Saturday 25 February 2017

வந்தவரை   வரவேற்று   உள்ளே  உட்காரவைத்து   உள்ளே   சென்ற   மாறனாருக்கு   அப்போதுதான்   நினைவு   வந்தது   வீட்டில்    உண்ண   ஏதும்   இல்லாத    காரணத்தால்   இவரும்   இவர்   மனைவியும்   இரண்டு   நாட்களாக  பட்டினி   என்பது .    யோசனையில்   ஆழ்ந்தார் .  அப்போது கணவரையும்   மிஞ்ச   கூடிய  அன்புள்ளம்   கொண்ட   அவர்   மனைவி    அவருக்கு   நினைவூட்டினாள் .  இரண்டு   நாள்  முன்புதான்   அவர்கள்   விதைத்த   நெல்   இந்த   பெரும்   மழையில்   மண்   கரைந்து   முளைவிட்டு   தண்ணீரில்   மிதந்து   கொண்டிருக்கும் ,   அதை   ஒரு   கூடையில்   அள்ளி   வந்தால்   அதை   குத்தி   அரிசியாக்கி   சமைக்கலாம்   என்று   அறிவுறுத்தினாள் .  மகிழ்ச்சி   அடைந்த   அவர்   அவ்வாறே   விதை நெல்லை   எடுத்து   வந்தார் .  விறகு   இல்லை   என்ற   பிரசினை  எழுந்தபோது   கூரையை   தாங்கும்   கட்டைகள்   உதவின .  இவ்வாறு   அரிசி   சோறு  தயாரானதும்   அதற்கு   ருசியூட்ட   அதற்கும்   அம்மாதரசி   நினைவூட்டினாள் ..  தோட்டத்தில்   முளைத்திருக்கும்   கீரையை   பறித்து   வர   சொன்னால் .  அவரும்   அந்த   இருட்டில்   அவ்வப்போது   வரும்   மின்னல்   ஒளியின்   உதவியால்   கீரை   பறித்துவந்தார்.   அதையும்   சமைத்தாள்   மனைவி .  இருவரும்    நிம்மதியுடன்   அடியாரை   அழைக்க   சென்றனர் .  உறங்கி   கொண்டிருந்த   அவரை   'ஸ்வாமி   உணவு   உண்ண   வாருங்கள் '  என்று   எழுப்பினர் .  எழுந்த   அவர்   உடனே   மாயமாய்   மறைந்தார் .  அற்புத   ஒளி   தோன்றியது . அம்மையுடன்   ஈசன்   தோன்றி   "மாரனாறே    எந்த   நிலையிலும்   அடியார்களுக்கு  விடாமல்    அன்னமிடும்   உங்கள்   இருவர்   திருப்பணியை   கண்டு   யாம்      பூரிப்படைந்தோம்  .  உங்களை   ஆட்கொள்ளவே   யாம்   வந்தோம் .  இனி   எக்காலமும்   என்னுடனேயே   இருப்பீர்கள் '  என்று   கூறி        மறைந்தார் . இவ்வாறு   மாறன்   தன்   மனைவியுடன்   ஐயன்   அடி  சேர்ந்தார் 

Friday 24 February 2017

வாயிற்கதவை   திறந்த   மாறனார்   அங்கு   வயது   முதிர்ந்த   ஒரு   சிவனடியாரை   கண்டு   வியப்படைந்தார் .  ஸ்வாமி   இந்த   மழையில்   தாங்கள்  எங்கிருந்து   வருகிறீர்கள்? .  உள்ளே   வாருங்கள். உள்ளே   வந்து   இந்த   ஈர   உடைகளை   களைந்து   வேறு   ஆடைகளை   அணியுங்கள் .  அதற்குள்   உணவு   தயாராகிவிடும்   என்று   உபசரிக்கிறார் .  அத்தகைய   இக்கட்டிலும்   சிவனடியார்   ஒருவர்   உணவு   அருந்த    வந்ததில்   அவருக்கு மட்டற்ற    மகிழ்ச்சி .  வந்தவர்   நானொரு   யாத்திரீகன் .  ஊர்   ஊராய்   சுற்றி   வருபவன் . இந்த   ஊர்   வந்தபோது   பெரும்   மழை   பிடித்து   கொண்டது .  பசி   வாட்டுகிறது .  இந்த   ஊரில்   எல்லோரும்   உன்   வீட்டில்   ஒரு   போதும்   பசி   என்று   வந்தவர்கள்   உண்ணாமல்   போனதே   கிடையாது   என்று  என்னை   இங்கே   அனுப்பினார்கள்,  என்று   கூறினார் .  மாறனார்   உடனே   உள்ளே   அமருங்கள்   உணவு   தயாரானதும்   அருந்தலாம்   என்று   உபசரித்தார் .

