Sunday 21 April 2013

மாணிக்கவாசகருக்காக  ஈசன்  நரியை  பரியாக்கி , பின் பரியை  நரியாக்கி , இன்னும்  பல நாடகங்களை   ஆடி  தானே  அவருக்கு  குருவாக  இருந்து  அவரை   பாட வைக்கிறார் . அவரும்  நெஞ்சு  உருகி  பாடிய  திருவாசகம்  எவர்  உள்ளத்தையும்  கரைக்க  வல்லது . இதை  முன்பே குறிப்பிட்டுள்ளேன் . இன்றும்  பெரிய  சிவன்  கோயில்களில்  ஈசன்  தீபாராதனை  முடிந்ததும்  பஞ்ச புராணம்  பாடப்படும் . அதில்  மூவர் தேவாரம் , திருவாசகம் ,திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு  மற்றும்  பெரியபுராணம்  இவை  ஈசன்  மனம் குளிர  பாடப்படும் . ஆக  தமிழ் இசைக்காக   ஆடவல்லான்  ஆடிய  நாடகங்கள்  கணக்கில்  அடங்கா .
 தமிழிசை  என்றாலே  எல்லோருக்கும்  இனிப்பது  அருணகிரியாரின்  திருப்புகழ் .தமிழ்  கடவுளாம்  ஆறுமுகன்  பாட திறனற்ற  அருணகிரியாரை 'முத்தைத்தரு ' என்று  அடி  எடுத்து  கொடுத்து  பாட வைக்கிறான் . அவரும்  ஆயிரக்கணக்கில்  பாடல்  தந்து  மகிழ்கிறார் .திருப்புகழ்  கேட்க  விரும்பாத  தமிழர்களை  காண்பது  அரிது . ராமலிங்கரின்  திருஅருட்பா  மற்றும்  ஓர்  அரிய  நூல்