Saturday 29 February 2020

சேரநாட்டில்   சுந்தரர்   விருந்தினராக   இருந்த   போது   ஒருநாள்   திருவஞ்சைக்களம்   ஆலயம்   தொழ   சென்றார் .   அங்கு   ஐயனின்   கோலம்      கண்ட   அவருக்கு   மனம்   வாடி   போனது .   அவருக்கு    ஈசனை   பிரிந்து   வாழும்   வாழ்வு   கசந்தது .  மனம்   நொந்து   பிரார்த்தித்தார் .  ''ஐயா   இப்புவியில்   இன்னும்   எத்தனை   நாள்  வாழ   வேண்டும் ?  இந்த   சம்சார   பந்தத்திலிருந்து   என்னை   மீட்க   மாட்டியா ?  கரை   சேர்க்க   மாட்டாயா ?  என்னை   ஏற்றுக்கொள்ளுங்கள் .  என்று   மனமுருக   ''தலைக்கு   தலைமாலை   அணிந்ததென்னே ?  ''  என்று  பதிகம்   பாடி   கண்கலங்க   துதித்தார் .   உடனே   எம்பிரான்   மனமுருகி   போனார் .  ஆலால   சுந்தரர்   தன்னிடம்   வந்து   சேரும்   காலம்   நெருங்கி   விட்டதை   உணர்ந்தார் .  பிரமன்   மற்றும்    தேவர்களிடம்   ஆரூரனை   அழைத்து    வர   வெள்ளை   யானையை   அனுப்புமாறு   கேட்டுக்கொண்டார் .   ஈசன்    வேண்டுகோளை   செவிசாய்த்த    தேவர்கள்   வெள்ளை   யானையுடன்   அஞ்சைக்களம்    ஆலயத்தை   அடைந்தனர் .          

Friday 28 February 2020

சுந்தரர்   வரும்   செய்தி   கேட்ட    சேரமான்   எல்லை   இல்லா  மகிழ்ச்சி   அடைந்தார் .   அவருக்கு   அவர்   வரும்   வரை   காத்திருக்க   பொறுமை   இல்லை .  அவரை    வரவேற்க   அவர்   பாதி   வழி   சென்று   விட்டார் .  அவரை   கண்ட   சுந்தரருக்கும்   பெரும்    சந்தோஷம்   ஏற்பட்டது .   அவருடன்   தான்   சென்று   சேவித்த   அத்தனை    சிவபெருமான்   ஆலயங்களை   பற்றியும்   பேசி   மகிழ்ந்தார் .   அந்த   மலை   நாட்டில்   ஐயன்   குடி     கொண்டிருக்கும்   அத்தனை   க்ஷேத்திரங்களையும்    தரிசனம்   செய்து   கொண்டு   திரும்பினார்கள் .   சேரமான்   அரண்மனையில்   தங்கி    அவருடைய   உபசரிப்பில்   ஆனந்தமாக   நாட்கள்   சென்றன .   நண்பர்கள்   இன்பமாக    காலம்   கழித்தனர் .        

Tuesday 25 February 2020

மகனை   பறி   கொடுத்த   நிலையிலும்   தம்மை   வணங்க   வந்த   அவர்கள்   மீது    சுந்தரருக்கு   அளவிலா   பரிவு   ஏற்பட்டது .   அவர்களுக்கு    உதவ   எண்ணம்   கொண்டார் .   அவர்களிடம்   தங்கள்   மகனை   விழுங்கிய   முதலை    வாழும்    மடுவை   காண்பிக்க   முடியுமா ?  என்று   கேட்டார்    அவர்கள்    ஊருக்கு   வெளியே   உள்ள    மடுவிற்கு   அவரை   அழைத்து   சென்றனர் .    சுந்தரர்   அங்கு   எம்பெருமானை    மனமுருக   அச்சிறுவனை   பிழைக்க   வைக்குமாறு   வேண்டிக்கொண்டார் .   உயிர்   நண்பன்   மனம்   உருக   பிரார்த்தனை   செய்யும்போது    ஆண்டவன்   சகித்து   கொள்வாரா?   உடனே   எம்பிரான்   யமதர்மனை   வேண்ட   காலதேவன்   அங்கு   வந்து   முதலையை   கரைக்கு   வரவழைத்து       முதலையை    அது    விழுங்கிய    அச்சிறுவனை      கரையில்    உமிழுமாறு    ஆணையிட்டான்  .   அவ்வாறே          முதலையும்       கரையில்        சிறுவனை   உமிழ்ந்து    சென்றது .  அச்சிறுவன்   கடந்த   ஒரு   ஆண்டு      வளர்ச்சியும்    பெற்றிருந்தான் .   பெற்றோர்   ஆனந்தம்   சொல்லவும்    வேண்டுமா?   ஆனந்த   வெள்ளத்தில்   அவர்கள்   சுந்தரரை   வலம்   வந்து     நமஸ்கரித்தனர் .   எல்லோரும்   ஆலயம்       சென்று   ஐயனை   நன்றி    பெருக்கோடு   வணங்கி    ஊர்   திரும்பினர் .       