Thursday 23 February 2017

மாறனாருக்கு   சோதனை   காலம்   துவங்கியது ..  வயலில்   விளைச்சல்   குறைய   ஆரம்பித்தது .  ஆனால்   அவருடைய   விருந்தோம்பல்    குறைவில்லாமல்   தொடர்ந்தது .  கையிலுள்ள   செல்வம்   கரைந்தது .   வீட்டிலுள்ள   பண்டங்கள்   காசாக   மாறி   விருந்தோம்பல்   தொடர்ந்தது .  எல்லா   பொருளும்   தீர்ந்ததும்   அக்கம்பக்கத்தில்    கைமாறாக   பணம்   வாங்கி   சில   நாட்கள்   தொடர்ந்தது . சோதனையாக   இரண்டு   நாட்கள்   விடாமல்   அடைமழை   பெய்து   கணவன்   மனைவி   இருவரும்   பட்டினி   கிடைக்க   நேர்ந்தது .  இருவரும்   பட்டினியுடன்   படுத்தனர் .  நடு   நிசியில்   வாசல்   கதவை   யாரோ   தட்டும்   ஓசை   கேட்டு   திடுக்கிட்டு   எழுந்த   மாறனார்   கதவை   திறந்தார் . 

Wednesday 22 February 2017

மாற னாரின்   மனைவியும்   அவரைப்போலவே   அதிதிகளை   மகிழ்விப்பதில்   துளியும்   அலுப்பில்லாமல்   அவருக்கு   ஏற்றபடியே   இணைந்து   செயலாற்றி   வந்தார் . வந்தவர்களுக்கு   அறுசுவை   உணவை   அளிப்பதில்  தவறியதே   இல்லை ...ஈசன்   தன்   அடியார்களுக்கு   இவர்களின்   சேவையை   கண்டு   மிக்க   மகிழ்ச்சி   கொண்டார் .  இவர்கள்  தன்னை   வந்தடையும்   மார்க்கத்தை   காண்பிக்க   தன்   சோதனையை   துவக்கினார் .  சோதனைக்கு   பின்   தானே   சாதனை .  

Tuesday 21 February 2017

" இளையான்   தன்   குடிமாறன்   அடியார்க்கு   அடியேன் "
அடுத்து   இளையான்குடி   மாறனார்   நாயனாரை   தெரிந்து   கொள்வோம் .பாண்டிய  நாட்டில்  இளையான்குடி  என்ற  ஊரில்   வேளாளர்   குலத்தில்   பிறந்தவர்   மாறனார் . வசதியான   குடும்பம் .  நிலபுலன்கள்   உள்ளவர் .  நல்ல   உழைப்பாளி . தில்லை   நடராஜப்பெருமான்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டவர் . சிவனடியார்கள்   கண்டால்     மிக்க   மகிழ்ச்சியுடனும்   அன்புடனும்   அறுசுவை   உணவு   அளிக்க   தவறுவது   கிடையாது .

