலும்   விளக்கேற்றி   மகிழ்ச்சி   அடைவார் .  அவருடைய   பெருமை   உலகம்   அறிய   செய்ய   எம்பெருமானுக்கு   ஆவல்  உண்டாயிற்று .     அதன்   விளைவு   கலியனுடைய   செல்வம்   குறைய   ஆரம்பித்தது .     வேலை   செய்து   சம்பாதிக்கும்   நிலை .   எண்ணெய்    வாங்கி   லாபத்தில்   விற்று   தம்   கடமையை   தொடர்ந்தார் .  அதற்கும்   போட்டி   ஏற்பட்டு   அதுவும்   வருமானம்   குறைந்தது .  வேலை   செய்து   சம்பாதிக்கவும்   போட்டி   அதிகமாக   இருந்தது .  அவர்   கடைசியில்        தன்   மனைவியை    விற்று   தன்   கடமையை      தொடர   துணிந்தார் .   ஆனால்   சிவத்தொண்டரின்   மனைவியை   வாங்க   யாரும்   துணியவில்லை .  அவர்   மனமுடைந்து   போனார் .  மாலை   வந்தது .  விளக்கேற்ற      என்   செய்வது ?  வேதனை   வாட்டியது.  சட்டென்று   ஒரு   முடிவுக்கு   வந்து   தன்   ரத்தத்தில்   கொழுப்பு   உள்ளது  அதை  எடுத்து  ஊற்றலாம்     என்ற   முடிவுடன்   தன்  கையை   விட்டிக்கொள்ள   முனைந்தார் .  விட்டுவிடுவாரா  ஐயன் .  அவன்   கையை   பிடித்து   தடுத்து   ரிஷபாரூடராய்   அவருக்கு   காட்சி   கொடுத்து   அவரை   ஏற்றுக்கொண்டார் ..

Thursday 25 July 2019

கலிக்காமர்   தன்   மனைவியின்  முகமாற்றத்தையும்   அடியாரின்    முகத்தையும்   கண்டதும்    அவருக்கு   மனைவியின்   தயக்கத்திற்கு   காரணம்  விளங்கி   விட்டது .  அவர்  கோபம்   எல்லை   மீறியது .  அவள்   கையில்   நீரை  தட்டிவிட்டு   அவள்   கையை   நீட்ட   சொல்லி   அரிவாளால்   வெட்டி   எறிந்தார் .   பிறகு    தானே   அவர்   பாதங்களை    கழுவினார் ..  தர்மம்   தவறாத   அவர்   மனைவியும்   தன்   தவறுக்காக   மிக   வருந்தி   தன்னை   மன்னித்து   விடும்படி   ஈசனிடம்   மன்றாடினாள் .    ஒருவன்   திருநீறு   பூசி   உன்   அடியாராக   ஆடை   அணிகிறானோ   அப்போதே   அவன்   பு னி தனாகிறான் .   அதை   அறிந்தும்   நான்   தவறு   செய்து   விட்டேனே .  என்று   மிக   வருந்தி   ஈசனிடம்   தன்னை   மன்னித்து   அருள  வேண்டுகிறாள் .  கருணைக்கடலான   ஈசன்  மன்னித்து   வெட்டுண்ட   அவள்   கை   மீண்டும்   வளர   செய்கிறார் .  மகிழ்ந்து   தம்பதிகள்   வெகு  காலம்   எம்பெருமான்   அடியார்களாக   வழ்ந்து   சிவமாகினார்கள் .

Wednesday 24 July 2019

கை   தடிந்த   வரிசிலையான்   கலிக்கம்பர்     கலியன் |

பெண்ணாகடம்   எனும்  ஊரில்   கலிக்கம்பர்   என்றொரு   சிவனடியார்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   எம்பெருமானிடம்   கொண்ட   பக்தி   வியக்கத்தக்கது .  அடியார்களிடம்   அவர்   கொண்ட   மரியாதை   கலந்த   பக்தி   சொல்லில்   அடங்காது .   அவர்   மனைவியும்   அவருக்கு   தக்க   துணையாவார் .   வரும்   அடியாரை   அமர   வைத்து   அவர்   பாதங்களை   நீரால்   கழுவி   பூஜித்து   பிறகு   அமர   செய்து   அமுது   படைப்பார் .     இவ்வாறு   அடியார்களை   பேணுதல்   செம்மையாக   நடந்து   கொண்டிருக்கையில்   ஒரு   நாள்   ஒரு   அடியார்   வந்தார் .  அம்மையார்   அவரை   பார்த்தவுடன்   திடுக்கிட்டார் .   அவன்   முன்பு   இவர்    வீட்டில்   வேலைக்காரனாக   இருந்தவன் .  எதோ   மனக்கசப்பில்    சண்டையிட்டுக்கொண்டு   வேலையை   விட்டு   பிறகு   எவ்வாறோ   சிவ   தொண்டனாகி   இருக்கிறான் .  ஆகையால்   அம்மையாருக்கு    ஒரு வெறுப்பு   கலந்த   தயக்கம் .    

