Monday 29 September 2014

marugal

சம்பந்தர்  யாத்திரியை  தொடர்ந்து  திருமருகல்  வந்து  சேர்ந்தார் . கோவிலில்  ஒரு  பெண்ணின்  தீனமான  அழுகுரல்  கேட்டு  மிகவும்  மனம்  வருந்தி  அதன்  காரணத்தை  வினவினார் . அந்த  பெண்  தன்  காதலனுடன்  திருமணம்  புரிந்துகொள்ள   கோவிலுக்கு  வந்ததாகவும்  வழியில்  காதலனை  பாம்பு  தீண்டி  அவன் இறந்ததாக  கேள்வியுற்று  சம்பந்தர்  மிகவும்  வருந்தினார் . அந்த  தலத்து  ஈசனை  வேண்டி  இத்தகைய  கொடுமை  உமக்கு  அழகா  என  வினவி  காதலனை  உயிர்ப்பிக்குமாறூ  வேண்டுகிறார் . ஈசனும்  மனமிரங்கி  விஷத்தை  நீக்கி  உயிர்ப்பிக்கிறார் . அந்த பதிகம்  வருமாறு ,
  சடையா  எனும்  மால்  சரணீயெனு   மால்
விடையா  எனும்  மால்  வெரு வாய்  விடும் மால் .

Friday 26 September 2014

vasitheerave

சம்பந்தர்  அப்பருடன்  பல  ஆலயங்களை  சேவித்துக்கொண்டு  திருவீழிமிழலை யை  அடைந்தனர் . அப்போது  அந்த  ஊரில்  கடும்  பஞ்சத்தால்  மக்கள்  பெரும்  துன்பத்திற்கு  ஆளானார்கள் . இவர்கள்  படும் வேதனை  கண்ட  இருவரும்  வீழிநாதர்   குடி இருக்கும்  இத்தலத்தில்  மக்கள்  இப்படி  அவதி  படுவது  நீதியோ  ஐயனை  துதித்து நெகிழ்ந்து  உருகி  வேண்ட  அவர்கள்  கனவில்  ஈசன்  தோன்றி  அவர்கள்  இருவருக்கும்  பஞ்சம்  தீரும்  வரை  இரு  கோபுர  வாயில்களிலும்  இரு  படிகாசுகள்  வைப்பதாகவும்  அதைக்கொண்டு  பண்டம்  வாங்கி  அன்னமிட்டு  மக்கள்  பசி  ஆற்றுமாறு  கட்டளை  இட்டார் . ஆனால்  சம்பந்தர்  பங்கு  காசு  கறையுள்ள  காசாக  இருந்ததால்   அவர்  தன கடமை  ஆற்ற  காலதாமதமாயிற்று . உடனே  சம்பந்தர்  ஈசனை  துதித்து  பாடி  கறை கொள்  காசினை  முறைமை  ஆக்க  வேண்டினார் . ஈசனும்  அவ்வாறே   செய்தார் . அப்பதிகம்
  வாசி  தீரவே  காசு  நல்குவீர்  மாசின் மிழலையீர் , ஏசலிஇல்லையே
 இறைவறாயினீர் .மறைகொள்  மிழலையீர்
 கறைகொள்  காசினை  முறைமையாக்குமே 

Monday 22 September 2014

avvinai

அவ்வினைக்கிவ்வினை  யாமென்று  சொல்லும்  அக்தறி வீர்
உய்வினை  நாடாதிறுப்பது  முந்தமக்  கூனமன்றே
சம்பந்தர் கொடிமாடச்சென்குன்றூர்  சென்றபோது  அங்கு  அனைவரும்  குளிர் காய்ச்சலில்  அவதி  படுவதைக்  கண்டு   இப்பதிகத்தால்  ஐயனை  துதித்து  பாடி அருளினார் .

