Thursday 20 February 2014

koteesvara

கோட்டீஸ்வர   ஐய்யர்  பூச்சி  ஸ்ரீனிவாச ஐயங்கார்  அவர்களிடமும்  பட்டணம்  சுப்ரமணிய  ஐய்யர்  அவர்களிடமும்  சங்கீதம்  பயின்றார் . அவர்  200 பாடல்களுக்கு  மேல்  இயற்றியுள்ளார் . 72 மேளகர்த்தா  ராகங்களிலும்  பாட்டு  அமைத்து  தனி  சாதனை  படைத்துள்ளார் . அவர் பாட்டனார்  மீதுள்ள  பெரும்  மரியாதை  காரணமாக  ''கவிகுஞ்சர தாசன் ''  எனும்  முத்திரை யை  தன்  பாடல்களில்  கையாண்டார் . தோடி  ராகத்தில்  தனி  திறமை  வெளி  படுத்தி  தோடி கோட்டி'''  என்று  புகழ் பெற்றார்  . இவர்  த்யாகராஜர்  மீது  பாடல்  இயற்றி  உள்ளார் .      

Wednesday 19 February 2014

koteesvara iyer

அடுத்து  நாம்  காண  போவது  பிரபல  தமிழிசை  கவிஞர்  கோடீஸ்வர  அய்யர் . இவர்  இந்த  தொடரில்  முன்பே  அறிமுகமான  கவிகுஞ்சர  பாரதியின்  பேரனாவார் . பரம்பரை  சங்கீத  குடும்பமாகும் .இவர்  1870ல்  பிறந்தார் . மானாமதுரை , திருச்சி , சென்னை  முதலிய  இடங்களில்  கல்வி   பயின்றார் . பிறகு  சென்னை  உயர்  நீதி மன்றத்தில்  வேலை  பார்த்தார் . வயிற்று  பாட்டிற்கு   வேலை  செய்தாலும்  ஆத்மா தாகம்  பாட்டிற்கு  முன்னுரிமை  தந்தது .

Tuesday 11 February 2014

ஆனால்   பாரதி  கண்ட  பாரதம்  நாம்  காண  பல  யுகங்கள்  பின்னோக்கி  சென்று  ராம  ராஜ்யத்தில்  தான்  கற்பனையில்   காணலாம் . ஆனாலும்  அவருடைய  பாடல்கள்  நாடகம் , திரைப்படம் , சங்கீத மேடைகள்  மூலம்  வருகால  சந்ததியினருக்கு  காதில்  ஒலித்துகொண்டே  இருக்கும்  
''பாஞ்சாலி   சபதம் '' பெண்மைக்கு  இழைக\ப்பட்ட  அநீதியை  சாடி  பாடுகிறார் .பராசக்தியை   பல  ரூபங்களில்  வணங்குகிறார் .கண்ணனை   கண்ணம்மா வாக   பெண்ணுருவம்  கொடுத்து  காதல்  உருக  பாடுகிறார் .''தீர்த்த  கரையினிலே , காக்கை  சிறகினிலே , கண்ணன்  மனநிலை '' என   அநேக  பாடல்கள் . தீக்குள்  விரலை  வைத்தால்  உன்னை  தீண்டும்  இன்பம்  தோன்றுது  என்கிறார் . இவரின்   எந்த  ஒரு பாடலிலும்    தீவிர  துடிப்பும்  எதையும்  உடனே   சாதிக்க  வேண்டும்  என்கிற  உத்வேகமும்  தெரியும் . 
 பலபாஷைகளில்  தேர்ந்தவர்   ஆயினும்  தமிழ்  அவர்  மூச்சு .''யாமறிந்த   மொழிகளிலே  தமிழ்   மொழி  போல்  இனிதாவதெங்கும்   காணோம் .  என்கிறார் ''   ''க்ஷேமமுற   வேண்டுமெனில்   தெருவெல்லாம்  தமிழ்  முழக்கம்   செழிக்கசெய்வீர் '' என்று  முழங்குகிறார் .        

Friday 7 February 2014

சுதந்திரம்  கிடைத்து  விட்டதாக  கற்பனை  செய்து  அதில் மகிழ்ந்து  ''ஆடுவோமே  பள்ளு  பாடுவோமே , ஆனந்த  சுதந்திரம்  அடைந்து  விட்டோம்  என்று ''  என ஆனந்த ப்பட்டு  கொள்கிறார் .''விடுதலை , வி டுத  லை  , பறையருக்கும்  இங்கு  தீய  புலையருக்கும்  விடுதலை '' என்று  கஊத்தாடுகிறார் . 

