Tuesday 30 January 2018

தொண்டர்   மகிழ்ச்சியுடன்   அதை   பெற்றுக்கொண்டு   அதை   வெள்ளாவியில்   போட்டு   பிறகு   மற்ற   பணிகளுக்கு   சென்று   விட்டார் .  பிறகு   மறந்து   போனார் .  மறுபடி   நினைவு   வந்தபோது   மதியம்   ஆகிவிட்டது .  அவசரமாக   அதை   கசக்கி   பிழிந்து   உலர்த்த   போனார் .  அப்போது   திடிரென்று   கறுத்த   மேகங்கள்   சூழ்ந்தன .  அவர்   நிலைகுலைந்து   போனார் .  மழை   வந்தால்   என்ன   செய்வது   என்று   எண்ணும்போதே   மழை   கொட்ட   ஆரம்பித்தது .  அவருக்கு  தன்னையே   மன்னித்து   கொள்ள   முடியவில்லை.  புலம்பினார்   தான்   செய்தது   பெரும்   பிழை   மன்னிக்க   முடியாதது   என்று   மன   உறுத்தல்   தாளவில்லை .  அவர்   அத்தனை   சொல்லியும்   கேளாமல்   வாங்கி   வந்து   இவ்வாறு   நம்பிக்கை   துரோகம்   செய்ய   நேர்ந்ததே .  அவர்   இருந்த   ஒரு   துண்டையும்   கொடுத்து     விட்டு   இந்த   மழையில்   என்ன  கஷ்டப்படுவார்   என்ற   எண்ணம்   அவரை   நிலைகுலைய   செய்தது .  தாம்   பெரும்   தண்டனைக்கு   தகுதியானவன்   என்று   முடிவு   செய்து   துணி   துவைக்கும்   கல்லில்   தன்   தலையை   மோதிக்கொள்ள   ஆரம்பித்தார் .  பொறுப்பாரா   ஐயன் .  உடனே   அவர்   முன்   தோன்றி   'திருக்குறிப்பு   தொண்டரே !  நிறுத்தும்   நீங்கள்   எமபக்தர்களுக்கு   குறையில்லாமல்   செய்யும்   தொண்டில்   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தோம் .  தங்களை   சோதிக்க   யாமே   இவ்வாறு   வந்தோம்   கவலை   வேண்டாம் .  என்று   ஆறுதல்   கூறி   அவரை   தம்முள்   சேர்த்துக்கொண்டார் .

Monday 29 January 2018

சிவனடியார்   திருக்குறிப்பு   தொண்டரை   பார்த்து   என்ன   வேண்டும்   என   வினவினார் .  தொண்டர்   சுவாமி   ஒரு   சிவத்தொண்டர்   இவ்விதம்   அழுக்கு   துண்டை   போர்த்தி   இருப்பது   மிகுந்த   வேதனை   அளிக்கிறது .   அதை   சுத்தமாக   துவைத்து   நொடியில்   தந்து   விடுகிறேன்   என்று   பணிவோடு   கேட்டான் .  சிவனடியாராக    வந்திருந்த   ஈசன்   'அப்பனே   ஒன்றும்   வேண்டாம் .  அழுக்கோ   கந்தையோ   இருப்பது   இது   ஒரு   துண்டையும்   உன்னிடம்   கொடுத்து   விட்டு   நான்   என்ன   செய்வது ?  மழை   வரும்போலிருக்கிறது .  இப்படியே   இருந்து  விட்டு   போகட்டும் '  என்று   மறுத்து   விட்டார் .  ஆனால்   தொண்டர்   மனம்   கேட்கவில்லை .   மன்னிக்க   வேண்டும்   ஸ்வாமி   என்மனம்   கேட்கவில்லை   ஒரே   நொடியில்   தோய்த்து   காயவைத்து   கொடுக்கிறேன்   ஸ்வாமி   என்று   கெஞ்சினான் .  அவர்   எத்தனை   மறுத்து   சொல்லியும்   அவன்   கேட்பதாயில்லை .  சரி   நான்   வரும்போது   துண்டு   தயாராக   இருக்க   வேண்டும் .  என்று   சொல்லி   அரை   மனதுடன்     கொடுத்தார் .