Saturday 18 February 2017

இவ்வாறு   இயற்பகையார்   இயற்பகை   நாயனார்   ஆகிறார் . இந்த   வரலாறு   மூலம்   நாம்   காணும்   வியக்க   வைக்கும்  செய்தி   ஈசன்   தன்   அடியானின்   பெருமையை   உலகறிய   வைக்க   தன்னை   எத்தனை   தாழ்த்தி   கொள்கிறார்  என்பதுதான் .  எத்தனை   கீழ்த்தர   செயல்கள்   செய்யவும்     தயங்குவதில்லை   என்பதை   காண்கிறோம் .  ஜனங்களின்   கல்லடி   கூட   தாங்க   தயக்கமில்லை .    காண   தேகம்   புல்லரிக்கிறது .பக்தன்   ஐயனுக்காக   எதையும்   செய்ய   துணிவதை   காண்கிறோம் .. இவ்வாறு   சில  சரிதைகளில்   ஈசன்   பக்தனுக்காக   எதையும்   செய்வதை   காண்கிறோம் .''ஈசன்   தொண்டரத்தம்   உள்ளத்து   ஒடுக்கம் .  தொண்டர்தம்   பெருமை   சொல்லவும்   பெரிதே ''

Friday 17 February 2017

இயற்பகையார்   இனி   அவள்   உமக்கு   உரியவள்.  அழைத்து   செல்லலாம் .  வேறு   ஏதாவது   சேவை   தேவையா ? என   வினவுகிறார் . உடனே   அடியார்   இனி   தான்   நான்  கேட்க   போவது   பெரிய   உதவி .  அதை   செய்தால்   போதும்   என்கிறார் .  உடனே   இயற்பகையார்   சொல்லுங்கள்   செய்ய   காத்திருக்கிறேன்  என்கிறார் .   உடனே   சிவனடியார்   அப்பனே,  உன்   மனைவியை   நான்   அழைத்துக்கொண்டு   இந்த   ஊரை   தாண்ட   முடியுமா?  உங்கள்   சுற்றத்தாரும்   ஊர்   மக்களும்   என்னை  சும்மா   விடுவார்களா ?  என   வினா   எழுப்பினார் .  எங்களை   பத்திரமாக   ஊர்   எல்லை   வரை   கொண்டுபோய்   விடு   என்கிறார் . அவரும்   இதை   எப்படி   மறந்து   போனேன்   என்று   தம்மையே   நொந்துகொண்டு   கவலை   வேண்டாம்   சுவாமி   நான்  உங்களை   பத்திரமாக   வழி   அனுப்புகிறேன்   என்று   சொல்லி   தன்  வாளுடன்   அவர்களுக்கு   காவலாக   முதலில்   செல்கிறார் .  எதிர்பார்த்தபடி   உறவினர்கள்   திரண்டு   வந்து   எதிர்க்கின்றனர் .  இயற்பகையார்   கத்தியை    சுழற்றியபடி   எல்லோரையும்   எதிர்த்து   வீழ்த்தியபடி   முன்னேறினார்    சினடியாரும்   இயற்பகையார்   மனைவியும்   பின்   தொடர்ந்தனர் .  ஊர்   எல்லை   தாண்டியவுடன்   இயற்பகையார்   சிவனடியாரை   வணங்கி   விட்டு   திரும்பி கூட   பார்க்காமல்   திரும்ப   புறப்பட்டார் .  அவர்   சிறிது   தூரம்  வந்தபோது   இயற்பகையாரே   என்ற   குரல்   கேட்டு   திரும்பினார் .  என்ன   ஆச்சர்யம் !  ஈசன்   அம்மையுடன்   காட்சி   தந்தார் . ''இயற்பகையார்   உமது   மனஉறுதியும்   பற்றற்ற   நிலையம்   எம்மை   அதிசயிக்க   வைக்கிறது .  நீர்   உம்மனைவியுடன்  சுகமாக   வாழ்ந்து  பிறகு   எம்மை  வந்தடைவீர்     .  ''  என்று   வாழ்த்தி   அவர்   வாளுக்கு   இறையானவர்களை   பிழைக்க   செய்கிறார் .