Monday 24 February 2020

சுந்தரரின்   பெருமை   உணர்ந்த   அவ்வூர்   மக்கள்   அவரை   கண்டு   ஆசி   பெற   திரண்டு   வந்தனர் .  சுந்தரர்    குழந்தை   பறி   கொடுத்த   தம்பதிகளின்   நிலையை   நினைந்து    பாகாய்   உருக    அவர்களை   காண   ஆவல்   கொண்டார் .   அந்த   தம்பதியர்   வந்து   அவரை   பணிந்து   நமஸ்கரித்தனர் .   சுந்தரர்   பரிவுடன்   அவர்களை   பிள்ளையை   பறி   கொடுத்த   தம்பதிகள்   தங்களான ?  என்று   வினவினார் .  அதற்க்கு    அவர்கள்   ''சுவாமி    அது   நடந்து   முடிந்த   விஷயம் .  இப்போது   நாங்கள்   வெகு      நாளாய்   தங்களை   தரிசிக்க   ஆவல்    கொண்டிருந்தோம் .  இப்போது   கிடைத்தது .  எங்களை   ஆசீர்வதியுங்கள்   என்றனர் .   அதற்கு   சுந்தரர்   அவர்களிடம்  அந்த   மடுவை   காண்பிக்க   முடியுமா ?  என்று   கேட்டார் .      
ஆரூர்   திரும்பிய   சில   நாட்களுக்கு   பிறகு   சுந்தரருக்கு   மறுபடியும்   நண்பர்      நினைவு   வந்து   மறுபடியும்   சேரமானை   காண   கிளம்பினார்.   போகும் வழியில்    திருப்புக்கொளியூர்   என்ற   ஊரை    அடைந்தார் .   அங்கு   அவர்   ஒரு   அதிசய   காட்சியை   கண்டார் .   அங்கு   ஒரு   வீட்டில்   மேளதாள   ஒலியுடன்   சந்தோஷ   ஆரவாரமும்   அடுத்த    ஒரு   வீட்டில்   அழுகை   குரல்களும்   கேட்ட.ன ..   அதிர்ச்சி    அடைந்த   சுந்தரர்   தம்மை   காண   வந்த   அடியார்களிடம்    இதன்   காரணம்   வினவினார் .   அதற்கு    அவர்கள்   சென்ற   வருடம்   இரு   சமவயது   சிறுவர்கள்   குளிப்பதற்கு  மடுவிற்கு    சென்றனர் .  அதில்   ஒரு    சிறுவனை   முதலை   விழுங்கி   விட்டதாகவும்   பிழைத்த   மற்ற   சிறுவனுக்கு   அன்று   உபநயனம்   நடப்பதாகவும்   அதன்   காரணமாக   அந்த   வீட்டில்    வேத   ஒலியும்   நாயன   ஒலியும்    மகிழ்ச்சியின்    ஆரவாரம்   கேட்பதாகவும்    முதலைக்கு   இரையான    சிறுவனின்   வீட்டில்   அழுகை   ஒலி   கேட்பதாகவும்    கூறினர் .   அதை      கேட்ட   சுந்தரரின்   மனம்   பாகாய்   உருகியது .   ஈசனுக்கு   மிக   அருமையான   பக்தன்  சுந்தரரின்   வருகை   கேட்ட   ஊர்   ஜனங்கள்   அவரை   காண   வந்தனர் .             

