Tuesday 22 November 2016

வேடுவ  குலத்தில்  பிறந்த  கண்ணப்பன்  முதல்  முதல்  ஒரு சீவலிங்கத்தை  கண்டு  அவ்வடிவில்  ஈர்க்கப்பட்டு  பக்தி  பெருக்கெடுத்து  தன்  கண்களையே அவருக்கு  கொடுத்து  அவரை  குணமாக்க  முற்படும்  அளவிற்கு  கொண்டு  சென்றிருக்கின்றத.ஈசனும்  அவனிடத்து   பாசம்  பெருக்கெடுக்க கண்ணப்பா  என்று  அழைக்கிறார் . நந்தன்  தாழ்ந்த  குலத்தில்  பிறந்த  காரணத்தால்  கோயில்   வாசல்   கூட  மிதிக்க  முடியாமல்  தவிக்கிறான் . பக்தி  பெருக்கில்  அவரை  காண முடியாத  சோகம்  அவனை  வாட்டுகிறது. ஈசன்  அவனை  மனம்  குளிர  தில்லையில்  வரவழைத்து  ஏற்றுக்கொள்கிறார். இவர்களை  போல்  பலர்  பக்தி  பெருக்கால்  சிவபதம்  அடைந்தனர் .பலர்  சிவன்  அடியார்களை  பெரும்  மதித்து  அவர்கள்  சேவைக்காக  எல்லை  இல்லா  துன்பங்களை  அனுபவித்தனர் . சிவனடியார்  சேவைக்காக  ஒரு  கொள்கை  வகுத்துக்கொண்டு  அதற்காக   தன்  உயிரையும்  தர  சித்தமாக  இருந்த  பக்தர்களும்  உண்டு .  இவர்களும்  சிவபதம்  அடைந்து  நாயன்மார்களாக  கொலு  வீற்றிருக்கிறார்கள் . இவர்கள்  கதைகளை  பெரிய  புராணத்தில்  காணலாம் .''முழுநீறு  பூசிய  முனிவோர்க்கும்  அடியேன் '' இது சுந்தரர்  தன்  திருத்தொண்டர்  தொகையில்  பாடிய து .இவர்கள்  ஈசனை  சதா   துதித்தார்களோ   இல்லையோ , ஈசன்  இவர்களை  மிக  விரும்பி  தன்னுடன்  சேர்த்துக்கொண்டான்  

Monday 21 November 2016

அப்பர் ,சம்பந்தர்  சுந்தரர்  போன்ற  சிலர்  ஈசனை  பலக்ஷேத்திரங்களில்  சென்று இவரை  துதித்து  பாடி  மகிழ்ந்தனர் .அப்பூதி  அடிகள்  அப்பரையே  தெய்வமாக  துதித்து  வணங்கினர் . கண்ணப்பன்  ஒரு சிறிய காலகட்டத்துக்குள்  சிவலிங்கத்தை  கண்டு  அதன்மேல்  அளவிலா  அன்பும்  பக்தியும்   கொண்டு  லிங்கத்தின்  கண்களிலிருந்து  குருதி  வழிவதை  காண  சகியாமல்  தன்  கண்களை   பிடுங்கி  எடுத்து  அதை  பொருத்த  முற்படுகிறான் .




Thursday 17 November 2016

63  நாயன்மார்  வரலாறு  காணும்போது  ஈசனின்  அளவிலா  அன்பு  நம்மை  வியக்க  வைக்க  வைக்கிறது . அறுபத்து மூவரின்  வரலாறு  காணும்பொது  ஒரு பெரிய  உண்மை  அதிசயிக்க  வைக்கிறது . எத்தனை  வேறுபாடுகள்  காணப்படுகின்றன . ஏழை , பணக்காரன் , அரசன் ,ஆண்டி , படித்தவன்  படிக்காதவன்  எல்லோரும்  வேறுபாடின்றி   சிவ  பெருமானின்  திருவடிகளை  சேர்ந்தவர்கள் . அவனுடைய  கருணைதான்  என்னே ! சிலர்  அவனை  உளமாற  துதித்து  பாடி  மகிழ்ந்தனர் . அவனையன்றி  வேறு  எண்ணமே  இல்லாமல்   வாழ்ந்தனர் .  சிலர்  உழவார  பணி  செய்து  மகிழ்ந்தனர் . ஆலயங்கள்  எழுப்பியவர்களும்  உண்டு .சிலர்   ஒரு கொள்கைக்காக  எத்தனை   பெரிய  தியாகத்தையும்  செய்ய  துணிந்தனர் . ஈசன்  எல்லோரையும்  ஒரே  கண்ணோத்துடன்   அருளி   ஏற்றுக்கொண்டான் 

