Wednesday 31 October 2018

பொற்தாளம்   பெற்ற   ஞானசம்பந்தப்பெருமான்   தாளத்துடன்   ஐயனை   பல   ஆலயங்களில்   பல   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் .  அவருக்கு   தில்லை   அம்பலக்கூத்தனை   காண   பேராவல்   உண்டாயிற்று .  தந்தையும்   அவராசையை   நிறைவேற்ற   தில்லைக்கு   புறப்பட்டார் .  கொள்ளிடம்   நதியை   கடந்து   தில்லையை   நெருங்கும்   போதே   அந்தண ப்பெருமக்கள்   செய்யும்   யாக   புகையும்   மந்திர   கோஷங்களும்   வானுயர   நின்ற   கோபுரங்களும்   அவரை   மெய்சிலிர்க்க   வைத்தது .  விழுந்து   வணங்கினார் .  அவர்   வரவை   எதிர்பார்த்து   தில்லை   மூவாயிரவர்   அவரை   வரவேற்க   மேளதாளத்துடனும்   வேத   கோஷங்களுடனும்   காத்திருந்தனர் .  அவரை  உள்ளே  அழைத்து       சென்றனர் .  சம்பந்தர்     பொன்னம்பல வாணனை   மனம்   குளிர   சேவித்து   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் .  மனநிறைவோடு   வெளியே   வந்து   அவருக்கு   சேவை   செய்யும்   பேறு  பெற்ற   மூவாயிரவர்  வாழும்    வீதிகளை   வணங்கி   வலம்   வந்தார் 

Saturday 27 October 2018

ஈசனிடம்   பொ ற்த்தாளம்   பெற்று   அன்னை   அருளால்   அதில்   லய   ஓசை   வரப்பெற்றதும்   சம்பந்தரின்   பெருமையை   மேலும்   உயர்த்தியது .  அவனுடைய   தாய்வழி   பாட்டனாரின்   ஊரான   நனிப்பள்ளி   மக்கள்   அவரை   தங்கள்   ஊருக்கு   வரவழைக்க   மிக   ஆவல்   கொண்டனர் .  தந்தையும்   அவனை   அங்கு   அழைத்து   சென்றார் .  ஊர்   மக்கள்   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தனர் .  மேலும்   சுற்றி   உள்ள   திருத்தலங்களை   சேவித்துக்கொண்டு   ஊர்   திரும்பினர் ,  இவரை  பற்றி    கேள்விப்பட்ட     நீலகண்ட   யாழ்ப்பாணரும்   அவர்   மனைவி   விறலியாரும்   அவரை   காணும்   பேராவலுடன்   தோணிபுரம்   வந்தனர் .  அவர்கள்   வருகையை   கேள்விப்பட்ட   சம்பந்தப்பெருமான்   தானே   சென்று   அவரை   வரவேற்று   அழைத்து   கொண்டுவந்து   அமுது   படைத்து   மகிழ்ந்தார் .  அவரை   யாழ்   வாசிக்க   செய்து   ஐயன்   பதிகங்களை   யாழில்   கேட்டு   பெரிதும் ரசித்தார் . விடை   பெறும்போது     நீலகண்டர்   தன்   மனதிலுள்ள   பேராவலை   தெரிவித்தார்.  ஆளுடைபிள்ளை   எம்பெருமானை   பாடும்போது   தான்   கூடவே   இருந்து   யாழ்  வாசிக்க   அனுமதிக்க   வேண்டுமென   கேட்டுக்கொண்டார்   ஞானசம்பந்தரும்   மகிழ்ச்சியுடன்  ஒப்புதல்    அளித்தார் .    

Thursday 25 October 2018

மூன்று    வயது   சின்னஞ் சிறு   பாலகன்   ஐய்யன்   மீது   பைந்தமிழில்   பதிகங்கள்   பாடும்   அதிசயம்   விரைவில்   ஊரெங்கும்   பரவியது .  அந்தணர்களும்    ஈசன்   அடியார்களும்   கூட்டம்   கூட்டமாக   வந்து   அத்திருமகன்   காலில்   விழுந்து   வணங்கினர் .  தந்தையின்   பெருமித்திற்கு   அளவே   இல்லை .  இறைவன்  கையால்    ஞான   பாலுண்டு   பேறுபெற்ற   அவன்  இறைவன்  சம்பந்தத்தால்    ஞானசம்பந்தன்   ஆனான் .  சிபாதவிருதயர்   குழந்தையை   பெருமையுடன்   தோளில்   சுமந்து   கொண்டு   நான்கு   வீதிகளிலும்   ஊர்வலமாக   வந்தார் .    மறுநாள்   பொழுது   புலர்ந்ததும்   சிறுவன்   ஈசனை   காண   ஆவல்   தெரிவிக்க   தந்தை   கோவிலுக்கு   அழைத்து   சென்றார் .   மறுநாள்   சிறுவன்   அருகே   உள்ள   கோலக்கா   சென்று   அங்கு   எம்பெருமானை   பாட   ஆவல்   தெரிவித்தான் .  தந்தை   அங்கு  தூக்கி   சென்றார் .  சம்பந்தன்   ஐயனை   துதித்து   மனமுருக   பதிகங்கள்   பாடினான் .  மனம்   குளிர்ந்த   ஈசன்   சம்பந்தனுக்கு   பொற் த்தாளம்   வழங்கினார் .       அன்னை   அதற்கு   ஓசை   கொடுத்தாள் . 

