Thursday 31 March 2016

யார்க்கும்  இடுமின்   அவர்  இவர்  என்னமின் ?) என  வினவுகிறார்  திருமூலர் . பசி என்று  வருபவன்  யாராயினும்  இல்லை  எனாது  அன்னமிடல்  அவசியம் .எவ்வித  பேதமும்  பார்த்தல்  கூடாது . நாம்  செய்யும்  தானமே  நம்மை  தொடர்ந்து  வரும் . செல்வம்  இருந்தும்  எவ்வித  தானமும்  செய்யாதவன்  வாழ்ந்தும்  வாழாதவன் . அவன் எட்டி காய்   பழுத்தும்  யார்க்கும்  உதவாமல்  இருப்பது  போல்  அவனும்  இருப்பதும்  இல்லாததும்  ஒன்றே . அவனை  ஒறுத்தல்  நன்று  என்று  கூறுகிறார் .

Wednesday 30 March 2016

தானத்தில்  சிறந்தது  அன்னதானம் .மனிதன்  அல்லும்  பகலும்  உழைப்பது  ஒரு  சாண்  வயிற்றை  நிரப்பவே . நாம்  என்ன  தானம்  செய்தாலும்  பெறுபவர்க்கு   முழுமையாக திருப்தி அடையாமல்  இன்னும்  கொஞ்சம்  கிடைத்தால்  நலமாக  இருக்கும்  என்றே  தோன்றும் . ஆனால்  அன்னதானம்  செய்யும்  போது  வயிறு  நிறைந்த  எந்த  மனிதனும்  மனம்  திருப்தி  அடைந்து   அன்னமிட்டவரை  வாயார  வாழ்த்துவான் .பசியை  போக்குவது  நம்மால்  செய்யக்கூடிய  மிக  சிறந்த  தர்மம் . காக்கைகளை  பாருங்கள் . ஒரு  காக்கை  உணவைக்கண்டால்  தான்  மட்டும்  உண்ணாது  மற்ற  காக்கைகளை  அழைத்து  எல்லாம்  சேர்ந்தே  உண்ணும் . ஐந்தறிவு  படைத்த  அவையே     இத்தகைய  பண்பை  கடைபிடிக்கும்போது  ஆறறிவு  படைத்த   மனிதன்  கடைபிடிக்காமல் இருப்பது  வெட்கம் .

daanam

திருமூலரின்  அறியுரை  ஆறறிவு  படைத்த  மனிதன்  உயர்வடைய  பெரும்  சாதனமாகும் . அவர்  முதலில்  குறிப்பிடுவது  தானமாகும் .  மனிதன்  தன்னால்  இயன்ற  அளவு இல்லாதவர்க்கு  அளிப்பது  பெரும்  சிறப்பு . அவர்  பெரிய  அளவு  தானம்  செய்ய  இல்லாதவரை  வற்புறுத்தவில்லை  அவர்  சொல்கிறார் :
யாவர்க்குமாம்  இறைவர்க்கு  ஒரு  பச்சிலை , யாவர்க்குமாம்  பசுவுக்கொரு  வாயுறை

யாவர்க்குமாம்  உண்ணும்போது  ஒரு  கைப்பிடி , யாவர்க்குமாம்  பிறர்க்கு  இன்னுரைதானே ||
எத்தனை  எளிமையான  அறியுரை .

Tuesday 29 March 2016

அரசனுடைய  பெரும்  கடமைகளை  உணர்த்திய  திருமூலர்  அரசன்  நேர்மை  தவறுவதால்  உண்டாகும்  பெரும்  அவலங்களையும்  உணர்த்துகிறார் . அரசன்  கடமை  தவறுவதால்  நாட்டின்  வளமை  குறைகிறது  மக்கள்  துன்பப்பட  வேண்டி  இருக்கிறது . அரசனின்  தவறால்  வானம்  பொய்த்து வறுமை  ஓங்குகிறது . அடுத்து  வானத்து  சிறப்பையும்  கூறுகிறார் .ஈசனின்  கொடையாக  நமக்கு  கிடைக்கும்  மழை . நம் வாழ்வின் ஜீவநாடி .

