Saturday 31 January 2015

nilaiperu

நிலைபெறுமாறு  எண்ணுதியேல்  நெஞ்சே
  நீவா ,நித்தலும்  எம்பிரானுடைய  கோயில்புக்கு
புலர்வதன்முன்  அலகிட்டு ,மெழுக்குமிட்டு
 பூமாலை  புனைந்தேத்தி ,புகழ்பாடி
தலையார  கும்பிட்டு  கூத்துமாடி
 சங்கரா  செய  போற்றி  போற்றி  என்றும்
அலைபுனல்  சேர் செஞ்சடை யெம்  ஆதி  என்றும்
 ஆரூரா என்றென்றே  அலறா  நில்லே |
இது  அப்பர்  தாண்டகம் .

Friday 23 January 2015

appar cont

அப்பர்  தன்  வாழ்நாளில்  4900 பதிகங்கள் , ஒவ்வொரு  பதிகமும்  பத்து  பாக்களை  கொண்டது , பாடியதாக  தி ரு த்தொண்டர்தொகை  மூலம்  தெரிகிறது . ஆனால்  கிடைக்கப்பெற்றவை மிக  சிலவே . அது  நம்  துர்பாக்கியமே . அவர்  பாடிய  திருத்தாண்டகங்கள்   மிக  சிறப்பானவை . மிக உருக்கமானதாகவும்  பக்திரசம்  பொருந்தியதாகவும்  இருக்கும் . ஒதுவாமூர்த்திகள்  சாதாரணமாக  தாண்டகத்தை  கொல்லி  பண்ணில்   (ஹரிகாம்போதி  ராகம் )  பாடுவது  வழக்கம் .    

appar cont


Thursday 22 January 2015

appar

திருநாவுக்கரசர்  திருவையாறில்  கைலாய காட்சி கண்ட  பிறகு   அங்கு  சில காலம்  தங்கி  பிறகு  தல  யாத்திரையை  தொடர்ந்து  பல  ஆலயங்களில்  பல  பதிகங்கள்  பாடி செல்கிறார் . தனது 81வது  வயதில்  திருபுகலூரில்  ஈசனுடன்  ஐக்கியமாகிறார் .அவர்  உழவார  பணியையே  தன்  உயிர்  மூச்சாக  கருதி  வாழ்நாள்  முழுவதும்  அதிலேயே  கழிக்கிறார் . அவர்  எளிமை  அவர்   ஒவ்வொரு  பதிகத்திலும்  எதிரொலிக்கும் .

Wednesday 21 January 2015

matherpirai

   மாதர் பிறை  கண்ணியானை  மலையான்  மகளோடும்  பாடி
 போதொடு  நீர்  சுமந்தேத்தி   புகுவார்  அவர்  பின்  புகுவேன்
 யாதும்  சுவடு  படாமல்  ஐ யாரடைகின்ற போது
 காதன்  மடப்பிடியோடும்  களிறு  வருவன  கண்டேன்
 கண்டேன்  அவர் திருப்பாதம்  கண்டறியாதன  கண்டேன் |
அப்பர்பிரான்  யாதும்  சுவடு  படாமல்  ஐயாரை  அடைந்த  போது  ஒரு  நொடியில்  தாம்  வந்த  அதிசயம்  கண்டு  மெய்சிலிர்த்து   போகிறார் . ஈசனை  மலையான்  மகளோடு  சேர்த்து  கண்ட  காட்சி  உலகின்  எல்லா  ஜீவராசிகளும்  தத்தம்  துணையோடு  போவதாக  தோ ற்றம் அளிக்கிறது . அவர்  முன்  கைலாய  காட்சி  அப்படியே  தோன்ற  அவர்   எல்லையற்ற  மகிழ்ச்சி   அடைகிறார் . ஐயனின்  திருப்பாதம்   கண்டு , கண்டறியாத  காட்சி  கண்டதாக  மெய்சிலிர்த்து  பாடுகிறார் . ஒவ்வொரு  பாட்டிலும் ' கண்டறியாதன '' கண்டதாக சொல்லி ,சொல்லி  தன்  எல்லையில்லா  மகிழ்ச்சியை   வெளிக்காட்டுகிறார் .இந்த  பதிகத்தின்  வாயிலாக  ஈசனின்  எல்லையற்ற  அருளை  நம்மால்  புரிந்து  கொள்ள  முடிக்கிறது .   

