Friday 30 October 2015

thiruvisaipa

மின்னார்  உருவம்  மேல்  விளங்க  வெண்  கொடி , மாளிகை  சூழ
பொன்னார்  குன்றம்  ஒன்று  வந்து  நின்றது  போலும்  என்னா
தென்னா  என்று  வண்டு  பாடும்  தென்  தில்லை  அம்பலத்துள்
என்னார்  அமுதை  எங்கள்  கோவை  என்று   கொல்  எய்துவதே
 இதுவே  அவர்  எழுதிய  முதல்  திருவிசைப்பா .

Thursday 29 October 2015

kandarathithar

  1. 195 முதல்  204 வரை  உள்ள  பாடல்களை  பாடியவர்    சோழ  அரச  குடும்பத்தை  சேர்ந்த  கண்டிராதித்தர்  ஆவர் . அவர்  சோழ  மன்னன்  பராந்தக  சோழனின்  மகனாவார் . பராந்தக  சோழன்  தில்லையில்  பொற்கூரை  வேய்ந்த  சோழன்  என  புகழ்  பெற்றவன் . தில்லை  அம்பலவாணனிடம்  மிக்க  பக்தி  கொண்டவர்கள் . கண்டராதித்தர்  950 முதல்  957 வரை  சோழ  நாட்டை  ஆண்டார் . அவர்  அரசனாக  இருந்தாலும்  அவர்  மனம்  ஈசனை  நாடியே   சென்றது . மூவர்  தேவாரத்தில்  மிக்க  நாட்டமுடையவராக  திகழ்ந்தார் . ஈசன் மீது  பாக்கள்  நிறைய  புனைந்தார் . அநேக  ஆலையங்களையும்  கட்டினார் .  அவர்  சைவ  வைஷ்ணவ  பேதம்  பாராமல்  சமமாக  பாவித்தார் . ஒரு  வைஷ்ணவ  கோவிலையும்  நிர்மாணித்தார் .  957 க்கு  பிறகு  அவர்  அரசை  துறந்து  தல  யாத்திரை  புறப்பட்டு  விட்டார் . அவர்  மனைவி  செம்பியன்  மாதேவியும்  சிறந்த  சிவ பக்தை . நிறைய  நற்பணிகளை  மேற்கொண்டு  அரசருக்கு  உறுதுணையாக  இருந்தார் .  கண்டராதித்தர்  பாடிய  முதல்  பாடல் ,





Sunday 25 October 2015

song cont.

அல்லியம்  பூம்பழனத்து  ஆமூர்  நாவுக்கரசை
செல்ல  நெறி வகுத்த  சேவகனே  தென்  தில்லை
கொல்லை  விடையேறி  கூத்து  ஆடரங்காக
செல்வம்  நிறைந்த  சிற்றம்பலமே  சேர்ந்தனையே |

களையா  உடலோடு  சேரமான்  ஆரூரன்
விளையா  மதமாறா  வெள்ளானை  மேல்  கொள்ள
முளையா  மதி  சூடி  மூவாயிரவரொடும்
அளையா  விளையாடும்  அம்பலம்  நின்  ஆடரங்கே 

Friday 23 October 2015

poonthuru nambi

அடுத்து  183 முதல்  194 பாடல்  வரை  பாடல்களை  பாடியவர்  பூந்துருத்தி  நம்பி  காட  நம்பி .இவர்  திருவையாறு  அருகில்  உள்ள  பூந்துருத்தி  எனும்  ஊரை  சேர்ந்தவர் . சிறந்த  சிவபக்தர் . இவர்  எல்லா  சிவாலயங்களையும்  சேவித்தபடி  தேவாரங்களை  மனமுருக  பாடுவதை  வழக்கமாக  கொண்டிருந்தார் . இவர்  சம்பந்தர் , அப்பர் ,சுந்தரர் , கண்ணப்பர்  மேலும்  பல பல  நாயன்மார்களை  பாடி  இருக்கிறார் . இவர்  10 ஆம்  நூற்றாண்டில்  வாழ்ந்தவர் . அவர்  பாடிய  பாக்களில்  சில.

எம்பந்த வல்வினை நோய்  தீர்த்திட்டு  எமையாளும்
சம்பந்தன்  காழியர்  கோன்  தன்னையும்  ஆட்கொண்டருளி
அம்புந்து  கண்ணாலும்  தானும்  அணிதில்லை ச்
செம்பொன் செய்  அம்பலமே  சேர்ந்திருக்கை  ஆயிற்றே |


     

Tuesday 13 October 2015


 கருவூர்  தேவர்  பாடிய திருவிசைப்பா  பாடல்களில்  தஞ்சை  ராஜராஜே சரத்தை  பாடிய  பா டல் ,

உலகெலாம்  தொழவந்து  எழுகதிர்  பருதி  ஒன்று  நூறாயிரகோ டி
அலகெலாம்  பொதிந்த  திருவுடம்பு  அச்சோ  அங்ஙனே  அழகிதோ ,அரணம்
பலகுலாம்  படைசெய்  நெடுநிலை  மாடம் பருவரை  ஞாங்கர்  வெண்  திங்கள்
இலை  குலாம்  பதணத்து  இஞ்சி சூழ்  தஞ்சை  இராஜராஜேச்சரத்து  இவர்க்கே |    

Saturday 10 October 2015

cont;