Sunday 28 January 2018

இவ்வாறு   தன்   மீது   கொண்ட   அளவற்ற   பக்தியால்   தன்   அடியார்களுக்கு   குறிப்பறிந்து   அவர்   செய்யும்   சேவையால்   மனம்   மகிழ்ந்த   ஈசன்   அவர்   பெருமையை   உலகுக்கு   எடுத்து   காட்டி   அவரை   ஏற்றுக்கொள்ள   எண்ணம்   கொண்டார் .    ஒரு        வயோதிகராய்   அழுக்கு   துண்டை   போர்த்திக்கு   கொண்டு   ஒரு   மழை   நாளில்   அவர்   முன்   சென்றார் .   அந்த   வயோதிக   சிவனடியாரை   அக்குளிரில்   அத்தகைய   கந்தல்   போர்வையுடன்  பார்த்த   தொண்டரின்   மனம்   வேதனையில்   துவண்டது .  அவர்   முன்   சென்று   பணிவோடு   நின்றார் 

Wednesday 24 January 2018

திருக்குறிப்பு   தொண்டர்தம்   அடியார்க்கு   அடியேன் |

தொண்டை   மண்டலத்தில்   உமை   அன்னை   ஐயனை   குறித்து   தவமிருந்து   பிறகு   ஈசனுடன்   கொலுவிருக்கும்   பெருமைமிக்க   தலம்   காஞ்சிபுரம் .  அங்கு   சலவை   தொழில்   செய்யும்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  சிவனடியார்களுக்கு   சேவை   செய்வதை   லட்சியமாக   கொண்டு  இருந்தார் .  அவர்கள்   வஸ்திரங்களை   வெள்ளாவியில்   போட்டு   நன்றாக   சலவை   செய்து   கொடுப்பார் .  அவர்கள்   சொல்வதற்கு   முன்பே   அழுக்கான   உடைகளை   தானே   எடுத்து   சென்று   சலவை   செய்து   கொண்டுவந்து   கொடுப்பார் .  தங்கள்   குறிப்பறிந்து   அவர்   செய்யும்   சேவையால்   மகிழ்ந்து   அவர்கள்   இவருக்கு   திருக்குறிப்பு   தொண்டர்   என்றே   பெயரிட்டனர் .

Friday 19 January 2018

 நந்தனார்   இரவில்   கனவில்   ஈசன்  கட்டளை    இட்டது   நினைவில்   வந்து   மெய்சிலிர்த்து   தன்னை   ஆண்டவன்   அழைக்கிறான்   என்கிற   அவர்கள்   சொன்னது   அவரை   ஆனந்தத்தின்   எல்லைக்கே   கூட்டி   சென்றது .  ஐயன்   கருணையை   நினைந்து    மெய்   உருக   த்யானம்  செய்து   கொண்டு   அவர்களை   பின்தொடர்ந்தார்.  உணர்ச்சி   மேலீட்டால்   தடுமாறி   விழுந்து   எழுந்து   ஓடினார் .  தென்புறத்து   திருவாயிலில்   யாக   தீ   கொழுந்து   விட்டு   எரிந்து   கொண்டிருந்தது .  அவரை   புனித   படுத்த   செய்த   யாகதீ   அல்லவா ?  ஈசனை   வாயார     துதித்த படியே   நந்தனார்   யாக   குழியை   வலம்   வந்து   யாகத்தீயில்   இறங்கினார் .  வாத்திய   கோஷங்களும்   மக்களின்   வாழ்த்து   கோஷங்களும்   விண்ணை   முட்டின .   நந்தனார்   கூப்பிய   கரங்களுடன்   எதிர்புறம்   வெளியேறினார் .  தேவதுந்துபி   முழங்கியது .  விண்ணவர்   மலர்மாரி   பொழிந்தனர் .  வெளிப்பட்ட   நந்தனார்   புதிய  மனிதராய்   தலையில்   ஜடாமுடியும் ,  கழுத்தில்   ருத்திராக்ஷ   மாலையும்.,  நெற்றியில்   திருநீறு   பளிச்சிட   மார்பில்   பூணுலும்   பூண்டவராக   சிவனடியாராக   வெளிவந்தார் .  பக்தர்களின்   சந்தோஷ   ஆரவாரம்   வானை   எட்டியது .  அந்தணர்கள்   அவரை   சகல   மரியாதையுடன்   அம்பலவாணன்   சன்னதிக்கு   அழைத்து   சென்றனர் .   நந்தனார்   பக்தி  பரவசத்துடன்   ஐயனை   துதித்தபடியே   அவருள்   ஐக்கியமானார் .  

