Sunday 31 July 2016

சேரமானார்  11 திருமுறையில்  169 முதல்  301 வரை உள்ள  பாடல்களை  பாடியுள்ளார் .  பொன்வண்ணத்தந்தாதி , திருவாரூர்  மும்மணிக்கோவை  மேலும்  கைலாய ஞான  உலா  ஆகும்.  சுந்தரரை  காண  திருவாருவர்  சென்ற  போது  ஈசன்  சன்னதியில்  பாடியது  மும்மணிக்கோவை . சுந்தரர்  ஐராவதம்  யானையில்  கைலை  செல்கையில்  அவரை  தொடர்ந்து  தன்  குதிரையின்  காதில்  பஞ்சாட்சரம்  ஓதி  தொடர்ந்து  கைலாயம்  சென்றது  அறிவோம்  . அப்போது  நொடியில்  கைலைநாதரை  துதித்து  அவர்  இயற்றி  பாடியது  கைலாய  ஞான  உலா . இவ்வாறு  நொடியில்  பாடல்  இயற்றி  பாடுபவரை  ஆசு  கவி  என்பர் . இவ்வாறு  பெருமைகள்  பெற்ற  இவரை  எவ்வாறு  போற்றுவது ? வார்த்தைகளே  இல்லை அவரது  குரு  பூஜை  ஆடி  மாதத்து  ஸ்வாதி  நக்ஷத்திரமாகும் .

Tuesday 26 July 2016

இந்த  திருமுறையின்  முதல்  பாடல்  ஈசனால் எழுதப்பட்ட  கடிதம்  என்றும்  அது  ஆலவாய்  ஈசன் சேரமான்  பெருமானுக்கு  எழுதியது  என்பதையும்  முன்பே  குறிப்பிட்டிருந்தோம் . அக்கடிதத்தை  கண்ட  சேரமான்  எத்தனை  இன்ப  அதிர்ச்சிக்கு  ஆளாயிருப்பார்   என்று  சொல்லத்தேவை  இல்லை . அவர்  இன்பத்தின்  எல்லைக்கே  சென்றுவிட்டார் . தனக்கு  சொந்தம்  என்று   உள்ள  அத்தனை  வஸ்த்துக்களையும்  மிக்க  மகிழ்ச்சியோடு  கொண்டு  நிரப்பி  விட்டார் . ஏழை  பரம  சிவ  பக்தனான  பாண பத்தர்  வாயடைத்து  நின்று  விட்டார் . அவர்  தனக்கு  தேவையான  ஒருசில  பொருட்களை  எடுத்துக்கொண்டு  நன்றி  சொல்லி  புறப்பட்டார் . ஆனால் சேரமான்  அவரை  தம் யானையில்.  ஏற்றி  வழி  அனுப்பி  வைத்தார்   

Sunday 24 July 2016

சேரமான்  பெருமானார்  சுந்தரரை  காண  பெரும் ஆவல் கொண்டவராய்   திருவாரூர்  சென்று  அவருடன்  நெருங்கி  பழகி  தம்பிரான்  தோழனான  அவர்  சேராமந்தோழன்  என  அழைக்கப்படும்  அளவுக்கு  அவருடன்  நெருக்கமானார் . அவருடனேயே  கைலாயமும்  சென்றார்  என்று  சுந்தரர்  வரலாறு  காணும்போது  அறிந்தோம் .

Saturday 23 July 2016

சிறந்த  ஆடலரசன்  பக்தரான சேரமானுக்கு   பூஜை  முடித்ததும்  அவரின்  சலங்கை  ஒலி  கேட்கும் . அவர்  பரவசமடைவார் . ஒரு  நாள்  அதை  கேட்காததால்  அவர்  மிகுந்த  அதிர்ச்சி  அடைந்து  தன்னை  தானே  மாய்த்துக்கொள்ள  முனைந்தார் . கருணைக்கடலான  ஈசன்  அவரை  தடுத்து  தான்  சுந்தரருடைய  பாடல் கேட்டதால்  அதில்  மயங்கி  காலதாமதம்  செய்துவிட்டதாக  கூறுகிறார் . ஈசன்  உள்ளத்தில்  அவர்கள்  இருவரையும்  சந்திக்க  வைக்கும்  ஆவல் உண்டாயிற்று .

Tuesday 19 July 2016

ஒருநாள்  சேரமான்  பட்டத்து  யானை  மேல்  சென்று  கொண்டிருந்த  போது  ஒரு சலவை  தொழிலாளி  வந்து  கொண்டிருந்தான் . அவன்  உடலெல்லாம்  சுண்ணாம்பு  நீரால்  வெளுத்து  காணப்பட்டது . சேரமான்  அதை  திருநீறு  என்று  எண்ணிக்கொண்டு  யானையை  விட்டு  இறங்கி  அவன்  காலடியில்  விழுந்தான் . திகைப்படைந்த  தொழிலாளி  தான்  சாதாரண  சலவை  தொழிலாளி  என்று  வற்புறுத்தியும்  அரசன்  காதில்  அது  விழவே  இல்லை .அவனுடைய  பக்தியின்  ஆழம்  வியக்கத்தக்கது .

