Thursday 28 November 2019

சம்பந்தர்   பிறந்த   மண்ணில்   கால்   வைக்க   மனம்   ஒப்பாமல்   சுந்தரர்   சீர்காழி   நகரை   வலம்   வந்து   வணங்கிவிட்டு    திருக்கு ருகாவூர்    நோக்கி   பயணப்பட்டார் .  சுந்தரர்   மிக   களைப்புடனும்   பசியுடனும்   இருந்தார் .  தம்பிரான்   தன்   தோழர்   பசியை   காண   சகிப்பாரா?   மனம்   பொறாமல்   ஓடிவந்தார் .  பாதையில்   ஓரிடத்தில்       ஓரு    பந்தல்   அமைத்து   அதில்   கட்டு   சோறுடன்   அந்தணர்வேதத்தில்   காத்திருந்தார் .  சுந்தரர்    பாதையில்   தென்பட்ட     பந்தலை   கண்டு   மகிழ்ந்து   அடியார்களுடன்   அங்கு   தங்க   திட்டமிட்டு   அங்கு   வந்தார் .  அந்தணர்   கோலத்திலிருந்த   ஐயன்   'உங்களை   பார்த்தால்   களைத்து   போயிருப்பது   தெரிகிறது .  என்னிடம்   சிறிது   உணவு   இருக்கிறது  . அதை   உண்டு   களைப்பாருங்கள் .   என்று      சொல்லி   வைத்திருந்த   உணவை   கொடுத்தார் .  அந்த   உணவை   அடியார்களுக்கும்   கொடுத்து   தானும்   உண்டார் .  எல்லோரும்   உறங்கி   விட்டனர் .  வந்த   வேலை   முடிந்த   களி ப்பில்   ஈசன்   மறைந்தார் .  பந்தலும்   மறைந்தது .  சுள்ளென்று   வெய்யில்   அடிக்க  எல்லோரும்   கண்   விழித்தனர் .   சுந்தரர்   தம்   பசிக்கு   உணவளித்து   வெய்யிலுக்கு  பந்தலும்   அமைத்து   தம்மை   காத்தது   எம்பெருமான்   என்று   உணர்ந்து   பக்தி   பரவசத்தில்   கண்ணீர்   பெருக  ''இத்தணை   யாமாற்றை ''  என்று   பதிகம்   பாடி   மெய்சிலிர்க்க   மயங்கி   நின்றார் .   

Monday 25 November 2019

ஈசன்   சுந்தரரின்   மனதில்   மறுபடியும்   சிவாலயங்கள்   சேவிக்கும்   ஆவலை   தூண்டினார் .  பரவையாரிடம்   விடைபெற்றுக்கொண்டு   தொண்டை   நாட்டு   தலங்களை   சேவிக்க   புறப்பட்டார் .   முதலில்   திருநள்ளாறு   சென்று  ஐயனை     வணங்கி   மகிழ்ந்தார் .   திருக்கடவூர் ,  திருவெண்காடு   மற்றும்   பல   தலங்களை   தரிசித்து   கொண்டு   வழியில்   திருநீடூர்   செல்லாமல்   பயணப்பட்.டார் .   இறைவன்   அவருக்கு   அதை   உள்ளத்தில்   உணர்த்தினார் .  சுந்தரர்   தன்   பிழைக்கு   மிக்க   வருந்தி   அதை   தமக்கு   நினைவு   படுத்திய   ஐயனின்   கருணையை   நினைந்து   நினைந்து   உருகி  அப்பெருமானை   வணங்கி   பயணம்   தொடர்ந்தார் .  திருநீடூர்   வழிபட்டு   திருப்புன்கூர்   சென்றார் .  அங்கிருந்து   திருக்கோலக்கா   சென்றடைந்தார் .  அவ்வூர்   பெருமான்   சம்பந்தரின்   பிஞ்சு       கரங்கள்  தாளம்    போட்டு   நோகாமல்   இருக்க   பொற்தாள கள்   கொடுத்து  அம்மையின்   அருளால்   அவைக்கு        ஓசை   எழ   செய்த    அந்த  திருவிளையாடலை   நினைத்து   நெக்குருகி   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் . 