Thursday 18 January 2018

பொழுது   புலர்ந்தது .   தில்லை   அந்தணர்கள்   இறைவனின்   கருணையை   எண்ணி   பேரானந்தம்   அடைந்தனர் .  ஈசனின்   இத் தகைய    பேரருளை   பெற்ற   அப்பெருமக னை   காண   பேராவல்   கொண்டு   ஈசனிடம்   சென்று   விடை   பெற்று   கொண்டு   மேளதாளத்துடன்    வேத   கோஷங்களுடனும்   புறப்பட்டு   நந்தனார்   இருக்குமிடம்   விரைந்தனர் .  நந்தன்   தூரத்திலிருந்து   அவர்களை   கண்டதும்  எந்நேரமும்   ஈசனுக்கு   தொண்டு   செய்து   கொண்டே   இருக்கும்   பெரும்   பாக்கியம்   பெற்ற    அவர்களை   அங்கிருந்தே   விழுந்து   வணங்கினார் .     அவர்கள்   எதோ   காரியமாக   வருவதாக   எண்ணி   தள்ளி   நின்று   அவர்களுக்கு   பாதை   விட்டு   விலகி   நின்றார் .  ஆனால்   அவர்கள்   நேரே   வந்து   இவர்   கால்களில்   விழுந்தனர் .  அவர்கள்   ஈசன்   தங்களை   தக்க   மரியாதையுடன்    தன்னிடம்   அழைத்துவர   ஆணை   இட்டுள்ளார் .  தங்களை   அழைத்து   செல்லவே   வந்திருக்கிறோம்   என்றனர் .

Tuesday 16 January 2018

ஈசன்   நந்தனாரின்   கனவில்   தோன்றி   'அன்பனே   நாளை   நீ   நம்மிடம்   வருவாயாக .  இப்பிறவி   நீங்க   வேள்வி   தீயில்   மூழ்கி   எழுந்து   எம்மிடம்   வந்து   சேர் '  என்று   ஆணையிட்டார் .  நந்தனாருக்கு    ஆனந்தம்   தாங்கவில்லை .  பொன்னம்பலவாணனின்   அன்பை   நினைந்து   அவரது   கண்கள்   நீரை   ஆறாய்   பொழிந்தன .  பலவாறு   பாடி   கொண்டாடினார் .  உணர்ச்சிகளை   கட்டுப்படுத்த   முடியாமல்   திணறினார் .
    காலையில்   தில்லைவாழ்   அந்தணர்கள்   ஈசனின்   இப்பெரும்   கருணையை   எண்ணி   பெரிதும்   மகிழ்ந்து   கொண்டாடினர் .    நந்தனை   காண   பெரும்   ஆவல்   கொண்டனர் .  ஈசனின்   கட்டளைப்படி   பெரிய   பள்ளம்   தோண்டி   அதில்   யாக   தீ   மூட்டி   சிறப்பாக   யாகம்   செய்ய   ஏற்பாடு   செய்தனர் .

Saturday 13 January 2018

ஊர்   எல்லைக்கு   வெளியே   இருந்து   உயர்ந்த   கோபுரத்தை  வணங்கி   பேரானந்தம்   அடைந்தார் .    மெல்ல   ஊரை   நெருங்கினார் .  அங்கு   தில்லை   அந்தணர்   தெருவில்   ஹோமம்   நடக்கும்   மண்டபங்களும் ,  வேத   பாடசாலைகள்   நடக்கும்   கூடங்களையும்    கண்டு   திடுக்கிட்டார் .  அங்கு   நுழைவதற்கு   அஞ்சி   எல்லையை   தாண்டியே  ஊரை  சுற்றி   கோயிலை   வலம்   வந்து   மகிழ்ந்தார் .  பக்தனின்   இந்த   நிலையில்   கண்ட   ஈசன்   மனம்   எத்தனை   நாள்   பொறுக்கும் .  அவரை   அணைத்து   ஆனந்தம்   கொள்ள   அவர் மனம்   துடித்தது .   ஐயன்   தில்லை   அந்தணர்களின்   கனவில்   தோன்றி   ஊரின்   எல்லையில் என்   அருமை   பக்தன்   ஆதனுர்   புலையன்   நந்தன்   காத்திருக்கிறான் .  அவனை  காண    நாமும்   வெகு   ஆவலாக   இருக்கிறோம் .  வேள்வி   தீ   மூட்டி   அவனை   புனித   படுத்தி   எம்மிடம்   அழைத்து   வாருங்கள் .  என்று   ஆணை   இட்டார் . 

