Friday 30 November 2018

காழிப்பிள்ளை   சென்ற   இடமெல்லாம்      மக்கள்   அவரை   குதூகலத்துடனும்   பூர்ண   கும்பத்துடனும்   வரவேற்று   பக்தியுடன்   வணங்கி   துதித்தனர் .    திருப்பாச்சிலாச்சிராமம்     வந்து   சேர்ந்தார்   சம்பந்தர்.   அவ்வூர்   அரசன்  கொல்லிமுழவன்    அவன்   அருமை   மகள்  முயலகன்   என்னும்   கொடு   நோயால்   பிடிக்கப்பட்டிருந்தாள் .  அவள்   தன்   நினைவின்றி   இழுத்துக்கொண்டு   படுத்திருந்தாள் .    பார்க்க   பரிதாபமான   நிலையில்   இருந்தாள் .   அரசன்   எத்தனையோ   வைத்தியங்கள்   பார்த்தும்   பலனில்லை .  எந்த   வைத்தியருக்கும்   எதுவும்   புலப்படவில்லை .  மன்னரும்   அவர்   மனைவியும்   மிக்க   துன்பம்   அடைந்திருந்தனர் .    மன்னர்   விரக்தி   அடைந்து   இனி   மனித   யத்தனம்   வீண்    என்று   முடிவு   செய்து   ஈசனை     சரணடைந்தார் .  பெண்ணை   சுமந்து   கொண்டு   கோயிலை   அடைந்து   ஈசன்    காலடியில்   அவளை  கிடத்தினார் .

Tuesday 27 November 2018

பிரம்மோபதேசம்   முடிந்த   பிறகு   ஆளுடைப்பிள்ளைக்கு   காவிரி   இரு   கரைகளிலும்   உள்ள   திவ்ய   க்ஷேத்திரங்களை     சேவிக்கும்   ஆவல்   எழுந்தது .  அதை   தந்தையிடம்     தெரிவித்தபோது   அவரும்   சேர்ந்து   கொண்டு   புறப்பட்டார் .  இந்திரன்   அகலிகையிடம்    தவறாக   நடந்த   காரணத்தால்   அடைந்த   சாபத்தை   நீக்கி    ஆயிரம்   கண்கள்   வழங்கிய   கண்ணாயிரேஸ்வரர்   கோவிலை   சேவித்து   கொண்டு   புள்ளிருக்குவேளூர்   திருப்புன்கூர்   மற்றும்   பல   பல   ஆலயங்களை   தரிசித்து   கொண்டு   பதிகங்களை   பாடிக்கொண்டும்   மனம்   மகிழ்ந்து   பயணத்தை   தொடர்ந்தனர் .   கடைசியாக   திருப்பாச்சிலாச்சிராமம்   வந்தடைந்தனர்  . 

Monday 19 November 2018

இவ்வாறு   இருக்கையில்   சிவபாதவிருதயர்க்கு   தன்   மகனுக்கு   உபநயனம்   செய்து   பார்க்க   ஆவல்   உண்டாயிற்று .   அந்தணர்களை    வரவழைத்து   சுப   முகூர்த்தம்   நிர்ணயித்தார் .   குறிப்பிட்ட     நாளில்   அந்தணர்கள்   வந்து    பிரம்மோபதேசம்   நடந்தேறியது .   தந்தைக்கு   பேரானந்த  ம் .    குழந்தைக்கு   வேதம்   முறைப்படி   உபதேசிக்க   அந்தணர்கள்   முற்பட்டபோது   ஈசனும்   அன்னையும்   சேர்ந்து   கொடுத்த     ஞானபாலுண்ட   அப்பெருமகனார்க்கு   தாங்கள்   கற்றுத்தர   ஏதுமில்லை   என்று   உணர்ந்த   அந்தணர்கள்   அவரிடம்   உபதேசம்   பெற   எண்ணினர் .  அவரும்   பஞ்சாக்ஷரத்திற்கு   மிஞ்சிய   வேறு   மந்திரமில்லை   என்று வலியுறுத்தி      சொல்லி    'துஞ்சலும்   துஞ்சல் '   எனும்   பதிகம்   பாடி   அவர்களை   மெய்மறக்க   செய்தார் .   அந்தணர்கள்   மன   மகிழ்ச்சியோடு   அவரை   தொழுது   சென்றனர் .

