Thursday 31 May 2018

அப்பர்   மன  உறுத்தலுடன்   மடத்தின்  ஒரு   மூலையில்   படுத்து   உறங்கினார் .  பக்தனின்  மன   வருத்தத்தை   நீக்க   எண்ணிய   எம்பெருமான்   அவர்   கனவில்   தோன்றி   'அப்பரே   உமக்காக   காத்திருக்கிறேன் .  என்   பின்னே   தொடர்ந்து   திருவாய்மூர்   வாரும் .'  என்று   அழைத்தார் .  திடுக்கிட்டு   எழுந்த   நாவுக்கரசர்   வாயிலில்   இறைவன்   திருநீறு  பூசி     கழுத்தில்   மாலையுடன்   நிற்க   க  ண்டு   உள்ளம்   மகிழ்ச்சியில்   பொங்க   அவரை   தொடர்ந்தார் .  அவர்   வேகமாக   செல்ல   அவரை   பின்தொடர்ந்தார் .   அதற்குள்   சம்பந்தருக்கு   ஈசன்   சொல்படி  அப்பர் பெருமான்   திருவாய்மூர்   செல்வதை   அறிந்து   தன்   தொண்டர்களுடன்   அவரும்   சென்றார் .  அப்பர்   ஐயனை   பின்தொடர்ந்து   வேகமாக   சென்றும்   அவரால்    ஐயன்   வேகத்திற்கு   ஈடு   கொடுக்க   முடியவில்லை . ஈசன்   ஒரு   ஆலயத்தில்  சென்று   மறைந்தார் .      மனம்   வருந்தி   'எங்கே   என்னை   இருந்திடம்   தேடிக்கொண்டு '   பதிகத்தை   பாடினார் .  அப்போது   சம்பந்தரும்   தம்  அடியார்களுடன்   அங்கு    வந்தார்   . அவரை   கண்டதும்   அப்பர்   ஐயனே   மறைக்காட்டில்   உமது   சம்மதமின்றி   கதவை   திறந்து   விட்டேனா ?  இப்போது   கதவை   மூடிய   காழிப்பிள்ளையும்   வந்துள்ளார்   அவருக்காக   காட்சி   தர   கூடாதா'  என 'வேண்ட   ஈசன்   கதவை   திறந்து   இருவருக்கும்   காட்சி   அளித்தார் .  அப்போது   சம்பந்தர்   உங்கள்   வேண்டுகோளை   ஏற்று   ஐயன்   காட்சி   அளித்தார்   என்று   அப்பரை   கொண்டாடினார் .      

Thursday 17 May 2018

திருமறைக்காட்டில்   அப்பரடி கள்   கோயில்   கதவை   திறக்க    செய்து   மக்களுக்கு   மகிழ்ச்சி   அளித்த   பிறகு   அவருக்கு   கோயில் திறந்த   கதவை   திரும்ப   மூட   செய்தால்தான்   திறந்து    இரவில்   மூடி   வைத்து   மக்களுக்கு   பாதுகாப்பாக   இருக்குமென   சிந்தித்து   சம்பந்தப்பெருமானை   அழைத்து   கதவை   மூடச்செய்ய   பாடும்படி  வேண்டினார் .  அவரும்   பாட   ஒரு செய்யுள்   முடிந்ததும்   கதவுகள்   மூடி   கொண்டன .  மக்கள்   மகிழ்ச்சிக்கு   அளவில்லை.  அப்பரும்   சம்பந்தரும்   மடத்திற்கு   திரும்பினர் .   இரவு   நாவுக்கரசருக்கு   உறக்கம்   கொள்ளவில்லை .  தான்   பத்து   பாடல்கள்   பாடிய   பிறகு   அதுவும்  ' இரக்கம்   ஒன்றிலீர் ' என்று   பாடியதும்   திறந்த   கதவு   ஆளுடைப்பிள்ளையின்   ஒரு  பதிகத்திற்கே  மூடிக்கொண்டது,  அவருக்கு   பெருத்த   மனவேதனையை   கொடுத்தது .