Friday 21 February 2020

சுந்தரர்   மனம்   நொந்து   ஈசனிடம்   அவ்வாறு   வினவியதும்   கொள்ளை   அடித்த   அவ்வேடர்கள்   கொள்ளை   அடித்த    அத்தனை   பொருள்களையும்  கொண்டு  வந்து   அந்த    சன்னதியிலேயே    தம்பிரான் தோழரிடம்    ஒப்படைப்பித்தனர் .   சுந்தரரும்   அடியார்களும்    அதிசயித்து    போனார்கள் .அப்போது         ஈசன்   ''அன்பனே    எப்போதும்   என்னிடம்   மட்டுமே   பொருள்   பெற்று   வந்த   நீ   இப்போதும்   என்கையாலேயே   அப்பொருள்களை    பெற   வேண்டுமென்ற      எண்ணத்தால்   யாமே   இவ்வாறு    செய்தோம் ''   என்று   திருவாய்   மலர்ந்து   அருளினார் .  சுந்தரர்   அதை    கேட்டு    மெய்சிலிர்த்து   போனார் .  ஐயனின்  அன்பு     அவரை   பெரும்    மகிழ்ச்சிக்கு   உள்ளாக்கியது .   அவைகளை   பெற்றுக்கொண்டு   ஆரூர்   திரும்பினார் .       

Thursday 20 February 2020

சுந்தரர்   அடையார்களுடன்    காட்டு   வழியாக   சோழநாடு   நோக்கி   பயணப்பட்டார் .   தன்னுடன்     சேரமான்    பரிசாக   அளித்த   பெரும்   பொருளையும்    சுந்தரர்   எடுத்து   சென்றார்  .  எம்பிரானுக்கு   தன்   அருமை   தோழன்    இத்தனை   காலம்   தன்னிடமிருந்து   மட்டுமே   பொருள்   பெற்று   வந்த   காரணத்தால்   வேறு   ஒருவரிடமிருந்து  அவரும்   தன்   பிரியமான   அடியான்   ஆனாலும்    பொன்னும்   மணியும்   பெறுவது    பொறுக்கவில்லை .   உடனே   சிவகணங்களை   வேடர்   உருவில்   சென்று   அப்பொருள்களை   கவர்ந்து   வருமாறு    ஆணையிட்டார் .  அவர்களும்   அவ்வாறே   அத்தனை    விலை   மதிப்பில்லாத   பொருள்களையும்   அவர்களிடமிருந்து   பறித்து   வந்தனர் .      அடியார்கள்    மிக்க   அதிர்ச்சி    அடைந்தனர் .  சுந்தரர்   வருந்தினாலும்   ஈசன்   இச்சை   எதுவோ   அதுதான்   நடக்கும் .   வருந்தி   ப யனில்லை  என்று    சமாதானம்   கூறினார் .     எல்லோரும்   திருமுருகன்பாண்டி   ஆலயம்   வந்து   சேர்ந்தனர் ..  சுந்தரர்   பதிகம்   பாடி        ஈசனை   தொழுதார் .  '' எம்பெருமானே   வனத்தில்   பொருள்களை   வேடுவர்கள்   கொள்ளை    அடிக்க   பார்த்தும்    காக்காமல்   இருந்தது   ஏனோ ?  என்று   நெகிழ்ந்து   வினவினார் .     

Monday 17 February 2020

சுந்தரர்   நண்பர்   உபசரிப்பில்   மெய்சிலிர்த்தார்  .  அவருடன்   சிலகாலம்   தங்கிவிட்டு   ஊர்   திரும்ப   நிச்சயம்   செய்தார் .  ஆனால்   சேரமான்   அவரை  பிரிய    மனமில்லாமல்   தானும்   உடன்   வருவதாக    கூறினார் .  ஆனால்   சம்பந்தர்   அரச   காரியங்களை   கவனிக்காமல்   அத்தனை  காலம்    இருப்பது   சரியல்ல .  அது   நாட்டுக்கும்   நன்மை   பயக்காது   என்று   அறிவுறை   கூறி   அவரை   தடுத்தார் .  சேரமான்   மனமில்லாமல்   சம்மதித்தார்   ஆனால்   ஏராளமான   பொன்னும்   மணியும்   வாரி   எடுத்து   கட்டி   யானை   மீது   ஏற்றி   இதை   மறுக்காமல்   ஏற்று   அடியார்கள்   சேவைக்கு   பயன்     படுத்த   வேண்டினார் .     சம்பந்தரும்   சம்மதித்து   பெற்று   கொண்டார். விடை   பெற்றுக்கொண்டு       சம்பந்தர்   காடு   மலைகளை   கடந்து   சோழ   நாடு          பயணப்பட்டார் .   திருமுருகன்பூண்டி   அடைய     தீர்மானித்திருந்தார் .   

