Tuesday 31 January 2017

திடுக்கிட்ட   நீலகண்டர்   ஆண்டவன்   தனக்கு    அப்பாக்கியம்   தரவில்லை   தனக்கு   பிள்ளை   செல்வம்   இல்லை   என்கிறார் . உடனே  முதியவர்   மனைவியை   அழைத்து   அவள்   கை   பிடித்தபடி   கோவில்   குளத்தில்   இறங்கி   சத்தியம்   செய்   என்கிறார் .  உடனே   நீலகண்டர்   கைத்தடியின்   ஒரு   முனையை   தான்   பிடித்துக்கொண்டு   மறுமுனையை   தன்   மனைவியை   பிடிக்க   செய்து   குளத்தில்   இறங்குகிறார் ..  கோபமடைந்த    பெரியவர்   இதை   நான்   ஒப்புக்கொள்ள   முடியாது   நான்   செல்கிறேன்   என்று   பயமுறுத்துகிறார் .  இப்படி   நீ   செய்வதன்   காரணத்தை   ஊர்   பெரியோர்கள்   முன்   விளக்கு   இல்லையெனில்   இந்த  பழி    உன்னை  விட்டு   நீங்காது.  நான்   செல்கிறேன்   என்று   முடிவாக   கூறுகிறார் .   வேறு   வழியின்றி   நடந்த   உண்மைகளை   அவர்   எல்லோர்   முன்   விளக்குகிறார் . அப்போது   அவ்வதிசயம்   நிகழ்கிறது .   நீலகண்டர்   தம்பதியினர்   அக்குளத்திலிருந்து   இளம்   தம்பதியினராக   எழுகின்றனர் .ஈசன்   அவர்களுக்கு   காட்சி   கொடுத்து   சிவபதத்தையும்   கொடுக்கிறார் .  இவ்வாறு   நீலகண்டர்   திருநீலகண்ட   நாயனார்   ஆகிறார் .

Monday 30 January 2017

சில   நாட்கள்   சென்றன . வயோதிகர்   திரும்ப   வந்து  தம்பதியரிடம்   ஓட்டை   திரும்ப   தருமாறு   கேட்கிறார் .  நிலகண்டக ரும்    எடுத்து   வருவதாக   சொல்லி  உள்ளே   சென்று   தேடுகிறார் ,  வைத்த   இடத்தில்   ஓட்டை   காணாமல்   பரிதவிக்கிறார் .  வைத்த   இடத்தில்   ஓட்டை   காணாததால்   புதிய   திருவோடு   செய்து   தருவதாக   கூறுகிறார் . முதியவர்   திட்டமாக   மறுத்து   விடுகிறார் .  அந்த   ஓட்டின்   பெருமை   உணர்ந்ததால்   நீயே   மறைத்து   வைத்திருக்கிறாய்   என்று  பழி   சுமத்துகிறார் .  நீலகண்டர்   மனம்   நொந்து  போய்   தங்களை   நம்ப   வைக்க   என்ன   செய்ய   வேண்டும்   என   வினவுகிறார் .  முதியவர்   அப்படி   கேள் , நீ   சொல்வது   உண்மையானால்   உன்   பிள்ளை   மீது    சத்தியம்   செய்  என்கிறார் .

Saturday 28 January 2017

இவ்வாறு  நீலகண்டர்  தம்பதியினர்  வெளிஉலகிற்கு   கணவன்  மனைவியாக   வாழ்ந்தாலும்  விட்டினுள்   பிரிந்தே  தங்கள்  சத்தியத்தை  காப்பாற்றியே   வாழ்ந்தன.  இவ்வாறே  வருடங்கள்  உருண்டன . அவர்களும்
வயோதிகம்  அடைந்தனர் . ஈசன்  இனியும்  சோதனை  செய்தல்  தகாது  என  எண்ணி  வயோதிக   சிவனடியாராக  அவர்கள்   இடம்  தேடி  வந்தார் . நீலகண்டர்   அவரை  அன்போடு  வரவேற்றார் . வேண்டுவது   எதனாலும்  செய்ய   சித்தம்  என  உரைக்கிறார் . ஈசன்   தன்  திருவோட்டை  கொடுத்து  அது  ஒரு   அதிசயமான  ஓடு    என்றும்  வேறெங்கும்   கிடைக்காது  என்றும்  சொல்லி  தாம்   வெளியூர்   செல்வதால்   அதை  பத்திரமாக   வைத்திருந்து  கேட்கும்போது   திருப்பி   தருமாறு   கூறுகிறார் .

