Monday 30 December 2019

ஊன்றுகோலை   பெற்றுக்கொண்ட   சுந்தரர்   தன்   யாத்திரையை   தொடர்ந்தார் .   காஞ்சி   வந்தடைந்தார் .   அன்னையுடன்   சேர்ந்து   காட்சி   அளிக்கும்   பெருமானை   கண்டார் .   அன்னையை   கண்ட   சுந்தரருக்கு    சிறிது   நம்பிக்கை   வந்தது .   மனமுருக   வேண்டினார் .  அம்மையப்பனை   நோக்கி    ''  அம்மையப்பா   உங்களை   காணும்   ஆவலில்   அன்றோ   இப்பெரும்   பிழையை    செய்தேன் .  உங்களை   காணாமல்   உயிர்   வாழ்வது   சாத்தியமில்லை .  என்னை   பிழை   பொறுத்தருள  மாட்டாயா ?   அன்று  நல்லூரில்   நான்   பிழை   செய்ய   இருந்தபோது   என்னை   காத்து   ரக்ஷித்த   நீ   இப்போது   மன்னித்து   காக்க   மாட்டாயா?  ஏன்   இந்த   சோதனை ?''  என்று   புலம்பினார் .   அம்மை   கூட   இருப்பது   காரணமோ .  ஐயன்   மனமிரங்கி   அவருக்கு   இடது      கண்   பார்வையை   கொடுத்து   அருளினார் .   
சுந்தரர்   சொல்லொணா   வேதனையில்   ஆழ்ந்தார் .  உற்ற   நண்பராக   தம்மை   தாங்கிய   ஐயன்   இத்தனை   கடும்   தண்டனை   அளித்தது   அவரை   நிலைதடுமாற   செய்தது .  ஆனாலும்    மனம்   மாற்ற   இயலவில்லை .  ஆரூரானை   காணாமல்    இருப்பது   சாத்தியமில்லை   என்று   மனம்   தத்தளித்தது .  சமாளித்து   கொண்டு   எழுந்தார் .  '' ஐயனே   என்   கண்ணைத்தானே   எடுத்துக்கொண்டாய் ?  என்   உள்ளம்   மாறாது .  ஆரூரனை   காணாமல்   வாழ்வது   சாத்தியமில்லை ''  என்று   சொல்லிக்கொண்டே   அடியார்கள்   உதவியுடன்   எழுந்தார் .   தன்   தல   யாத்திரையை    தொடங்கினார் .  திருமுல்லைவாயில்   சென்று   பெருமானை   தரிசித்தார் ,  பிறகு   திருவேற்காடு   சென்றடைந்தார் .  அங்கு  ''பிழையுளன   பொறுத்திடுவீர் ''   என்று   மன்னிக்க  வேண்டி   பதிகம்   பாடி    மன்றாடினார் .   சிறிது   மனமிரங்கிய   பெருமான்   சிறிது   கருணை        காட்ட   விரும்பியவராய்      ஊன்றுகோல்  ஒன்றை   அளித்தார் .      

Thursday 26 December 2019

சுந்தரர்   திடுக்கிட்டு   தடுமாறி   போனார் .   மகிழ   மரத்தடியில்   ஐயன்   இருக்க   தான்   செய்து   கொடுத்த   சத்தியத்தை       மீறியதால்   வந்த   விளைவா   இது ?  சங்கிலியாரை   பிரிந்து   வந்ததால்   ஈசனின்   தண்டனையா  இது   அவர்   மனம்   தடுமாறியது .  ஒளி   இழந்த   கண்களிலிருந்து   கண்ணீர்   ஆறாய்   பெருகியது .  கோயில்   பக்கம்   திரும்பி   கரம்    கூப்பி   கண்ணீர்   மல்க   கதறினார் .   'ஐயனே   என்னை   தண்டிக்காதே .  சங்கிலியாரை   பிரிவது   என்   நோக்கமல்ல .  கொடுத்த   வாக்கை   மீறுவதும்   என்  எண்ணமில்லை .  ஆரூர்   ஈசனை   காணாமல்   என்னால்   கணமும்   இருக்க   இயலாது .  ஆரூரன்   மேலுள்ள   காதலே   என்னை   வாக்கு   மீற   செய்தது .  கண்ணை   கொடுத்து   விடு   என்று   கதறினார் .  தன்   மன   வேதனையை
பதிகங்களாக   பாடி   ஐயனுக்கு   சமர்ப்பித்தார் .   அனால்   ஐயன்   மனம்  இறங்குவதாக   இல்லை 

     .