Tuesday 20 January 2015

kailayam

ஈசனே  ஒரு  முதியவர்  உருவத்தில்  தோன்றி  இந்த  வயது  முதிர்ந்த  பிராயத்தில்  ஏன் இந்த  வீண் முயற்ச்சி  செய்து  உடலெல்லாம்  நோக  செய்து கொள்கிறாய்  என்று  சொல்லி  முயற்ச்சியை  கைவிட  சொல்கிறார் . அப்பரோ  கைலாயம்  காணாமல்  திரும்புவது  தனக்கு  சாத்தியமில்லை  என்று  பிடிவாதமாக  மறுத்து  விடுகிறார் . அவருடைய  மனஉறுதியை  கண்ட  ஈசன்  மனம்  இறங்குகிறார் . ஈசன்  அவர்  முன்  காட்சி  தந்து   அவரை  பக்கத்தில்  உள்ள  சுனையில்  மூழ்குமாறு  பணிக்கிறார் . அவர்  திருவையாற்றில்  அவருக்கு  கைலாய  காட்சி  அருளுவதாக   கூறுகிறார் . அவ்வாறே  சுனையில்  மூழ்கிய  அப்பர்பிரான்  ஒரு  நொடியில்  திருவையாற்றில்  குளத்தில்  தான்  எழுந்திருப்பதையும்  ,தன் மேனியில்  சிறிதளவு  காயங்களின்  சுவடே  இலாதிருப்பதையும்  கண்டு  நெக்குருகி  பாடுகிறார் . 

Monday 19 January 2015

appar

அப்பரடிகள்  பல  திருத்தலங்களை    சேவித்து  பல  பதிகங்களை  பாடிக்கொண்டு காளத்தி  நாதரை  காண  காலஹஸ்தி  செல்கிறார் . அவருக்கு  கைலாயத்திற்கு  சென்று  கைலாயநாதரை  காணும்  பேராவல்  எழுந்தது . தன்  சிஷ்யர்களை  அங்கேயே  இருக்க  கூறிவிட்டு  அவர்  தனியாக  கைலாயம்  நோக்கி   பயணத்தை  துவங்குகிறார் .வயது  முதிர்ந்த  காரணத்தால்  பயணம்  நீண்டது .நா ள் செல்ல  செல்ல  அவர்  கால்கள்  ஒத்துழைக்க  மறுத்தன . கைகளை  ஊன்றி  தவழ்ந்தும் உடலால்  தேய்த்துகொண்டும்  முன்னேற  முற்பட்டார் . கைகள் .கால்கள்  உடல்  எல்லாம்  ரணமாயின . ஆயினும்  அவருடைய  கைலைநாதரை  காணும்  பேராவல்  அதிகமாயிற்றே  தவிர  குறையவில்லை .

Tuesday 13 January 2015

cont.

நாவுக்கரசர்  கோவிலில்  ஈசன்  சன்னதி முன்  பையன்  உடலை  கிடத்தினார் . ஈசனை  நோக்கி  ''ஒன்றுகொலாம் ''  எனும்  பதிகத்தை  பாடுகிறார் .இந்த  பதிகத்தில்  ஐயனின்  மேன்மைகளை  ஒன்று  முதல்  பத்து  வரை  வரிசை  படுத்தி  பாடுகிறார் .இந்த  பதிகத்தின்மூலம்  அவ ர்  ஒரு  கோரிக்கையையும்  வைக்கவில்லை .   அவர்  உள்ளத்தில்  சதா  குடிகொண்டிருக்கும்   ஈசன்  அறிய  மாட்டாரா  அவரது  மனத்தில்  உள்ள  கோரிக்கையை ? அவரது  பத்து  பாடல்கள்  முடிந்ததும்  எங்கிருந்தோ  வந்த  நாகம்  சிறுவனின்  காலில்  செலுத்தப்பட்ட  விஷத்தை  உறிஞ்சி  மீண்டும்  எடுத்துக்கொண்டு  வந்த  வழியே  சென்றது. சிறுவனும்  தூக்கத்தில்  இருந்து  விழித்தவன்  போல்  எழுந்து  கொண்டான் . நாவுக்கரசரும் , பெற்றோரும்  அடைந்த  மகிழ்ச்சிக்கு  எல்லை  ஏது ? அவர்களுக்கு  அப்பர்  மேல்  கொண்ட  பக்தி  பன்  மடங்காகியது . இப்போதும்  திங்களூரில்  பாம்பின்  விஷம்  யாரையும்  பாதிப்பதில்லை  என்று  கூறப்படுகிறது .  

Sunday 11 January 2015

cont.

