Monday 29 June 2015

vadavurar

அரிமர்த்தன  பாண்டியன்  வாத வூரரை மதுரைக்கு  வரவழைத்து  தன்  விருப்பத்தை  முக்கியஸ்தர்களுக்கு  சொல்லி    வாதவூரரை  சபைக்கு  அறிமுகப்படுத்துனார் . அவர்களும்  வாதவூரரின்  அறிவுத்திறன்  கண்டு  மகிழ்ந்தனர் .  அரசனும்  அவரை  தன்  பிரதான  மந்திரி  ஆக்கிக்கொள்கிறார் . வாதவூரரின்  மனதில்  அந்த  "தேடல் '' இருந்துகொண்டே  இருந்தாலும்  தன்  கடமைகளை  சரிவர  செய்து  கொண்டிருந்தார் . அப்போது  பாண்டியர்  படை  பலத்தை  கண்காணித்த  படை  தலைவன்  குதிரை  படையை  பலப்படுத்த  வேண்டியது  அவசியம்  என்று  தெரிவித்தார் .அரசனும்   குதிரைகள்  வாங்கும்  பொறுப்பை  வாதவூரரிடம்  ஒப்படைக்கிறார் .  அவரும்  வேண்டிய  திரவ்யங்களுடன்  குதிரை  வாங்க  புறப்படுகிறார் .  

Saturday 27 June 2015

vathaurar

வாதவூரர்  சகல  சாச்த்திரங்களையும்  படித்து  சிறந்த  மேதையாக  விளங்கினார் . ஆனால்  மனதில்  ஒரு  குழப்பம் .ஒரு சிறந்த  குருவை  தேடி  அலைந்தது  மனம் . அப்போது  மதுரையை  ஆண்ட  அரிமர்த்தன  பாண்டியன்  ஒரு  முறை  திருவாதவூர்  ஈசனை  தரிசனம்  செய்ய  வந்தபோது  வாதவூரரின்    அறிவாற்றலையும்  சாதுர்யத்தையும்  காண  நே ர்கிறது  . அப்போது  அவரது  முதல்  அமைச்சர்  வயது  முதிர்ந்த  காரணத்தால்  பதவி  விலக  இருந்ததால்   மன்னன்  வாதவூரரை  தன்  முதல்  அமைச்சராக்கிகொள்ள  தீர்மானித்தார் .

Thursday 25 June 2015

manivasakar

வைகை  நதிக்கு  ஒரு  தனி  பெருமை  உண்டு . எல்லா  நதிகளையும்  போல்  அது  கடலிலோ  சமுத்திரத்திலோ  கலந்து  உப்பு  நீராவதில்லை . குட்டை  குளங்களை  நிரப்பிக்கொண்டு  அந்த  எல்லையிலேயே  இருப்பது . அப்பேற்பட்ட  வைகை  கரையில்  உள்ள  ஒரு  இடம்  திருவாதவூர் . அங்கு  ஒரு  அந்தணர்  குலத்தில்  பிறந்தவர்  வாதவூரர்  அவர் தந்தை  யாக   யக்ஞங்களை  முறையோடு  செய்பவர் . சிறந்த  பிராம்மணர் . வாதவூரர்  சிறு  வயது  முதலே  ஈசனிடம்  சிறந்த  பக்தி  உடையவர் . ஆனால்  மற்ற  சடங்குகளில்  ஈடுபாடு  இல்லாமல்  இருந்தார் . ஆனாலும்  எல்லாவற்றையும்  படித்து  அறிந்து  கொள்ளும்  ஆர்வமுடன்  பல  நூல்களை  படித்து  ஆராய்ந்து  கொண்டிருந்தார் .

