Monday 24 April 2017

அன்பே   உருவான   இச்சிவனடியார்   இக்காரியத்தை   எதற்காக   செய்தார்? தகுந்த  காரணம்   இல்லாமல்   இருக்க   முடியாது   என்று   உறுதியாக   நம்பி   ஸ்வாமி   தாங்கள்   இக்காரியத்தை   செய்ததற்கு   தகுந்த   காரணம்   இருக்க   வேண்டும் .  தாங்கள்   வேறு   யாரையாது   தண்டிக்க  வேண்டுமா?  என்று   பணிவுடன்   வினவினார் .  எறிபத்தர்   நடந்தவற்றை   விரிவாக   விளக்கினார் . அதை   கேட்ட   மன்னர்   மிக   வருந்தி   தாங்கள்   கொடுத்த   தண்டனை  போதாது .  தானும்   தண்டிக்க   பட   வேண்டியவன் தான்   என்று   கூறி .  தன்    உடைவாளை   உருவி.   அடியார்   கையில்   கொடுத்து   தன்னையும்   வாளால்   தண்டிக்குமாறு   அவர்   காலடியில்   மண்டியிட்டார்   மன்னன் .  எறிபத்தர்   கலங்கி   போய்   செய்வது   அறியாது   திகைத்தார் .   உடனே   அவ்வாளால்   தன்னையே   மாய்த்துக்கொள்ள   யத்தனித்தார் . அதை   கண்ட   மன்னன்   உடனே   எழுந்து   அவரை   தடுக்க   நினைத்தார் .  அப்போது   ஈசன்   அங்கு   தோன்றி   அடியார்களிடம்   தாங்கள்   காட்டும்   அபரிமிதமான   அன்பை   உலகிற்கு   உணர்த்தவே   இவ்விளையாடல்   புரிந்ததாக   கூறி   யானையையும்   சேவகர்களையும்   பிழைக்க   செய்தார் .  எறிபத்தர்   மன்னன்   பட்டத்து   யானைமேல்   ஆரோகணித்து   செல்வதை   கண்டு   மகிழ்ந்தார் .

Saturday 22 April 2017

மற்றும்   கூட   வந்த   காவலாளிகள்   ஓடி   சென்று   மன்னனிடம்   பட்டத்து    யானை   கொலையுண்ட   செய்தியை   கூறினர் .  புகழ்   சோழ  ன்னன்   செய்தியை   கேட்டு   அதிர்ந்து   போனான் .  பகைவர்   படையுடன்  வந்து   விட்டனரோ   என   அச்சமுற்று   படையுடன்   செல்ல   தயாரானான் .   தானும்   வாள்   மற்ற   ஆயுதங்கள்   ஏந்தி   படைகள்   பின்னே   வர   குதிரை   ஏறி   புறப்பட்டார் .  அவர்   ராஜவீதியை   அடைந்தார் .  அங்கு   பட்டத்து   யானை   மலைபோல்   வீழ்ந்து   கிடந்ததை   கண்டு   மலைத்து   நின்றார் .  அங்கு   மழுவுடன்   எறிபத்தரை   கண்டு   இப்பெரும்   சிவனடியார்   அங்கு   என்ன   செய்கிறார்   என்று   அதிசயித்து   நின்றார் .  அரசனின்   பின்   நின்ற   காவலாளிகள்   யானையை   கொன்றவர்   அவரே   என்று   சிவனடியாரை   காண்பித்தனர் .  அரசன்   அதிர்ந்து   போனார் .  அன்பே   உருவான   சிவனடியார்   இக்காரியம்   செய்தாரென்றால்   தகுந்த   காரணம்   இருக்க   வேண்டும்   என்று   உறுதியாக   நம்பினார் .

Tuesday 18 April 2017

முதியவரான   சிவகாமியாண்டார்   கோபத்துடன்   யானையின்   பின்  ஓட   யத்தனித்தார் .  வயதின்   காரணமாக   கால்   தடுக்கி   கீழே   விழுந்தார் .  ஆண்டவனே   இது   நீதியா ?  இப்படி   செய்த   யானையை   தட்டி   ஒட்டிக்கொண்டு  போய்விட்டானே   அந்த   பாகன் .  இன்று   என்னால்   இப்பூமாலைகளை   உனக்கு   சூட்டி   அழகு   செய்ய    முடியாதே   என்று  பலவாறாக   புலம்பினார் . அப்போது   அங்கு   மழுவுடன்   வந்த   எறிபத்தனார்   இவர்   புலம்பலை   கேட்க   நேர்ந்தது .  ஓடி வந்து   விழுந்து   கிடந்த   சிவகாமியாண்டாரை   அணுகி   விசாரித்தார் .  ஒரு   சிவனடியாருக்கு   இவ்வநீதி   நடந்ததை   கண்டு   வெகுண்டு   எழுந்தார் .  அந்த   யானை   எந்த   பக்கம்   சென்றது   என்று   கேட்டறிந்து   அவர்   அந்த   பக்கம்   சென்று   தம்   மழுவால்   யானையையும்   பாகனையும்   வீழ்த்தி   கொன்றார் . கூட   இருந்த   காவலர்களையும்   வீழ்த்தினார் .