கருவுர்தேவர்  வடமாநிலங்களில்  பல  திருத்தலங்களை  சேவித்துகொண்டு   வந்து  திருப்புடைமருதூர்  வந்தடைகிறார் . தாமிரபரணி  பெருக்கெடுத்துகொண்டு  ஓடியதால்  அவர்  நரம்புநாதரை   அழைக்க   தண்ணீர்  வழிவிட்டதாகவும்  ஈசன்  அவருக்கு  பாத  தீக்ஷை  வழங்கியதாகவும்  கூறப்படுகிறது . பிறகு  பொதிகை  மலை  அகத்தியரை  வழிபடுகிறார் .ராஜராஜசோழன்  தஞ்சையில்  அடிமுடி  காண  முடியாத  ஈசனுக்கு  பிம்மாண்டமான  கோவில்  கட்டுகிறான் . பிரம்மாண்டமான  நந்தியும்  லிங்கமும்  அமைக்க  எண்ணுகிறான் . அஷ்டபந்தன  மருந்து  மருந்து  கெட்டிபடாமல்  அத் தனை  பெரிய  லிங்க  வடிவை  பிரதிஷ்டை  செய்ய  இயலாமல்  மலைத்தனர் . அப்போது  போகநாதர்  ஆணையின்  பேரில்  கரூவூர்  தேவர்  தன்  யோகசித்தியால்  மருந்தை  கெட்டிப்பட  செய்து  லிங்க  பிரதிஷ்டை  குறையில்லாமல்  நிறைவேற்றுகிறார் . இவ்வாறு  ராஜராஜசோழனுக்கு  நெருக்கமாகிறார் . இவர்  ஆற்றிய சாதனைகள்  அநேகம் . 

Thursday 8 October 2015

karuur

அடுத்து  102 திருவிசைபாக்களை  பாடியவர்  சித்தர்  கருஊர்தேவர்  ஆவார் . மிக  அதிக  பாக்களை  பாடியவர்  இவரே . இவர் கருஊரில்  பிறந்தவர் .  சிறந்த  சிவபக்தர் . போக நாதரிடம்  தீக்ஷை  பெற்றவர் . நான்கு  வேதங்களையும்  கற்றவர் . பக்தி  தமிழ் பாக்களை  இனிமையாக  பாடுவார் . அவர்   சிவயோகம்  பயின்று  பல  அதிசயமான  சித்திகளை  பெற்றவர் . இத்தகைய பேறுகளை  பெற்றும்
அவர்  மிக  எளிமையாக  வாழ்ந்தார் . கந்தல்  உடைகளை  அணிந்து  பரட்டை  தலையுடன்  சுற்றுவார் .

Friday 2 October 2015

அவர்  பாடிய  முதல்  பல்லாண்டு ,

மன்னுக  தில்லை ! வளர்க  நம்  பக்தர்கள் ! வஞ்சகர்  போய்  அகல
பொன்னின்செய் ! மண்டபத்துள்ளே  புகுந்து  புவனியெல்லாம்  விளங்க
அன்னநடை  மடவாள்  உமைகோன் அடியோமுக்கு  அருள்  புரிந்து
பின்னை  பிறவியறுக்க  நெறி  தந்த  பித்தர்க்கு  பல்லாண்டு  கூறுதுமே !
 

senthanar

அடுத்த  34 திருவிசைபாக்களையும்  13 திருப்பல்லாண்டுகளையும்  பாடியவர்  சேந்தனார்  ஆவார் . அவர்  நாங்கூர்  எனும் இடத்தில்  வாழ்ந்தவர் . பட்டினத்தார்  அவர்களிடம்  கணக்கராக  வேலை  செய்தவர் . அப்போது  சேந்தனார்  பட்டினத்தடிகள்  சொல்படி  அவருடைய  செல்வத்தை  ஏழைகளுக்கு  தானமாக  வழங்கிவிட  அவர்  சிறையில்  அடைக்க  படுகிறார் . பட்டினத்தார்  ஈசனிடம்  வேண்டி  அவரை  சிறையிலிருந்து  மீட்கிறார்.  பிறகு   சேந்தனார்  தில்லை  சென்று  அங்கு  விறகு  வெட்டி  அந்த  வருவாயில்  ஜீவனம்  நடத்துகிறார் .அவர்  தான்  பக்தியுடன்  போற்றும்  தில்லை  கூத்தனின்  அடியார்  ஒருவருக்கு  தான்  உண்ணும்  கூழை  அளிக்காமல்  தான்  உண்ணவே  மாட்டார் . அப்போது  ஒரு  நாள்  அம்பலவாணரெ  அடியாராக  வந்து  கூழு  அருந்தி  அதை  தன மேனியில்  காண்பித்து  எல்லோரும்  அறிய  செய்கிறார் . ஒரு  சமயம்  தில்லை யில்  திருவாதிரை  திருநாளன்று  ஈசனின்  தேர்  நகராமல்  போககண்டு  எல்லோரும்  திகைத்து  நிற்க  இவர்  திருப்பல்லாண்டு  13 பாக்களை  பாடி  தேர்  வீதி  வலம்  வர  செய்கிறார் . எல்லோரையும்  வியப்பில்  ஆழ்த்துகிறார் . அவர் பாடிய  பல்லாண்டு  13 பாக்களே  ஆனாலும்  பெரிதும்  போற்றப்பட்டது . தினமும் எல்லா   சிவாலயங்களிலும்  ஈசன்  தீபாராதனைக்கு  பின்  பாடப்படும்  பஞ்ச  புராணம்  எனும்  திருமுறை  தொகுப்பில் பல்லாண்டும்  அடங்கும் .  பிறகு  சேந்தனார்  சேந்த மங்கலம்  எனும்  இடத்தில்  ஆசிரமம்  அமைத்து  முருகனையும் வழிபட்டு  வந்தார்  ஒரு தை  பூச  நன்னாளில்  ஈசனடி  சேர்ந்தார் .