Friday 19 June 2015

manivasagar

9 ம்  நூற்றாண்டில் வாழ்ந்தவர்  மாணிக்கவாசகர் . வைகை  கரையிலுள்ள  வாதவூர்  இவர்  பிறந்த  இடம் . இவர்  இயற்பெயர்  வாதவூரர் . இவர்  63 நாயன்மார்களின்  வரிசையில்  இடம்  பெறவில்லை . சுந்தரரால்  திருத்தொண்டர்  தொகையில்  பாடப்பெற்றவர்களே  63 நாயன்மார்களில்  அடங்குவர் . இவர்  சுந்தரர்  வாழ்ந்த  காலத்திற்கு  பின்பு  இருந்தவர் . ஆனால்  சைவசமயத்தையும்  பக்தி  நெறியையும்  நிலைநாட்ட  அவதரித்த  சமயகுரவர்  நால்வரில் இவரும்   ஒருவராவார்.  மற்ற  மூவர்  அப்பர்  சம்பந்தர்  மற்றும்  சுந்தரர்  ஆவர் . அப்போது  பௌத்த , சமண  மதங்கள்  மன்னர்கள்  ஆதரவுடன்  தங்கள்  சமயத்தை  பரப்பினர் . யாக  யஞைகளையும்  நிந்தித்தனர் . அவர்களை   வாதில்  வென்று  சைவ சமயத்தை  நிலை நாட்ட   அவதரித்தவர்கள்  இந்நால்வரும் .
''வேத  வேள்வியை  நிந்தனை  செய்துழல்   ஆதமில்லி யமனொடு  தேரரை
 வாதில்  வென்றழிக்க  திருவுள்ளமே  பாதி  மாதுடனாய  பரமனே
 ஞாலமே  நின்புகழே  மிக  வேண்டுந்தென்  ஆலவாயிலுறையும்  எம்மாதியே |
இவ்வாறு  ஞானசம்பந்த  மூர்த்தி  பாடுகிறார் .
  •  

Tuesday 16 June 2015

thiruvasakam

திருவாசகத்துக் கு உருகாதார்  எவ்வாசகத்துக்கும்  உருகார்   இது  எல்லோ  ரும்  அறிந்த  வழக்கு .திருவாசகத்தேன்  என்று  சான்றோரால்  உயர்வாக  சொல்லப்படுகிறது . தேன்  ஒரு அற்புத  பொருள் . தேன்  எத்தனை  காலம்  வைத்தாலும்  கெடாது . தேனில்  எதை  போட்டு  வைத்தாலும்  அந்த  பொருளும்  கெடாது . அத்தனை  உயர்ந்தது  திருவாசகமும் . மாணிக்கவாசகர்   ஈசனிடம்  எதை  வேண்டியோ  எதையாவது   பெறவோ  பாடியது  அல்ல  திருவாசகம் . நெஞ்சம்  உருகி  கண்ணீர்  ஆறாய்  பெருக  உணர்ச்சி  வயப்பட்டு  இதயத்திலிருந்து  பொங்கி  வழிந்த  வார்த்தைகள் . கேட்போர்  நெஞ்சையும்  கலங்க  வைக்கும்  பாக்கள் . ஈசனே  மாணிக்கவாசகர்  சொல்லகேட்டு  ஓலையில்  எழுதி  கையொப்பமிட்டு   தில்லை  கோயில்  நடராஜர்  சன்னதி  முன்  வைத்தார்  என்றால்  இதன்  பெருமைதான்  என்னவென்று  சொல்ல . ஈசன்  கருணையை  தான்  எப்படி  போற்ற ?  இதனால்  தான்  திருவாசகம்  நமக்கு  சேதமில்லாமல்  முழுமையாக  கிடைத்திருக்கிறது .

Sunday 14 June 2015

manivaasakar

இனி  அடுத்து  நாம்  சிந்திக்க  போவது  8ஆவது  திருமுறை  மாணிக்கவாசகர்  என்று  ஈசனால்  அழைக்க  படும்  பாக்கியம்  பெற்ற  மாணிக்கவாசகரால்  பாட  பெற்றது . திருவாசகம் ,திருக்கோவையார் ,  இதில்  அடங்கும் . இது  மிக ,மிக  பெருமை  வாய்ந்தது .எப்படியெனில்  மாணிக்கவாசகர்  சொல்ல  ஈசனே  கைப்பட  எழுதி  கையொப்பமிட்டு   தில்லையில்  நடராஜர்  சன்னதி   படியில்  வைக்கப்பட்டிருந்தது . இதன்  பெருமை  என்னவென்று  சொல்வது .