Saturday 20 July 2019

அதிபத்தரின்   இச்செய்கை   சுற்றி   உள்ளோரை   வெறுப்படைய   செய்தது ..  அவர்   சாப்பாட்டிற்கு   கூட   வழியில்லாமல்   தவிப்பது   அவர்களை   சங்கடப்படுத்தியது .  தாங்கள்   சொல்வதை   அவர்   செவிசாய்க்கவில்லை   என்ற   வருத்தம்   அவர்களுக்கு .  அவர்   மிக   ஏழ்மை   நிலைக்கு   வந்து   உண்ண   உணவின்றி   அவதிப்பட்டார் .   அப்படி   இருந்தபோது   ஒரு   நாள்   வலையில்   ஒரு   மீன்   அகப்பட்டது.  அதை   அவரிடம்   கொடுத்தனர் .  அவர்   வழக்கப்படி   அதை   கடலில்   எறிந்தார் .  ஆனால்     நவரத்தினங்கள்   புதைக்கப்பட்ட   தங்க   மீன்   வலையில்   சிக்கிக்கொண்டிருந்தது .  அதை   சம்பட வர்கள்   மகிழ்ச்சியுடன்   அவரிடம்   கொடுத்தனர் .  அவர்   இத்தகைய   அபூர்வமான   விலையுர்ந்த   பொருள்   ஐயனை   உரியது  .  தாம்   எடுத்துக்கொள்வது  தகாது   என்று   அதையும்   கடலில்   எறிந்து  விட்டார் .   அந்த   மீன்   எம்பெருமானாக   மாறி   விடை   ஏறி   உமை   அன்னையுடன்   அவருக்கு   காட்சி   அளித்து   அவரையும்   தன் தொண்டர்   குழாத்தில்   சேர்த்துக்கொண்டார் .  ஐயன்   அன்புக்கு   எல்லை   ஏது  ?    

Thursday 18 July 2019

விரிதிரை   சூழ்கடல்   நாகை   அதிபத்தர்க்கு   அடியேன் |

பொன்னிநாட்டில்   சமுத்திர   கரையில்   நாகப்பட்டினம்   எனும்   நகரம் .  அவ்வூர்   சம்படவர்களின்   தலைவர்   அதிபத்தர்  என்பவர் .  அவர்   சிவபெருமான்   மீது   ஆழ்ந்த   பக்தி   உடையவர்.  தினமும்   அவருக்காக  பிடிக்கும்   மீன்களில்      மிக   சிறந்த   மீனை   சிவபெருமானுக்காக   தண்ணீரில்   விட்டு   விடுவார் .  என்றாவது   ஒரே   மீன்தான்   சிக்கியது   என்றாலும்   சிறிதும்   தயக்கமின்றி   உள்ளன்போடு   அதை   ஐயனுக்கு   அர்ப்பணிப்பார் .    ஐயன்   அவரை   சோதிக்க    எண்ணம்   கொண்டார் .  தினமும்   ஒரேயொரு   மீன்   கிடைக்கும்படி    செய்தார் .  அவர்   சிறிதும்   மனம்   கலங்காமல்  அதை   ஐயனுக்கு   சமர்ப்பித்தார் .   மற்றவர்கள்   தனக்கு   மிஞ்சி   தான்   தானம்   என்று   தடுக்க   முயற்சி   செய்தனர் .

Monday 15 July 2019

மெய்யடியான்   நரசிங்க   முனியாரையர்க்கு   அடியேன் |

 திருமுனைப்பாடி   எனும்  ஊரை  நரசிங்க   முனையாராயர்   எனும்   அரசன்   ஆண்டு   வந்தான் .  அவன்   மிகச்சிறந்த   சிவபக்தன் .  சிவன்   வணங்காத   அரசர்களை   வென்று   அவர்களை   சிவத்தொண்டு   செய்ய   வைப்பான் .  சிவனடியார்களுக்கு    நிறைய   உதவிகள்   செய்வான் .  எல்லா   ஆலயங்களிலும்   நித்திய   பூஜைகள்   குறைவின்றி   நிறைவேற   சிறந்த   ஏற்பாடுகள்   செய்வான் .  எல்லா   திருவாதிரை   நாட்களிலும்   அடியார்களுக்கு   பொன்   கொடுத்து   மகிழ்வான் .   ஒரு   வருடம்   திருவாதிரை   நாளில்   வந்தவர்களில்   ஒருவன்   வேடதாரி   உண்மை   சிவ   பக்தன்   அல்லன் .   அந்த   வேடதாரி   காமம்   மிகுந்தவனாக    இருந்தான் .  இது   மற்ற   அடியார்களுக்கு   வெறுப்பளித்தது .  அவனை   ஒதுக்கி         வைத்தனர் .  அது   மன்னனுக்கு   வேதனை   அளித்தது .  அவனை   மதிக்காவிட்டாலும்    அவன்   நெற்றி   திருநீற்றிற்கும்  அவன்   அணிந்த   உடைக்கும்   தரவேண்டும்   என்று    அரசன்   விரும்பினான் .  அவனுக்கு   அதிகமாகவே    பொன்   வழங்கினான் .  வந்திருந்த   எல்லோரும்   வெட்கி   தலை   குனிந்தனர் .  தோற்றத்திற்கு   மரியாதை   கொடுத்த   அவரை   வெகுவாக   புகழ்ந்தனர் .   அரசன்   அவ்வாறே  வாழ்ந்து   சிவனடி   சேர்ந்தார் ...