Sunday 16 February 2020

சேரமான்   நாட்டு   மக்கள்   வெகு   நாட்கள்   பின்   நாடு   திரும்பும்   மன்னன்  அவருடைய   பெருமை   மிக்க   நண்பரும்   விருந்தாளியாக   வந்திப்பதையும்   கண்டு   பெரும்   மகிழ்ச்சியுடன்   கோலாகல   வரவேற்பு    அளிக்க   தயாரானார்கள் .   வீடுகள்தோரும்    தோரணங்கள்   மங்கள   வாத்தியங்கள்   மங்கள கோஷங்கள்   எல்லோரும்   புத்தாடைகள்   அணிந்து   ஆனந்தம்   பொங்க  எதிர்கொண்டு   அழைக்க    வந்தனர் .   சுந்தரர்   திருவஞ்சைக்கள   பெருமானை   வணங்கி   அரண்மனை   வந்தார் .  சேரமான்   தமது   சிம்மாசனத்தில்   அவரை   அமர   செய்து    மனைவியர்   நீர்   வார்க்க   தம்     கைகளால்    சுந்தரர்க்கு    பாத   பூஜை   செய்து  வரவேற்றார்.         

Thursday 13 February 2020

சுந்தரர்   சேரமானை    நோக்கி   ஆடவல்லான்   இவ்வற்புதத்தை   நிகழ்த்தியது   அவருக்காகவே   என்று     கூறி   அவரை   முன்னே   செல்லவிட்டு   தான்   பின்னே    சென்றார் .    அவர்கள்   கரையேறியதும்   வெள்ளம்   இருகரைகளையும்    தொட்டுக்கொண்டு   ஓடலாயிற்று .   இருவரும்   கொடுங்கோளூர்   நோக்கி    நடந்தனர் .   சேரமான்   நாட்டில்   மக்கள்    மகிழ்ச்சியோடு   காணப்பட்  டனர் .    

Monday 10 February 2020

சுந்தரரும்   சேரமானாரும்   காவிரியின்   கரையை    அடைந்தனர் .  அனால்   காவிரி   வெள்ளம்   கரைபுரண்டோடிற்று .  ஓடம்   ஒன்றும்   செல்ல   முடியாமல்   கரையில்   இருந்தன .  அப்பனை   தரிசிப்பது   அசாத்தியம்   என்று     முடிவு   செய்து   சஞ்சலம்   அடைந்தனர் .  அப்போது   சுந்தரர்   ஐயனை   மனதார   வேண்டிக்கொண்டு   ''பரவும்   பரிசொன்று   அறியேன்நான் ''  என்று   மனமுருக   பதிகம்   பாடினார் .   ஐயாறப்பன்   மனம்   இரங்காமல்   இருப்பாரா ?   நதி   வெள்ளத்தில்   ஒரு   பிளவு   ஏற்பட்டது .  மேற்கேயிலிருந்து   வந்த   நதிநீர்   ஆணையிட்டது   போல   அப்படியே   நின்றது .   கிழக்கே   தண்ணீர்   வடிந்து   மணற்பாங்காக   காட்சி  அளித்தது .   சேரமான்    சொல்லொணா   ஆச்சர்யமும்    மகிழ்ச்சியும்   அடைந்தார் .    சுந்தரரை   பாராட்டினார் .  அதற்கு   சுந்தரர் ''  நண்பரே   இது  ஈசன்   உமக்கு   அளித்த   வரமல்லவா ''  என்று   பதிலுரைத்தார் .     

Wednesday 5 February 2020

திருவாரூரில்   சுந்தரர்   சேரமானோடு   எம்பெருமானை   தினம்   சேவித்துக்கொண்டு   மகிழ்ந்து   கொண்டிருக்கும்    நாளில்   சேரமானார்   தான்   தம்   நாட்டைவிட்டு   கிளம்பி   வெகுநாட்கள்   ஆனதால்   திருப்பி   செல்ல   நினைத்தார் .  அவர்   சுந்தரரையும்   தம்முடன்   தம்   நாட்டிற்கு   தம்   விருந்தாளியாக   வரும்படி   வேண்டிக்கொண்டார் .   தம்   அரண்மனையில்   அவரை     உபசரிக்க   மிக்க   ஆவல்   தெரிவித்தார் .   சுந்தரரும்   அவர்     அன்பான   அழைப்பை   ஏற்றுக்கொண்டு   அவருடன்   கிளம்பினார் .   இருவரும்   காவிரியின்   தென்   கரையில்   கண்டியூர்   அடைந்தனர் .   அவ்வூரின்   வடகரை   திருவையாறு .   சேரமான்   ஐயாறப்பனை   தரிசிக்க   தன்   ஆவலை  தெரிவித்தார் .    சுந்தரரும்    சம்மதித்தார் .