Wednesday 10 June 2015

thanenai

சுந்தரர்  பரவைனாச்சியாருடன்  சில காலம்  திருவாரூரில்  தங்கி  இருந்தார் . அப்போது  சேரமான்  பெருமான்  நினைவு  வர சேரநாடு  செல்கிறார்  திருஅஞ்சய்களம்   வந்து  ஈசனை  த்யானிக்கிறார் .அப்போது  அவர்  மனம்  பெரும்  சஞ்சலத்தில்  ஆழ்கிறது . கைலைவாச  ஞாபகம்  அவரை  வாட்டுகிறது . எத்தனை  நாள்  இவ்வாறு  ஐயனை  பிரிந்திருப்பது  என்ற   வேதனை  அவரை  துன்புறுத்துகிறது . ஈசனிடம்  மிக வருந்தி  போற்றுகிறார் . அப்போது  அவருக்கு  இன்ப  அதிர்ச்சி  .வெளியில்  தேவர்கள்  யானை  அம்பாரியுடன்  சுந்தரரை  அழைத்து  செல்ல  காத்திருக்கின்றனர் . மெய்சிலிர்த்து  சுந்தரர்  இப்பாடல்  பாடுகிறார் .
தானெனை  முன் படைத்தான்   அதறிந்து  தன்  பொன்னடிக்கே
நானென்ன  பாடலெந்தொ  நாயினேனை  பொருட்படுத்து |
வானெனை  வந்தெதிர்கொள்ள  மத்த யானை  அருள்  புரிந்து
ஊனுயிர்  வேறு  செய்தான்  நொடித்தான்  மலை  உத்தமனே |
இவ்வாறு  சுந்தரர்   பூமியில்  தன்  கடமையை  செவ்வனே  முடித்து  மீண்டும்  கைலாயம்  செல்கிறார் . அவர்  நமக்கு  அளித்த  விலை  மதிக்க  முடியாத  பொக்கிஷம்  அவருடைய  திருதொண்டர்தொகை . அதனால்  கிடைத்த  நாயன்மார்கள்  வரலாறு .

Sunday 7 June 2015

avinasicont.

அந்த  தம்பதியின்  கதை  கேட்டு  சுந்தரர்  மனம்  மிக  வேதனை  அடைகிறது . அவர்  உடனே  ஈசனை  துதித்து  இப்பதிகம்  பாடுகிறார் .
எற்றான்   மறக்கேன்  எழுமைக்கும்  எம்பெருமானையே
உற்றாய்  என்று  உன்னையே உள்குகின்றேன்  உணர்ந்து  உள்ளத்தால்
 புற்றாடு   அரவா  புக்கொளியூர்  அவிநாசியே
 பற்றாக  வாழ்வேன்  பசுபதியே  பரமேட்டியே

புக்கொளியூர்  அவிநாசியே  கரைக்கால்  முதலையை  பிள்ளை
 தரச்சொல்லு  காலனையே |

இப்பதிகம்  பாடி  முடிந்ததும்  முதலை  ஒன்று  அந்த  சிறுவனை  கரையில்  கொண்டு  வந்து  விட்டு  சென்றது . பெற்றோரின்  மகிழ்ச்சிக்கு  எல்லை  ஏது ? சுந்தரரை  போற்ற  வார்த்தைகளே  இல்லை ,இவ்வாறு  சுந்தரரும்  ஒரு சிறுவனுக்கு  மறு  வாழ்வு  அளிக்கிறார் .