Monday 14 May 2018

ஐயன்   திருவருளால்   வீழிமழலையில்   பஞ்சம்   நீங்கியது .  மழை   பொழிந்து   நீர்நிலைகள்   நிரம்பின.  மக்கள்   துன்பம்   நீங்கி   சகஜ   நிலை   அடைந்ததும்   அப்பரும்   சம்பந்தரும்   அவ்வூரை   விட்டு   கிளம்பி   ஆலயங்களை   தரிசிக்க   புறப்பட்டனர் .    திருமறைக்காட்டை   அடைந்தனர் மறைகள்  ஆதிகாலத்தில்     எம்பெருமானை   பூசித்து   தாளிட்ட   பிறகு   திறக்கப்படாமலேயே    முடிகிடந்தது .  அதனால்   மக்கள்   பக்கத்தில்   வேறு   ஒரு   வாயில்   வழியாகவே   சென்று   ஈசனை   பூ சித்து   வந்தனர் .  இதனை   கண்ட   சம்பந்தர்   அப்பர்பெருமானை   தாங்கள்   தான்   கோபுர   வாயிலை   திறக்க   செய்து   மக்கள்   துயரை   தீர்க்க   வழி   செய்ய   வேண்டுமென்று     வேண்டிக்கொண்டார் .  அப்பரும்   சம்மதித்து   பண்ணின்  நேர்   மொழியாள்   எனும்   பதிகம்   பாடினார் .  அவர்   பதிகம்   முழுவதும்   பாடி   முடித்ததும்   கதவுகள்   திறந்தன .  மக்கள்   மகிழ்ச்சி   வெள்ளத்தில்  மூழ்கினர் .  

Wednesday 2 May 2018

  திருவீழிமிழலையில்   அப்பரும்   சம்பந்தரும்   ஈசனை   மனமுருக   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தனர் .   அவ்வாறு   மகிழ்ந்து   இருக்கும்போது   அவ்வூரில்   பஞ்சம்  தோன்றியது .  நீர்நிலைகள்   வற்றி   மக்கள்   பெரும்   துன்பத்திற்கு    ஆளானார்கள்   அதை   கண்டு   இருவரும்   மிக   மனவேதனை   அடைந்தனர் . ஐயன்   அவர்கள்   கனவில்   தோன்றி   காலநிலை   மாற்றத்தால்   ஏற்பட்ட   இந்த   துன்பத்தை  கண்டு   கவலை   வேண்டாம் .    விமானத்தின்   கீழ்   தினமும்   கிழக்கிலும்   மேற்கிலும்   பொற்காசுகள்   வைக்கப்படும் .  அதைக்கொண்டு   பண்டங்கள்   வாங்கி   மக்களின்   பசி   தீருங்கள்.  என்று   கூறி   மறைந்தார் .  மறுநாள்   அங்கு   பொற்காசுகள்   இருப்பதை  கண்டு   மகிழ்ந்தனர் .  தண்டோரா   போட்டு   மக்களுக்கு   அறிவித்து   உணவு   வழங்க   திட்டமிட்டனர் .  அப்பர்   கடுமையாக   உழைத்து   உழவார   பணி   செய்து   ஐயனை   மகிழ்வித்தார் .  சம்பந்தரோ   தன்   பக்தியாலும்  பாடல்களாலும்   மட்டுமே   ஈசனை   மகிழ்வித்தார் .  ஆதலால்   அவர்     வாசியோடு   கூடிய   காசு   பெற்றார் .  ஆகையால்   அக்காசை   மாற்றி   பொருள்   வாங்க   அதிக   நேரம்   பிடித்தது .  ஈசனிடம்   வேண்டி   வாசியில்லாத   காசு   பெற்று   தன்   தொண்டை   சரிவர   நிறைவேற்றினார் .  அவ்வூர்   நிலைமை   சீர்   அடைந்தது .