Monday 11 July 2016

நாம்  முன்பே  சுந்தரர்  வாழ்க்கை  வாழலாற்றில்  இவரை  சந்தித்திருக்கிறோம் . இவருடைய  பெருமையும்  அறிந்திருக்கிறோம் .சுந்தரர் 'சேரமான் தோழன் '  என  அழைக்கப்பெற்றிருப்பதை  கண்டோம் . இவருக்கு  பூஜை  முடித்ததும்  ஈசனின்  நடனத்தின்  சிலம்பொலி  தினமும்  இவர்  காதில்  கேட்க்கும்  என்றும்  அறிவோம் . எல்லாவற்றிர்க்கும்  மேலாக  இந்த  திருமுறையின்  முதல்  பதிகத்தில்  ஈசனே  தன்  கைப்பட  இவர்க்கு  ஓலை    எழுதி  இருப்பதையும்  கண்டோம் .  இவர்  சுந்தரருடன்  சேர்ந்து  கைலாயம்  சென்றதையும்  கண்டோம் . இத்தகைய  பெருமை  வாய்ந்த  இவரை  பற்றி  அறிந்து  கொள்வது  நமக்கு  பெரும்  பாக்கியமே .

Saturday 9 July 2016

அடுத்து  169 முதல்  301  உள்ள  பாடல்களை  பாடியவர்  சேரமான்  பெருமானார்  ஆவர் . சேரநாட்டில்  திருவஞ்சைக்களம்  என்னும்  ஊரை  தலைநகராக  கொண்ட  ராஜ்ஜியத்தை  ஆண்டவர் .அவர்  தந்தையும்  சிறந்த  சிவபக்தர் . சிவத்தொண்டு  செய்ய  விரும்பிய  அவர்  ராஜ்ஜிய  பொறுப்பை  மகனிடம்  ஒப்படைத்து விட்டு  யாத்திரை  செல்ல  விரும்பினார் . ஆனால்  சேரமான்  பெருமானார் அதை  தன்  சிவ  தொண்டிற்கு  இடையூறாக  கருதினார் .  ஈசனை  துதித்து  தன்  மன  கவலையை  கூறினார் . ஈசன்  அவருக்கு  ஆசி  கூறி  அவருக்கு  எல்லோருடைய  மனதையும்  அறியும்  ஆற்றலையும்  வழங்கினார் , செவ்வனே  ஆட்சி  புரிய  ஆசி  கூறினார் . இதன்  காரணமாக  இவர்க்கு  கழற்றறிவார்  எனும்  பெயரும்  உண்டாயிற்று . அவர்  அரச  பொறுப்பையும்  ஏற்றார் . 

Wednesday 6 July 2016

11 திருமுறையின்  அடுத்த  24 வெண்பாக்களை  பாடியவர்  ஐயடிகள்  காடவர்கோன்  நாயனார் ஆவார் . அவர்  பல்லவ  மன்னர்  பரம்பரையை  சேர்ந்தவர்  காஞ்சியை  தலைநகராக  கொண்டு  ஆட்சி  செய்தவர் . சிறந்த  சிவபக்தர் . வேத  சாஸ்த்திரங்களை  நன்கு  கற்றுணர்ந் தவர் . பல்லவ  சாம்ராஜ்யத்தை  பெருக்கி  சிறந்த  முறையில்  ஆட்சி  செய்து  வந்தவர் .அவர்  ஆட்சியில்  மக்கள்  மட்டுமின்றி  எல்லா  ஜீவன்களும்  மிக  ஆனந்தமாக  வாழ்ந்தனர் . ஆனால்  அவர்  மனம்  மட்டும்  எப்போதும்  அந்த  அம்பல   கூத்தனை  நாடியவாறே  இருந்தது . ஆவலை  அடக்க  முடியாதவராய்  ராஜ்ஜிய  பாரத்தை  தன்  மகனிடம்  ஒப்படைத்து  விட்டு  சிவாலயங்களை  தரிசிக்க  பயணமானார் . தில்லை  கூத்தனிடம்  மனம்  பறிகொடுத்தவராய்  அவர்  மீது  பாடல்கள்  புனைந்தார் . மேலும்  பல  ஆலயங்களில்  ஐயனை  தரிசித்து  பாடல்கள்  பாடி  மனம்  மகிழ்ந்தார் . இவ்வாறு  சிவாலயங்களை  தரிசித்து  ஒரு  ஐப்பசி  மூலம்  நாளில்  இறைவன்  அடி  சேர்ந்தார் . 63 நாயன்மார்களில்  இவரும்  ஒருவர்  ஆவார் .