Thursday 26 January 2017

இவ்வாறு  அமைதியாக  வாழ்ந்து  வந்த  அவர்கள்  வாழ்வில்  விதி  விளையாடியது. ஒரு நாள்  நீலகண்டர்  பாதையில்  ஒரு  பரத்தையை  காண  நேர்கிறது . அவள்  அழகில்  மயங்கி  சிறிது  மனம்  தடுமாறிய  அவர்  அவளுடன்  உறவாட  நேர்கிறது . தன்  நிலைக்கு  திரும்பிய  அவர்  தன்  தவறை  உணர்ந்து  வெட்கித்து  மனமுடைந்து  போகிறார் . வீடு  திரும்பிய  அவர்  அமைதியாக  வரவேற்ற  மனைவியை  கண்டு  சிறிது  மனம்  தேறினார் . ஆனால்  அவள்  உண்மை  உணர்ந்திருந்தாள்  ஆகையால்  நீலகண்டர்  அவளை  நெருங்கி  அவளை  தொட  யத்தனித்தபோது  சட்டென  விலகி  ''எம்மை  தீண்டாதீர்   நாம்  வணங்கும்  நீலகண்டர்  மீது  ஆணை '' என்று  உரைத்தாள் . திடுக்கிட்ட  அவர்  தடுமாறி  பின்  தம்  தவறுக்கு  இது  தக்க  தண்டனையே  என்று  மனசமாதானமடைந்து  தம்மை  என்று  அவள்  பன்மையில்  சொன்னதால்  அது  பெண்  இனத்தையே  சேர்த்து  குறிக்கும்  என  எண்ணி  அன்று  முதல்  பெண்  இனத்தையே  தவிர்த்து   மன  உறுதியுடன்  தம்பதியினர்  வாழ  தொடங்கினர் .

Tuesday 24 January 2017

நீலகண்டர்  சிவனடியார்களுக்கு  தொண்டு  செய்வதையே  தன்  லட்சியமாக  கொண்டு  வாழ்ந்தார். ஓடுகள்  செய்து  அதை  விலை  ஏதும்  வாங்காமல்  அவர்களுக்கு  கொடுத்து  பின்பே  வியாபாரத்தை  தொடங்குவார் .அதில்  அவர்  தவறியதில்லை . அவர்  மனைவியும்  அவருக்கு  உறுதுணையாக  இருந்து  மனமொத்து  வாழ்ந்து  வந்தனர் .
 .

Monday 23 January 2017

"திருநீலகண்டத்து  குயவனார்க்கும்  அடியேன் "
சுந்தரரின்  திருத்தொண்டர்  தொகையில்  முதலாவதாக  பாடப்பட்ட  பெரும்  சிவனடியார் . தில்லையில்  மண்  பாண்டம்  செய்து  விற்கும்  குயவர்  குலத்தில்   பிறந்த  நீலகண்டர் . சிவபக்தி  மிகுந்த  அவர்  சதா  நீலகண்டரை  தியானித்து  கொண்டே  இருந்தமையால்  அப்பெயரையே  அவர்  தன்  பெயராக  கொண்டார் . அவரும்  அவர்  மனைவியும்  சிவபெருமானை  சதா  த்யானம்  செய்த  வண்ணம்  மனமொத்த  தம்பதியினராய்  வாழ்ந்து  வந்தனர் .