Monday 14 November 2016

  உலகெலாம்  உணர்ந்தோதற்கு  அரியவன் 
 நிலவுலாவிய  நீர்மலி  வேணியன் 
 அலகில் சோதியன்  அம்பலத்தாடுவான் 
 மலர்  சிலம்படி  வாழ்த்தி  வணங்குவாம் |

இதுவே  அண்ணல்  அடியெடுத்து  கொடுக்க  சேக்கிழார  பாடிய  பாடல் , தொடர்ந்து  ஈசனை துதித்து  அவர்  எல்லையிலா  பெருமைகளை  பாடுகிறார் . 4286 பாடல்களை  கொண்ட  பெரியபுராணத்தை  இவ்வாறு  தொடங்குகிறார் .  பெருமைமிக்க  63  நாயன்மார்களின்  வாழ்க்கையை   மிகுந்த  பக்தி  சிரத்தையுடன்  எழுத  தொடங்குகிறார் . சுந்தரரால்  மிகுந்த  பக்தியுடன்  ''அடியார்க்கு  அடியேன் '' என்று  தன்னை  தாழ்மையுடன்  உணர்த்திக்கொண்டு  ஒவ்வொரு  வரியில்  அறிமுக   படுத்தப்பட்டு  பின்பு  நம்பியாண்டார்  நம்பியால்  அவர்கள்  பெருமை  ஒவ்வொரு  பாடலால்  பெருமை  படுத்தப்பட்ட  நாயன்மார்களின்  வரலாறை  விரிவாக  பாடி  அவர்கள்  பெருமையை  உலகுக்கு  உணர்த்துகிறார்  சேக்கிழார்.

Monday 7 November 2016

  சேக்கிழார்  இவ்வரிய  நூலை  எழுதவும்  அரங்கேற்றவும்  தில்லையே  சிறந்த  இடமாக  தேர்ந்தெடுக்கிறார் . அரசனும்  சம்மதம்  அளிக்கிறார் . எழுதும்  முன்  எல்லா  நாயன்மார்களையும்  பற்றி  அறிந்து  கொள்ள  அவர்கள்  எல்லோரும்  வாழ்ந்த   இடங்களுக்கு  சென்று  கிடைத்த  தகவல்களை  தெரிந்து  கொண்டார் . அதன்  பிறகு  அவர்  தில்லையை  அடைந்து  நடராஜப்பெருமானை  மனமுருக  தியானித்து  கொண்டார் .அவர்  எவ்வாறு  தொடங்கலாம்  என  ஆழ்ந்து  சிந்திக்க  தொடங்கினார் . அன்பே  உருவான  ஈசன்  அவருக்கு ''உலகெலாம்  உணர்ந்து '' என்று  அடியெடுத்து  கொடுக்கிறார் . மெய்சிலிர்த்த  சேக்கிழார்  ஈசனின்  கருணையை  வியந்து  இந்நூலை  எழுத  தொடங்குகிறார் .