Friday 12 January 2018

நந்தனாரின்   உள்ளம்   இந்த   ஏமாற்றத்தை   ஏற்றுக்கொள்ள   விரும்பவில்லை .  துணிந்து   ஒரு   நாள்   தில்லைக்கு   கிளம்பி   விட்டார் .  உள்ளே  செல்ல   இயலாவிட்டாலும்   தூரத்திலிருந்து   கோபுரத்தை   மனம்   குளிர   கும்பிட்டுவிட்டு   ஆலயத்தை   பிரதக்ஷிணம்   செய்து   வரலாம்   என்று   முடிவு   செய்து   தில்லைக்கு   கிளம்பிவிட்டார் .  எல்லையிலிருந்து   தெரிந்த   உயர்   கோபுரத்தை   கண்டதும்   அவர்   அடைந்த   ஆனந்தத்திற்கு   அளவே    இல்லை .  ஆ னந்த   கூத்தாடினார் .  

Wednesday 10 January 2018

மனநிறைவுடன்   ஊர்   திரும்பிய   நந்தன்   அக்கம்பக்கத்திலுள்ள   சிவாலயங்களில்   தன்னால்   முடிந்த   திருப்பணிகளை   செய்து   வந்தார் .   அங்கு   மற்றவர்கள்   தில்லை   அம்பலவாணனை   பற்றியும்   அவர்   திருவிளையாடல்களையும்    பெருமையாக   பேசுவதை   கேட்க   கேட்க   தில்லை   செல்ல   வேண்டும்   எனும்   ஆவல்   பெருகியது .  தில்லை   சென்று   நடராஜரை   தரிசிக்க   முடிவு   செய்து   நண்பர்களிடம்   எல்லாம்   தில்லை   போவதாக   சொல்லிக்கொண்டிருந்தார் .  ஆனால்   தனியாக   யோசித்த   போதுதான்      அதன் தடங்கல்கள்   அவருக்கு   புரிந்தது .  தில்லை   சென்று   விடலாம் .  ஆனால்   அம்பலக்கூத்தனின்   ஆலயம்   எத்தனை   பெரியது .   இவனால்   பிறந்த   குலம்   காரணமாக   ஆலயத்தின்   உள்ளே நுழைய   முடியாது .  பிறகு   ஈசனை   தரிசிப்பது   எவ்வாறு ?  இக்கேள்வி   அவரை   நிலைகுலைய   செய்தது .    என்ன   செய்வது ?  எல்லோரிடமும்   நாளை   போகிறேன்  நாளை   போகிறேன் .  என்று   தினமும்   சொல்லி   வந்தார் .  அவருடைய   சிவபக்தியும்   நடராஜரை   காண   அவருக்குள்ள   அளவு   கடந்த   ஆவலும்   யாவரும்   அறிந்ததால்   அவரை   எல்லோரும்   திருநாளைப்போவார்   என்றே   அழைக்கலானார் .