Wednesday 15 February 2017

சிவனடியார்   இவ்வாறு   கேட்டுவிட்டு   இயற்பகையார்   முகத்தை   கவனித்தார் .  அவர்   முகத்தில்   ஒருவித   சலனமும்   இல்லை .  தன்னிடம்   உள்ளதை   கேட்டாரே   என்ற   மன   நிம்மதி   மட்டும்   தான்   இருந்தது .  என்னிடம்   உள்ளதை   கேட்டு   என்னை   நிம்மதி   கொள்ள  செய்துவிட்டீர் .  என்று   கூறி   விட்டு   உள்ளே   சென்று   தன்   மனைவியை   நோக்கி   இந்த   சிவனடியாருக்கு   உன்னை   நான்   அளித்து   விட்டேன் .  இனி   அவருடன்   செல்வது தான்   முறை .  என்று   கூறு கிறார்.  அந்த   அம்மையாரும்   எவ்வித   சலனமும்   இல்லாமல்   கணவனின்   பாதங்களில்   வீழ்ந்து   நமஸ்கரித்துவிட்டு   குனிந்த   தலையுடன்   சிவனடியார்   பக்கம்   போய்   நின்றாள் .  சிவனடியார்   சலனமில்லாத   அவள்   முகத்தை   கவனித்தார் .

Monday 13 February 2017

சிவனடியார்  உடனே   எனக்கு   ஒரு   காரியம்   ஆகவேண்டும் . அது   உன்னிடம்   வந்தால்தான்   நிறைவேறும்   என்று   கேள்விப்பட்டேன் .  அதனால்தான்   உன்னிடம்   வந்தேன்   என்கிறார் .  இயற்பகையார்க்கு   மிக்க   மகிழ்ச்சி .  மகிழ்வோடு   என்னிடம்   உள்ளது    எதுவானாலும்   தயக்கமே   வேண்டாம் ,  கேளுங்கள்   என்று   வற்புறுத்தி   சொன்னார் . சிவனடியார்   நன்றாக   யோசித்து   சொல்லும்,  பிறகு   வார்த்தை   தவற   கூடாது   என்று   எச்சரிக்கிறார் .மேலும்   இத்தனை   காலமாக   வறண்டு   கிடந்த   வாழ்வை   வளமாக்க   எண்ணுகிறேன்   என்கிறார் .  இயற்பகையார்  சுவாமி   காலம்   தாழ்த்த   வேண்டாம்  என்னிடமுள்ள   எதுவாயினும்   தயங்காமல்   கேளும் .  என்று   வற்புறுத்துகிறார் .   உடனே   சிவனடியார்   இத்தனை   காலமாக   பிரம்மச்சர்யத்தை   கடைப்பிடித்து   அலுத்து   விட்டேன் .  இனி   எனக்கு   துணையாக   நீ   பிரியமுடன்   வாழ்ந்து   வரும்  உன்   மனைவியை   கேட்கத்தான்   நான்   வந்தது   என்றார் .

Saturday 11 February 2017

சிவபெருமான்   அழகிய   வாலிபனாக   மாறினார் . மிக்க   தேஜஸுடன்   சிவனடியார்   உடைகளுடன்   காண்போரை   கவரும்   வண்ணம்   இயற்பகையார்   வீட்டின்   முன்   நின்றார் .  இயற்பகையார்   வெளியே   வந்தார் .  உடனே    'தாங்கள்தான்   இயற்பகையார்   என்பவரா ?  தங்களைப்பற்றி   கேள்விப்பட்டிருக்கிறேன் .  தாங்கள்,   சிவனடியார்கள்   எதை     யாசித்தாலும்   மறுக்கமால்   தருவீர்கள்   என்று '  என  வினவினார் . இயற்பகையார் மிக   பணிவுடன்   பதிலுரைத்தார்   "என்னிடம்   உள்ள   எல்லாம்   அந்த  ஈசன்   அளித்ததே .  ஆக   அதை   அவரடியார்களுக்கு   கொடுத்து   மிஞ்சியதே   என்னை   சாரும் .  ஆகையால்   தங்கள்   தயக்கமின்றி   தங்களுக்கு   வேண்டியதை   கேட்கலாம் ". என்று   பதிலளிக்கிறார் .