Saturday 17 November 2018

அங்கிருந்து   கிளம்பி   பல   தலங்களிலும்   ஐயனை  வணங்கி   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்து   திருசேய்நால்லூர்   வந்தார் .  சிவ   அபராதம்  செய்தவர்   தந்தை   என்றும்   பாராமல்   காலை  வெட்டி     மாய்த்து   தண்டித்து    அதன்   காரணமாக   ஐயன்   இவரை   மகனாக   ஏற்று  சண்டேஸ்வர   பதவி   அளித்து   தந்தைக்கும்   சிவபதம்    அளித்த   எம்பெருமானை    வணங்கி   துதித்து   சீர்காழி   வந்து   சேர்ந்தார் .   இத்தனை   பெருமை   பெற்று   திரும்பி   வந்த    ஞான   குழந்தையை   மக்கள்         எத்தனை   பெருமையுடன்   வரவேற்றிருப்பார்கள்   என்று   சொல்ல   தேவை   இல்லை .   ஊர்   எல்லையிலேயே   மக்கள்  மேளதாளத்துடனும்   பூர்ண   கும்பத்துடனும்     பெண்கள்     விளக்கு   ஆரத்தியுடனும்   அவர்   வரவை  எதிர்பார்த்து   ஆவலுடன்   காத்திருந்தனர் .   ஆளுடைப்பிள்ளை   மக்கள்   அன்பை   கண்டு   நெகிழ்ந்து    போனார் .

Thursday 15 November 2018

அரைத்துறைநாதரை   கண்குளிர   தரிசித்து  தன்னையும்   ஒரு   பொருட்டாக   மதித்து   தன்மீது   இத்துணை   கருணை   கொண்டு  சிவிகை   குடை   மற்ற   பொருள்களை   அளித்த   பெருமானை   நெஞ்சார   பாராட்டி   பதிகங்களை   பாடி   மகிழ்ந்தார்  சம்பந்தர் .    நன்றி   பெருக்கால்   அங்கு   சிலகாலம்   தங்கி   கண்குளிர  சேவித்தார் .   அவருக்கு   ஞானப்பால்   கொடுத்து   பெற்றோர்  ஸ்தானத்தில்  தான்   வணங்கும்   தோணியப்பர்   நினைவு   வாட்டியது   . அரத்துறை நாதரிடம்   விடை   பெற்று   கொண்டு   கிளம்பினார் .வழியிலுள்ள   ஊர்களில்   மக்கள்   இத்தனை   சலுகைகள்   ஈசனிடமிருந்து   பெற்ற    அந்த ஞானக்குழந்தையை   தரிசித்து   வணங்க   ஆலயங்களில்   திரண்டனர் .    சிவிகையை   வலம்வந்து   அவரை   வணங்கினர் .   அவர்கள்   அன்பில்   நெகிழ்ந்து   போனார்    சம்பந்தர் .

Saturday 10 November 2018

அரத்துறைநாதர்   இரவு   அந்தணர்கள்   கனவில்   தோன்றி   புதல்வன்   சம்பந்தன்   தன்   பிஞ்சு   கால்கள்   நோக   தன்னை  காண  நடந்து   வரப்போவதாகவும்        அவன்   பிஞ்சு   கால்கள்   நோவதை   தாம்   காண   இயலாது .  ஆகையால்   அவருக்கு   முத்து   பல்லக்கும்   குடையும்   சின்னங்களும்   அளிக்க   விரும்புவதாகவும்     அவைகளை   மாறன்பாடி   சென்று   சம்பந்தனை   அப்பல்லக்கில்   அழைத்து   வருமாறு   ஆணையிட்டு   மறைந்தார் .  விடிந்ததும்   அந்தணர்கள்   கோவிலை   அடை ந்தனர்.    கோவிலில்   முத்து   சிவிகையும்   குடையும்   மற்ற   சின்னங்களும்   அங்கு   தயாராக       இருக்க   கண்டு   ஆச்சர்யம்   அடைந்தனர் .   அவைகளை   எடுத்துக்கொண்டு    யாவரும்   மாறன்பாடி   அடைந்தனர் .   ஈசன்   கருணையை  நினைத்து   தந்தையும்   மகனும்      எண்ணி   வியந்து   மெய்சிலிர்த்தனர் .  சம்பந்தர்   பல்லக்கை   வலம்   வந்து   வணங்கி   அதில்   ஏறினார் .   அடியார்கள்   சிவிகையை   தாங்கி னர் .    ஒருவர்  குடை   பிடித்தார்    மறறொருவர்   சின்னங்களை   தாங்கி   முன்னால்   சென்றார் .  இவ்வாறு   நெல்வாயிலரத்துறையை  அடைந்தனர் .

