Tuesday 18 June 2013

தமிழிசை  அங்கீகாரத்திற்கு  சா ன்றாக கர்னாடக   சங்கீதத்திற்கு,   சென்னையில    ச ங்கீத  அகாடமியின்  மிக  பெரிய  விருதான  சங்கீத  கலாநிதி  விருது  சில ஆண்டுகளுக்கு  முன்  தேவார விற்பன்னர்  தருபுரம்  சுவாமிநாதன்  அவர்களுக்கு  வழங்கப்பட்டது . 

Friday 7 June 2013

இவ்வாறு  பக்திஇசை யாக  துவங்கிய  தமிழிசை  இன்று  பக்தி  பாடல்கள்  மற்றும்  மக்கள்  மனதிற்கு  இதம்  அளிக்கும்  பாடல்கள்
என  பல  பரிமாணங்களில்  வளர்ந்து   நிற்கின்.றன.தமிழில்  ராமாயண  பாடல்கள் , நந்தனார்  பாடல்கள் கிருஷ்ணகா னம் இவை  திகட்டாத  பாடல்கள் . ,,,  
தமிழ்  பாடல்கள்  பாடல்கள்  இயற்றப்பட்டாலும்  சபை கச்சேரிகளில்  அரங்கேற  முக்கிய  பங்காற்றியவர்  ராஜா  முத்தையா  செட்டியார்  ஆவார் .சிதம்பரம்  அண்ணாமலை
சர்வகலாசாலையில்  தமிழிசைக்கென  ஒரு  தனி  கல்லூரி  அமைத்தார் .பெரிய தமிழிசை  புலவர்கள்  தலைமை  தாங்கசெய்தார்  .
பண் ஆராய்ச்சி  செய்ய  வகை  செய்தார் . மேடையில்  தமிழ்  பாடல்கள்  பாடப்படுவதை  சில  வித்வான்கள்  எதிர்ப்பு  தெரிவித்தனர் . அதனால்  சென்னையில்  தமிழ் சங்கம்  துவக்கி
அஙகு  ஆராய்ச்சிக்கும் , விவாதங்களுக்கும்  இடமளித்தார் . பெரிய  அரங்கம்  அமைத்து  வருடம்  ஒருமுறை  10 நாட்கள்  தமிழிசை
 .கச்சேரிகள்  நடத்த  ஏற்பாடுகள்  செய்யப்பட்டன . இவ்வாறு  தமிழ் இசை  தொடங்கி  இப்போது  எல்லா  மேடைகளிலும்  தமிழ் பாடல்கள் முழங்குகின்றன .   

Thursday 6 June 2013

சென்ற  இரு  நூற்றாண்டுகளீல்  தமிழ் அறிஞர்களின்  பெரும்  முயற்ச்சியால்  தமிழிசை  மேலே  வர  தொடங்கியது .தமிழ்  கவிஞ்யர்கள்  தோன்றினர் . அவர்களில்  சிலர் .அருணாசல கவிராயர் , கவிகுஞ்சரபாரதி ,முத்துத்தாண்டவர் ,முத்தையா  பாகவதர் , ஊத்துக்காடு  வேங்கடசுப்பையர் , பாபநாசம்சிவன் ,கோபாலக்ருஷ்ண  பாரதியார் ,சுப்பிரமணிய பாரதி  . இவர்கள் பாடலில் பக்திரசமும் ,நாட்டியத்திற்கு  ஏற்ற
சாகித்யமும் இருந்தன .பக்தியும் ,பாமர மக்களும்  ரசிக்கும்  வண்ணமும்  இருந்தன . 
பக்தியால்  தமிழிசை  வளர்ந்த  காலத்திற்கு  சில நூற்றா ண்டுகள்
முன்பே தமிழ்  நாட்டில்  இசையும்  நாட்டிய  கலையும்  மிக  உன்னத  நிலையில் இருந்திருப்பதை  சிலப்பதிகாரம் , மணிமேகலை  போன்ற  நூல்களால்  அறியலாம் .மன்னர்கள்  பெரும்  ஆதரவு  தந்துள்ளனர்
  பக்தி யால்  இசை  வளர்ந்த  காலத்திற்கு  பிறகு சில நூற்றாண்டுகள்  முகலாயர்  ஆட்சியிலும்  பின்பு  விஜயநகர  ஆட்சி  காலத்திலும்  ஹிந்துஸ்தான்  இசையும்  தெலுங்கு  இசையும்  முதன்மை  பெற  தமிழிசை  பின்னுக்கு 
தள்ளப்பட்டது ..   

Sunday 2 June 2013


ஒன்றே  குலம்  ஒருவனே  தேவன்  என்ற  கருத்தினைத்தான்
திருமந்திரம்  முதல்  பாட்டே  ஓதுகிறது .எல்லா  உயிர்களிலும்
நீக்கமற  நிறை ந்து இருப்பது  'சிவம் ' என்று  ஓதுகிறது . அன்பே
சிவம்  என்பது  திருமூலர்  வாக்கு .' சாத்திரம்  பல  பேசும்  சழக்க-
ர்காள்  கோத்திரமும்  குலமும்  கொண்டு  என்  செய்வீர்/?'
என்று  வினவுகிறார்  அப்பர் பெருமான் '". பாத்திரம்  சிவம்  என்று
பணிந்தால் மாத்திரைக்குள்  அருள்வார் "என்கிறார் .ஜாதி  இரண்டு
ஒழிய  வேறில்லை  என்கிறாள்  ஔவை  பிராட்டி . இவ்வாறு  சமூக  ஏற்ற  தாழ்வை  கண்டித்து  பக்தியுடன்  கலந்த  பாக்கள்
ஈசன் முன்  பாடப்பட்டு  பல  ஆயிரம்  மக்களால்  கேட்கப்பட்டன .இன்னும்  எத்தனையோ  சமூகநல  கருத்துகளும்
பக்தியுடன்  கலந்து  பாடப்பட்டன . இவ்வாறு  தமிழிசை  பல  பரிமா
ணங்களில்  திகழ்ந்து  இன்று வரை  நிலை  பெற்று  இருக்கிறது .
 .     "