Thursday 26 May 2016

இரண்டாவது  கனியை  உண்ட பரமதத்தன்  மிக  அதிசயமடைந்தான் . அந்த  கனி  அவன்  இதுவரை  உண்டிராத  அலாதி  சுவையுடன்  இருக்க  கண்டான் . அதிசயித்து  புனிதவதியிடம்   காரணம்   வினவினான் . அவளும்  மிகுந்த  தயக்கத்துடன்  நடந்ததை  கூரினாள் .  நடந்ததை  கேட்டு   அதிசயித்து  அவளை  கண்டான் . அவளை  மறுபடி  வரவழைக்க கூறுகிறான்  அவளால்  எடுக்கமுடிந்த  அக்கனி  அவனால்  தொடக்கூட  முடியவில்லை . அதிர்ச்சி  அடைந்த  அவனுக்கு  புனிதா  சதாரண  மானிட  பெண்ணாக  காண  முடி யவில்லை , அவள்  அன்னையாக  தோன்றினாள் . மனைவியாக  அவளை  நினைக்கவே  கூசினான் . அவளை  அன்னையாக  வணங்க  முற்பட்டான் .    

Wednesday 18 May 2016

punitha

புனிதவதியும்  பரமதத்தனும்  மகிழ்ச்சியாக  வாழ்ந்து  கொண்டிருந்தனர் . ஒரு நாள்  பரம தத்தன்   இரு  மாங்கனிகளை  புனிதவதியிடம்  கொடுத்து  தான்  வந்து  உண்பதாக  சொல்லி  சென்றான் . அவளும்  அவைகளை பெற்றுக்கொண்டு  உள்ளே  வைத்தாள் . அப்போது  ஒரு  சிவனடியார்  வந்து  வாசலில்  நின்று  பசிக்கு  உணவளிக்க  கூறினார் . புனிதவதி  தன்  கணவர்  கொடுத்தா  கனிகளில்  ஒன்றை  சிவனடியார்க்கு  மிக்க  மகிழ்க்ச்சியுடன்  ஈந்தாள் . சிறிது  நேரத்தில்  அவள்  கணவன்  வந்து  அக்கனியை  கொண்டு  வருமாறு  கூறினான் . அவளும்  இருந்த  ஒரு  கனியை  கொண்டவந்து  கொடுத்தாள் . அதை  உண்ட  கணவன்  அதன்  ருசியில்  மயங்கி மற்ற  ஒன்றையும்  கொண்டு  வருமாறு  கூறுகிறான் . திடுக்கிட்ட  புனிதவதி  ஈசனிடம்  மன்றாடுகிறாள் . ஈசன்  மற்றொரு  கனி தந்து  மறைகிறார் . மகிழ்ச்சியுடன்  அதை  கணவனுக்கு  தருகிறாள் . 

Thursday 12 May 2016

11 திருமுறையில்  அடுத்த  பாடல்களை  பாடியவர்   காரைக்கால்  அம்மையார் . காரைக்கால்  கிழக்கு  தமிழகத்தில்  கடற்கரையில்  உள்ள  வாணிப  துறைமுகம் .அத்துறைமுகம்   வெளிநாடுகளுடனும்  வியாபாரம்  நடைபெற்று  வந்த வளம்  மிகுந்த  இடம் . அங்கு தனதத்தர்  என்பவர்  மிக  செல்வாக்கு  உடைய  வணிகர்  அவர்  தவம்  இருந்து  பெற்ற  ஒரே  மகள்  புனிதவதி . அக்குழந்தை  சிறு  வயது  முதல்  அந்த  ஆடவல்லான்  இடத்தில்  மிக  பக்தி  கொண்டவளாக  இருந்தாள் .அவர்  ஆடலில்  மிககவரப்பட்டவளாக  இருந்தாள் . அவரை  பற்றி  பேசுவதே  அவளுக்கு  மிக  ஆனந்தம்  அளித்தது
. அவளும்  வளர்ந்து  அழகு  பண்பு , பக்தி  எதிலும்  சிறந்து  திகழ்ந்தாள் . அவள்  பெற்றோர்  அவளை  நாகபட்டினத்தை  சேர்ந்த  பரமதத்தன்  என்னும்  வணிக  வாலிபனுக்கு  மணமுடித்து  வைத்தனர் .

Saturday 7 May 2016

திருஆலவாய் அடிகள்  என்கிற  சிவபெருமான்   எழுதிய  ஓலையுடன்  துவங்கும்  இத்திருமுறை  இன்னும் பதினொன்று  ஆசிரியர்களை  கொண்டது . அவர்கள்  ஈசனால்  அம்மையே  என்று  அழைக்கப்பட்ட  காரைக்கால்  அம்மையார் , ஐயடிகள்  காடவர்கோன் , சேரமான்  பெருமானார் ,நக்கீரர் ,கல்லாடர் , கபிலர் , பரணர் , இளம்பெருகான்  அடிகள் , அதிராவடிகள் , பட்டினத்தடிகள்  மற்றும்  நம்பியாண்டார்  நம்பி  ஆவர் .

Wednesday 4 May 2016

இப்போது  நாம்  பதினோராம்  திருமுறையை  காண்போம் .இதில்  ஒரு  அற்புதம்  என்ன  என்றால்   இதன்  முதல்  முதல்  பாடல்  ஈசனே  எழுதியது . அது  ஒரு  கடித  வடிவில்  உள்ளது . அன்பே வடிவான  ஈசன்  திரு  ஆலவாய்  உடையார்  என்ற  நாமத்துடன்  தன்  பக்தன்  அரசன்  சேரமான்  பெருமானார்க்கு  எழுதிய  ஓலை .  கடிதம்  எழுதும்  பாங்கோடு  அவர்  எழுதும்  தம்மை  முதலில்  அறிமுகம்  செய்து  கொண்டு   பின்பு  யாருக்கு  அனுப்பப்படுகிறதோ  அவரை  அறிமுகம்  செய்துவி ட்டு  பின்பு  விஷயத்தை  தெரிவிக்கிறார் . அதாவது  அவருடைய  பரம  பக்தனான  பாணபத்தருக்கு  பொருள்  உதவி செய்ய  அரசன்  சேரமானை  வேண்டுகிறார் . அதுவே  கடிதத்தின்  சாரம் .+