Saturday 5 November 2016

அருண்மொழியின்  தேர்ந்த அறிவில்  மயங்கிய  மன்னன்  உடனே  அருண்மொழியை  தன்  பிரதான  மந்திரி  ஆக்கிக்கொண்டான் . உத்தம சோழ  பல்லவன்  என்கிற  பட்ட  பெயரையும்  சூட்டினான் . முதல் மந்திரி  சேக்கிழார்  ஆனார் .  நல்ல  முறையாக  ஆட்சி  நடந்தது  . ஆனால் துரதிஷ்ட வசமாக  மன்னன்  சீவகசிந்தாமணி  போன்ற  சமண  நூல்களில்  மயங்கி  சமணர்கள்  பக்கம்  சாய  தொடங்கினார் . அரசவை  பெரியோர்கள்  பெரிதும்  மனம்  வருந்தி சேக்கிழாரிடம்  முறையிட்டனர் . இதனை  கேட்ட  சேக்கிழார்  மிக  வருந்தி  அவரை  சிவபெருமான்  பெருமையை   உணர  வைக்க  அவருக்கு  கண்ணப்ப, நந்தனார்  போன்ற  சிறந்த  சிவபக்தர்கள்  வரலாறை  எடுத்து  சொல்லி  சிவபெருமான்  அவர்களை  ஆட்கொண்ட  பெருமையையும்  எடுத்து  கூறி  மன்னன்   மனத்தை  மாற்றுகிறார் . அப்பக்தர்கள்  வரலாறை  கேட்ட   மன்னன்  அதில்  பெரிதும்   ஈடுபாடு  ஏற்ப்பட்டவராய்  63 நாயன்மார்கள் வரலாற்றையும்  காவியமாக  எழுதுமாறு  சேக்கிழாரை  மனமுருகி   வேண்டுகிறார் . முதலில்  தயங்கிய  சேக்கிழார்   ஈசன்   ஆணையாக  அதை  ஏற்று  அதை  உருவாக்க   அவகாசம்  தேவை   என்பதையும்   விண்ணப்பிக்கிறார் . அரசனும்  சம்மதிக்கிறான் . இவ்வாறு  பெரிய  புராணம்  நமக்கு  கிடைக்கப்பெற்றது .

Friday 4 November 2016

இவ்வாறு  அருள்மொழி  அறிவில்  எல்லோரும்  அதிசயிக்கும்  விதம்  மிக சிறந்து  விளங்கினான் .அப்போது  சோழ  நாட்டின்  அரசனாக  ஆட்சி  செய்தவர்  இரண்டாம்  குலோத்துங்கன்  எனும்  அநபாய சோழன் . அவன்  மூன்று  கேள்விகளை  கேட்டு  பதில்  வேண்டி தெரிந்தவர்கள்  அவைக்கு  வந்து  கூறுமாறு  அறிவித்தான் . அருண்மொழியின்  தந்தை  தன்  மகன்  விடை  கூறுவான்  என்று  அவனை  அரச அவைக்கு  அழைத்து  சென்றார் . அங்கு  அவையோர்  வியக்கும்  வகையில்  திருக்குறளை  மையமாக  வைத்தே  எல்லா  வினாக்களுக்கும்  தெளிவாக  பதில்  அளித்து  அவையோரை  அசர  வைத்தான் . அரசன்  அவன்  அறிவை  கண்டு  மெய் சிலிர்த்தான் .

Thursday 3 November 2016

12 திருமுறை  இப்போது  காணலாம் . சேக்கிழார்  பெருமானால்  பாடப்பட்ட  பெருமை  மிக்க  பெரிய  புராணம் . அவருடைய  இயற்பெயர்  அருண்மொழி . சோழ  பேரரசின்  மீது  அவர்களின்  பக்தியை  காண்பிக்கும்  வகையில்  ராஜராஜ  சோழனின்  இயற்பெயரான  அருண்மொழி  வர்மன்  எனும்  பெயரை  தாங்குகிறான் .சென்னை  அருகிலுள்ள  குன்றத்தூரில்  சைவ  வேளாளர்  குடும்பத்தில்  பிறந்தார் .  சேக்கிழார்  என்பது  அவரது  குடும்ப  பெயர். அருண்மொழி  சிறு  வயது  முதலே  சிறந்த  அறிவோடு  விளங்கினான் .சைவ  சித்தாந்தத்திலும்  மற்ற  சைவ நூல்களிலும்  மிகுந்த  ஆர்வமுள்ளவனாய்   திகழ்ந்தான் .