Friday 15 November 2019

சுந்தரர்   பரவையார்   மாளிகையில்   இருந்துகொண்டு   ஆரூரரின்   அருமை   தோழன்   பக்தன்     அடியான்   எல்லாமாக   இருந்து   வழிப்பட்டு   வரும்கால்  ஐயன்   சுந்தரர்   இப்புவியில்   பிறப்பெடுத்ததன்   காரணங்களில்   ஒன்று   நிறைவேறினாலும்   மற்ற   ஒன்று   மீதம்   இருப்பதை   மனதில்   கொண்டு   அவருக்கு   மீண்டும்   சிவபெருமான்   குடிகொண்டிருக்கும்   மற்றும்   பல   ஆலயங்களை   தரிசிக்கும்   ஆவலை   தூண்டினார் .  சுந்தரரின்   பெரும்   சாதனையாக  இவ்வுலகம்   பெற்றது    ஈசன்  அடியெடுத்து    கொடுக்க   அவர்   பாடிய   திருத்தொண்டர்த்தொகையாகும் .   63  நாயன்மார்கள்   ஈசனிடம்    கொண்ட   அளவிலா   பக்தி ,  அவர்கள்   ஆற்றிய   சாதனைகள்   அவர்களுக்காக   எம்பெருமான்   ஆடிய   அற்புத   திருவிளையாடல்கள்   இவைகளை  பாமர   மக்கள்   அறிந்து   உய்வதற்கு   காரணமாயிற்று .  ' தில்லைவாழ்   அந்தணர்தம்   அடியார்க்கு   அடியேன் '  என்று   ஈசன்   அடியெடுத்து   கொடுக்க    அத்தனை   பக்தர்களையும்   கண்டறிந்து    பட்டியலிட்டு   அத்தனை   பேருக்கும்   தான்   அடியேன்  என்று   தம்மை   அறிமுகப்படுத்திக்கொண்டு   அவர்   பாடிய   அப்பதிகமே   பிற்காலத்தில்   பெரிய   புராணமாக   விஸ்வரூபம்   எடுத்து   எல்லா   சிவாலயங்களிலும்   63 நாயன்மார்களும்   மூர்த்திகளாக   கொலு   வீற்றிருக்கிறார்கள் .       

Sunday 10 November 2019

சுந்தரர்   வேதனை   அடைந்து   தியானித்தார் .  ஐயனே   உன்   சொற்படி   மணிமுத்தாறில்   இட்டு   கமலாலயத்தில்   எடுத்துக்கொள்ள   நீதானே   ஆணையிட்டாய் .  இப்போது   கைவிட்டாயே !  என்று   கண்ணீர்   விட்டார் .  அவர்   உள்ளத்திலிருந்து   பதிகம்   பீரிட்டு வந்தது .அவர்   பாடி  முடிக்கும்  முன்பே   குளத்தின்   அடியிலிருந்து   பொற்கிழி   மேலே   வந்தது .  பரவையார்   ஒரு   காசை  எடுத்து   உரைத்தார்  .அது   மாற்று   குறைவாக   இருந்தது .  பதறி   போனார் . சுந்தரர்  மாற்று  உறைத்து   பார்த்துத்தானே  வாங்கினேன்   என்று   கலங்கி   போனார் .  பிறகு   ஐயன்   கருணையால்    மாற்று   குறையாத   பொன்னாயிற்று .  இருவரும்   ஆலயம்   சென்று   ஈசனை   வழிபட்டு   வீடு   திரும்பினர் .
சுந்தரர்   அரூரில்   வந்து   ஆரூர்   தியாகேசரை   மறுபடி   கண்ட   ஆனந்தம் . அவரை   தினம்   தொழுது   மகிழ்ந்து   வந்தார்  .  அப்போது   ஒரு   நாள்   பரவையாருக்கு   ஒரு   நாள்   பணம்   தேவைப்பட்டது .  சுந்தரரிடம்   தெரிவித்தாள் .   அதற்கு   சுந்தரர்   பழமலைநாதரிடமிருந்து   12ஆயிரம்   பொன்   பெற்று    மணிமுத்தாறில்   போட்டிருப்பதாக   கூறி   என்னுடன்   கமலாலயத்திற்கு   வந்தால்   எடுத்துக்கொள்ளலாம்   என்று   கூறினார் .  பரவையார்   அதிசயமடைந்தார் .  நம்ப   முடியவில்லை .  இருந்தும்   கிளம்பி   இருவரும்   ஆலயம் அடைந்து   வீதிவிடங்கரை   சேவித்து   கொண்டு   கமலாலயம்   வந்தடைந்தனர் .  வடகிழக்கு   கரையில்   பரவையாரை   நிறுத்தி   விட்டு   சுந்தரர்   குளத்தில்   இறங்கினார் .   பொன்னை   தேடலானார் .  தம்மை   அதட்டி   பொன்னை     பெற்ற   தம்பிரான்   தோழருடன்   ஐயன்   விளையாட   நினைத்தார் .  சுந்தரர்   குளத்தின்   தரை   எல்லாம்   தேடினார் .  சேறும்   சகதியும்   தான்   கிடைத்தது .  பொன்   கிடைக்கவில்லை .  பரவையார்   'ஆற்றில்   போட்டதை   குளத்தில்   தேடினால்   எப்படி'   என்று   பரிகாசித்தார் .   

