Tuesday 31 October 2017

மறுநாள்   அந்தணர்   ஈசன்   கட்டளையை   உளமாற   ஏற்று   கோவிலில்   ஓரிடத்தில்   மறைந்து   நின்று   கொண்டார் .  வழக்கப்படி   திண்ணன்    பூஜா   திரவியங்களுடன்   மலை  ஏறி   வேகமாக   வந்தான் .  அவனுக்கு  . வரும்போதே   சில   அபசகுனங்கள்   தென்பட்டதால்   ஐயனுக்கு   ஏதாகிலும்   துன்பம்   நேரிட்டதோ   என்ற   அச்சத்துடன்   ஓடி   வந்தான் .  வந்து   ஐயனை   கண்டவன்   துடிதுடித்து   போனான் .  அவரது   வலது   கண்ணில்   ரத்தம்   வழிவதை   கண்டு   மனம்   பதறிப்போனான் .  கையில்   கொண்டு   அத்தனையும்   கிழே   நழுவி   விழுந்தன .  இவ்வாறு   யார்   செய்தது   என   பதறி   போய்   சுற்றும்   முற்றும்   பார்த்தான் .  அவனுக்கு   ஒன்றும்   புரியவில்லை .  ஓடி   சென்று   சில   பச்சிலைகளை   பறித்து   வந்து   அதை   பிழிந்து   அதன்   சாற்றை   கொண்டு   ரத்தத்தை   நிறுத்த   முயன்றான் .  ரத்தம்   நிற்கவில்லை .  அலறினான்   அரற்றினான் .  செய்வதறியாது   திகைத்தான் .அப்போதுதான்   ஊனுக்கு   ஊன்   தான்   சரிவரும்   என்று  முடிவு   செய்து   சந்தோஷம்   பொங்க  அம்பை   எடுத்து   தனது   வலது   கண்ணை   பெயர்த்து   அவரது  வலது   கண்ணில்   பொருத்தினான் .  ரத்தம்   நின்றது ..  திண்ணன்    சந்தோசம்   தாங்காமல்    கூத்தாடினான் .  ஈசனை   கட்டிக்கொண்டு    அனந்தக்கண்ணீர்   சொரிந்தான் .

Monday 30 October 2017

மறுநாள்   சிவகோசரியார்  பூஜைக்கு   வந்தவர்   மறுபடி   வழக்கம்   போல்   மாமிச   துண்டங்களும்   அருவெறுப்பான   காட்சியை   கண்டு   மிக   மனவருத்தம்   கொண்டு  எத்தனை   நாட்கள்   இந்த   மாதிரியான   வெறுக்கத்தக்க   காட்சிகளை   காண   வேண்டுமோ   என்று   மனம்   நொந்து   ஈசனிடம்   புலம்புகிறார் .  ஈசனை   கண்டுகொள்ளாமல்   சகித்து   கொண்டு   இவ்வாறு   தம்மை   சோதிப்பது   தகுமோ   என்று   தன்   மன   வருத்தத்தை   சொல்லி   அழுதார் .  பின்   தன்   கடமையை   மனசோர்வுடன்   முடித்துவிட்டு   சென்றார் .  அன்று   இரவு   அவர்   கனவில்     தோன்றிய   ஈசன்   அந்த   வேடனின்   செய்கைகளை   கண்டு   அவனுடைய   பக்தியை   சாதாரணமாக   எடை   போடாதீர்கள்  என்று   சொல்லி   நாளை   தம்   சன்னதிக்கு   வந்து   மறைந்து   நின்று   கவனிக்குமாறு   அந்தணருக்கு   ஆணை   இடுகிறார்.

