Monday 8 December 2014

sathuram

அப்பரும் ,சம்பந்தரும்  பெரும்  ஆனந்தம்  அடைந்து  ஈசனை  பலவாறு  துதித்தனர் . பிறகு  அப்பர்  மக்கள்  தடையின்றி  ஆலயம்  வந்து  போக  ஆலைய  கதவு  மூடுவதற்கும்  வழி  செய்தல்  அவசியம்  என்று  அதற்கு  பாடுமாறு  சம்பந்தரை  வேண்ட  அவரும் ''சதுரம்மறை '' எனும்  பதிகம்  பாடி  கதவம்  தாளிட  செய்கிறார் .  

Thursday 4 December 2014

maraikadu

வருத்த மடை ந்த  சம்பந்தர்  அப்பரை  வணங்கி  இவ்வூர்  பக்தர்கள்  தடையின்றி   கோபுர  வாயில்  வழி  வந்து  ஐயனை   தரிசிக்க  தாங்கள்  தான்  ஈசனை  துதித்து  பாடி  இக்கதவை  திறக்க செய்ய  வேண்டும்  என்று  விண்ணப்பிக்கிறார் . அப்பரும்  தங்கள்  சித்தம்  என்று  கூறி  இப்பதிகத்தை   பாடுகிறார் .
பண்ணின்  நேர்  மொழியாள்  உமை  பங்கரோ
மண்ணினார்  வலம்  செய்  மறை காடரோ
கண்ணினால்  உமை  காண  கதவினை
திண்ணமாக  திறந்தருள்  செய்மினே .
ஈசன்  அவர்  கானத்தில்  மயங்கி  இருந்ததால்  ஒன்பது  பதிகம்  பாடியபின்னும்   திறக்க   படாமை யால்  மனம்  நொந்த  அப்பர்  பாடுகிறார் .
அரக்கனை  விரலால்  அடர்த்திட்ட  நீர்
இரக்கம்  ஒன்றிலீர்  எம்பெருமானிரே
சுரக்கும்  புன்னைகள்  சூழ்  மறைக்காடரோ
சரக்க  இக்கதவம்  திறப்பின்மினே /
இப்பாடல்  முடிந்ததும்  கதவுகள்  திறந்து  மகிழ்ச்சி  வெள்ளம்  பொங்கியது . அப்பரும்  கண்ணீர்  மல்க  ஐயனை  வணங்கினர் .  

Tuesday 2 December 2014

pannin

அப்பரடிகள்  தன்  பக்தி  பயணத்தை  தொடர்கிறார் . அவர்  ஞானசம்பந்தரை  சந்திக்க  பேராவல்  கொண்டு  அவரை  சந்தித்து  இருவரும்  சேர்ந்து  தங்கள்  பக்தி  யாத்திரையை  தொடர்கின்றனர் . அவர்கள்  இப்போது  வேதாரண்யம்  என்று  அழைக்கப்படும்  திருமறைக்காடை  வந்தடைகின்றனர் . கோவிலை  அடைந்து  உள்ளே  சென்ற  அவர்கள்  சன்னதிக்கு  நுழை  வாயிற்  கதவு  பூட்டப்பெற்றிருப்பதை  கண்டு  அதிர்ச்சி  அடைந்தனர் . மக்களை  வினவினார்கள் . வேதங்கள்  சிவபிரானை  வழிப்பட்டபின்  பூட்டிய  கதவு  திறக்க  வேதம்  ஓதும்  அந்தணர்கள்  முயன்றும்  முடியவில்லை  என்று  கூறினர் .''அருமறைகள்  திருகாப்பு  செய்து  வைத்த  அக்கதவம்  திறந்திட "  கூடவில்லை என்று  சேக்கிழார்  பெரிய  புராணத்தில்  கூறுகிறார் .