Thursday 30 January 2020

சுந்தரரும்   சேரமான்    பெருமானும்   மதுரையில்   பாண்டிய   மன்னன்   விருந்தினராக   அவர்   உபசரிப்பில்   மகிழ்ந்து   இருந்தனர் .  அங்கிருந்து   கொண்டு   திருப்புவனம்  சென்று   ஐயனை   பதிகம்   பாடி   சேவித்துக்கொண்டு    திருஆப்பானுர்   திருப்பரங்குன்றம்   இன்னும்   சில   தலங்களையும்   தரிசித்தனர் .  தம்பிரான்   தோழருக்கு   தெற்கே   மேலும்   க்ஷேத்திரங்களை   சேவிக்கும்   ஆவல்   உண்டாயிற்று .   மன்னரிடம்   விடை   பெற்றுக்கொண்டு   திருக்குற்றாலம் ,  திருநெல்வேலி   சென்று   அங்கிருந்து   ராமேஸ்வரம்   சென்று   என்பெருமானை   மனம் உருக    வேண்டிக்கொண்டு   சுந்தரர்   அங்கிருந்தபடியே   மனத்தால்   இலங்கை   திருக்கேதீஸ்வரத்தில்   குடிகொண்டுள்ள   சிவபெருமானை   உள்ளம்   உருக   சேவித்துக்கொண்டார் .அங்கிருந்து   கிளம்பி   திருச்சுழியல்   எனும்   ஊரில்   மடத்தில்   இரவு   தங்கி  காலை   சோழ   நாட்டு   திருத்தலங்கள்   சேவிக்க   எண்ணி   படுத்து   தூங்கினர் .  அருகிலுள்ள   கானப்பேர்   எனும்     காளையார்கோயிலில்       குடி கொண்டிருக்கும்   பெருமானுக்கு   தம்பிரான்  தோழரின்    பாதங்கள்   தம்   திருக்கோயிலிலும்   பட   வேண்டுமென்ற   ஆவல்   உண்டானது .  அவர்   சுந்தரரின்   கனவில்   காளை   வடிவில்   தோன்றி   '' யாம்   இருப்பது   கானப்பேர் ''  என்று   கூறி   மறைந்தார் .  திடுக்கிட்டு  விழித்த   சுந்தரர்   மெய்சிலிர்த்து   ஐயனின்   திரு  உள்ளத்தை   சிலிர்ப்போடு   சேரமானிடம்   கூறி   அவ்விடம்   சென்று   ஐயனின்   புகழ்   பாடி   பயணம்  தொடர்ந்தார் .      

Friday 24 January 2020

சுந்தரரும்   சேரமான்   பெருமானும்   மதுரையை   வந்தடைந்தனர் .  அப்போது    அங்கு   பாண்டியன்   மகளை   மணந்த   சோழ   மன்னனும்   வந்திருந்தார் .  அவர்கள்   இருவரும்   தம்பிரான்   தோழரும்   சேரமான்பெருமானும்   சேர்ந்து   மதுரை   வந்தடைந்த   செய்தியை   கேட்டு   மகிழ்ந்து   அவர்களை   எதிர்கொண்டு   அழைத்து   அவர் களுடன்   சேர்ந்து   ஆலவாய்   ஈசனை   ஒன்றாக   தரிசனம்   செய்து   மகிழ்ந்தனர் .  அவ்விருவரையும்   தம்   அரண்மனைக்கு   கோலாகலமாக   வரவேற்று   உபசரித்தனர்  .  சுந்தரரும்   சேராமானும்   பாண்டிய   அரண்மனையில்   சில    காலம்   தங்கி   மன்னரின்   உபசரிப்பை   ஏற்று   தங்கினர் .   அருகிலுள்ள   சிவாலயங்களை   தரிசித்தும்   மகிழ்ந்தனர் .           