Monday 8 July 2019

அரசன்   வெட்டுண்ட   தலைகளை   கண்டபோது   அதில்   ஜடாமுடியுடன்   ஒரு   தலையை   கண்டதும்    பேரதிர்ச்சி   அடைந்தார்   தான்   பக்தியுடன்       வணங்கி   போற்றும்  ஒரு       சிவனடியாரை   கொல்வதற்கு    தானே   காரணமாகி     விட்டதை   அவரால்   பொறுத்துக்   கொள்ள   முடியவேயில்லை .   கண்ணீர்   விட்டு   கதறினார் .  அவரை   சமாதானம்   செய்யவே   முடியவில்லை .   தன்னை   மன்னித்துக்கொள்ள   அவர்   தயாராகவே   இல்லை .   ஈசனிடம்   கதறினார் .   ஒரு   முடிவுக்கு   வந்தவராய்   சிவனடியார்   தலையை   ஒரு   தங்க   தட்டில்   ஏந்தி   கையில்   எடுத்து   கொண்டு   தீ   வளர்க்க   செய்து   அதில்   புகுந்து   தன்னை   மாய்த்துக்   கொண்டார் .  அடியார்   ஒருவர்   இறக்க   தான்   காரணமானதை   பொறுக்க   இயலாமல்     தன்   உயிரை   தியாகம்     செய்த   புகழ்   சோழனின்   தூய   அன்பு   நெறியை    போற்றி   எம்பெருமான்   அவரை   தன்னிடம்   சேர்த்துக்   கொண்டார் .    

Sunday 7 July 2019

திரை   செலுத்த   வந்த   அதிகாரிகள்   சென்ற  பின்   அரசர்   இன்னும்   திரை  செலுத்தாமல்   தம்   ஆதிக்கத்தை   எதிர்ப்போர்   யாராவது  . இருக்கிறார்களா   என்று   வினவினார் .  அதற்கு   அமைச்சர்   அதிகன்   எனும்   அரசன்   மலைகளுக்கு   நடுவே   அவன்   ஊர்   இருப்பதால்   தன்னை   வெல்ல   முடியாது   எனும்   இறுமாப்புடன்  பேசுவதாகவும்   தெரிவித்தார் .  அரசன்   மிக்க   சினமடைந்து   உடனே   நால்வகை    சேனையுடன்   சென்று   அவனை   தலை   பணிய   செய்து   திரை   வசூலித்து   வருமாறு   ஆணையிட்டார் .   அவ்வாறே   சேனைகள்   புறப்பட்டன .  பெரும்   சேனையை   கண்ட   அதிகன்   தலை   மறைவாகி   விட்டான் .  படை   வீரர்கள்   கிடைத்தோர்   தலைகளை    சீவி    ஊரை   கொள்ளை   அடித்து   ஏராளமான   திரவியங்களை   கொள்ளை   அடித்து   கொண்டு   வந்தனர் .  சேனை   தலைவன்   தன்   வெற்றியை   பறை   சாற்ற   பண   குவியலையும்   தலைகள்   குவியலையும்   சமர்ப்பித்தான் .

Tuesday 2 July 2019

சோழ   மன்னன்   செய்தி   கேட்டு  பதைப்புடன்   அவ்விடத்திற்கு   வந்தார் .  நடந்த   விவரங்களை   கேட்ட   மன்னர்   மிக்க   துக்கமடைந்து     ஒரு   சிவனடியார்க்கு   நேர்ந்த  இந்த   துன்பம்   அவரை   மிகையாக   பாதித்தது .   எறிபத்தர்   செய்தது   ஞாயமே   என்று   கூறிய   அரசன்   அந்த    யானைக்கு   சொந்தக்காரன்   என்ற   பொறுப்பில்   தானும்   தண்டனைக்கு    உரியவனே   என்று   கூறி   தன்னை   மாய்த்துக்கொள்ள   முயன்றார்.       உடனே   எறிபத்தர்     இத்தனை   நல்ல   உள்ளம்   படைத்த   மன்னனை   தாம்   மனவேதனைக்கு    உள்ளாக்கியதை   நினைந்து   அவரும்    தம்மை       மாய்த்துக்கொள்ள     தயாரானார் .    கருணை   கடலான   ஐயன்   தோன்றி   யானையையும்   பாகனையும்   உயிர்பெற   செய்தார் .