Monday 24 October 2016

பதினோராம்  திருமுறை  நம்பிகள் பாடல்களுடன்  முடிவடைகிறது .ஈசனின்  கைப்பட  எழுதப்பட்ட  ஒலையுடன்  துவங்குகிறது . பெருமைக்குரிய  நம்பிகள்   பாடல்களுடன்  நிறைவடைகிறது . அவருடைய  பாடல்கள்  தனி  முக்கியத்துவம்  உடையது . 63 நாயன்மார்கள்  பெருமையை  உணர்த்தி  அவர்களுடைய  புராணங்களை  உலகறிய  வைத்து  சிவாலயங்களிலும்  அவர்களின்  உருவ  சிலைகள்  கொலுவிருக்க  வகை  செய்தது . பெரிய  புராணம்  எழுதப்படவும்  காரணமாயிற்று . சுந்தரர்  இவ்வறிய  சிவத்தொண்டர்களை  ஒவ்வொரு  வரியில்  அறிமுகம்  செய்தார் . நம்பிகள்   ஒவ்வொருவர்    வரலாறையும்  சுருக்கமாக  தம்  திருத்தொண்டர்  திருவந்தாதியில்  ஒவ்வொரு  பாட்டாக  எழுதி  வைத்தார் . அதுவே  பிற்காலத்தில்   சேக்கிழாரால்  பெரிய  புராணமாக  விரிவாக  அத்தனை  நாயன்மார்களின்  வரலாறும்  நமக்கு  அளிக்கப்பட்டது . இவ்வகையில்  இத்திருமுறை  முக்கியத்துவம்  பெறுகிறது 

Wednesday 19 October 2016

நம்பியாண்டார்  நம்பி அருளிச்செய்த  பாக்களை  காண்போம் .
திரு  நாரையூர்  இரட்டை  மணிமாலை ,  கோயில்  திருப்பண்ணயர்  விருத்தம்  திருத்தொண்டர்  திருவந்தாதி ,  ஆளுடைப்பிள்ளையார்  திருவந்தாதி , ஆளுடைப்பிள்ளையார்  திருச்சண்பை  விருத்தம் , ஆவுடைப்பிள்ளையார்  மும்மணி   கோவை , ஆவுடை பிள்ளையார்   திரு உலாமாலை ,  திருக்கலம்பகம் ,  திருத்தொகை ,  திரு  நாவுக்கரசு  தேவர்  திரு  ஏகாதச  மாலை . இவையாகும் . 11 திருமுறை  இத்துடன்  முடிவு  பெறுகிறது . 