Tuesday 5 November 2019

சுந்தரர்   கூடலை  ஆற்றுர்ஐயனை  மனமுருகி   தரிசனம்   செய்து   மகிழ்ந்து   முதுகுன்றம்   அடைந்தார் .  தம்பிரான்   தோழர்   அல்லவா?  உரிமையுடன்   அவரை    தமக்கு   பொன்   வேண்டுமென்று   கேட்டுக்கொண்டார் .   ஐயனும்   உடனே   பன்னிரெண்டாயிரம்   பொன்   கொடுத்தார் .    அதை   எவ்வாறு   ஆரூர்   எடுத்து   செல்வது   என்று   மேலும்   வினவ   அதை   மணிமுத்தாறில்    போட்டு   கமலாலயத்தில்   எடுத்துக்கொள்ளுமாறு   அருள்புரிந்தார் .   உடனே   சுந்தரரும்   அவ்வாறே   பன்னிரெண்டாயிரம்   பொன்னையும்   எம்பெருமானை   தியானித்து   மணிமுத்தாறில்    விட்டார் .   அங்கிருந்து   சுந்தரர்      தில்லை   வந்தடைந்தார் .  பேரூரில்   ஆல்டலரசனை   நடன   கோலத்தில்  கண்டு   மகிழ்ந்த   அதே   கோலத்தில்   மறுபடி   தில்லையில்   கண்டு   பேரானந்தம்   அடைந்தார் .   அவ்வூர்   வீதிகளில்   தொழுதபடி    நடந்து   அந்தணர்களையும்   தொழுது   அங்கிருந்து    கிளம்பி   பல   தலங்களை   சேவித்துக்கொண்டு    பல    பதிகங்கள்   பாடி   மனமகிழ்ந்து   ஐயனையும்   மனம்   குளிரச்செய்து   ஆரூர்   வந்து   சேர்ந்தார் .    

Saturday 2 November 2019

ஆற்றுர்   ஈசன்    தேனினும்   இனிதான   சுந்தரர்   பாடலை   கேட்க   ஒரு   வழி   செய்தார் .  பயணம்   தொடங்கிய   சுந்தரருக்கு   முதுகுன்றம்   செல்ல   பாதை   சரியா   என   சந்தேகம்   ஏற்பட்டது .  அதுவும்   ஆற்றுர்   ஈசனின்   விளையாடலே.  அவர்   ஒரு   கிழவன்   உரு   எடுத்துக்கொண்டு   அங்கு   சென்றார் .  சுந்தரர்   அவரை    பார்த்து   ஐயா    முதுகுன்றம்   செல்லும்   வழி   இதுதானே   என்று   வினவினார் .   முதியவர்   உருவில்   இருந்த   ஈசன்   'ஆற்றுர்   செல்ல   இதுதான்   வழி '  என்று   கூறி   சென்றார் .  சுந்தர அவருக்கு   காதில்    விழவில்லையோ   என்று   எண்ணி   திரும்பி    பார்த்தார் .  திடுக்கிட்ட   சுந்தரர்        கண்ணுக்கு   எட்டிய   வரை   அவரை   எங்கும்   காணாமல்   திகைத்தார்.   ஆற்றுர்   ஐயனே   தம்மை   தம்   கோயிலுக்கு   வழி   காட்டி    வ ர   செய்திருப்பதை   கண்டு   மெய்சிலிர்த்துப்போனார் .  அவருடைய   இச்செயலால்   பரவசமடைந்து   கூடலைஆற்றுர்     சென்று   'வடியுடை   மழுவேந்தி '   எனும்   பதிகம்   பாடி  துதித்தார் .   தன்னை   வரவழைக்க   முதியவராய்   வந்து   வழிகாட்டிய   ஐயன்   அன்பை   நினைந்து   நினைந்து   உருகினார் .