Saturday 28 October 2017

திண்ணன்   காலையில்   எழுந்து   வில்லையும்   அம்பையும்   எடுத்துக்கொண்டு  வேட்டையாடி   கொன்ற   விலங்கை   கழுவி   பக்குவமாக   சமைத்து   அங்கு   மரத்தில்   இருந்த தேன்     கூட்டிலிருந்து   தேனை   எடுத்து   அத்துடன்   சேர்த்து   தன்   வா டிக்கைபடி   தன்   வாயில்   நீரை   எடுத்துக்கொண்டு   வில்வம்  மற்றும்   மலர்களை   பறித்து   தன்   தலையில்   செருகிக்கொண்டு   ஆனந்தமாக   ஓடி   வந்து   தன்   செருப்பு   காலால்   லிங்கத்தின்   மீதிருந்த   பூக்களை   தள்ளி விட்டு   தன்   வாயில்   கொண்டுவந்த   நீரால்   ஐயனுக்கு   அபிஷேகம்   செய்து   தான்  கொண்டுவந்த    விலை   மதிக்கமுடியாத   தன்   ஆத்மார்த்த   அன்பை   சேர்த்து   செய்த   அந்த   உணவை   எல்லை இல்லா   ஆனந்தத்துடன்   படைத்தான் .  ஈசன்   அதை   சொல்லொணா   அன்புடன்   ஏற்று   கொண்டிருப்பார்   என்பதில்   ஐயமில்லை .

Wednesday 25 October 2017

இதனிடையில்   நாணனும்   காடனும்   திண்ணனின்   மாற்றத்தை   அவன்   தந்தை   நாகனிடம்   விவரமாக   கூறினர் .  பதறிப்போன   நாகன்   விரைந்து   தேவராட்டி   மற்றும்   மனைவியுடன்  காளத்தி   மலையை   நோக்கி   ஓடினான்.  என்ன   முயற்சி   செய்தும்   திண்ணன்   திரும்பி   கூட   பார்க்கவில்லை .    நாகன்   ஏமாற்றமும்   வருத்தமும்   வாட்ட   ஊர்   திரும்பினான் .     தேவராட்டியின்   மந்திரதந்திரம்   எதுவும்   அவனிடம்   பலிக்கவில்லை .  திண்ணன்   ஐயனிடம்   மனமுருக   சம்பாஷித்து   கொண்டிருந்தான் .  அவரிடம்   தான்   இரவெல்லாம்   கண்விழித்து   அவருக்கு   காவல்   இருக்கப்போவதாகவும்   அவர்   கவலை   இன்றி   நித்திரை  செய்யலாம்   என்று   கூறிக்கொண்டிருந்தான் .  அண்டங்களையெல்லாம்   தன்னுள்   வைத்து   காத்து   ரட்ஷிக்கும்   எம்பெருமானுக்கு   திண்ணன்   துணை   தேவைப்பட்டது .  இதுவும்   ஈசன்   திருவிளையாடல் .

Tuesday 24 October 2017

திண்ணன்   இரவு   முழுவதும்   கண்   இமைக்காமல்   குடுமித்தேவருக்கு   காவல்   இருந்தான் . பொழுது   விடிந்ததும்  இன்றைய   உணவிற்கு  ஐயனுக்கு     தரவேண்டுமே   என்ற   கவலை   வாட்ட   வில்லையும்   அம்பையும்   எடுத்துக்கொண்டு   வேட்டையாட   கிளம்பினான் .  வேட்டையாடிய   மிருகத்தை   பதமாக   வேகவைத்து   அதில்   அங்கிருக்கும்   தேன்  கூட்டிலிருந்து   தேனை   எடுத்து   அதில் சேர்த்து   பக்குவமாக   இலையில்   சுற்றி   எடுத்துக்கொண்டான் .  முன்   தினத்தை   போலவே   வில்வமும்   பூக்களும்   தலையில்   செருகிக்கொண்டு   வாயில்   நீர்   நிரப்பி   கொண்டு   அவசரமாக   மலையை  நோக்கி   ஓடினான் .   அதற்குள்  அங்கு   அந்தணர்   சிவகோசரியார்   அங்கிருந்த   கோலத்தை   கண்டு  திகைத்து   ஈசனை   இவ்வாறு   அசிங்கப்படுத்தியது   யார்   என்று  கலங்கியவாறு   நன்றாக   கழுவி   சுத்தம்   செய்து   தான்  கொண்டுவந்த   திரவியங்களால்   ஈசனை   வழக்கம்   போல்   கிரமமாக   பூஜை   செய்து   விட்டு   சென்றார் .             