Monday 8 January 2018

நந்தனார்   மிக்க   ஏமாற்றமடைந்தார் .  கண்ணீர்   மல்க   ஐயனை   துதித்தார் .ஈசனே   உன்னை   காணும்   பேராவலுடன்   இங்கு   வந்தேனே .  இவ்வாறு   நந்தி   மறைத்து   உன்னை   காணமுடியாத  பாவி   ஆகிவிட்டேன'  என்று   வெகுவாக   அழுது   புலம்பினார் .  பொறுப்பாரா   ஈசர் .  உடனே   நந்திக்கு   பக்தன்   தன்னை   கான்பதற்கு   சற்று   விலகி   இருக்கும்படி   ஆணை   இடுகிறார் .  என்ன  அதிசயம் !  நந்தி   விலகி   பக்தன்   ஈசனை   கண் குளிர   காண   இடமளித்தது .   நந்தனார்   மகிழ்ச்சிக்கு   எல்லையே   இல்லை .    நந்தனார்   மகிழ்ச்சி   வெள்ளத்தில்   மிதந்தார் .    ஐயன்   திருமேனியை   உள்ளம்   குளிர   தரிசித்தார்   ஆனந்த   கூத்தாடினார் .   பக்தியுடன்   பலவாறாக    துதித்தார் .   தனக்கு   இவ்வாறு   கருணை   காட்டிய   ஐயனுக்கு   ஏதாவது   திருப்பணி   செய்ய   ஆவல்   கொண்டார் .  ஆலயத்தின்   பக்கத்தில்   ஒரு   குழி   இருப்பதை   கண்டார் .  அங்கு   ஒரு   திருக்குளம்   தேவை   என்று   எண்ணி   சில   ஆட்களை   வரச்செய்து   உடனே   வேலையை   தொடங்கினார் .    சில   நாட்களில்   வேலை   முடிந்து   அழகிய   திருக்குளம்   உருவானது ..  நந்தனாருக்கு   அளவிலா   மகிழ்ச்சி .  ஊர்   திரும்பினார் .

Sunday 7 January 2018

ஊதியம்   பெறாமல்   இத்தனை   பொருள்களை   கோயில்களுக்கு   சமர்ப்பிப்பதில்   அவர்   மனம்    மட்டற்ற   மகிழ்ச்சியை   அடையும் .  அவர்   புலையர்   குலத்தினராதலால் ஆலயத்திற்குள்   நுழைய   முடியாது   வாயிலில்   நின்றபடி   நெஞ்சுருகி   கண்ணீர்   மல்க   ஐயனை   மனதார   தொழுவார் .   அவர்   ஆலயத்திற்கு   செய்யும்   இத்தொண்டால்   மகிழ்ந்த   மக்கள்   ஜீவனத்திற்கு   கொஞ்சம்   நிலங்களை   மானியமாக   கொடுத்தனர் .அதில்   செலவு   போக   மிகுதியை   ஆலய   தொண்டிற்கே   செலவு   செய்வார் .  நந்தனார்   இவ்வாறு   பக்கத்திலுள்ள   கோயில்களுக்கும்   இத்தொண்டுகளை   செய்ய    செல்லும்   போது     வைத்திஸ்வரன்   கோயில்   அருகே   உள்ள  திருப்புன்கூர்   ஆலயம்  சென்று   ஈசனை   தரிசிக்க   விரும்பி   அங்கு   சென்றார் .  அங்கு  பெரிய   நந்தி    ஈசனை   மறைத்ததால்   அவரால்   ஈசனை   காண   முடியவில்லை .

Saturday 6 January 2018

செம்மையே   திருநாளை   போவார்க்கும்   அடியேன் !

 சோழ  நாட்டில்   கொள்ளிடை   நதி   கரையில்  ஆதனுர்   என்றொரு   கிராமம் ஊருக்கு   வெளியே     புலையர்கள்   வசிக்கும்   சேரி .  அவர்கள்   குலத்தில்   பிறந்தவர்   நந்தனார் .  அவருக்கு   சிவபெருமானிடம்   அளவு   கடந்த   பக்தி .  அவர்   சிவன் கோயில்களுக்கு     பேரிகை,  நகரா   முதலிய   வாத்தியங்களுக்கு   தோலும்    யாழ் ,  வீணை   போன்ற   வாத்தியங்களுக்கு   நரம்பும் ,எம்பெருமானுக்கு   கோரோசனையும்   கொண்டு   போய்   கொடுப்பார் .  ஆனால்   இவை   எதற்கும்   ஊதியமே   பெறமாட்டார் .