Wednesday 22 January 2020

இவ்வாறு   இருக்கையில்   சுந்தரரை   பற்றி   கேள்விப்பட்டிருந்த  சேரமான்     பெருமான்  கொடுங்கோளுரிலிருந்து    புறப்பட்டு    சுந்தரரை   காண   ஆரூர்   வந்தார் .  சுந்தரர்   மகிழ்ந்து   அவரை   தம்   மாளிகைக்கு   மிக்க  அன்போடு    வரவேற்று    இருவரும்மிக்க   நேசத்துடன்   பழக்கலாயினர் .  அடியார்கள்   அவர்கள்    ஈருயிர்   ஓருடலாக    பழகுவதை   கண்டு   மகிழ்ந்து   தம்பிரான்   தோழராக   இருந்த   சுந்தரரை    சேரமான்தோழர்   என்று   அழைக்க   ஆரம்பித்தனர் .  இருவரும்   சேர்ந்து   பல   சிவாலயங்களை  றாக   சேவித்து   மகிழ்ந்தனர் .  இவ்வாறு    இருக்கையில்   நம்பிஆரூரருக்கு    ஆலவாய்    ஈசனை  காண   பேராவல்    ஏற்பட்டது .  சேராமானுக்கும்    அதே   பேராவல்   ஏற்பட்டது .   ஆலவாய்   அண்ணல்   தம்   கைப்பட   சேராமானுக்கு   பாணபத்தருக்கு    திரவிய   உதவி  செய்ய   எழுதிய   ஓலை   கண்டது   முதல்   அப்பேராவல்   இருந்து   வந்தது .  தன்னை   ஒரு   பொருட்டாக   மதித்து   தம்   கைப்பட   திருமுகம்   எழுதிய   அண்ணலின்   பேரன்பை   எப்படி   மறக்க   முடியும் ?  இருவரும்   பரவையிடம்   விடை   பெற்றுக்கொண்டு   நாகப்பட்டினம்   திருமறைக்காடு   மற்றும்   சில   சிவத்தலங்களை   சேவித்துக்கொண்டு   திருப்பத்தூர்   வழியாக    வந்தடைந்தனர் .        

Saturday 18 January 2020

சுந்தரரும்   மனம்   வருந்தி   தன்னை   மாய்த்துக்கொள்ள   எத்தனித்தார்   ஐயன்   தம்   ஆருயிர்   தோழனை   அப்படி   விட்டு   விடுவாரா ?    கலிக்காமரை    பிழைப்பித்து   அவரே   சுந்தரரை   தடுத்து   தன்னை   மன்னிக்க    வேண்டுகிறார் .  எம்பிரான்   சுந்தரரிடம்    கொண்டுள்ள   அளவிலா   அன்பை   புரிந்து   கொண்டு   கலிக்காமர்   தன்   அறியாமையால்   சுந்தரரை   தவறாக   எண்ணியதை   நினைத்து   வருந்தி   அவரிடம்   மன்னிப்பு    கோரினார் .  இருவரும்    நெருங்கிய   நண்பர்களாயினர் .  அவரும்    சுந்தரருடன்   ஆரூரில்   தங்கி   அருகிலுள்ள    சிவாலயங்களை   சேவித்து   கொண்டு   சில   நாட்கள்  கழித்து   தம்   ஊர்   திரும்பினார் .       

Thursday 16 January 2020

சுந்தரருக்கும்   பரவையா  ருக்கும்   ஏற்பட்ட    பிணக்கை   தீர்க்க   அவருடைய   வேண்டுகோளுக்கு   இணங்கி     ஆரூர்ப்பெருமான்   வீதியில்   தம்     தாமரை    பாதங்கள்   நோக   நடந்து   பரவையார்    இல்லத்திற்கு   நடந்தே    தூது   போன   அதிசய   செய்தி   நாடெங்கும்      பரவியது .  அந்த   செய்தி    திருப்பெருமங்கலத்து    பெரும்   சிவனடியார்   ஏயர்கோன்கலிக்காமன்   என்பவர்   காதில்   விழுந்த   போது   மிக்க   வேதனை   அளித்தது .   இது   ஐயனுக்கு   ஏற்பட்ட   பேரவமானமாக   அவரை  சுட்டெரித்தது .   சுந்தரரை   கொல்ல   வேண்டுமென்ற   வெறி   ஏற்பட்டது .  இதை   கேள்விப்பட்ட    சுந்தரர்   மிக்க    வருத்தம்   அடைந்தார் .   செய்வதறியாமல்     ஆ ருர்த்தியாகேசனை    சரணமென்று   அடைந்தார்.  பக்தனின்   மன    வேதனையை      பொறுக்காமல்    ஈசன்   கலிக்காமருக்கு   சூலை   நோயை   கொடுத்து    அவர்   கனவில்   தோன்றி    இந்நோயை    சுந்தரர்   ஒருவர்தான்   தீர்க்க   முடியுமென்று    தெரிவித்தார் .   ஏயர்கோன்   கலிக்காமர்      சுந்தரரால்   உயிர்         பிழைப்பதை  விட   இறப்பதே   மேல்    என்று   எண்ணி   வயிற்றை    கிழித்து  கொண்டு   உயிர்   துறந்தார் .   அப்போது    அவரை   காண   அங்கு    வந்த    சம்பந்தர்   அவர்   மாண்ட     செய்தி    கேட்டு    அவரும்   தன்னை    மாய்த்துக்கொள்ள    துணிந்தார் .      