 

Friday 5 June 2015

avinasi

சுந்தரர்  தன்  யாத்திரையில்   ஒரு   முறை  அவினாசி அடைந்தார் . அங்கு  ஒரு  வீட்டில்  ஒரு  பையனுக்கு  உபநயனம்  நடந்து  கொண்டிருந்தது . ஊரே  மகிழ்ச்சியில்  திளைத்திருக்க  ஒரு  வீட்டில்  மட்டும்  அழுகை  ஒலி  கேட்பதை  கண்டு  சுந்தரர்  அதன்  காரணத்தை  வினவுகிறார் .சில  காலம்   முன்   இவர்கள்  மகனும்  அவனுடைய  வயது  ஒத்த  அந்த  உபநயன  சிறுவனும்  ஒன்றாக  நீராட  போன  சமயம்  இவர்கள்  மகனை  முதலை  இழுத்து  சென்று  விட்டதாக  கூறுகின்றானர் . பெற்றொர்கள்  தங்கள்  பிள்ளையை   நினைந்து  அவன்   உயிரோடு  இருந்திருந்தால்  அவனுக்கும்  இவ்வாறு  இந்த  விசேஷம்  நடந்திருக்கும்  என்று  அது  நிறைவேறாதது  வேதனை  அவர்களை  மிக  வாட்டுவதை  தெரிவிக்கின்றனர் .
 

Wednesday 3 June 2015

namasivaaya

சுந்தரரின் நமசிவாய  பதிகம் .
மற்று  பற்றெனக்கின்றி  நின்  திரு  பாதமே  மனம்  பாவித்தேன் ,
பெற்றலும்  பிறந்தேன்  இனிப் பிறவாத  தன்மை  வந்து  எய்தினேன் |
கற்றவர்  தொழுது  ஏத்தும்  சீர்கரை  யூரில்  பாண்டிகொடுமுடி
நற்றவா  உனை  நான்  மறக்கினும்  சொல்லும்  நா  நமச்சிவாயவே |
எல்லா பாக்களும்  சொல்லும்  நா  நமச்சிவாயவே  என்றே  முடியும் .
 

Tuesday 2 June 2015

yezhisai

சுந்தரர்  திருவாரூர்  ஈசனை காணாமல்  நெக்குருகி  பாடிய  பாடல்கள்  அநேகம் .
ஏழிசையாய்  இசைபயனாய்  இன்னமுதாய்  என்னுடைய ,
தோழனுமாய்  யான் செய்யும்  துரிசுகளுக்கு  உடனாகி
மாழை  யொண்கண்  பரவையை  தந்து  ஆண்டானை  மதியில்லா
ஏழையேன்  பிரிந்திருக்கேன்  என்  ஆரூர்  இறைவனையே |

முத்தினை  மாமணிதன்னை  வயிரத்தை  மூர்க்கனே  ன் 
எத்தனை  நாள்  பிரிந்திருக்கேன்  என் ஆரூர்  இறைவனையே |  

Monday 1 June 2015

vitru kol

சுந்தரர்  பாடிய  மற்றொரு  பாடல்  இங்கு  குறிப்பிடுகிறேன் .
விற்று  கொள்வீர்  ஒற்றீயல்லே ன்   விரும்பி  ஆட்பட்டேன்
குற்றம்  ஒன்றும்  செய்தது  இல்லை   கொத்தை  ஆக்கினீர்
எற்றுக்கு  அடிகேள்  என்  கண்  கொண்டீர்  நீரே  பழி  பட்டீர்
மற்றை  கண் தான்  தாராது  ஒழிந்தால்  வாழ்ந்து  போதீரே |
காஞ்சியில்  ஒரு  கண்  பார்வை  திரும்ப  பெற்றார்   சுந்தரர் . பிறகு  திருவாரூர்  வந்தடைந்து  திருவாரூர்  ஈசனிடம்  மற்ற  கண்  பார்வையை  உரிமையுடன்  யாசிக்கிறார் . பெறவும்  செய்கிறார் .