Thursday 28 November 2013

அவர்கள்  பாடல்கள்  சில ,
ஆடும்சிதம்பரம் - பெஹாக்
அறிவுடையோர் -சக்கரவாகம்
எந்நேரமும் - தேவகாந்தாரி
சிவகாமசுந்தரி -ஜகன்மோகினி
வருகலாமோ -  மாஞ்சி
.தந்தைதாய் - ஷண்முகப்ரியா  
தமிழ்த்தாத்தா  என்று  அன்புடன்  அழைக்க  படும் உ.வே.சாமிநா தையர்  அவர்கள்  பாரதியிடம்  சிறிது  காலம்  சங்கீதம்  பயின்றார் . அவர்  சரிதத்தையும்  எழுதியுள்ளார் . கோபாலக்ருஷ்ண  பாரதி  1000 மேல்  பாக்கள்  எழுதி யுள்ளார் . இவ்வாறு  பெரு  வாழ்வு  வாழ்ந்த  அவர் 1896ல்  இறைவன்  அடி  சேர்ந்தார் . அவர்  பாடல்கள்   மங்கா  புகழோடு  இன்றும்  ஒலிக்கின்றன . இன்னும்  ஒலிக்கும்  

Tuesday 26 November 2013

இந்த  நந்தன்  சரிதம்  வெகுவாக  புகழ்  பெற்றது . அதில்  சில  பாடல்கள்  அபூர்வ  ராகங்களில்  அமைக்க  பட்டிருக்கின்றன . இந்த  பாடல்கள்  திரைப்படம்  மேடை நாடகம் ,  கச்சேரிகள்  என்று  பலவாறாக   புகழ்  பெற்றன . இன்னும்  பாடப்படுகின்றன . இவர்  பாடல்களில் ( கோபாலக்ருஷ்ண ) என்ற முத்திரை  காணாலாம் '
  ஒரு சமயம்    இவர்  த்யாகப்ர்ம்மத்தை  காண  சென்ற  போது  அங்கு  ஆபோகியில்  ஒரு  பாடல்  காதில்  விழ  அவர்  அங்கேயே  சபாபதிக்கு  என்ற  ஆபோகி  பாட்டை  பாடியதாக    கூறபடுகிறது       

g.bharathi

நந்தனார்  தாழ்ந்த  குலத்தை   சேர்ந்தவர் . அவர் சிவ  பெருமான்  மேல்  ஆழ்ந்த  பக்தி  கொண்டு  மார்கழி  திருவாதிரை  அன்று  தில்லை  சென்று  அம்பலவாணனை  தரிசிக்க  அடங்கா  ஆவல்  கொண்டார் .ஆனால்  அவ்வாசை  நிறைவேர  மேல்  ஜாதிகா ரர்களால்  பெரும்  எதிர்ப்பை  காண  வே   ண்டி இருந்தது . நந்தனார்  தில்லை  நாதனை  வேண்ட , அவர்  இவனை  கோவிலுக்கு  வரவழைத்து  தன்னுள்  சேர்த்துக்கொண்டார் . இது வே   நந்தனார்  சரிதம் .       

Saturday 23 November 2013

g.bharathi

அவர்  ஊராரால்  தள்ளி  வைக்கப்பட்டார் .வித்வான்  மீனாட்சிசுந்தரம் பிள்ளை  அவர்கள்  பாரதியை  வேதநாயகம்பிள்ளை க்கு  அறிமுகம்  செய்து  அவருடன்  தங்கவைத்தார் . அங்கே  அவர்  நந்தனார்  சரித்திரத்தை  எழுதினார் . சேக்கிழார்  பெரிய  புராணத்தை  மைய மாக  கொண்டு  அந்த  சரிதம்  அமைந்தது . இதற்க்கும்  பெரும் எதிர்ப்பு   எழுந்தது . பிறகு  பெரும்  புகழும்  தேடி  தந்தது . 

Thursday 21 November 2013

bharathi

கோபாலக்ருஷ்ண  பாரதி  ஆனந்த தாண்டவபுரத்திற்கு  குடிபெயர்ந்தார் . அங்கு  கோவிந்த யதி  என்பவரிடம்  வேதம்  பயின்றார் . அவர்  யோகம் , த்யானாம்   என்று  ஒரு  தவ  வாழ்வே  வாழ்ந்தார்.ஜாதி ,மத  இன  வேறுபாடே  அவர்  பார்க்கவில்லை . எல்லோரும்  அவருக்கு  சமம் . அவர்  திருநீலகண்டர்  வாழ்க்கையை  கதா  காலக்ஷேபமாக  இயற்றினார் . திருநீலகண்டர்  தாழ்ந்த  குலத்தவன்  என்பதால்  பெரும்  எதிர்ப்பு  எழுந்தது . 

Wednesday 20 November 2013

bharathi

கோபால  கிருஷ்ண பாரதி தஞ்சை ஜில்லா  நரிமணம்  கிராமத்தில் 1811ல்  பிறந்தார் .  அவருடைய  முன்னோர்கள்  சம்ஸ் க்ரிதம் ,சங்கீதம்  இரண்டிலும்  தேர்ச்சி  பெற்றவர்கள் .அவரும்  சிறுவயது முதலே  கர்நாடக .ஹிந்துஸ்தானி  சங்கீதங்களிலும்  மிகுந்த ஆர்வம்  கொண்டிருந்தார் .பலவாராக  கேட்டறிந்து  கற்றார்.   

Thursday 14 November 2013

tamilisai

இதுவரை நாம்  கண்ட  எல்லா  தமிழ்  பாடல்களும்  கிடைத்தற்கறி யவை  எல்லை யில்லா  பக்தியை  தன்னகத்தே  கொண்ட  பாடல்கள் . பாடும்பொழுதே  நமக்கு  கண்ணீரை வரவழைக்க  கூடியவை . பாடியவர்களும்  தான்  பாடிய  தெய்வத்துடன்  ஐக்கியமாகி  தன்னை  மறந்த  நிலையில் பாடிய  பாடல்கள் . அத்தகைய  பாடல்கள்  இனி  காண்பது  அரிது
    .சங்கீத  மும்மூர்த்திகளூக்கு  பின்  வந்த சாகித்யகர்த்தாக்கள்  பாடல்களில் பக்தி  முக்கிய  அம்சம் . ஆனால்  முன்னவர்கள்  பாக்களில்  இருந்த  ஆழ்ந்த  பகவத்  ஈடுபாடு  எதிர்பார்பதற்க்கில்லை