Wednesday 18 January 2017

சுந்தரர்  பாடி  பெரிய  புராணத்திற்கு  வித்திட்ட  அப்பாடல்  இதுவே
தில்லைவாழ்  அந்தணர்தம்  அடியார்க்கும்  அடியேன்
திருநீல கண்டத்து  குயவனார்க்கும்  அடியேன்
இல்லையே என்னாத  இயற்பகைக்கும்  அடியேன்
இளையான்  தன்  குடிமாறன்  அடியார்க்கும்  அடியேன்
வெல்லுமா  மிக  வல்ல மெய்பொருளுக்கு  அடியேன்
விரிபொழில்  சூழ்  குன்றையார் விறன்மிண்டர்க்கு  அடியேன்
அல்லி மென் முல்லையந்தார் அமரநீதிக்கு  அடியேன்
ஆரூரன் ஆரூரில்  அம்மானுக்கு  ஆளே

Sunday 15 January 2017

ஈசன்  சுந்தரருக்கு  தன்னையே  தோழனாக  தந்து  மகிழ்ந்தார் . அது  முதல் அவர்  தம்பிரான்  தோழர்  என  அழைக்கப்பட்டார் . கைலையில்  இவர் சந்தித்த   இரு  பெண்களில்  கமலினி  என்பவர்  திருவாரூரில்  ருத்திரகணிகை  குலத்தில்  பிறந்து  பரவையார்  என்ற  பெயருடன்  வளர்ந்து  வந்தார் . ஆரூரர்  அவ்விருவரையும்  தானே சந்திக்க  வைத்து  ஊர்மக்கள்  கனவில்  தோன்றி  அறிவித்து  அவர்கள்  திருமணத்தையும்  இனிதே  நிறைவேற்றி  வைக்கிறார் .இப்பேற்பட்டது  ஈசனுடைய  தோழமை  ஒரு  திருமணத்தை  நிறுத்தியதற்கு  பரிகாரமாய்  இத்திருமணத்தை  தானே     நடத்தி  வைக்கிறார் .அவருக்கு  சுந்தரர்  மீது  அத்தகைய  உரிமை  கலந்த  தோழமை .  அங்கு  சிறிது  காலம்  அமைதியாக  பல  சிவ  தலங்களை  தரிசித்த  வண்ணம்  வாழ்கிறார் .ஒரு  நாள்  கோயிலில்  சிவனடியார்கள்  கூட்டத்தை  காணும்போது  பரவசமடைந்து  இவர்களுக்கு  அடியானாக  ஆவது  எப்படி  என  யோசித்தவாறு   ஆரூரனை  வணங்க  செல்கிறார் . அவருக்கு  ஈசன்  சுந்தரா  என்னை  பாடுவது  போல்  என்  அடியார்களையும்  பாடு  என்று  கூறி ''தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு  அடியேன் '' என்று  அடியெடுத்து  கொடுத்து  பாட  சொல்கிறார் .  இன்ப  அதிர்ச்சியடைந்த  சுந்தரர்  உள்ளம்  நெகிழ  மடை  திறந்தாற்போல்   வார்த்தைகள்  வர  பாட  தொடங்குகிறார் .

Wednesday 11 January 2017

சுந்தரர்  வரவை  முன்பே அறிந்து  கொண்ட  தில்லை  வாழ்  அந்தணர்கள்  அவரை  மரியாதையுடன்  வரவேற்கிறார்கள் .தில்லை  கோவிலையும்  அந்த  ஈசனையும்  கண்குளிர  கண்ட  சுந்தரர்  மிக  ஆனந்த  பரவசத்துடன்  மேனி சிலிர்க்க  தன்னை  மறந்த  நிலையில்  இருந்தார் . தில்லை  கூத்தன்  அவரை  ஆரூர்  செல்லும்படி  ஆணை  இடுகிறார் . அவ்வாறே  சுந்தரர்  திருவாரூர்  செல்றார் . ஆரூரர்  எல்லோர்  கனவிலும்   வந்து  சுந்தரரை  மாப்பிள்ளை  போல்  அலங்கரித்து  கோலாகலமாக  வரவேற்க  செய்கிறார் . மேனி சிலிர்க்க  ஆரூரரின்  அன்பை  கண்டு  வியக்கிறார் . ஈசன்  அவரை  அவர்  திருமணத்தன்று  தடுத்து  நிறுத்தியதால்  இனி  எப்போதும்  மாப்பிள்ளை  கோலத்துடன்  இருக்க  ஆணை  இடுகிறார் . சுந்தரருக்கும்  திருஆரூரரு க்கும்  உள்ள  பிணைப்பு  அலாதியானது . அதிசயிக்க  தக்கது .