Thursday 9 February 2017

இயற்கையாக   மனித  இனத்தை   ஆட்டி  படைக்கும்   ஆசாபாசங்கள்   அவரை   எந்த   சமயத்திலும்  பாதித்ததே   இல்லை .சலனமே   இல்லா   மனத்தோடு   சிவபெருமானையும்   அவர்   அடியார்களையும்   பூசிப்பதே  தன்   வாழ்வின்   லட்சியமாக   வாழ்ந்து   வந்தார் .  அவருடைய   மனைவியும்   அதற்கு   சிறிதும்   குறைவில்லாத   பக்தியுடனும்   பற்றற்ற   நிலையுடனும்   கணவன்   சொல்லே   வேதவாக்காக   எண்ணியே   அவருக்கு  உறுதுணையாய்    அமைதி யுடன்    வாழ்ந்து   வந்தார் .  இத்தகைய   ஆபூர்வ   தம்பதிகளின்   பெருமை   இவ்வாறு   குடத்திலிட்ட   விளக்காக  இருப்பது   ஐயன்   மனத்திற்கு   பொறுக்கவில்லை . இதை   உலகத்திற்கு   உணர்த்த   தன்   திருவிளையாடலை   துவக்குகிறார் .

Tuesday 7 February 2017

இல்லையே   என்னாத   இயற்பகைக்கும்   அடியேன்||
காவிரி  நதி  கடலோடு    சங்கமமாகும்   இடத்தில்  அமைந்திருக்கும்   நகரம்
  காவிரிப்பூம்பட்டினம்  ஆகும் .   அங்கு   வணிகர்   குலத்தில்   பிறந்தவர்   இயற்பகை  நாயனார்   ஆவர் .  பரம்பரையாக   பெரும்   செல்வம்   படைத்தவர்கள் .  வணிக   குலத்திற்கு   இவரே   தலைவர் ..இத்தனை   செல்வம்   படைத்தும்   அவருக்கு    அதில்   பற்றில்லாமல்   வாழ்ந்தார் .ஈசனிடம்   அளவு   கடந்த   பக்தி   கொண்டிருந்தார் .  சிவனடியார்கள்   யார்   எதை   யாசித்தாலும்      மறுக்காமல்   வழங்கும்   வழக்கத்தை   ஒரு   தவமாக   கடைப்பிடித்து   வந்தார் .சிவபெருமானை   தவிர   வேறு   எதிலும்   பற்று   அற்றவராக   பெயருக்கு   ஏற்றவாறு   இயற்கைக்கு   புறம்பாக   வாழ்ந்து   வந்தார் .   

Friday 3 February 2017

நிலகண்டரின்   சரிதத்தை   காணும்போது  ஈசன்   தம்   தொண்டர்களின்   இதயத்தில்   வாழ்கிறார்   எனும்   அவ்வை யின்   கூற்றிலுள்ள   பெரும்   உண்மை   நன்கு   புலப்படும் .  அவர்   ஐயன்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டவர்   என்பதில்   ஐயம்   இல்லை .  அதை   அவர்   வெளி   காட்டிய   விதம்   நம்மை   வியக்க   வைக்கிறது .  சிவனடியார்களை   அவர்   ஈசனுக்கு   சமமாகவே   பாவித்து   அவர்களுக்கு   தொண்டு   செய்வதையே   தவமாக    செய்து   வந்தார் .  ஐயன்   மீது   சத்தியம்   என்ற   அந்த   வார்த்தைக்கு   கட்டுப்பட்டு   அத்தனை   ஆண்டுகள்   புலன்களை   கட்டுப்படுத்தி   மனதில்   ஒரு   சிறிதும்   சலனமில்லாமல்   பக்தியே   துணையாக   வாழ்ந்த  அந்த பாங்கு   நம்மை  மெயசிலிர்க்க   வைக்கிறது .  இவர்   காட்டிய   பக்தியை   காட்டிலும்   ஈசன்   இவர்  மீது    காட்டிய   அன்பு   நம்மை   பெரிதும்   வியக்க   வைக்கிறது .  "தொண்டர்   தம்   பெருமை   சொல்லவும்   பெரிதே "