Wednesday 25 December 2019

 சில    நாட்கள்   சுந்தரர்   சங்கிலியாருடன்   மகிழ்ச்சியாக  வாழ்ந்தார் .  இருவரும்   காலை   மாலை   இரு   வேளையும்   ஆலயம்  சென்று   ஒற்றியூர்   பெருமானை    சேவித்துக்கொண்டு   ஊர்மக்கள்    மெச்ச   வாழ்க்கை   நடத்தி   வந்தனர் .  சுந்தருக்கு   இப்புவியில்   இன்னும்   செய்ய   வேண்டிய   காரியங்கள்   உள்ளதால்   ஈசன்   அவ்விதம்    வாழ்வதை  மாற்ற  எண்ணம்   கொண்டார் .   திருவாரூரில்   வசந்த   உத்சவம்   நடக்க   வேண்டிய   சமயம்   அது .  அதை   பயன்படுத்திக்கொண்டு   சுந்தரரின்   மனதில்   அந்த   ஆவலை   தூண்டிவிட்டார் .   மனம்  நிலை  கொள்ளவில்லை      .   தியாகேசர்   அவர்   மனதில்   தோன்றி    அலைபாய   வைத்தார் .   ஆனால்   போவது   எவ்வாறு ?    அவர்   சங்கிலியாருக்கு   செய்து    கொடுத்த   சத் தியம்  ஒரு  புரம்  அழைத்து   போவது   சாத்தியமில்லை    .   பரவையார்   அனுமதிக்க   மாட்டார் . மனம்   தடுமாறியது .   இத்தனை   இக்கட்டிலும்    அவரால்   மனதை   கட்டுப்படுத்த    முடியவில்லை .      பொறுக்க   முடியாமல்   ஒரு    நாள்   ஆரூர்   கிளம்பி   விட்டார்  .  சங்கிலியாரிடம்   சொல்லாமல்   ஆரூர்  செல்ல   முற்பட்டார் .   ஒற்றியூர்   எல்லை     தாண்டியதும்   அவர்  கண்கள்   இருண்டு   த லை  சுற்றி  கீழே    விழுந்தார் .   எழுந்த     போது     அவருடைய   இரு   கண்களும்   ஒளி   இழந்து   பார்வை   அற்று   போயிருந்தார் .      