Wednesday 15 January 2020

இதற்குள்   பரவைக்கு   மனக்குழப்பம்   ஏற்பட்டது . அர்ச்சகராக   வந்தது   சிவபெருமான்   என்ற   ஐயம்    உண்டாயிற்று .  அவர்   சென்றதும்   அங்கு   சூழ்ந்த   தெய்விக   நறுமணம்    காதில்   ஒலித்த   வேதகோஷம்   இதெல்லாம்   அவள்   மனதில்   சந்தேகத்தை   எழுப்பியது .   அவரின்   பேரருள்   பெற்ற   சுந்தரருக்காக   எம்பிரானே   வந்திருப்பாரோ  ?  தவறு   செய்து   விட்டோமோ  என்று   அலை   பாய்ந்தது .  எதிர்த்து   பேசியது   பெரும்   தவறு   என்று   மனம்  பதறியது.     அப்போது   பரவை   என்று   ஈசன்    அழைக்கும்   குரல்    கேட்க    மனம்   புல்லரிக்க   பரவை   ஓடிவந்து   தாள்   திறந்து   அவர்   பாதங்களில்   விழுந்தாள் .   உலகமனைத்தும்    போற்றி   தொழும்   அப்பாதங்கள்    இந்த   ஆரூரனுக்காக   வீதியில்   கால்   தேய   நடந்து   வந்தார்   என்றால்   அவர்   பெருமையை   உணராமல்    உதாசீனம்        செய்தது   எத்தனை   பாபம்   என்று   உணர்ந்த   பரவை    உடனே   அவர்   பின்   சென்று    அவருடன்   இணைந்தாள் .  இருவரும்   சேர்ந்து   ஆரூரில்   சில   காலம்   மனமொத்து   வாழ்ந்தனர் .       
ஐயன்   திரும்ப   வந்தார் .  சுந்தரர்   மிக   எதிர்பார்ப்புடன்   சந்தோஷம்   பொங்க   அவரை   எதிர்கொண்டு   அழைக்க     விரைந்தார் .  ''  சுந்தரா   பரவை   என்ன   சொல்லியும்   ஏற்க   மறுத்து   விட்டாள் . '' என்றார் .   அதை   கேட்ட   சுந்தரர்   இடி   விழுந்தாற்போல்   ஆனார் .  சோர்வடைந்தார் .  உரிமை   கலந்த   கோபம்   எழுந்தது .   ''சுவாமி   உங்கள்   பேச்சை   கேட்க வில்லை   என்று   திரும்பி   விட்டீ ர்களா ?    அன்று   த்ரிபுராந்தகர்கள்   தங்கள் பேச்சை   கேட்கவில்லை   என்று   அவர்களை   விட்டு   திரும்பினீர்களா ?  மார்கண்டனை   அழிக்க   காலனை   விட்டு   திரும்பினீர்களா ?  இந்த   சுந்தரன்தானே   என்ற   அலட்சியமா ?  இதற்காகவா   என்னை   தடுத்தாட்கொண்டீர் .  இனி   எனக்கு   வாழ   விருப்பமில்லை .  ''  என்று   துக்கத்துடன்   கூறினார்   சுந்தரர் .  நகைத்தவாறு   எம்பெருமான்   வருத்தப்படாதே     சுந்தரா   நான்   முயற்சிக்கிறேன்.   என்று    கூறி   இந்த  முறை   மாறு   வேடம்   இல்லாமல்   சுய    தி.வ்ய   சுயரூபத்துடன்   புறப்பட்டார்                  

