Monday 12 May 2014

ser

இன்னும்  சமீப  காலத்தில்  தமிழ் இசை  வளர்த்த  சிலர் .
பெரியசாமி தூரன் . தண்டபாணி  தேசிகர் .ஜி.என் .பாலசுப்ரமணியன் .லால்குடி  ஜெயராமன் .அம்புஜம் கிருஷ்ணா  இன்னும்  பலர் . மேலும்  திரை  உலகில்  மிக  அருமையான  கருத்து  செறிந்த  பல பாடல்களை  தமிழுக்கு  ஈந்த  கலைக்ன்யர்  பலர் . கண்ணதாசன் . பாரதிதாசன் . உடுமலை நாராயண  கவி  இன்னும் பலர் .  தமிழிசை  இவ்வாறு  உயர்வை  அடைந்துள்ளது  .இனி  திருமுறைகள்  ப்ரபந்தம்  இவைகளை  விரிவாக  நோக்கலாம் 

Thursday 8 May 2014

sivan

பக்தி  ரசம்  பொருந்தியும்  நல்ல இசையுடன்  அமைந்தும்  உள்ள   இவரது  பாடல்கள்  எல்லோர்  மனதையும்  கவரகூடியது ராமதாசன்  என்பது  இவரது  பாடல்களில்  காணப்படும்  முத்திரை . மார்கழி  மாதம்  விடியற்காலை  மயிலை  மாடவீதி யில்  இவரது  பஜனை  பிரசித்தமானது .மயிலை  கபாலி யின்  அதிகாரநந்தி  சேவை  கண்ட  மாத்திரத்திலேயே  அவர்  பாடிய  காண  கண்கோடி  என்ற  காம்போதி  ராகத்தில்  அமைந்த    பாடல்  மிக  பிரசித்தமானது . மனம்  நெகிழ்ந்து  அவர் .
ஸ்ரீனிவாசர் ,சிவபெருமான் ,முருகன் ,விநாயகர்  மற்ற  கடவுள்  மேல்   பாடிய   அத்தனை  பாடல்களும்  மனதை  தொடுபவை . இன்றும்  சங்கீத, நடன  மேடைகளில்  அவருடைய  பாடல்கள்  நிறைய  ஒலிக்க  கேட்கலாம் .  

Tuesday 6 May 2014

பாபநாசம்  சிவன்  அவர்கள்  நீலகண்ட  சிவன்  அவர்களின்  சிஷ்யர்  ஆவர் . ராமைய்யா  எனும்  இயற்  பெயர்  கொண்ட  கொண்ட  இவர்  குருவை  பின்பற்றி  தன்  பெயரை  பாபநாசம்  சிவன் என்று  மாற்றி  கொண்டார் . இவரும்  2000 க்கு  மேல்  பாடல்கள்  பாடியுள்ளார் .இவர்  பாடல்களை  அனுபவிக்காத  இசை ரசிகர்களே   இருக்கமுடியாது  பழைய  திரை  படங்களிலும்  இவரது  பாடல்கள்  நிறைய   இடம்  பெற்றிருக்கும்