Monday 23 December 2019

சுந்தரர்   வார்த்தைகளை   கேட்ட   சங்கிலியார்     சந்தோஷத்துடன்   'சுவாமி  உங்கள்   வார்த்தையில்   நம்பிக்கை   இல்லாவிடில்   அன்றோ  ஈசன்   முன்   சத்தியம்   செய்ய   வேண்டும்    எனக்கு  உம்மிடம்    அதிக   நம்பிக்கை   இருக்கிறது .  ஆகையால்   சாதாரண   சத்தியமே   போதும் '  என்றாள் .  பின்   எங்கு   சத்தியம்   செய்து   தரவேண்டும்   என்று   திடுக்கிட்ட   சுந்தரர்   வினவினார் .   அதற்கு   அவள்   வாருங்கள்   அந்த   குளிர்ந்த   மகிழ   மரத்தடியில்  செல்வோம்.  அங்கு   என்   மனம்   குளிர   சத்தியம்   செய்து   கொடுத்தால்   போதும் '  என்று   கூறினாள் .   சுந்தரர்   திடுக்கிட்டார் .  ஐயன்  அங்கு  அல்லவா   இருக்கிறார் .  இ ப்போது   மறுத்து    சொல்வதற்கில்லை  .   தவறாக   நினைப்பாள் .   இறைவன்   முன்   அல்லவோ   சத்தியம்   செய்து   தர   வேண்டும் .  தர்ம   சங்கடத்தில்   அல்லவோ   மாட்டிக்கொண்டார் .  சங்கிலியார்   சுந்தரரை   வணங்கி   விடை   பெற்றாள்  .  அவரும்   பெருமானை   வணங்கி   விட்டு   மடத்திற்கு  சென்றார் .   ஈசன்   அடியார்கள்   கனவில்   தோன்றி   மறுநாள்   அவர்கள்  திருமணத்தை   விமரிசையாக   நடத்துமாறு    ஆணையிட்டார் .       ஐயன்   திருவாக்குப்படி   திருமணம்   நடந்தேறியது .  மண   வாழ்க்கை    மகிழ்ச்சியாக  துவங்கியது .    
மறுநாள்   சுந்தரர்   அந்த   அடியாருடன்   ஆலயம்   சென்று   சங்கிலியாருக்காக   காத்திருந்தார் .   அப்போது   சங்கிலியார்   நீராடி   புத்தாடை   அணிந்து   ஐயனுக்கு   வாசமிக்க    மலர்மாலை   எடுத்துக்கொண்டு   ஆலயம்  நோக்கி     வந்தார் .    அவளை   கண்டதும்   மனம்   மகிழ்ந்த   சுந்தரர்   அவளிடம்   வந்து   'பெண்ணே    உன்னை   கண்டது   முதல்   என்   மனம்   என்   வசம்   இல்லை .  எம்பெருமானும்   இதற்கு   சம்மதம்   தெரிவித்து   விட்டார் .'  என்று   அவர்   சொன்னதும்   சங்கிலியார்   மனம்   புல்லரிக்க   தலை   குனிந்து   நின்றாள் .  தொடர்ந்து   சுந்தரர்   'பெண்ணே   ஏன்   மெளனம்   உனக்கும்   சம்மதமென்று   ஈசன்   தெரிவித்தார் .  என்னுடன்    எம்பிரான்   சன்னதிக்கு   வா   நீ   கேட்டபடி   அவர்   முன்    உன்னை   பிரிவதில்லை   என்று   சத்தியம்   செய்து   தருகிறேன்.'  என்று   அவளை   அழைத்தார் .      

Wednesday 18 December 2019

ஐயன்   சங்கிலியரிடமிருந்து   ஆரூரரிடம்   வந்தார் .  சுந்தரா   நீ   விரும்பியபடி   அவள்  உன்னை   மணக்க   சம்மதித்து   விட்டாள் .  ஆனால்   ஒரு   நிபந்தனை.  அதாவது   என்  முன்னால்    அவளை   பிரிய   மாட்டேன்   என்று   சத்தியம்   செய்து   தர   வேண்டும் .  என்றார்   அவள்   சம்மதித்தது   சுந்தரருக்கு   பேரானந்தம்   அளித்தது .  ஆனால்   தல   யாத்திரை   செய்து   சிவபெருமானை   சேவிக்காமல்   இருக்க   ?  அது   சாத்தியமா   கேள்வி   எழுந்தது .  தோழனல்ல வா   எதுவும்   கேட்கலாம் .  என்று   ஐயனே   நான்   சத்தியம்   செய்ய   வரும்போது   தாங்கள்   தயை   கூர்ந்து   சன்னதியிலிருந்து   விலகி   மகிழ   மரத்தில்   சிறிது   நேரம்   தங்க வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டார் .  அவர்   சம்மதித்தார் .  அனால்   உடனே   சங்கிலியிடம்   சென்று    பெருமான்   சிரித்துக்கொண்டே   சங்கிலி   நாளை  ஆருரனிடம்   சன்னதியில்   சத்தியம்   செய்ய   தேவையில்லை .  மகிழ   மரத்தடியில்   செய்தால்   போதும்   என்று   கூறிவிட   சொன்னார் .     
ஈசன்   அவர்களை   சேர்க்கத்தானே   சுந்தரரை   ஒற்றியூர்   வரவழைத்தார் .  அவர்   தம்   வேலையை   துவங்கினார் .  இரவு   சங்கிலியாரின்   கனவில்   தோன்றி   என்   தோழன்   நம்பி  ஆரூரன்   உன்னை   மணக்க   விரும்புகிறான் .நீங்கள்   இருவரும்   இணைவது   எனக்கும்   சம்மதமே உன்  சம்மதம்  தேவை   .  என்று   கேட்டார் .  அதற்கு   அவள்  ' ஐயனே   உமது   கட்டளையை   மீறும்   சக்தி   எனக்கு   இல்லை .  ஆனாலும்   அவர்   ஏற்கனவே   பரவையாரை   மணந்து   வாழ்ந்து   வருகிறார் .  என்று   தன்   மன   கவலையை   தெரியப்படுத்தினாள் .   அதற்கு   ஈசன்   உன்னை   பிரிவதில்லை   என்று   சத்தியம்   செய்து   தர   சொல்கிறேன்   என்று   சமாதானம்   கூறினார் .    