Thursday 4 January 2018

ருத்திராபசுபதியார்   ருத்திரரை   இடைவிடாது   ஜெபித்தே   சிவனடி   சேர்ந்தார் .  சோழ   நாட்டில்   திருத்தலையூர்   எனுமிடத்தில்   பசுபதி    என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவருக்கு   சிவபெருமானிடம்   அளவு   கடந்த   பக்தி .  ஈசனுக்கு   மிக   பிரிதியான   ருத்திரம்  தினமும்   ஜபித்து   வந்தார் .  அதனால்   அவருக்கு   ருத்திர   பசுபதி   என்ற   பெயர்   வழங்கலாயிற்று .  மிகவும்  போற்றப்படுவதும்   ஈசனுக்கு   மிகவும்   ப்ரியமானதுமான   ருத்திரத்தை   தினமும்   காலை   முதல்   மாலைவரை   குளத்தில்     கழுத்தளவு   நீரில்   நின்று   கொண்டு   கைகளை   தலை   மேல்   கூப்பிக்கொண்டு   ஜெபிப்பார் .  இச்செயலால்   மிக   மகிழ்ச்சி   அடைந்த   சிவபெருமான்   அவரை   தன்னிடம்   சேர்த்துக்கொண்டார் .

Wednesday 3 January 2018

அவர்   ஆறு   கால   பூஜை   செய்வார் .  ஆறு   கால   பூஜைக்கும்   ஆறு   விதமாக   மாலைகள்   சிவபெருமானுக்கு  சாற்றி   அழகு   பார்த்து   மகிழ்வார் .  இவ்வாறு   அவர்   வாழ்ந்து   கொண்டிருந்த   காலத்தில்   ஞானசம்பந்த   மூர்த்தி    தன்   பரிவாரங்களுடன்   அவ்வூருக்கு   விஜயம்   செய்தார் .  அப்போது   முருகனார்   அவர்களை   தம்   இல்லத்திற்கு   வரவேற்று   எல்லோருக்கும்   அமுது   படைத்து   மகிழ்ந்தார் .  இதனால்   சம்பந்தரும்    மிக   மகிழ்ந்து   அவருடன்   நெருங்கி   பழக்கலானார் .  முருகனாரின்   பூர்வ   ஜென்ம   புண்ணியத்தால்   சம்பந்தரின்   நட்பு   கிடைத்தது .  அப்போது   சம்பந்தர்   திருமணம்   நடைபெற்றது .  இவருக்கும்   அழைப்பு   வந்ததால்   இவர்   திருமணத்தில்   கலந்து   கொண்டு   சம்பந்தரோடு   சிவபெருமான்   ஜோதியில்   கலந்து   கொள்ளும்   பெரும்   பேறு   பெற்றார் .

Tuesday 2 January 2018

அவர்   தினமும்  விடிவதற்கு முன்   எழுந்து   திருக்குளத்தில்   நீராடி   திருநீறு   பூசி   சந்தியாவந்தனம்   முதலிய   கடமைகளை   முடித்துவிட்டு . பூக்குடலையை   மாட்டிக்கொண்டு   நந்தவனம்   நாடி   செல்வார் .  கொடியில்   பூப்பவை   செடியில்   வருபவை ,  மரங்களில்   பூப்பவை   மற்றும்   குளங்களில்   வளர்பவை  என்று    விதவிதமான   பூக்களை   சேகரித்து   கொண்டு   சுத்தமான   மண்டபத்தில்   அமர்ந்து   அவைகளை   விதவிதமான  மாலைகளாக   கோர்ப்பார் .  அவர்   எந்த   வேலை   செய்தாலும்   அவர்   வாய்   மட்டும்   ஜெபிப்பதை   நிறுத்துவதே   இல்லை .

Monday 1 January 2018


மு ருகனுக்கும்   உருத்திர   பசுபதிக்கும்   அடியேன் | 

சோழ   நாட்டில்   திருப்புகலூர்   என்று   ஒரு   தலம்   உண்டு.  பசுமையான   சோலைகள்   சூழ்ந்த   இடம்  .  அவ்வூரில்   அந்தணர்   குலத்தில்   பிறந்த   முருகனார்   என்பவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  சதா   பஞ்சாக்ஷரஜபம்   செய்வார் .  சதா   அவர்   வாய்   பகவானின்   நாமங்களை   உச்சரித்துகொண்டே   இருக்கும் .  அவ்வூரில்   கோயில்   கொண்டிருக்கும்   பெருமான்   வர்த்தமானேஸ்வரர் .  அப்பெருமானுக்கு   ஆறு   காலமும்   மலர்   மாலைகள்   சாற்றும்   தொண்டை   விடாமல்   செய்து   வந்தார்