Saturday 21 October 2017

திண்ணன்   வேகமாக   சென்று   ஆ ற்றங்கரையை   அடைந்த  போது   சட்டென்று   கோவிலில்   குடுமித்தேவர்க்கு   அந்தணர்   செய்த  பூஜை   செயல்கள்   நினைவு   வந்தது .  நீரால்   அபிஷேகம்   செய்து   பூக்கள்   சாற்றி   பூஜித்திருந்தது   நினைவு   வந்தது . கையில்   இறைவன்   பசியாற   வெந்த   மாமிசம்   இருந்தது .மறறொரு   கையில்   வில்   இருந்தது    மற்ற   வில்வஇலை   புஷ்பம்   இவைகளை   எப்படி   எடுத்து   செல்வது .  ஒரு   நொடியில்   முடிவு   செய்தான் .  பூக்களையும்   வில்வ இலைகளையும்   பறித்து   தன்   தலை   முடியில்   செருகி   கொண்டான் .   ஆற்று   நீரை   தன்   வாயில்   உறிஞ்சி   கொண்டான் .   எல்லாம்   தயார்   என்று   மகிழ்ச்சியுடன்  மலையை   நோக்கி   தாவித்தாவி   பரபரப்புட ன்  ஓடினான் .  ஐயன்   தனியாக   இருப்பாரே   என்ற   ஆதங்கம்   அவனை   வாட்டியது .  வேகமாக   மலையை   அடைந்து   குடுமித்தேவரை   கண்ட   ஆனந்தபரவசம்   அடைந்தான் .கூடவே   அளவு   கடந்த   துக்கம்  இத்தனை   நேரம்   இந்த   காட்டு   மிருகங்கள்   ஏகமாக   நடமாடும்   இந்த   பயங்கர   வனத்தில்   தனியாக   எப்படி   இருந்தாய்   என்று   துக்கத்தோடு   வெகுவாக   அரற்றினான் .  தன்  செருப்பு   காலால்   ஐயன்   மேலிருந்த   புஷ்பங்களை   தள்ளிவிட்டு   தான்   வாயில்   கொண்டுவந்திருந்த   நீரால்   ஈசனுக்கு   அபிஷேகம்   செய்து   விட்டு   பூக்களை  சாற்றிவிட்டு   கொண்டுவந்திருந்த   மாமிசத்தையும்   படைத்து   விட்டு   ஐயனுக்கு   இரவு   தான்   தூங்காமல்   காவல்   இருக்க   போவதால்   பயமின்றி      பசியாறிவிட்டு   இருக்கும்படி   கூறினான் .  அவனுக்குத்தான்   அவரை   பற்றி   எத்தனை   கவலை .  

Thursday 19 October 2017

திண்ணன் ஈசன்   பசியோடு   இருப்பார்   என்கின்ற   அளவிடமுடியாத   பரபரப்பில்   செயல்பட்டு   கொண்டிருந்தது   மற்ற   இருவருக்கும்   ஆச்சர்யம்   அளித்தது . நாணன்   கூறியது   போல்   திண்ணன்   மாறித்தான்   போயிருந்தான் .  ஐயன்   இருட்டில்   தனிமையில்   வாடிக்கொண்டிருப்பார்   என்ற   நினைவே   அவனை   வெகுவாக   வாட்டியது .   வேகமாக   வேகவைத்த   பன்றி  மாமிச   துண்டுகளை   இலையில்   சுற்றி   எடுத்துக்கொண்டு   கிளம்ப   யத்தனித்தான் .  மற்ற   இருவரும்   தம்   கூட   வந்த   வேடுவர்கள்   காத்திருப்பார்கள்.  ஊர்   திரும்ப   வேண்டும்   என்று   நினைவு   படுத்தினார்கள் .  திண்ணன்   காதில்   வாங்கி   கொள்ளவே   இல்லை .  மலையை   நோக்கி   வேகமாக   ஓட   துவங்கினான் .