Saturday 30 May 2015

thinkaL

சுந்தரர்  பாடல்கள்  அழ்ந்த  பக்தியுடன்  பாடப்பட்ட பாடல்கள்  என்பதில்  ஐயமில்லை , ஆனால்  சில    தோழமையால்  அதிக  சலுகை     எடுத்து  கொண்டு   விட்டாரோ  என்று  தோன்ற  வைக்கும்  பாடல்களும்  உண்டு .
 திங்கள்  தங்கு  சடைகள்  மேலோர்   திரைகள்  வந்து  புரள  வீசும்
கங்கையாளேல்  வாய்  திறவாள் ; கணபதியே ல்  வயிறூதாரி ;
அங்கை  வேலோன்  குமரன்  பிள்ளை ;  தேவியார்கோ ற்  றட்டி யாளார்
உங்களுக்காட்  செய்ய  மாட்டோம்  ஓணகாந்தன் றளீயுளீ ரே |
இந்த  பாடல்  சுந்தரர்  நிதி  வேண்டி  பாடிய  பாடல்  என்பது  குறிப்பிட  வேண்டும் .  

Thursday 28 May 2015

kachchur

முதுவாய்   ஓரி கதற  முதுகாட்டெரி  கொண்டாடல்  முயல்வானே
மதுவார்  கொன்றை புதுவீசூடும் மலையான்  மகள்  தன்  மணவாளா 
   கதுவாய்  தலையிற்  பலி  நீ  கொள கண்டால்  அடியார்  கவலாரே 
   அதுவே  ஆமாறிதுவோ  கச்சூர்  ஆலக்கோயில்  அம்மானே |
   சுந்தரர்  பரிவாங்களுடன்  திருக்கச்சூர்  அடைந்த  போது  பசி  மிகுதியால்  களைத்திருந்தனர் . அவர்கள்  பசியை  போக்க  ஈசன்  அந்தணர்  உருவில்  வந்து  அங்குள்ள  வீடுகளில்  பிக்ஷை  வாங்கி  அவர்களுக்கு  அன்னமிட்டு  மறைந்து  போனார் . வந்தது  ஈசன்  என்பதை  உணர்ந்த  சுந்தரர்  மெய்  சிலிர்த்து  பாடிய  பாடலே  இந்த  பாடல் .       

Monday 25 May 2015

paduvar

பாடுவார்  பசி  தீர்ப்பாய்  பரவுவார்  பிணி  களைவாய் |ஓடு  நன்  கலனாக  உண்பலிக்கு உழல்வாரே
காடு  நல்லிடமாக  கடுவிருள்  நடமாடும்   , வேடனே குருகாவூர்  வெள்ளடை  நீயன்றே ||

 சுந்தரர்  சம்பந்தர்  பிறந்த  தலமாகிய  சீர்காழி யை  தரிசித்து  வந்ததும்  அவரும் அடியார்களும் மிகுந்த  களைப்புடன்  திருகுருகாவூர்  வந்தடைகின்றனர் . அங்கு  ஒரு முதியவர்  ஒரு  பந்தலில்  எல்லோரையும்  அமர  செய்து  அமுது  படைக்கிறார் . எல்லோரும்  உறங்கி  எழுந்த போது  அங்கு  பந்தல்  முதியவர்  காணப்படவில்லை . வந்து  அன்னம்  படைத்து  மறைந்தது  ஈசனே  என்று  உணர்ந்து  நெஞ்சு  உருகி  இப்பதிகம்  பாடுகிறார் .

Tuesday 19 May 2015


thirupungur

வையகமுற்றும்  மாமழை  மறந்து  வயலில்  நீரிலை  மாநிலந்தருகோம் ,
உய்யக்கொள்க  மற்றெங்களை  என்ன  ஒலி கொள் ,வெண்முகிலாய்  பரந்தெங்கும்
பெய்யுமாமழை  பெருவெள்ளம்  தவிர்த்து  பெயர்த்தும்  பன்னிரு  வெலிகொண்டருளூம்