வாழை  இலை  வெட்ட  சென்ற  சிறுவன்  திருநாவுக்கரசனை  பாம்பு  தீண்ட  ,அவன் அங்கேயே  உயிர்  துறக்கிறான் . அப்பூதி  அடிகளும்  அவர்  மனைவியும்  பெரும்  அதிர்ச்சியும்  வேதனையும்  அடைந்தார்கள் .செய்வதறியாமல்  திகைத்து  நின்றார்கள் . ஆலையம்  சென்று  திரும்பிய  நாவுக்கரசர்  திருநீறு  அளிக்க  யாவரையும்  அழைக்கிறார் . வேறு  வழியின்றி  நடந்த  துர் சம்பவத்தை  கண்ணீருடன்  கூறுகின்றனர் . பேரதிர்ச்சி  அடைந்த  அப்பர்பெருமான்  சிறுவனின்  உடலை  சுமந்து  கொண்டு  திங்களூர்  கோவிலை  அடைகிறார்   

Friday 9 January 2015

thingalore

வியப்பாலும்  அளவு  கடந்த மகிழ்ச்சியாலும்  அப்பூதி அடிகள்  ஸ்தம்பித்து  ஒரு கணம்  நின்றவர்  அப்பர்  கால்களில்  கண்ணீர்  மல்க  வீழ்ந்தார் . மனைவியையும்  மகனையும்  அழைத்து  அப்பர் காலில்  விழ  சொன்னார் . அப்பரை  அழைத்து  உபசரித்து  அமுது  உ ண்ண பணித்தனர் . அவரும்  கோவிலுக்கு  சென்று  ஈசனை  பணிந்து  பிறகு  உண்ணுவதாக  வாக்களித்தார் . உணவு  தயாரிக்க  சென்ற  மனைவி  மகன்  திருநாவுக்கரசனை  வாழை  இலை  வெட்டி  வருமாறு  பணித்தாள் .

appar

திருநாவுக்கரசர்  தண்ணீர்  பந்தல் ,அன்னசத்திரம் ,வைத்தியசாலை ,பள்ளி  என  தன்  பெயரால்  இத்தனை  அறப்பணிகள்  செய்பவர்  யார்  என  பெரும்  ஆச்சர்யத்தில்  மூழ்கினார்   அப்பர்  அடிகள் . அங்குள்ளோரை  விசாரித்து  அறிய  முற்பட்டார் .அவ்வூரில்  வசிக்கும்  அப்பூதி  அடிகள்  நாயனாரே  இவற்றை  எல்லாம்  அமைத்தவர்  என்று  அறிந்து  அவரை  காண  விரைந்தார் . அவரிடம்  இத்தனை  தான   தர்மங்களையும்  தன்  பெயரில்  செய்யாமல்  வேறு  யாரோ ஒருவன்  பெயரில்  செய்ய  காரணம்  வினவுகிறார் . அப்பூதி  அடிகள்  மிக  சினம்  கொண்டு   பரமனால்  பெயர்  சூட்டப்பட்டு ,அவரால்  கடும்  விஷம் . சுண்ணாம்பு  காளவாய் , கல்லை கட்டி  சமுத்திரத்தில்  வீசியது  போன்ற  பல  பல  கடும்  சோதனைகளை  ஈசன்  மீது  கொண்ட  அசையாத  நம்பிக்கை  யால்  அவரால்  ஒருசிறிதும்  பாதிப்பின்றி  மீண்டு  வந்த  அவரையா  யாரோ  ஒருவர்  என்கிறீர் ? அப்படியாயின்  நீர்  சைவரே  அல்ல  என்று  கடுமையாக  கூறினார் . அப்போது  அப்பரடிகள்  தாங்கள்  இத்தனை  உயர்வாக  குறிப்பிட்ட  அந்த  நாவுக்கரசர்  தாமே  என்று  கூறூகிறார் 

appar


Sunday 4 January 2015

thingalore

சம்பந்தர்  இருவருக்கு  மறு  வாழ்வு  அளித்தது  போல்  அப்பரும்  ஒரு சிறுவனுக்கு  மறு  வாழ்வளித்த  நிகழ்வும்  உண்டு . இவ்வதிசயம்  நிகழ்ந்தது  திங்களூரில் . அப்பர்  தன் தல  யாத்திரியில்  பல  திருத்தலங்களை  தரிசித்துக்கொண்டு  பல பக்தி  பதிகங்களை  பாடி கொண்டு  தின்களூரை  அடைந்தார் .அங்கு  தன்  பெயரால்  பல  நற்பணிகள்  நடைபெறுவதை  கண்டு  பெரும்  ஆச்சர்யம்  அடைந்தார் .