Wednesday 13 April 2016

திருமந்திரம்  அறிவு  சமுத்திரம் . அதில்  என்னால்  அள்ள  முடிந்தது  ஒரு கை  அளவே . இத்தகைய  அறிவு  களஞ்சியம் நம்  தமிழில்  இருப்பதே  நமக்கு  பெருமை . இந்நூலை  ஆராய்ந்து  எத்தனையோ  பேராசிரியர்கள்   நூல்கள்  கட்டுரைகள்  புத்தகங்கள்  எழுதியுள்ளனர் . அவர்கள்  வாழ்க . ஆயினும்  முழுமையாக   நாம்  பெற்றுவிட்டோமா  என்பது  கேள்வி  குறியே . திருமுலரை  புரிந்து  கொண்டவர்கள்   நோய்  நொடியின்றி  நீண்ட  காலம்  வாழ்வாங்கு  வாழ்வார்கள்  என்பதில்  ஐயமில்லை . இது  உலக  பொது  மறை .

Thursday 7 April 2016

ஒன்றே  குலமும்  ஒருவனே  தேவனும்
நன்றே  நினைமின்  நமனில்லே  நாணாமே |
  இவ்வாறு  மனித  குலம்  ஒன்று  பட்டு  வாழ்வதின்  மேன்மையை  வலியுறுத்துகிறார் .
அன்பின்  வலிமையை  இவர்  மேன்மேலும்  வலியுறுத்தி  சொல்கிறார் . ஈசன்  உடலை  வருத்தி  செய்யும்  எவ்வழிபாட்டையும்   விரும்புவதில்லை . அன்பே  வடிவானவன் ."அன்போடு  உருகி  அகம்   குழைவார்கன்றி  என்போல்  மணியினை  எய்த  ஒண்ணாதே " இது  அவர்  வாக்கு
 அடுத்து  வரும்  பாடல்கள்  ஆழ்ந்த  தத்துவங்கள்  அடங்கியவை . எம்போல்  எளிய  மனிதர்கள்  அறிவிற்கு  அப்பாற்பட்டவை . ஞானிகளும்  சித்தர்களும்   அறியகூடியவை .முதலில்  புராணங்களில்  வரும்  சம்பவங்கள்  குறித்த  உள்  தத்துவங்களை  விளக்குகிறார் . ஈசன் முப்புரம்  எரித்தது , தக்ஷயாகம் , சில  அசுரர்களை  அழித்தது  போன்றவை . அஷ்டாங்க  யோகம் , ப்ராணாயாமம் , த்யானம்  மேலும்  மூலாதார  சக்கரங்கள் .பஞ்சாக்ஷ்ர  மகிமை , திருநீற்று  பெருமை  இவற்றை  விளக்குகிறார் .சூன்ய  சம்பாஷணை   என்று  பெரும்  தத்துவங்களை  பூடகமாக  விளக்குகிறார் . இவைகள்  ஆகமங்களை  அடிப்படையாக  கொண்டவை .