Thursday 24 March 2016

அந்தணரின்  கடமையை  வலியுறுத்திய  திருமூலர்  அரசனின்  கடமைகளையும்  கூறுகிறார் .மதிகுறைவான  அரசனால்  சரியான  நீதி  நிலைநாட்ட  முடியாது . அறநெறி  மிக்க  மதியூக  மந்திரி யை  பெற்று  அவர்  சொல்  தட்டாமல்  ஆட்சி  நடத்துவது  அவர்  கடமை . அரசன்  நீதிமானாக  இருந்தால்தான்  மக்கள்  நல்லபடி  வாழ  முடியும் . மாதம்  மும்மாறி  பொழிந்து  வளம்  செழிக்கும் .
அடுத்து  தானத்தின்  சிறப்பை  உணர்த்துகிறார் .

Wednesday 9 March 2016

வேதத்தில்  குறிப்பிட்டிருப்பது  போல்  யாகங்கள்  செய்வதின்  அவசியத்தை  வலியுறுத்துகிறார் . அந்தணர்களின்  கடமையை  அடுத்து  வலியுறுத்துகிறார் . வேதம்  ஓதுவதையும்  மாணவர்களுக்கு   வேத  பாடசாலை  நடத்துவதுமே  அவர்களுக்கு  முக்கிய  கடமையாகும் .தக்ஷிணையும்  கிடைத்ததை  பெற்றுக்கொண்டு  அதிலும்  இயன்ற அளவு  தானம்  செய்வது  அவசியம் . யாகங்களை  ஒரு  சிறு  தவறில்லாமல்  நடத்தி  வைத்து  நாட்டின்  சுபிக்ஷத்தை  காப்பது  அவர்கள்  கடமையே . இவ்வாறு  நாட்டின்  வளத்திற்கு  அந்தணர்களின்  பங்கு  பெரியது . 

Sunday 6 March 2016

பஞ்சமா  பாதகங்கள்  அறவே  ஒழிக்கப்பட  வேண்டியவை  என்று  எச்சரித்த  திருமூலர்  கொல்லாமை , பிறன்  மனைவி  நாடாமை ,பொய் பேசாமை , கள்ளுண்ணாமை , எல்லா  ஜீவன்களிடத்தும்  அன்பு  செலுத்துவது   போன்ற  நற்பண்புகளை  சிறந்த  அறமாக  கைபற்றும்படி  போதிக்கிறார் . யாகத்தின்  சிறப்பை  கூறுகிறார் . யாகம்  பொது  நலனுக்காக  செய்யப்படுகிறது . நாட்டில்  மும்மாரி   பொழிந்து   பயிர்கள்  செழிப்புறவும் , இயற்கை உத்பாதங்கள்  எதுவும்  நேராமலும்  மக்கள்  செழுமையுடன்  குறையின்றி  வாழ  பஞ்ச  பூ தங்களின் அதிதே வதைகளையும்   மற்ற  தேவர்களையும்  நன்றியுடன்  போற்றும்  பொருட்டு  செய்யப்படுகிறது .   

Wednesday 2 March 2016

வாழ்வின்  நிலையாமை  செல்வம்  நிலையாமை  இவற்றை   சொல்வதால்  இம்மானிட  பிறப்பை  குறையாக  மதிப்பிட   தேவை  இல்லை . கிடைப்பதற்கு  அரியது  மானிட  பிறவி .  விஷ்ணு வே   இப்புவியில்  ராமராகவும்  கிருஷ்ணராகவும்  அவதரித்துள்ளார் . சிவபெருமானும்  தன்  அடியார்களை  ரட்சிக்க  இப்புவியில்  பல  வேடங்களில்  தோன்றி  பல  பல  விளையாடல்கள்  புரிந்துள்ளார் . அநேக   சித்தர்கள்  பல  நூறு  ஆண்டுகள்  வாழ்ந்து  பல  சாதனைகள்  புரிந்துள்ளனர் . ஹனுமான்  இங்குதான்  ராமர்  இருப்பதால்  இவ்வுலகை  விட்டு  நீங்க  விரும்பாமல்  இவ்வுலகிலேயே  வாழ்ந்து  கொண்டிருப்பதாக  நம்பப்படுகிறது . இவ்வாறு  பெருமை  பெற்றது  இவ்வுலகம் .திருமூலர்  காட்டிய  நன்னெறிகளை  கடைப்பிடித்து  வாழ்ந்தால்  வாழ்க்கை  இன்பமே .