Wednesday 7 November 2018

நீலகண்ட   யாழ்ப்பாணர்   சம்பந்தரை  தம்    ஊரான  எருக்கத்தம்புலியூர்   அழைத்து   சென்று   அவரை   அன்போடு   உபசரித்து   சுற்றியள்ள   எல்லா   திருத்தலங்களையும்   சேவிக்க   செய்தார் .   அவர்   பாடும்   பதிகங்கங்களுக்கு     கூட  யாழ்    வாசித்து   மகிழ்ந்தார் .   நெல்வாயில்   அரத்துறை   நாதரை     தரிசித்துகொள்ள   புறப்பட்டனர் .   அதுநாள்   வரை   தந்தையின்   தோளில்   சுமக்கச்செய்து   வந்து    கொண்டிருந்த    சம்பந்தர்   இனியும்   அவர்க்கு   சிரமம்  கொடுக்க     விரும்பாமல்     நடந்து   பயணம்   தொடர   விரும்பினார் .    நெல்வாயில்   அரத்துறை     செல்லும்   வழியில்   மாறன்பாடி   எனும்   இடம்   நெருங்கும்போது   சோர்ந்து   போய்     மேலும்   தொடர   முடியாமல்   அங்கு   தங்க   முடிவெடுத்தனர் .     எதிர்பாராமல்   அவ்வூர்   மக்களுக்கு   அவர்   தரிசனம்   கிடைக்க   மகிழ்ச்சி   பொங்க   அவரை   வரவேர்த்தனர் .   அரைத்துறைநாதர்   தன்   மகன்   இவ்வாறு   துன்ப   படுவதை    காண   பொறுக்காமல்   அவருக்கு   முத்து   சிவிகையும்    குடையும்   கொடுக்க   இச்சை   கொண்டார் .

Thursday 1 November 2018

சம்பந்தர்  எம்பெருமான்   ஆனந்த    நடனம்   புரியும்   தில்லையில்   தங்க   மனம்   வராமல்   திருவேட்களம்   சென்று   அங்கு   தங்கி   அங்கிருந்து   தினம்   தில்லை   வந்து   ஐயனை   சேவிக்கலானார் .    ஒருநாள்   தில்லையில்   அவர்   ஒரு   அரிய   காட்சி   கண்டா ர் .    ஒரு  கணம்   மூவாயிரவர்  சிவகணங்களாக   காட்சி   தந்து   மெயசிலிர்க்க   செய்தனர்  .   கூட  வந்த   பெரும்பாணருக்கும்    அக்காட்சியை   காட்டி   அதிசயிக்க   செய்தார் .  அவர்   அடைந்த   மகிழ்ச்சிக்கு   அளவே   இல்லை .   அன்று   அங்கு   பதிகம்   பாடும்போது   அவ்வதிசய   காட்சியையும்   பாடினார் .   ஈசனை   வணங்கி   விட்டு   செல்லும்போது    பாணர்   சம்பந்தர்   காலில்   விழுந்து  வணங்கி   அவரை   தாம்   பிறந்த   ஊரான   எருக்கத்தம்புலியூர்   மற்றும்   நிவா   நதிக்கரை   சுற்றியுள்ள   மற்ற   திருத்தலங்களை   சேவிக்க   அழைத்தார் .  சம்பந்தரும்   மகிழ்ச்சியுடன்   சம்மதித்தார் .