Monday 16 December 2019

சங்கிலி   நாச்சியாரின்  கதையை   கேட்ட   சுந்தரரின்   மனம்   அலை   பாய்ந்தது .  அவளை   அடைய   மனம்   ஆவல்    கொண்டது .  தாம்   இப்புவியில்   பிறக்க   இரண்டு   பெண்கள்   காரணம்   என்பதை   அறிந்திருந்த  சுந்தரர்   பரவையாரை   தவிர   மற்றவள்   அவளோ   என்று   அவர்   மனம்   எண்ணியது .    சங்கிலியார்   ஈசன்   அருள்   பெற்றவர்   என்று   குறிப்பிட்டது   தன்னைத்தானோ   என்று   சந்தேகம்    உண்டாயிற்று .  அதை   ஐயனை   கேட்டே   தெளிவு   படுத்திக்கொள்ள     முடிவு   செய்தார் .   ஒற்றியூர்   சிவபெருமானை   நாடி   ''என்   உள்ளத்தில்   மிகுந்த   சலனத்தை   ஏன்   ஏற்படுத்தி   விட்டாய் ?  அன்று   நடக்கவிருந்த   என்   திருமணத்தை   நிறுத்தி   என்னை   ஆட்கொண்ட   பெருந்தகை   அல்லவோ  நீ ?  இன்று   இப்பெண்ணை   கண்டு   சலனப்பட   வைத்து   விட்டாய் ?  அப்படியானால்   அவள்தான்  அந்த   இரண்டாவது   பெண்ணா ?   என க்கு  அவளை   கண்டதும்  அவளை   ஆடைய   வேண்டுமென்ற   வேட்கையை   ஏன்   ஏற்படுத்தினாய் ?  அவளை   எனக்கு   மணமுடித்து வைத்து   விடு ''  என்று    புலம்பினான் .     ஈசன்   உமது   இச்சையை   நாம்   நிறை வேற்றி    வைப்போம்     என்று   வாக்களித்தார் .

Friday 13 December 2019

தரிசனம்   முடித்து   மடத்திற்கு   வந்த   சுந்தரருக்கு   மனம்   நிலைக்கொள்ளவில்லை .   கோயிலில்   கண்ட   அப்பெண்ணின்   மலர்முகம்  அவரை   அலைக்கழித்தது .  தன்னுடன்   ஆலயத்திற்கு   வந்த   ஒருவரிடம்   அந்த   பெண்ணை   பற்றி   விசாரித்தார் .  அவர்      அவ்வூரின்   எல்லையில்   உள்ள  ஞாயிறு   எனும்   இடத்தில்      ஞாயிறுகிழார்   என்பவர்   குடும்பத்துடன்   வசிக்கிறார்   என்றும்   அவருடைய   மகள்   சங்கிலி   எனும்   பெயர்  என்றும்   அவர்   தெரிவித்தார் .  மேலும்   அவர்   அவளுடைய   பெற்றோர்கள்   அவளுடைய   திருமண  பேச்செடுத்தால்   ஈசன்   அருள்   பெற்ற   ஒருவரைத்தான்   மணமுடிப்பேன்   என்றும்   தனக்கு   ஒற்றியூர்   பெம்மானுக்கு   சேவை   செய்வது   ஒன்றே   விருப்பம்   என்று   சொல்லி   மறுத்து   வந்ததாகவும்   கூறினார் .  அவளை   மாற்ற  எடுத்த   முயற்சி   பலனளிக்கவில்லை .   ஒரு   சமயம்   அவருடைய      உறவினர்   தன்  மகனுக்கு   அவளை   மணம்   பேசவந்து   பேசி   முடித்துக்கொண்டு     ஊர்   திரும்பினர் .   அனால்  அவர்கள்   போய்   சேர்ந்த   போது  அந்த   மகன்   இறந்து   கிடந்தது   கண்டு   அதிர்ந்து  போனார்கள்  .  ஞாயிறு   கிழாரும்   பெண்ணின்   வார்த்தையில்   உள்ள   உண்மையை        உணர்ந்து   அதிர்ந்து   போனார் .   இந்த   விவரங்களை   கேட்ட   சுந்தரர்   திடுக்கிட்டார் .         