Friday 19 September 2014

thiruneeru

பானடியனின்  துயரை  காண  சகியாத  மங்கரற்கரசியார்  ஞானசம்பந்தரை   வேண்டினாள் . சம்பந்தரும்   ஈசனின்  சம்மதம்  பெற்று  பாண்டியனை  குணப்படுத்த  விரைந்தார் .திருநீற்று  பதிகத்தை  பாடி  திருனீஎற்றை  அவர் மீது  பூசி  அவரை  குணப்படுத்தினார் . பாண்டியனும்  தன்  தவறை  உணர்ந்து  சிவ   பக்தனானான் . அப்பதிகம்
  மந்திர  மாவது  நீறு ;வானவர்  மேலது  நீறு
   சுந்தரமாவது  நீறு ; துதிக்க  படுவது  நீறு



.தேற்றி  தென்னனுடலுற்ற  தீப்பிணி  யாயின  தீரச்
சாற்றிய  பாடல்கள்  பத்தும்  வல்லவர்  நல்லவர்  தாமே  

Thursday 18 September 2014

thiruneeru

பாண்டிய  மன்னன்  சமணர்கள்  வாதத்தில்  மயங்கி  சைவர்களை  து ன்புருத்தலானான் . அவனுடைய  பட்டமகிஷி  மங்கையர்க்கரசி  பெரும்  சிவபக்தை .மந்திரி  குலச்சிறையாரும்  சிவபக்தர் .. அவர்கள்   வேண்டுகோளுக்கு  இறங்கி  ஞானசம்பந்தர்  மதுரை  எழுந்தருளுகிறார் . இதை   மன்னன் அறிந்து  சமணர்களின்  தூண்டுதலால்  அவர்  தங்கியிருந்த  மடத்தை   எரிக்க  ஆணை  இடுகிறார் . இதை  அறிந்த  சம்பந்தர்  அத்தீயை  பாண்டிய  மன்னன்    மீது  ஏவுகிறார் . அது  வெப்பு  நோயாக  மன்னனை    தாக்கியது .    

Wednesday 17 September 2014

idarinum

இடரினும்  தளாரினுமென துறு  நோய் 
தொடரினுமுன  கழல்  தொழுதெழுவேன்
கடல்தநிலமுதொடு  கலந்த  நஞ்சை
மிடற்றினில்  அடக்கிய  வேதியனே .
இவ்வாறு  அலைபுனல்  ஆவடுதுறை  அமர்ந்த  ஈசனை  பாடி   துதிக்க    சிவகண  தலைவன்  அங்கு  பலி  பீடத்தில்  உலவாக்கிழி  ஒன்றை  வைத்து  மறைகிறான் . உலவாக்கிழி  என்பது  சிவனார்  அருளிய  பணம் . எடுக்க  எடுக்க  குறையாதது .  

gnanasambandar

சம்பந்தரின்  பக்தி  இசைக்கு  நெகிழ்ந்து  உருகிய  ஈசன்  ஆடிய திருவிளையாடல்கள்  ஆச்சர்யமானவை .அதில்  மறைந்த  இருவரை  உயிர்ப்பித்ததும்  அடங்கும் . சம்பந்தர்  ஈசனை  துதி பாடி  அடியார்களுடன்  சிவாலையங்களை  தொழுதபடி  திருவாவடுதுறை  வந்தார் . அங்கு  அவர்  வந்தபோது  அவருடைய  தந்தையார்  யாகம்  செய்ய  பொருள்  வேண்டி  சம்பதபெருமானை  நாட  அவரும்  மாசிலாம்ணீஈச்வரரை துதித்து  பாடுகிறார்.
     
 

Monday 1 September 2014

sambandar

கோவிலில்  3 வயது  சம்பந்தரை  குளக்கரையில்  விட்டுவிட்டு  தந்தை  குளிக்க  செல்கிறார் .குழந்தை  பசி  தாளாமல்  அழ  உமையன்னை  குழந்தைக்கு  பால்  ஊட்டுகிறாள் . அந்த  கணமே  குழந்தை  பாட  தொடங்குகிறது .
  தோடுடைய  செவியன்  விடையேறியோ ர்தூ வெண்மதி  சூடி
 காடுடைய  சுடலைப்பொடி  பூசியென்  உள்ளம்  கவர்  கள்வன்
என்று  தொடங்கி  பாடுகிறார் . எல்லோரையும்  ஆச்சர்ய  கடலில்  ஆழ்த்துகிறார் . தந்தையின்  ஆனந்தத்திற்கு  அளவே  இல்லை .பக்தி  ரசம்  பொங்கிய  இவர்  பாடல் களில்  மயங்கிய  ஈசன்  பிஞ்சு  கரங்கள்  நொககூடாதென்று  பொற்தாளம்  கொடுத்து  மகிழ்கிறார் . உமையன்னை  தாளத்திற்கு  ஓசை  கொடுத்து  குழந்தை  தாளம்  போட்டு  பாடுவதை  ரசிக்கிறாள் .