செ ய்கை  கண்டு நின்  திருவடி  அடைந்தேன்  செழும்  பொழில்  திருபுன்கூர்  உளானே |
   சுந்தரர்  தன்  தல  யாத்திரையில்  ஒரு  முறை  திருப்புன்கூர்  வருகிறார் . அப்போது  அங்கு  மழை  இல்லாமல்  ஊர்  வறண்டு  மக்கள்  பெரும்  துன்பத்திற்கு  ஆளாயிருந்தனர் . சுந்தரரை  மக்கள் 
சரணடைந்தனர் . சுந்தரர்  அவர்களை  திருப்புன்கூர்  ஈசனுக்கு  12 வேலி  நிலம்  வழங்க  கேட்டுகொண்டார் . அவர்களும்  சம்மதித்தனர் .சுந்தரர்  பாட  மழை  பொழிந்தது . ஆனால்  மழை  நீடித்து  வெள்ளம்  பெருக  மக்கள்   மறுபடி  சுந்தரரை  அணுகினர் . மேலும்  12 வேலி  நிலம்  ஈசனுக்கு  வழங்க  கோரிக்கை  வைத்தார் . மக்களும்  சம்மதிக்க  பதிகம்  பாடி  மழை  நிறுத்தினார் .சுந்தரர்  பாடி பெறுவது யாவும்  ஈசனுக்காகவே . 

Friday 15 May 2015

padal

சுந்தரரின்  முதல்  பாடல் .
   பித்தா  பிறை  சூடி  பெருமானே  அருளாளா | எத்தான்  மறவாதே  நினைக்கின்றேன்  மனத்துன்னை |
 வைத்தாய் பெண்ணை  தென்பால்  வெண்ணை  நல்லூர்  அருட்றுறையுள் |அத்தா  உனக்கு   ஆளாயினி
                                                                                                                            அல்லேன்  எனலாமே |
அவருடைய  மிக  முக்கியமான  அவர்  பிறவி  நோக்கம்  நிறைவே ற்றப்பட்ட  பாடலும்  த்யாகேசரால்   அடியெடுத்து  கொடுக்கப்பட்ட  பதிகமே . அது வே  'தில்லை  வாழ் அந்தணர்  தம்   அடியார்க்கு  அடியேன் ' ஆகும் .  
          

Thursday 14 May 2015

padal

இனி  சுந்தரரின்  பாடல்களை  நோக்குவோம் . முதல்  பாடல்  ஈசனே  அடியெடுத்து  கொடுத்து  பாட  வைக்கிறார் .  முதியவராக  தோன்றி  சுந்தரரின்  திருமணத்தை  நிறுத்தி  அவரை  ஆட்கொள்ள  வந்த  ஈசனை  அடையாளம்  கண்டுகொள்ள  முடியாததால்  சுந்தரர்  அவரை   பித்தா ,பேயா  என்றெல்லாம்  ஏசுகிறார் . அவரை  ஆட்கொண்ட  ஈசன்  ,சுந்தரரை  பாட  சொல்ல  சுந்தரர்  என்ன  பாடுவது  என்று  தெரியாமல்  விழித்தபோது  ஐயனே  'பித்தா' என்று  அடியெடுத்து  கொடுத்து  பாட  சொல்கிறார் . திருவெண்ணை நல்லூரில்  பாடும்  அப்பாடல்  அவருடைய  முதல்  பாடலாகும் .

Monday 11 May 2015

இதுவரை  சுந்தரர்  வரலாறு  கண்டோம் .சுந்தரர்  பக்தி  மிக  உயர்ததானாலும்  ஈசன்  அவர்  மீது  காட்டிய  பரிவு  நம்மை  அதிசயிக்க  வைக்கிறது . சுந்தரர்  பசியோடு  வந்தபோது  சிறு  அந்தணர்  உருவில்   அங்குள்ள  அந்தணர்  வீடுகளில்  உஞ்சவ்ருத்தி  செய்து  அவருக்கு  உணவு  படைத்த  விந்தையை  என்ன  சொல்ல ? ஸ்ரீமன்  நாராயணானாலும்  காணமுடியாததும் ,அண்ட  சராசரங்களையும்  ஆட்டுவிக்கும்  நடனமாடும்  பாதங்களால்  திருவாரூர்  வீதிகளில்  சுந்தரருக்காக  தூது  நடந்த  விந்தை  தான்  என்னவென்று  சொல்வது ? ஈசனின்  கருணைக்கு  எல்லை  ஏது ? சுந்தரும்  இரண்டு  பெண்களை  மணந்து  இல்லறம்  நடத்துபவரும்  ஈசன்மேல்  அளவு  கடந்த  பக்தி  செலுத்த  முடியும்  என்று  உணர்த்துகிறார் .அதேபோல்  ஈசனும்  தனக்கு  எத்தனை  அன்பனானாலும்  தவறு  செய்தால்  தண்டனை  நிச்சயம்  என்பதை  உணர்த்த  சுந்தரர்  செய்த  சத்தியத்தை  மீறியதும்  கண்களை   பறிக்கிறார் . இதனால்  சுந்தரர்  வரலாறு  பெரிய புராணத்தில்  அதிக  முக்கியத்துவம்  பெறுகிறது . அவர்  39000 பதிகங்கள்  பாடியதாக  சொல்லப்பட்டாலும்  நமக்கு  கிடைத்தவை  1000 பதிகங்களே . 