Friday 14 October 2016

ராஜராஜ சோழன்  அத்தி றவுகோலை  மீட்டு  நம்பியிடம்  ஒப்படைத்து  தெய்வ  பாடல்களை  மீட்க வேண்டுகிறார் . நம்பிகள்  கதவை  திறந்து  பார்த்து  திகைக்கிறார் . கரையான்களால்  சேதமடைந்திருப்பத்தினை  கண்டு  திகைக்கிறார் . உலகுக்கு  தேவையானவை  அதில் இருப்பதாக  தெய்வீக  சக்தியால்  அறிந்து  இருப்பவைகளை  அரும்பாடுபட்டு  சேகரித்து  தொகுக்க  முனைகிறார் . நாம்  இன்று  காணும்  பன்னிரு  திருமுறைகள்  அவரால்  நமக்கு  கிடைத்த  பொக்கிஷமாகும் . வேதவியாசரால்   வேதங்கள்  தொகுக்கப்பட்டு  உலகுக்கு  கிடைத்ததைப்போல்  தேவார  பாடல்களும்  நம்பிகளால்  12 திருமுறைகளாக்க  தொகுக்கப்பட்டு  நமக்கு தமிழ்  மறையாக  அளிக்கப்பட   சொத்தாகும் .  முறையே  ஞானசம்பந்தர் , அப்பர் , சுந்தரர்  தேவாரங்களும்  மாணிக்கவாசகரின்  திருவாசகமும் . திருவிசைப்பாவும் , திருமூலரின்  திருமந்திரமும் .பல  நாயன்மார்களால்  அருளப்பெற்ற  பாடல்களும்  தொகுக்கப்பட்டன . நம்பியாண்டார்  நம்பி  சுந்தரரின்  ' தில்லை  வாழ்  அந்தணர்தம் ' எனும்  பாடலை  ஆதாரமாக  கொண்டு  63 நாயன்மார்களை   அறிமுகப்படுத்தி  திருத்தொண்டர்  திருவந்தாதி  பாடினார் . அப்பாடலும்  மேலும்  பல  பக்தர்கள்  பாடிய  பாடல்கள்  11ஆம்  திருமுறை  ஆகிறது . பிற்காலத்தில்  நம்பியின்  பாடல்களை  ஆதாரமாக  கொண்டு சேக்கிழார்  பெருமான்  பெரும்  ஆராய்ச்சி  செய்து  63 நாயன்மார்களின்  வரலாறை  புராணமாக  பாடுகிறார் . அதுவே  பெரிய  புராணம்  என்று  பெருமையுடன்  12வது      திருமுறையாக  தொகுக்கப்பட்டது .

Thursday 13 October 2016

ஆனந்தம்  அடைந்த  நம்பி  காலி  தட்டுகளுடன்  வீடு  திரும்புகிறான்  பலகாரங்களை பிள்ளையார்  உண்டதாக  கூறுகிறான்  .ஆனால்  யாரும்  நம்ப  தயாராக  இல்லை .தந்தையும்  அவனை  நம்பாமல்  தண்டிக்கிறார் . ஆனால்  அவன்  திரும்ப  திரும்ப  அதையே  வலியுறுத்துவதை  கண்டு  மறுநாள்  அவனை  பூஜை  செய்ய  அனுப்பிய  தந்தை  தானும்  பின்  தொடர்கிறார் . அவன்  கதவை  தாளிட்டு  கொண்டதும்  சாவி  துவாரம்  வழியாக  அவர் பார்க்கிறார் . அங்கு  நடந்தததை  கண்ட  அவர்  மெயசிலிர்த்து  போகிறார் .வெளியே வந்த  நம்பியை  ஆரத்தழுவி  கண்ணீர்  சொரிகிறார் .நம்பியின்  வாயிலிருந்து  மடை  திறந்தாற்போல்  வரும்  தமிழ்  பாக்களை  கேட்டு  ஆனந்தம்  மேலிட  மகனை  ஆர  தழுவுகிறார் . ஆவலுடன்  நம்பி   ஊட்டிய   உணவை  உண்ட  ஈசன்  அவனுக்கு  ஊட்டிய  அறிவு  ஊற்று  அது . பெற்றோரின்  ஆனந்தத்திற்கு  அளவே  இல்லை .  இவ்வாறு விநாயகரின்  பேரருளால்  பெற்ற  அறிவால்  அவர் நமக்கு  அளித்த  கொடையே  63 நாயன்மார்களின்  வரலாறு . நம்பி  பிற்காலத்தில்  விநாயகரின்  பேரருளால்  நாயன்மார்கள்  அருளி  செய்த  தேவார  பாடல்கள்  தில்லையில்  ஓர்  அறையில்  கிடப்பதாகவும்  திறவுகோல்  தீட்சிதர்கள்  வசம்  இருப்பதாகவும்  உணர்ந்து   மன்னன்  ராஜராஜசோழன்  உதவியால்  அவற்றை  கண்டெடுக்கிறான் .  

