Friday 17 June 2016

அம்மையே  என  ஈசனால்  அழைக்கப்பட  மெய்சிலிர்த்து  காரைக்கால்  அம்மையார்  அப்பா! என்று  அவர்  காலடியில்  வீழ்ந்தாள் . மகிழ்ந்த  ஈசன்  வேண்டிய  வரத்தை  கேட்க  பணிக்கிறார். அம்மையார்  பிறவாமை  வேண்டுகிறார் , அப்படி  பிறந்து  விட்டால்  உன்னை  என்றும்  மறவாமை  வேண்டும் .இன்னும்  வேண்டும்  அரவா!  நான்  பாடி  நீ  ஆடும்போது  உன்  அடியின்  கீழ்  இருக்க '  என வேண்டுகிறாள் . மனமுவந்த  ஈசன்  அவரை   ஆலன்காட்டிற்கு  செல்லுமாறு  அங்கு  தம்  ஆனந்த  நடனத்தை  காணலாம்  என்று  உரைக்கிறார் . மனமகிழ்ந்த  அம்மையார்  தலையாலேயே  நடந்து  ஆலங்காட்டை  அடைகிறார் .அங்கு  ஈசன்  அவளுக்கு  காட்சி  அளிக்கிறார் 'கொங்கை  திரங்கி  நரம்பெழுந்து '  எனும்  மூத்த  திருபதிகம்  பாட  ஐயன்  நடனமாடுகிறார் . அம்மை  ஆனந்தத்திற்கு  எல்லை  ஏது ? அம்மையார்  திருஞான சம்பந்தருக்கு  முன்பு  இருந்தவர் . அவரே  முதலில்  பதிகம்  பாடியவர் . ஆதலால்  இது  மூத்த  பதிகம்  ஆகிறது .அவர்  பாடிய  மற்றவை  "அற்புத  திருவந்தாதி , திரு  இரட்டை மணிமாலை   ஆகும் . 

Tuesday 14 June 2016


கணவன்  வார்த்தைகளை  கேட்டு  அதிர்ச்சி  அடைந்த  புனிதவதி  கணவனுக்கு  மகிழ்ச்சி  அளிக்காத  தன்  அழகை  அவள்  வெறுத்தாள் . ஈசனை  துதித்து  தன்  அழகை  அழித்து  தன்னை  எலும்பு  கூடாக  மாற்ற  வேண்டுகிறாள் . ஈசனும்  அவ்வாறே  அவளை  மாற்றுகிறார் . எல்லோரும்  அதிர்ச்சியும்  வேதனையும்  அடைகின்றனர் . புனிதவதி  அவர்களை  தேற்றிவிட்டு  அந்த  ஆடவல்லான்  கோயில்களை  தரிசித்து  அவன்  புகழை  பாட  விழைகிறாள் . பல  இடங்களுக்கு  சென்று  தரிசித்த  பின்  அவள்  கைலாயம்  செல்ல  ஆவல்  கொண்டு  ஐயன்  வாழும்  இடத்தை  காலால்  மிதிக்க  மனம்  ஒப்பாமல்  தலையாலேயே  நடந்து  செல்கிறாள் . இத்தகைய  பக்தியும்  மன  உறுதியும்  ஈசனையும்  தேவியையும்  அதிசயிக்க  வைக்கிறது .அம்மையே ! என்று   வரவேற்கிறார்கள் . இந்த  பாக்கியம்  யாருக்கு  கிடைக்கும் .

Saturday 11 June 2016

ஆனந்தம்  அடைந்த  புனிதவதியின்  பெற்றோர்   அவளை  அலங்கரித்து  பல்லக்கில்  உட்கார  வைத்து  சீர்வரிசைகளுடன்  பரமதத்தன்  வாழும்  இடத்திற்கு  அழைத்து  செல்ல  முற்பட்டனர் . விஷயம்  அறிந்த  பரமதத்தன்  தெய்வத்திற்கு  இணையாக  தான்  கருதும்  புனுதவதி தன்னை  தேடி  வருதல்  பாவமாக  கருதி  தன்  மனைவியையும்  குழந்தையையும்  கூட்டி  சென்று  மூவரும்  அவள்  காலடியில்  வீழ்ந்தனர் . எல்லோரும்  திகைத்து  மனைவிவை  வணங்குவதன்  காரணம்  கேட்டனர் . பரமதத்தன்  அவள்  சாதாரண  பெண்ணல்ல  தெய்வத்திற்கு  சமமானவள்  எல்லோரும்  வணங்க  வேண்டியவள்  என்று  கூறுகிறான் . தன்  பெண்ணிற்கு  அவள்  பெயர்  சூடி   இருப்பதையும்  கூறுகிறான் .எல்லோரும்  அதிர்ச்சி  அடைகின்றனர் .

Wednesday 8 June 2016

இவ்வாறு  புனிதவதியும்  அவள்  குடும்பத்தினரும்  மன  வேதனையுடன்  வாழ்ந்து வந்து  கொண்டிருந்தனர் . ஒருநாள்  அவர்களூடைய  உறவினர்  ஒருவர்  பரமதத்தனை  காண  நேரிடுகிறது .அவர் உடனே  அவன்  இருப்பிடத்தை  புனிதவதியின்  பெற்றோரிடம்  கூறுகிறார் , அவர்கள்  அடைந்த  ஆனந்தத்திற்கு  அளவே  இல்லை . 

Thursday 2 June 2016

paramathaththan

பரமதத்தன்  இத்தகைய  மனநிலையுடன்  வாழ  முடியாமல்  வீட்டைவிட்டு  வெளியேறுகிறான் . யோசித்து  பிறகு  நாட்டைவிட்டெ  வெளியேறி  வியாபாரம்  தொடங்க  முற்பட்டான் . அதில் அமோக வெற்றி  அடைந்து  தனவந்தன்  ஆனான் . பிறகு  பிறந்த  நாட்டை  காண  ஆவல்  கொண்டான்  ஆனால்  காரைக்கால்  செல்ல  மனமில்லாமல்  பாண்டிய  நாட்டில்  ஒரு  துறைமுகத்தில்  குடியேறினான் . அங்கு  வேறொரு  பெண்ணை  மணந்து  கொண்டான் . அவர்களுக்கு  பிறந்த  பெண்  குழந்தைக்கு  புனிதவதி  என்று  பெயர்  சூட்டினான் . காரைக்காலில்  புனிதவதி  கணவனை  காணாமல்  மிக  வேதனை  கொணடவளாக  ஈசனே  கதி  என்று  வாழ்ந்து  வந்தாள் .