Monday 15 July 2013

tamilisaiarunachalar

அருணாச்சல  கவியின்  படல்கள ஏன்(  பள்ளீகொண்டீர்)
  மோகனம் , யாரோ  இவர்  யாரோ  (பைரவி ) ராமனை  கண்ணார  கண்டானே ) மோகனம் . இவை சில .
  மாரிமுத்து  பிள்ளை  தில்லையில்  பிறந்து  வாழ்ந்தவர் . ஆடலரசர்  நடராஜரின்   மேல்  அளவு  கடந்த  பக்தி  கொண்டவர் .
இவரை  பற்றி  அதி கம்   தெரியவில்லை .பாடல்களும்  நிறைய  கிடைக்கவில்லை  காலை தூக்கி (யதுகுல  காம்போதி ),  எதுகித்தனை  மோடி (சுருட்டி ) எந்நேரமும் (தோடி ) இவை  சில .. 

tamilisai arunachalakavi

அருணாஆசலகவிரா யர்  தஞ்சையில்  பெரிய  இசை  குடும்பத்தில்   பிறந்தார் .  தஞ்சை  அரசனால்  கௌரவிக்க  பட்ட  குடும்பம்   ஆதலால்  இவர்   சாகித்தியங்கள்  நிறைய  பாதுகாக்க  பட்டன .இவருடைய    ராம காவியம்  தமிழில்  மிக பிரபலம் . இவர்  சாகித்தியங்களுக்கு  இவருடைய  சிஷ்யர்கள்  இசை  அமைத்ததாக   சொல்லப்படுகிறது . இவர்   பாடல்களில்  நிறைய  பழமொழிகள்  காணப்படுவதாக  சொல்லப்படுகிறது .(பழம்   நழுவி  பாலில்  விழுந்தார்போலாச்சே ) ராமனுக்கு  மன்னன் முடி  என்னும்   பதம் .ஒரு  சிறிய  உதாரணம் . இவர்  ராமநாடகம்   ஸ்ரீரங்கம்   கோயிலில்  அரங்கேறியதாக   கூறப்படுகிறது .  ராம நாடகம்  தவிர  ஹனுமான்  பிள்ளைத்தமிழ்  மற்றொரு  தொகுப்பு .

Tuesday 9 July 2013

tamilisai

இவ்வாறு முத்துதாண்டவர்  தன்  இசை  வாழ்க்கையை  தொடங்கினார் . அவர் நடராஜரிடம்  அலாதி  ஈடுபாடு  கொண்டதாக    தெரிகிற்து . ஒரு நாள்  அவர்  கோவிலுக்கு  செல்லும்போது  கொள்ளிடம்  கரைபுரண்டு   ஓட  அவர்  கரையில்
நின்று  தன்யாசியில்  (காணாமல்   வீணே  காலம் கழித்தேனே ) என்றூ  மனமுருக  பாட , த்ண்ணீர்  வழி  விட்டதாக  கூற்ப்படுகிறது . துரதிஷ்டவசமாக   இவர்  பாடல்கள்  மிக  சிலவே  கிடைக்க  பெற்றன .அருமருந்து  ஒன்று  தனி மருந்து  (மோகனம் ) பேசாதே  நெஞ்சமே (தோடி ),தெருவில்  வரானோ (கமாஸ் ) சேவிக்க  வேண்டும்  (ஆந்தோளிகா )   

tamilisai

தமிழ்  மூவரில்  மூத்தவர்  முத்து  தாண்டவர்  இவர்  சீர்காழியில்  இசைவேளாளர்  குடும்பத்தில்  பிறந்தார் . பிறந்தபோதே  கொடிய தோல்  நோயோடு  பிறந்தார் .ஆதலால்  எல்லோராலும்    உதாசீன  படுத்தப்பட்டு  தனிமையில்  வாழ்ந்தார் .சதாகாலமும் பக்கத்தில்  ஒரு அம்மையார்  பாடும்  சிவதுதி  பாடல்கள் கேட்ட வண்ணம்  காலம்  தள்ளினார் . பிறகு  தில்லை  சென்று  சிவனை  துதி  த்த  வண்ணம்  இ ருந்தார் . அங்கும்  பக்தர்கள்  பாடும்  பாடல்களை  கேட்டவண்ணம்  வாழ்ந்தார் . ஒருநாள்  இவர்  கோவில்  வாகன  அறையில்  மயங்கி  கிடக்கையில்  அர்ச்சகர்  அந்த  அறையை  பூட்டிக்  கொண்டு  போய்விட்டார் . அப்போது   அம்பாள் அர்ச்சகர்  பெண்  வடிவில்  வந்து  அவருக்கு  சாப்பாடு  ஊட்டிவிட்டு  அவரிடம்  நாளை  கோவிலுக்கு  சென்று  அங்கு  கேட்கும்  முதல்   வார்த்தையை  வைத்து  ஐயன்  மேல்   பாட்டு  பாடு  என்று  சொல்லி  ம்றைந்தாளாம் . மறுநாள்    அவர்  உடல்  நலம்  பெற்று  இருப்பதை  ஊணார்ந்தாராம் . அன்று முதல்  நடராஜரை  பாடுவதிலேயே  காலம்  கழித்தார்              