Wednesday 12 October 2016

கதவை  தாளிட்ட  நம்பி    கள்ளமற்ற  உள்ளத்துடன்  பிள்ளையாரை பிரசாதத்தை  உண்ண  அழைக்கிறான் . அவர்  மௌனமாய்  இருப்பதை  கண்டு  திகைக்கிறான் . அவனுடைய குழந்தையுள்ளம்  பிள்ளையார்  நேரில்   வந்து  உண்ணுவார்  என்று எண்ணுகிறது . சிறிது  நேரம்  சென்றது  அவர்  வராததை  கண்டு மனம்   வருத்தமடைகிறது . மீண்டும்   மீண்டும்  கெஞ்சி  பார்க்கிறான் . அவர் வராதது  கண்டு  துக்கம்  மேலிட  அழுகிறான் . பொறுக்க  முடியாமல்  பிள்ளையார்  வந்து  சாப்பிடாவிட்டால்  கல்லில்  தன்  தலையை  மோதிக்கொண்டு  உயிரை  விடுவதாக  கூறி  தலையை  கல்லில்  மோதுகிறான் . அவன்  வைராக்கியத்தை  கண்டு  மனமிரங்கிய  ஐயன் அவன்  முன்  தோன்றி  அவன்  கொண்டுவந்த  ப்ரசாதங்களை  உண்ணுகிறார் . அனந்த  பரவசத்துடன்  நம்பி  அதை  ரசிக்கிறான் .

Tuesday 11 October 2016

மறுநாள்  காலை  நம்பி  உத்ஸாகத்துடன்  பூஜை  சாமான்களையும்  நைவேத்யத்துக்கான  பலகாரங்களையும்  எடுத்துக்கொண்டு  கோவிலுக்கு  புறப்பட்டான் . பூஜையை  முறைப்படி  செய்துவிட்டு  நைவேத்தியத்திற்காக  கதவை  சாத்துகிறான் .

Friday 7 October 2016

நம்பி  தன்  தந்தையுடன்  தினமும்  கோவிலுக்கு  சென்று  அவர்  பூஜை  செய்வதை  கூர்ந்து  கவனிப்பார் . அவர் கதவை  தாளிட்டு  கொண்டு  பிள்ளையாருக்கு  பலகாரங்களை  நைவேத்யம்  செய்வதையும்  கூர்ந்து  கவனிப்பார் . ஒருநாள்  நம்பியின்  தந்தைக்கு  அவசரமாக  வெளியூர்  செல்ல  நேர்கிறது. நம்பியின்  தாயார்  கோயிலில்  பூஜை  செய்யும்  பொறுப்பை  நம்பியிடம்  ஒப்படைத்துவிட்டு  செல்லுமாறு  கூறுகிறாள் . அவன்  சிறு  பிள்ளை  அவனுக்கு  செய்ய  தெரியாதோ  என்று  ஐயப்படுகிறார் . பிறகு  வேறு  வழியின்றி  அவனிடம்  ஒப்படைத்து  விட்டு  வெளியூர்  செல்கிறார் .இந்த  சம்பவத்தால்  தான்  நம்பியின்  வாழ்க்கையில்  பெரும்  மாற்றம்  ஏற்படுகிறது . அவனது  மாசற்ற  பக்தி  வெளியில்  தெரிகிறது . .

Wednesday 5 October 2016

11 திருமுறையின்  கடைசி  தொகுப்பை  வழங்கியவர்  திரு நம்பியாண்டார்  நம்பி  ஆவார் . அவர்  ஆதி  சைவர்  குலத்தை  சேர்ந்தவர் . திருநாரையூரில்  கோயிலில்  அர்ச்சகராக  பணிபுரியும்  குடும்பத்தை  சேர்ந்தவர் .சிறு  வயது  முதலே  அங்குள்ள  பிள்ளையாரிடம்  மிகுந்த  பக்தி  கொண்டவராக  இருந்தார் . அவர்  தந்தை  கோவிலில்  பணி  புரியும்  போது  கூடவே  செல்வார் . அவர்  செய்வதை  கூர்ந்து  கவனிப்பார் .