Thursday 6 February 2014

agam

சுதந்திர  போராட்டத்தில்  அவர்  பங்கு  குறிப்பிட தக்கது .அவர் தேசிய   பாடல்கள்  பெரும்  எழச்சியை  உண்டாக்கி  ஆங்கிலேயரை  கலங்க அடித்தது .''என்று    தணியும்  இந்த  சுதந்திர  தாகம்  என்று  மடியும்  எங்கள்  அடிமையின்  மோகம் . என்றெமதன்னை  கை  விலங்குகள்  போகும் , என்றெமதின்னல்கள்  தீர்ந்து  பொய்யாகும் '' என்று  நெஞ்சுருக  பாடுகிறார் . கேட்போர்  கண்கள்  குளமாகும்  

Wednesday 5 February 2014

''நெஞ்சு  பொறுக்குதில்லையே  இந்த  நிலைக்கெட்ட  மனிதரை  நினைத்துவிட்டால் ''  என்று  மக்களின்  மூட  நம்பிக்கையையும்  அறியாமையையும்  எண்ணி   மனம்  நொந்து  கொள்கிறார் .'இவர்      துயர்களை   தீர்க்க  ஓர்  வழியுமில்லை  அந்தோ '' என  வருந்து கிறார் .
  பெண்  விடுதலை அவரது  மூச்சு .''ஏட்டையும்  பெண்கள்  தொடுவது
தீமை  என்று  எண்ணி  மிகுந்தவர்   மாய்ந்து   விட்டார் . வீட்டுக்குள்ளே
பெண்ணை   பூட்டி  வைக்கும்  விந்தை   மனிதர்  தலை  கவிழ்ந்தார்.''
என்று  கொக்கரிக்கிறார் .  

Tuesday 4 February 2014

தேசீய  ஒருமை பாட்டிற்கு  அவரைப்போல்  குரல்  கொடுத்தவர்  யார்  உளர் ?
''ஜாதிகள்  இல்லையடி  பாப்பா , குல  தாழ்த்தி  உயர்த்தி  சொல்லல்  பாவம் ''
என்று  குழந்தைகளுக்கு  அறிவுறித்தி   பிஞ்சு  மனதில்  பதிய  வைக்கி.
றார்.  பாரத  அன்னையை  ''முப்பது  கோடி  முகமுடையாள்  எனில்  மெய்ப்புறம்  ஒன்றுடையாள் . அவள்  செப்பு மொழி  பதினெட்டுடையாள்
எனில்  சிந்தனை  ஒன்றுடையாள் . எங்கள்  தாய் '' என்று  மார்  தட்டி கொள்கிறார் . 

Monday 3 February 2014

'காக்கை  குருவி  எங்கள்  ஜாதி . நீள்கடலும் ,மலையும்  எங்கள்  கூட்டம் .நோக்கும்  திசையெல்லாம்  நாம் '   இதில்  சேதன   அசேதன   படைக்கப்பட்ட  அனைத்தையும்  நேசிக்கும்  அவர்  மன  பாங்கை  காண  முடிகிறது . 'தனி  ஒருவனுக்கு  உணவில்லை  எனில்  ஜகத்தினை அழித்திடுவோம் .' என்று   குரல்  கொடுக்கும்  போது   அவருடைய  மனித  நேயம்   காண்கிறோம் .  

தமிழ்  வாசகர்களுக்கு  பாரதியின்  அறிமுகம்  தேவையில்லை .திரைப்படம் ,நாடகம் ,பாடப்புத்தகம்  மற்றும்  பல சாதனங்கள்  மூலம்  நன்கு  அறிமுகம்  ஆனவர் . ஆகையால்  அவர் பாடல்கள் 
வாயிலாக   அவரை  அறிய  முயர்ச்சி  செய்வோம் .  

Sunday 2 February 2014

அடுத்து  நாம்  காணப்போகும்   தமிழ்  மகாகவி  திரு . சுப்பிரமணிய பாரதி .அவர்  எட்டயாபுரத்தில்  டிசம்பர்  11 1882ல்  பிறந்தார்  எட்டயாபுரத்திலும்  பின்பு  காசியிலும்  கல்வி  பயின்றார் ..