Monday 13 January 2020

அர்ச்சகர்    வேடத்திலிருந்த   எம்பெருமான்    ''பரவை   அவன்   தவறு   செய்து   இருக்கலாம் .  இப்போது   அவரை   மன னித்து    ஏற்பது   உனக்கு   நன்மை .  அவன்   உனக்காக  மிகவும்   ஏங்குகிறான் .   உன்னை   தேடி   இத்தனை   தூரம்    வந்திருக்கிறான் .''  என்றார் .   மிக   கோபமடைந்த   பரவை   கண்டிப்புடன்   அவரை   நோக்கி   ''இதற்கு மேல்   தாங்கள்   இங்கு   நிற்பது   அழகல்ல   உங்கள்மீது    நான்   வைத்திருக்கும்   மரியாதையை   இழந்து   விடுவீர்கள் ''  என்று   கோபமாக   உரைத்தாள் .   சிரித்தவாறு   கிளம்பினார்   அம்பலவாணர் .   சுந்தரர்   ஆலயத்தில்   தவித்துக்கொண்டிருந்தார் .  பரவை   பற்றிய   கவலையை   தவிர   ஞானிகளுக்கும்    தவமுனிவர்களுக்கும்   தேடி  அடையமுடியாத   அத்திருப்பாதங்களை   கேவலம்   சேவகனைப்போல்   தெருவில்   தெருவில்   அலையவிட்ட   பெரும்   பாதகம்   செய்து      விட்டோமே   என்ற   என்ற      பெரும்   குற்ற   உணர்வு   மறுபக்கம் .

Sunday 12 January 2020

பரவையார்   மாளிகை   அடைந்ததும்   ஐயன்   தேவர்   முனிவர்களை   மறைத்து   தான்   ஓர்   அர்ச்சகர்   உருவில்   உள்ளே   நுழைந்தார் .  பரவையார்   இந்த   வேளையில்   தன்னை   தேடி   யார்   வருகிறார்   என்று   இந்த   வேளையில்   தன்னை   தேடிவந்த   காரணத்தை   அர்ச்சகர்   உருவில்   வந்த   ஈசனை   வினவினாள் .   அவர்   நான்   சொல்வதை   மறுக்காமல்   ஏற்பதானால்   சொல்கிறேன்   என்றார் .   அவளும்   சரியென்று   பட்டால்   தயங்காமல்   ஏற்கிறேன்.  என்று   பதில்   கூறினாள் .   அவர்   சுந்தரன்   உனக்காக   துடித்து   கொண்டிருக்கிறான் .  அவன்   செய்தது   தவறுதான்   என்றாலும்   மன்னித்து   ஏற்றுக்கொள்.  அவன்   உன்   நினைவாகவே   இருக்கிறான்   என்று   கூறினார்.   அதற்கு   பரவையார்   ''என்னை   நினைத்துக்கொண்டிருந்தால்   சங்கிலியாரை   எவ்வாறு    மணந்து   கொண்டு   ஆனந்தமாக   வாழ்ந்திருப்பார் .  அதன்  பிறகு   என்னிடம்   அவர்க்கு   என்ன   உரிமை   இருக்கிறது ''  என்று   பதில்   கேள்வி   எழுப்பினார் .        