Thursday 7 May 2015

ஏயர்கோன்  கலிகாமர்  சுந்தரர்  பெருமையை  உணர்கிறார் . இருவரும்  சிறந்த  நண்பர்கள்  ஆகின்றனர் .இவ்வாறு   சுந்தரர்  தம்மை  வெறுப்பவரையும்  ஈசன் அருளால்  தோழராக்கி  கொள்கிறார் சுந்தரர்   வரலாற்றை  படிக்கும்போது  இன்று  சிவாலயங்களில்  63 நாயன்மார் களாக  கொலுவிருக்கும்  பக்தர்களில்  6 நாயன்மார்களையும்  அறிகிறோம் .அவர்கள்  சுந்தரரின்  பெ ற்றொர்கள்  சடையனார்  மற்றும்  இசைஞானியார் , அவரை  வளர்த்த  தந்தையான  நரசிங்க  முனையரையர் ,விறன்மிண்ட  நாயனார்   மேலும்  ஏயர்கோன்  கலிக்காம  நாயனார்  மேலும்  சேரமானார்  பெருமான்    ஆ வர்கள் .

Wednesday 6 May 2015

cont2

 சுந்தரர்  கலிகாமனார்  வீட்டை  அடைகிறார் . பண்பு  மிக்க  அவர்  மனைவி  பெரும்  சிவ  பக்தரான  அவரை  உபசரிப்பதே  கடமை  என்று  கணவன்  மறைந்ததை  மறைத்து  சுந்தரரை  வரவேற்கிறாள் . சுந்தரர்  கலிகாமரை  காண  வெண்டும்  என்று  வலியுருத்தையதால்  வேறு  வழியின்றி  நடந்த  உண்மையை  கூருகிறாள் .  மனம்  மிக நொந்த  சுந்தரர்  தானும்  வாழ  விரும்பாமல்  தன்னை  மாய்த்துக்கொள்ள  முனைகிறார் . அப்போது  ஈசன்  கலிகாமரை  பிழைக்க  வைத்து  அவராலேயே  சுந்தரரை  அப்பாவ  காரியத்தை   செய்யாது  தடுக்கிறார் .       

Tuesday 5 May 2015

cont

இருவரும்  சொல்லொணா  வருத்தத்தில்  ஆழ்ந்தனர் . சுந்தரர்  மீது  அவர்களுக்கு  ஏற்பட்ட  ஆத்திரம்  தணிவதாக  இல்லை . ஈசன்  இவர்களுக்கு  சுந்தரரின்  உண்மை  பக்தியை  உணர்த்த  முற்பட்டார் . ஏயர்கோன்  கலிக்கமருக்கு  கடும்  சூலை  நோயை  கொடுத்து  அவர் கனவில்  அந்நோயை  சுந்தரரால்  மட்டுமே  தீர்க்க  இயலும்  என்று  உரைக்கிறார் . ஆனால்  கலி காமனார்  சுந்தரரால்  குணமாவதை  விட  தன்னை  மாய்த்து  கொள்வதே  மேல்  என்று  எண்ணி  கத்தியால்  தன்னை  தானே  மாய்த்துகொள்கிறார் . ஈசன் சுந்தரரை  அவரை   குணப்படுத்த சொல்லி  அனுப்ப  சுந்தரரும்  அவ்வாறே  செல்கிறார் . 

yeyarkon

ஏயர்கோன் கலிகாமன்   எனும்  மற்றொரு  சிறந்த  சிவதொண்டர்  திர்புன்கூர் எனும் இடத்தில்  வாழ்ந்து   வந்தார் . அவரும் அவர்  மனைவியும்  சிவபெருமானிடத்தில்  பெரும்  பக்தி  கொண்டவர்கள் . சுந்தரருக்காக  ஈசன்  திருவாரூர்  வீதியில்  நடந்து  பரவையார்  வீட்டிற்கு  தூது  சென்றதை  கேள்வியுற்று  பெரும்  அதிர்ச்சி  அடைந்தனர் . சுந்தரர்  மீது  அளவு  கடந்த  ஆத்திரம்  அடைந்தனர் . ஈசன்  மீதும்  கோபம்  கொண்டனர்   