Wednesday 11 December 2019

சுந்தரர்   அப்பெரிய   தர்மசங்கடத்திலிருந்து   எம்பிரான்   பெரும்   கருணையாலும்   அவர்   தான்   கொடுத்த   வாக்கை   காப்பாற்றி இல்லாவிடில்   மூன்றாவதாக   அப்பெண்ணை   மணந்து   இப்பூலோக   வாழ்வை   நீட்டித்திருப்பார் .  ஐயன்   பேரருளை   சுந்தரர்   மறக்கமுடியுமா ? அவர்   கைலையில்   கண்ட   ஒரு   பெண்  பரவையாரை   மணந்து   திருவாரூரில்  . வாழ்ந்து   வருகிறார் .  மற்றோரு   பெண்ணை   சநதிக்க   ஒற்றியூருடைய  பெம்மான்    துணை   செய்கிறார் . 
    ஒற்றியூரில்   சுந்தரர்   ஒரு   மடத்தில்   தங்கி   எம்பெருமானை   தினம்   தரிசித்து   வருங்கால்   ஒருநாள்   கோயிலில்   அடியார்களின்   தொண்டினை   பார்த்து   மகிழ்ந்தபடி   வந்து   மலர்   மண்டபத்தை   அடைந்தார் .   அங்கு   வாசமிக்க    மலர்களை   மாலையாக    கட்டிக்கொண்டிருந்த   காட்சியை   ரசித்தபடி   சுந்தரர்   வந்து   கொண்டிருந்தார் .   அப்போது   ஒரு   அழகிய     மங்கை   மாலையை   எடுத்துக்கோண்டு   திரையை   விலக்கிக்கொண்டு   வெளியே   வந்தாள் .  சுந்தரர்      அவளை   கண்டு  ஒரு   கணம்   மலைத்தார் . அவளும்   அவரை   கண்டு    ஒரு   மலைத்து   நின்று   பிறகு   ஓடி   மறை.ந்தாள்            .         

Tuesday 10 December 2019

காஞ்சியை   அடைந்த   சுந்தரர்  ஏகாம்பிரேஸ்வரரை   வணங்கி   மகிழ்ந்து   அங்கு   சில   நாட்கள்   தங்கி   இருந்து   பிறகு , திருமேற்றளி   ஓணகாந்தன்தளி   மற்றும்   சில   தலங்களை   சேவித்து   திருக்காளத்தி   அடைந்தார் .  மலையை   வழிப்பட்டு   படியேறி   சென்று   இறைவனுக்கு   கண்   கொடுத்து   ஈசனின்   வல ப்பாகத்தில்   இடம்   பெற்ற   கண்ணப்பரை   தரிசித்து  களித்தார் .  அங்கிருந்து   மனக்கண்ணாலேயே   திருக்கேதாரம் ,   திருப்பருப்பதம்   முதலிய   இடங்களை   சேவித்துக்கொண்டார் .   காஞ்சியிலிருந்து   புறப்பட்டு   திருஒற்றியூர்   வந்து   சேர்ந்தார் .  அவருடைய    பிறப்பின்   மற்றோரு   காரணம்   நிறைவேற   ஈசன்   திட்டப்படி   அங்கு   வந்தார் .
        கைலையில்   வாழும்போது   சுந்தரர்   இரு  பெண்களை   கண்டு  மயங்கி   சில   கணங்கள்    மூவரும்   தன்நிலை    மறந்தனர் .  ஈசன்   அவர்களை   இவ்வுலகில்   பிறந்து   சுந்தரர்   அந்த   இரு  பெண்களையும்   மணந்து   சிறிது   காலம்   இல்லற   சுகம்   அனுபவிக்க   கட்டளையிட்டார் .   சுந்தரர்   இவ்வுலகில்   வாழும்போது  அவருக்கு   வழிகாட்டுவதாகவும்    வாக்களித்தார் .  அதனால்தான்   அவர்   திருமணம்   செய்துகொள்ள   முடிவு  செய்தபோது   ஐயன்   ஓலையை   காட்டி   ஆட்கொண்டார் .    