Tuesday 7 January 2020

சுந்தரர்   சில   பெரியோர்களை   அனுப்பி   சமாதானம்   செய்ய   கூறினார் .  அனால்   பரவையார்   அவர்   செய்த   குற்றம்   மன்னிக்க   தக்கதல்ல   என்று   கூறி   இனி   யாரும்   இவ்வாறு   வரவேண்டாம்   என்று   கண்டிப்பாக   கூறி   அனுப்பினார் .   சுந்தரர்   அளவிலா   வே  தனை   அடைந்தார் .  ''ஐயனே   நீ   இதுவரை   எல்லா   துன்பங்களிலிருந்தும்   என்னை   மீட்டிருக்கிறாய் .  நான் சங்கிலியாரை   மணந்து   கொண்டதை   பரவையார்   ஏற்கவில்லை.  உன்   விருப்பப்படி   தானே   நான்   அவளை   மணந்தேன் .  எனக்கு   நீயே   கதி .  பரவையார்   முன்போல்   என்னிடம்   அன்பு   செலுத்த    வைப்பது   உன்    பொறுப்பு ''.  என்று   இறைவனிடம்   மன்றாடினார் .   அவரும்   'கவலை   படாதே .  நானே  உன்  பொருட்டு   தூது   செல்கிறேன் . என்று   சமாதானம்   கூறினார் .  மகிழ்ந்தார்   சுந்தரர் . தன்   பக்தனுக்காக   அன்பே   உருவான   எம்பிரான்   தன்   தாமரையொத்த   பொற்பாதங்கள்   நோக   தேவர்   முனிவர்கள்   புடைசூழ   ஆரூர்   வீதியில்   நடந்தார் .     
சுந்தரர்   'மீளா   அடிமை   உமக்கே '  எனும்   பதிகம்   தனக்கே   உரிய   நட்புரிமையுடன்   பாடியது    ஐயனை   உருக்கியதில்   அதிசயம்   இல்லை .   உடனே   தன்   தோழனுக்கு   இரண்டாவது   கண்ணை   வழங்கியதும்   இயல்பே .    சுந்தரரும்   நன்றி   பெருக்கோடு   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்து   தம்பிரானையும்   மகிழ்வித்தார் .  தேவாசிரிய   மண்டபத்தை   அடைந்தார் .  அடியார்கள்   மகிழ்ச்சியுடன்   கூடி   இருந்தனர். ஆனால்      பரவையார்    சிறிதும்   இன்பம்    அடையவில்லை .    ஒற்றியூரில்   சுந்தரர்   சங்கிலியாரை   மணந்த     செய்தி   கேட்ட   அதிர்ச்சி   அவரை   மிக   துன்பத்தில்   ஆழ்த்தியது .  அவரை   காண கூட   விரும்பவில்லை .  அவரை   தன்   மாளிகையில்   அனுமதிக்ககூட    விரும்பவில்லை .   அடியார்கள்   சுந்தரர்     வந்த   செய்தி   சொல்லி   அமுது   செய்விக்க   சொல்ல   சென்ற   போது   பரவையார்   அவரிடமிருந்து   அடியார்கள்   வந்ததை   அறிந்து   காவலர்களிடம்   அவர்களை   அனுமதிக்க   வேண்டாம்   என்று   கட்டளையிட்டார் .   அவர்கள்   இச்செய்தியை   வந்து   சுந்தரரிடம்   தெரிவித்தபோது   சுந்தரர்   பெரிதும்   துக்கத்திற்கு   ஆளானார் .         

Thursday 2 January 2020

இடது   கண்   பெற்ற  சுந்தரர்    உள்ளம்   மகிழ்ச்சி   பொங்க   காஞ்சி   பெருமானை   ஒரு   கண்ணால்   மனம்   குளிர   'ஆலந்தானுக்குகந்த   அமுது   செய்தானை '  என்று   பதிகம் பாடி   தரிசித்தார் .   காஞ்சியை   விட்டு   புறப்பட்ட   சுந்தரர்   ஆரூரனை   காணும்   பேராவலால்   எங்கும்   அதிகம்   தங்காமல்      வழியில்   எதிர்ப்பட்ட   ஆலயங்களில்   நுழைந்து   ஐயனை   சேவித்தவாறே   எங்கும்   தாங்காமல்   தியாகேசர்   நினைவால்    உந்தப்பட்டு       விரைவாக    திரு   ஆமாத்தூர்,   திருஅரைத்துறை   பிறகு   திரு   ஆவடுதுறை    சென்று   தன்   பிணியை   நீக்குமாறு   வேண்டியவாறு   பயணித்தார் .  திருந்துருத்தியை   அடைந்தார் .  அங்கு   பெருமான்   அவருக்கு   சிறிது   கருணை   காட்டி   பக்கத்திலுள்ள   திருக்குளத்தில்   நீராட   கூறினார் .  அவரும்  அவ்வாறே   செய்ய   உடல்   களைப்பு   சோர்வு   நீங்கி    புத்துணர்ச்சி       பெற்றார் .    நன்றி   பெருக்குடன் '' மின் னுமா   மேகங்கள் ''  எனும்   பாடி   நன்றி        பெருக்குடன்   மேலும்   சில   ஆலயங்களை   தரிசித்து  கொண்டு    ஆரூர்   வந்தடைந்தார் .  அதற்குள்   அவர்   திரும்பிய   செய்தி   ஊரில்   பரவியது .  அவர்    அடியார்களுடன்   ஆலயம்   வந்தடைந்தார் .    ஐயனை   நோக்கி    உருக்கத்துடன்   ''சோதனை   போதாதா   உன்னை   மனம்   குளிர   இரு கண்ணால்   தரிசிக்க   மற்ற   கண்ணையும்   தாராயோ   என்று   மனமுருக   பாடினார் .  அன்பனின்   வேண்டுகோளை   மறுக்க   இயலாத   தியாகேசன்   மறு   கண்ணையும்   அளித்தார் .