Wednesday 12 April 2017

மறுநாள்   நவமி   உத்சவம் .  ஊரே  திரண்டு   உத்சவத்தை   சிறப்பாக   கொண்டாட   ஆயத்தம்   செய்த   வண்ணம்   இருந்தது .  சிவகாமியாண்டார் அதிகாலையே   எழுந்து   நீராடி   உடலெல்லாம்   விபூதி   பூசி   ஈசன்  பஞ்சாக்ஷரத்தை   ஓதியவாறு   மலர்களை   கொய்து   மாலையாக   கட்டி    அம்மாலைகளை   ஒரு   கூடையில்   வைத்து   தோளில்   மாட்டிக்கொண்டு   இறைவனுக்கு   சாற்ற   கோவிலை   நோக்கி   புறப்பட்டார் .  மறுநாள்   உத்சவத்தில்   பங்கேற்க   மன்னனின்   பட்டத்து   யானையை  காவலர்கள்   ஆற்றில்   குளிப்பாட்டி   அழைத்து   வந்து   கொண்டிருந்தனர் .  யானை   மதத்தில்   இருந்தது .  இதை   உணராத   காவலர்கள்   அதை   வீதி   வழியே   ஒட்டினர் .   சிவகாமியாண்டார்  தோளில்    மலர்க்கூடையுடன்   சிவநாமத்தை   ஜபித்தவாறு   சென்று   கொண்டிருந்த   தெருவில்   நுழைந்த   யானை   அவரை   ஒரு   தள்ளு   தள்ளி விட்டு   பூக்கூடையையும்   தூக்கி   எறிந்து   நாசம்   செய்து   விட்டு   போய்விட்டது .  யானை   பாகனும்   அதை   கண்டு   கொள்ள வில்லை . 

Tuesday 11 April 2017

அவ்வூரில்   சிவகாமியாண்டார்   என்றொரு   பக்தர்   வாழ்ந்து   வந்தார் . அவர்   நந்தவனங்கள் தோறும்   சென்று   மலர்களை   சேகரித்து   மாலையாக   தொடுத்து   ஈசனுக்கு   அவைகளை   சாற்றி   அழகு   பார்த்து   மகிழ்வார் ..  தினந்தோறும்   அதிகாலை   எழுந்து   ஆற்றில்   நீராடி   வாயில்   ஒரு   துணியை   சுற்றிக்கொண்டு   மலர்களை   கொய்து   மாலையாக   தொடுப்பார் .  ஒரு   கூடையில்   அடுக்கி   எடுத்துக்கொண்டு   கோவிலுக்கு   சென்று   மாலைகளை   ஐயனுக்கு   சாற்றி   அழகு   பார்த்து   மகிழ்வார் .  அவர்   முதுமை   அடைந்துவிட்ட   போதிலும்   விடாது   இச்சேவையை   செய்து   வந்தார் .

Friday 7 April 2017

இலைமலிந்த   வேல்நம்பி   எரிபக்தர்க்கு   அடியேன் !

சோழ   நாட்டை   கருவூர்   தலைநகராக   கொண்டு   ஆட்சி   செய்து   வந்தான்   புகழ்   சோழ   மன்னன் .  அவ்வூரில்   கோயில்கொண்டிருக்கும்   பசுபதீஸ்வரர்   மீது   எல்லை இல்லா   பக்தி   கொண்ட   அடியார்   ஒருவர்  இருந்தார் . அவர்   ஈசன்   மீது   கொண்ட   அன்பிற்கு   ஒரு   படி   மேலேயே   சிவனடியார்கள்   மீது   பக்தி   வைத்திருந்தார் .  அவர்களுக்கு   யாரேனும்   தீங்கு   இழைத்தார்   என்று   அறிந்தால்   தான்  எப்போதும்   வைத்திருக்கும்   மழுவை   எறிந்து   தண்டனை   அளித்தே  தீருவார் ,,  அதன்   காரணமாக   அவர்   எறி பக்தர்   என்றே   அழைக்கப்பட்டார் .