Sunday 8 December 2019

அமிர்தமாய்   ருசித்த   அவ்வுணவை   உண்ட   சுந்தரர்  கை         அ லம்பிக்கொண்டு   தம்   நன்றியை   தெரிவிக்க   திரும்பினார் .  ஆனால்   அந்த   அந்தணரையோ   அல்லது   அவர்   கொண்டு   வந்த   பாத்திரத்தையோ   காணாமல்   திகைத்து   இந்த   முறையும்   தமக்கு   தக்க   தருணத்தில்   உணவளித்து   தம்மை   காத்தது   ஐயனே   என்பதை   உணர்ந்து    நெகிழ்ந்து   போன   சுந்தரர்   அவர்   கருணையை   நினைத்து   கண்ணீர்   மல்க   பதிகம்   பாடி   தம்   நன்றியை   தெரிவித்து   கொண்டு   அன்று   அங்கு   தங்கி   மறுநாள்   காஞ்சி   நோக்கி   புறப்பட்டார் .

Friday 6 December 2019

திருக்குருகாவூர்   சென்று   சுந்தரர்   கட்டுசோறு  அளித்து   பசி   தீர்த்த   கங்காதரரை   நன்றிப்பெருக்குடன்   கண்ணீர்   மல்க   பதிகம்   பாடி   அவரை   மகிழ்வித்து   தானும்   மகிழ்ந்தார் .  பிறகு   சில   தலங்களை   சேவித்து   கொண்டு   தில்லையை   அடைந்தார் .    அங்கிருந்து   நல்லூர்   சென்றார் .  அங்கு   இவர்   வருவதை   அறிந்து   ஏராளமான   பக்தர்கள்   கூடி   அவரை   மிக்க   அன்புடன்   வரவேற்றனர் .  அந்த   வரவேற்பை   கண்டு   சுந்தரர்   நெகிழ்ந்து   போனார் .  அங்கு   சிலகாலம்   தங்கி   பிறகு   திருக்கழுக்குன்றம்   சென்று  வேதபுரீஸ்வரரை    வணங்கி   மகிழ்ந்தார் .  அங்கிருந்து   காஞ்சி  செல்ல   புறப்பட்டு  வழியில்  திருக்கச்சுர்   அடைந்தார் . வெய்யில்   தகித்தது .  பசி   தாகம்  அவர்   ஏற் பாடு   செய்திருந்தபடி   சமையல்காரர்கள்   வந்து   சேரவில்லை .   சோர்வுடன்   இருந்த   சுந்தரரின்   நிலைமையை    காண   சகியாத   ஈசன்   ஒரு   அந்தணர்   வடிவில்   வந்து   அவரிடம்   'உங்களை   பார்த்தால்   மிக   சோர்வுட ன்   காணப்படுகிறீர்கள் ' என்று   பரிவுடன்   கேட்டார் .  சுந்தரர்   நான்   ஏற்பாடு   செய்தபடி   சமையல்   செய்பவர்கள்   வந்து   சேரவில்லை   என்று   பதிலு ரைத்தார் .  ஈசன்  அதற்கு  கொஞ்சம்    பொறுங்கள்    அக்கிரகாரம்   சென்று   இரண்டு  மூன்று   வீடுகளில்   பிக்ஷை   வாங்கி   வந்து   உங்களுக்கு   உணவு   அளிக்கிறேன் .  என்று   சொல்லி   கிராமத்துள்   சென்று   உணவு   வாங்கி   வந்  அளிக்கிறார் .