Tuesday 23 October 2018

 சின்னஞ்சிறு   பாலகன்   செந்தமிழில்   ஐயன்   மீது   பதிகம்   பாடும் அதிசயம்    கண்ட     ஓங்கிய   சிவபாதவிருதயர்   கை   அப்படியே   நின்றது .   பிரமபுரம்   ஈசனே   பால்   ஊட்டியது   என   காண்பித்து விட்டு     கோயில்   வாயிலை   சேவித்துவிட்டு   ஞானபாலுண்ட   அச்சின்னஞ்சிறிய   பாலகன்   தோணியப்பர்   சன்னதிக்கு   சென்று   வணங்கி   பாடலை   தொடர்ந்தான் .  ஆனந்தமும்   அதிசயமும்   மேலிட   தந்தையார்   மெய்சிலிர்த்து   போனார் .    அவருக்கு   அத்தெய்வ   குழந்தையால்   சைவம்      தழைக்கும்   என்ற   நம்பிக்கை   மேலோங்கியது .  மகிழ்ச்சி   தாளவில்லை .  அதற்குள்   பச்சிளம்   பாலகன்   ஈசன்  அருள்   பெற்று   செந்தமிழ்   பதிகங்கள்   ஐயன்   மீது   பாடும்   அதிசயம்   ஊரெல்லாம்   பரவி   மக்கள்   கூட்டம்   கோவிலை   நோக்கி   வர   தொடங்கியது .  

Friday 19 October 2018

 அன்னையும்   குழந்தைக்கு   ஞானப்பால்   ஊட்டி   மகிழ்கிறாள் .  குழந்தை   மகிழ்ந்து   சிரிக்கிறது .  ஈசனும்   தேவியும்   மறைக்கின்றனர் .   திருகுளத்தில்   நீராடி   வெளியேறிய   சிவபாதவிருதயர்   குளப்படியில்   குழந்தையை     காணாமல்   திடுக்கிட்டு    போனார் .  தேடி   போனவர்   பக்கத்தில்   விளையாடி  கொண்டிருக்கும்   குழந்தையை   கண்டார் .   அவன்  வாயில்   பால்   வழிவது   கண்டு   கோபம்   மேலிட   அவனை   பார்த்து   கோபத்துடன்  யார்   கொடுத்த   பாலை   உண்டாய்   என்று   கோபத்துடன்   கையை   ஓங்கினார் ,  உடனே   மூன்று  வயது   பாலகன்     கோபுரத்தை   காண்பித்து   தோடுடைய  செவியன்   விடையேறியோர்   என்று   செந்தமிழில்      பதிகம்   பாட   துவங்கினான் .

Tuesday 16 October 2018

சிவபாதவிருதயர்   குழந்தையை   தூக்கிக்கொண்டு   கோவிலுக்கு   சென்றார்   .  குளத்தில்   நீராட   எண்ணி   குழந்தையை   குளக்கரையில்   படியில்   உட்கார   வைத்துவிட்டு    அவர்   மூழ்கி   குளிக்க   எண்ணி குளத்தில்    இறங்கினார் .  குழந்தை   அவர்   குளிப்பதை   கண்டு   சிரித்து   கொண்டு   வேடிக்கை   பார்த்தது .  அவர்   தண்ணீரில்   அமிழ்ந்து   குளிக்க   எண்ணி   தண்ணீரில்   மூழ்கினார் .  குழந்தை   தந்தையை   காணாமல்   பயந்து   அழ   தொடங்கியது .    எங்கும்   தேடியும்   தந்தையை   காணாமல்   ஆலய   விமானத்தை   நோக்கி   அம்மா   அப்பா   என்று   அழ   தொடங்கினான் .   குழந்தையின்   அழுகை   தோணியப்பர்   செவிகளில்   விழுந்தது .   தன்   பேரருளால்   சிவபாதவிருதையருக்கு   கிடைத்த   பொக்கிஷம்   அல்லவா   அக்குழந்தை .  அது   அழுதால்   பொறுப்பாரா ?  உடனே   உமை   அன்னையுடன்   தோன்றி   அன்னையை     குழந்தை    ஞானமுடன்   பிறக்க   தவமிருந்த   பெற்றோர்   மனம்   குளிர   பாலுடன்   ஞானத்தையும்   கலந்து  ஊட்டி  விடும்படி    பணித்தார் .