Thursday 4 July 2013

tamilisai

இறைய  கர்நாடக  இசையின்  மும்மூர்த்திகளாக  விளங்கும்  தி  யாகையர் , தீஷிதர்  மற்றும்  சாமாசாச்த்திரிகள்   இவர்களுக்கு  ஒரு சில  நுற் றாண்டு  முன்பே  வாழ்ந்தவர்கள்  இந்த  தமிழ்  மும்மூர்த் திகள்.அவர்கள்  முத்துத்தாண்டவர் , அருணாசல கவி ,மற்றும்  மாரிமுத்து பிள்ளை  ஆவர் .பாடல்களை   பல்லவி ,அனுபல்லவி  சரணம்  என்று  பாடும்  முறை  இவர்கள்  காலத்தில்  தான்  துவங்கியது . துரதிஷ்டவசமாக  இவர்கள்  பாடல்கள்  வெகு  சிலவைகளே  கிடைக்க  பெற்றன 

Tuesday 2 July 2013

tamilisai

திருமலைமாற்றூ ,
யாமா மாநி  யமாமா  யாழி காமா  காணாக
காணாகாமா  காழீயா மாமாயநி  மாமாயா
பாட்டை  இடமிருந்து  வலமும்  வலமிருந்து  இடமும்  ஒரே  சொல்கள்  இருக்கும் . இவ்வாறு  தொகுப்பில்  எல்லா  பாடல்களும்  அமைந்திருக்கும் . திருஞானசம்பந்தர்  பாடிய  பாடல் இது .நின்று  ஆற  அமர  யோசித்து  பாடிய  பாடல்கள்  அல்ல  இவை . ஈசன்  முன்  நின்று  மாத்திரத்தில்  பாடிய  பாடல்கள்  இவை .பொருள்  சுவையும்  குறையாதவை ..பிரமிக்க  வைக்கும்  படைப்புகள் .
பரம்பொருள்  பேரருளை  பெற்ற  மகான்கள்  பாடியவை .  

tamilisai

அந்தாதி ,திருமாலை மாற்று ,என்று  பாடல்  தொகுப்புகள்  உள்ளன .அந்தாதி என்றால்  தொகுப்பில் முதல்  பாட்டின்  கடைசி  வார்த்தை  தொகுப்பின்  அடுத்த  பாட்டின்  முதல்  வார்த்தையாக  இருக்கும் . எல்லா பாடல்களும்  அவ்வாறே  வரும் . இப்படி  100 பாடல்கள்  கொண்டது  நூற்றாந்தாதி . உதாரணமாக  பொ ய்கைஅழ்வார், பூதத்தாழ்வார் , பேயாழ்வார்  பாடிய  மூன்று  நூற்றாந்ததிகள்  திருமழிசைபிரான்  பாடிய  நான்முகன்  திருவந்தாதி  அபிராமிபட்டர்  பாடிய அபிராமியநதாதி  இவையாகும் ,     

tamilisai

தேவாரம் , ப்ரபந்தம்  மற்ற  அந்த  காலத்தில்  பக்தியுடன்  படைக்கப்பட்ட  பாடல்களில்  சில  விசேஷமான  பாடல்களை  பற்றீ  இங்கு  குறிப்பிட  விரும்புகிறேன் . பிறகு  இன்றைய  தமிழ்  இசை  பற்றி  மீண்டும்  பார்க்கலாம் .ஈசனால்  அருளப்பட்ட   தமிழுடன்  பக்தர்கள்  எவ்வாறு  வி ளையாடினார்கள்  என்று  பார்ப்போம் .