Saturday 2 May 2015

viranmindar

சுந்தரரை  பேசும்போது   இன்னும்  இரண்டு  நாயன்மார்களை  சொல்ல  வேண்டியது  அவசியம் . ஒன்று   விரன்மிண்ட  நாயனார் . சேர  நாட்டில்  இன்று  திருச்செங்கோடு  என்று  அழைக்கப்படும்  இடத்தில்  பிறந்தவர்  விரன்மிண்டர் . அவர்  சிறந்த  சிவபக்தர்  . சிவன்  அடியார்களை   மிகவும்  பக்தியுடன்  போற்றுபவர் . அவர்  பல  சிவ  தல ங்களை  சேவித்து  விட்டு  திருவாரூர்  வந்து  சேர்ந்தார் . அங்கு  சிவடியார்கள்  எல்லோரும்  சேர்ந்து  ஒரு  கூடத்தில்  சிவ  த்யானத்தில்  இருந்தனர் . அப்போது  சுந்தரர்  இவர்கள்  யாரையும்  கவனியாமல்  நேராக  ஈசன்  சன்னதிக்கு  சென்றார் . சிவனடியார்களை  வணங்காமல்  சென்ற  சுந்தரரை  கண்டு  மிக  கோபம்    கொண்ட  விரன்மிண்டர்   சுந்தரரையும்  அவரை  ஏற்று  கொண்ட  ஈசனையும்  கடுமையாக  ஏசுகிறார் . அதிர்ச்சி  அடைந்த  சுந்தரர்  ஈசனிடம்  மிக  வருத்தத்துடன்  முறையிடுகிறார் . ஈசன்  சுந்தரரை  சமாதானம்  செய்து  ''தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு  அடியேன் '' என்று  அடியெடுத்து  கொடுத்து  சிவனடியார்கள்  பெருமையை   பாடும்படி  ஆணை  இடுகிறார் . சுந்தரரும்  அவ்வாறே  ஆரம்பித்து  சிவத்தொண்டர்கள்  பெருமையை பாடுகிறார் . அதுவே  ''திருத்தொண்டர்  தொகை '' என்று  பெருமை  பெறுகிறது . அவர்  பாடும்போது  உள்ளே  நுழைந்த  விறன்மிண்டர் ''விரிபொழில்  சூழ்  குன்றையார்  விரன்மிண்டற்கு  அடியேன் '' என்ற  வரிகளை  கேட்டு  மெய்  சிலிர்த்து  சுந்தரர்  காலடியில்  வீழ்கிறார் . மன்னிப்பும்  கேட்கிறார் . அவரும்  சுந்தரர்  தோழறாகிறார் . இவ்வாறு  விறன்மிண்டர்  இந்த  பொக்கிஷம்  நமக்கு  கிடைக்க  ஒரு  மறைமுக  காரணமாகிறார் .
  

Friday 1 May 2015

kailaayam

கோயில்  வாயிலில்  இந்திராதி  தேவர்கள்  யானையுடன்  சுந்தரரை  வரவேற்க  காத்திருப்பதை  கண்டு  மெய்  சிலிர்க்கிறார் . சுந்தரரை  எப்போதும்  பின்  தொடர்வேன்  என்று  சத்தியம்  செய்த  சேரமானும்  ஓடி  வருகிறார் . தான்  இப்போதும்  சத்தியத்தை  மீறாமல்  தன்  குதிரையின்  காதில்  பஞ்சா க்ஷரத்தை  ஓதி  சுந்தரரை  பின்  தொடர  செய்கிறார் .இவ்வாறு  இருவரும்  சேர்ந்து  கைலாயம்  செல்கின்றனர் .
  இதே  சமயத்தில்  பர வை நாச்சியார்  இனி  இவ்வுலகி ல்   இருக்க  விரும்பாமல்   சங்கிலி  நாச்சியாரை  சந்தித்து  தங்கள்  பிறவி  ரகசியத்தை  அவருக்கு  உணர்த்தி  தாமும்  கைலை  சேர  நேரம்  வந்து  விட்டதை  உணர்த்தி  ஈசனிடம்  இருவரும்  தாள்  பணிந்து  தங்களை  அழைத்து  கொள்ளுமாறு  மனமுருக  வேண்டுகின்றனர் . ஈசனும்  மனமிரங்கி  அவர்களையும்  அழைத்து  கொள்கிறார் .

seramaanaar2

சிறிது  காலம்  சென்றபின்  சுந்தரர்  சேரமானாரை  காணும்   ஆவலுடன்  சேரநாடு  செல்கிறார் .அங்கு  சில காலம்  தங்கியபின்  கைலாயம்  நினைவு  வர  அங்கு  செல்ல  அவர் மனம்  மிக ஆவல  கொள்கிறது .அவர் திருவஞ்சை களம்  சென்று  ஈசனிடம்  தன்  ஆவலை  பாடுகிறார் . ஈசன் அறியாதது  உண்டா ?