Tuesday 10 January 2017

ஈசன் முதியவராக  சுந்தரர்  தங்கி இருந்த   சத்திரத்திற்கு   சென்று சுந்தரர்  படுத்து  உறங்கும்  இடத்தில்  தானும்  படுத்து  தன பாதங்களை  அவர்  தலை  மேல்    வைக்கிறார் . சுந்தரர்  திடுக்கிட்டு  எழுந்து அவரை   தன்  கால்களை  நகர்த்திக்கொள்ளும்படி  உரைக்கிறார் . திரும்ப  திரும்ப  அவர்  தன்  கால்களை  அவர்  சிரத்தில்  வைக்க  சுந்தரர்  கோபம்  கொள்கிறார் . ஈசன்  சுந்தரா ! எனனை  நீ  அறியவில்லையா ? என்று  வினவ  சுந்தரர்  திடுக்கிட்டு  ஐயனை  கண்டு  மேய்சிலிர்த்து  தன்  அறியாமையை  கண்டு  வெட்கித்து அவரை  வெகுவாக  துதித்து  பாடினார் . இவ்வாறு  பல  தலங்களில்  ஈசனை துதித்து     பதிகங்கள்  பாடியவாறு  தில்லையை  வந்தடைந்தார்.

Monday 9 January 2017

பித்தா  பிறைசூடீ  என  பாட  தொடங்கிய  சுந்தரர்  மடை  திறந்த  வெள்ளம்போல  ஐயனை  துதித்து  உள்ளம்  உருக்கச்செய்யும்  பதிகங்கள்  பாடிய  வண்ணம்  ஈசன்  குடியிருக்கும்  திவ்ய  தலங்களை  சேவித்த  வண்ணம்  செல்கிறார் . ஈசன்  தான்  வாக்களித்தபடி  தனக்கும்  சுந்தரருக்கும்  உள்ள  நெருக்கத்தை   உணர்த்திய  மெயசிலிர்க்க  வைத்த  சம்பவங்களும்  உண்டு இரவு  .  பல  ஆலயங்களில்  ஐயனை  தரிசித்து  கொண்டு  திருவதிகை  வீரட்டானம்  அடைகிறார்  சுந்தரர் . அப்பர்  வாழ்ந்த  இடமாதலால்  அங்கு  கால்  வைக்க  மனம்  ஒப்பாதவராய்  வெளியே  ஒரு  சத்திரத்தில்  தங்கி    இரவு  படுக்கிறார் . விரட்டாநீஸ்வரர்  இத்தனை  தூரம்  வந்து  விட்டு  தன்னை  காணாமல்  தன்  பக்தன்  செல்வது  மனம்  ஒப்பாமல்  ஒரு  முதியவராக  மாறி  அங்கு  செல்கிறார் .

Wednesday 4 January 2017

ஈசன்  திருவெண்ணைநல்லூரில்  சுந்தரருக்கு  தன்  சுய  உரு வத்தை  காட்டி  தன்னை  பாட  சொல்லி  அழைக்கிறார்  . சுந்தரர்  மெய்  சிலிர்த்து  தான்  செய்ய  இருந்த  பெரும்  தவறிலிருந்த  தன்னை  மீட்டு  ஆட்கொண்ட   ஈசனின்  பெரும்  கருணையை   எண்ணி  உருகி  செயலிழந்து  நின்றார் . ஈசன்  அவரை தன்னை  பாட  அல்லவோ  நீ  பூலோகத்தில்  பிறந்தாய்  என்று  சொல்லி  பாட   அவரை  வற்புறுத்துகிறார் . சுந்தரர்  என்ன  சொல்லி பாட  என திகைத்து  வினவுகிறார் . ஐயன்  என்னை  'பித்தா'  என்று  அழைத்தாய்  அல்லவா  அதையே  பாடு  என்று  சொல்ல  'பித்தா  பிறை  சூடி ' என்கிற   பதிகம்  பாடுகிறார் . சுந்தரர்  வரலாற்றில்  இவையெல்லாம்  குறிப்பிட்டிருக்கிறோம் .