Thursday 11 October 2018

குலம்   விளங்க   பிறந்த   அத்தெய்வீக   குழந்தை      பெற்றோரை   மகிழ்ச்சி   வெள்ளத்தில்  ஆழ்த்தியது .  சிவபாதவிருதயர்   குழந்தை   பிறந்த   இவ்வைபவத்தை   கொண்டாட   வேதியர்களை    அழைத்து   பலவிதமான   தானங்களை   செய்து   அவர்களை   மகிழ்வித்தார் .தகுந்த   நாள்   வந்ததும்   ஊர்   பெண்கள்   கூடி   குழந்தைக்கு   ஆளுடை பிள்ளை   என்று   பெயர்   சூட்டி   மகிழ்ந்தனர் .  அவருக்கு  ஊரில்   நல்ல   மரியாதை   இருந்ததால்   ஊரே   ஆனந்தம்   அடைந்தது .  ஊரில்   எல்லோருமே   அக்குழந்தையை   வளர்ப்பதில்   பங்கேற்றனர் .  இவ்வாறாக   மூன்று   ஆண்டுகள்   ஓடின.   கால்   சலங்கை   ஒலிக்க    குழந்தை   ஓடும்   அழகு   யாவர்   மனதையும்   கொள்ளை   கொண்டது .  அப்போது   ஒரு   நாள்   சிவபாதவருதயர்   நீராட   திருக்குளத்திற்கு   கிளம்பினார் .  குழந்தை   தானும்  உடன்   வரவேண்டுமென்று   அடம்   பிடித்தான் .     தந்தையும்    போகட்டுமென்று   அழைத்து   செல்ல   தூக்கிக்கொண்டு   கிளம்பினார் .

Friday 5 October 2018

சிவபாதவிருதயர்   பெயருக்கு   ஏற்ற வாறு   சிவபெருமானின்   பாதத்தை   ஒரு   கணமும்   மறவாது   த்யானிப்பவர் .  அவர்   மனைவியார்    பகவதியாரும்   கணவ.னுக்கு   சிறிதும்   குறையாமல்   எம்பெருமான்   மீது   அளவற்ற   பக்தி   கொண்டவர் .  கணவனுடைய   தெய்வீக   பணிகளில்   மிக்க   ஆர்வத்துடன்   பங்கு   கொண்டு   துணை   இருந்தார் .   இவ்வாறு   மனமொத்து   வாழ்ந்த   தம்பதிகளுக்கு   குறை   இருந்தது .   அவர்களுக்கு   மழலை   செல்வம்   இல்லாதது   குறை .  அப்போது   நாட்டில்   புற   சமயங்கள்   பரவி   இருந்தது .  தம்   மக்கள்   புற   சமயங்களுக்கு   மாறுவதை   பொறுக்காமல்   தினம்   தோணியப்பர்  முன்   சரணடைந்து   தன்   குறைகளை   அவரிடம்   கண்ணீர்மல்க   முறையிட்டு   வந்தார் .  கருணை   கடலான   ஐயன்   பக்தனின்   கண்களில்   நீர்   வருவதை   பொறுப்பாரா ?   ஐயன்   கண்   திறந்தார்.  பகவதியார்   கருவுற்று   பத்து   மாதங்களில்   சுப   யோகங்கள்   நிறைந்த   திருவாதிரை   நக்ஷத்திரத்தில   ஒரு      ஆண்   மகனை   ஈன்றாள் .

Thursday 4 October 2018

வம்பறாவரிவண்டு   மணம்   நாற   மலரும்   
மதுமலர்நற்   கொன்றையான்அடியலாற்   பேணா
எம்பெருமான்   சம்பந்தன்   அடியார்க்கு   அடியேன் |

சோழ   நாட்டில்   சீர்காழி   என்றொரு   புண்ணியத்தலம் .  பிரம்மபுரம் ,  கழுமலம் ,  வேணுபுரம் ,  தோணிபுரம்   இன்னும்   பல   பெயர்கள்   இக்ஷேத்திரத்திற்கு .  பிரளய   காலத்தில்   அண்ட    சராசரங் ள் வெள்ளத்தில்   மூழ்கி   அழிந்த   போது   இத்தலம்   தோணியாக   மாறி   ப்ரளயத்திலிருந்து   மீண்டதால்   தோணிபுரம்   என்று   பெயர்   பெற்றது .   இதுவே   இந்திரன்   தாரகாசுரனுக்கு   பயந்து   ஒளிந்து   கொண்ட    இடமாகும் .   இத்தனை   பெருமை   வாய்ந்த  தலத்தில்   கவுணியர்   கோத்திரத்தில்    பிறந்த     சிவபாதவிருதயர்   என்ற   அந்தணர்   வாழ்ந்து    வந்தார் .