Tuesday 30 April 2019

செங்காட்டங்குடி மேய   சிறுத்தொண்டர்க்கும்   அடியேன் |

சோழநாட்டில்   செங்காட்டங்குடி   என்று   ஓர்   ஊர் .  அங்கு   மாமாத்தியர்   குலத்தில்   பிறந்த   பரஞ்சோதி   என்பவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   ஆயுர்வேதம்   மற்றும்   வடமொழியிலும்   தேர்ச்சி   பெற்றவர் .  இது   தவிர   குதிரை   ஏற்றம்   வாள்  வித்தை   போன்ற   போர்   கலைகளிலும்   வல்லமை   பெற்றிருந்தார் .  எல்லாவற்றிற்கும்   மேலாக   அவர்   சிவபெருமானிடம்   அளவிலா   பக்தி   கொண்டவர் .  சிவனடியார்களை   அன்புடன்   நேசிப்பவர் . இத்தனை   பெருமை   வாய்ந்த   அவர்   பல்லவ   மன்னனை  கவர்ந்ததில்   ஆச்சர்யம்      ஏதும்   இல்லை .

Monday 29 April 2019

சீர்கொண்ட   புகழ்வள்ளல்   சிறப்புலிக்கும்   அடியேன் |

சோழநாட்டில்   திருவாக்கூர்   என்றொரு   தலம் .  அங்கு   அந்தணர்   குலத்தில்   பிறந்த   சிறந்த   சிவபக்தர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .   அவருக்கு   சிறப்புலியார்   என்பது    பெயர் .   அவர்   சிவனடியார்களிடம்   பெரும்   மரியாதை   வைத்திருந்தார்  அவர்களை     அன்புடன்   வரவேற்று   தம்   இல்லத்தில்   இருத்தி  அமுது   படைப்பதுடன்   அவர்கள்   தேவை   அறிந்து   அவர்கள்   உபயோகத்திற்காக   பொருள்கள்   அனைத்தும்   வழங்குவார் .   சதா   பஞ்சாக்ஷரம்   ஓதிக்கொண்டே  . இருப்பார் .   பலகாலம்   தொண்டுகள்   பலபுரிந்து   பெயருக்கு   ஏற்றவாறு   சிறப்போடு   வாழ்ந்து   பின்   சிவனடி   சேர்ந்தார் .

Saturday 27 April 2019

அவர்   தொடர்ந்து   அவ்வாறே   கற்களால்   அர்ச்சனை   செய்து   பெரும்   ஆனந்தம்   அடைந்தார் .   ஒரு   நாள்   அவர்   கல்லெறிய   மறந்து   உணவு  அருந்த   அமர்ந்தார் .   சட்டென்று   அவருக்கு   கல்லெறியாமல்   அமர்ந்தது   நினைவுவர   உடனே   சிவலிங்கத்தை   தேடி   ஓடி   வந்தார் .  அவர்   வந்ததும்   ஈசன்   உமை   அன்னையுடன்   அவருக்கு   காட்சி   அளித்தார் .  சாத்தனார்   மெய்சிலிர்த்து   போனார் .  தன்னை   மறந்து   ஆனந்த   கூத்தாடினார் .  கருணை   வள்ளலான   எம்பெருமான்   அவரை   தன்னிடம்   அழைத்துக்   கொண்டார் .   கல்லால்   அடித்து   தன்னை   அர்ச்சித்தவரையும்   ஏற்றுக்கொள்ளும்   வள்ளல்   எம்பிரான் .  அவர்   கருணை   எழுத்தில்   அடங்கா 
சாத்தனார்  சிவலிங்கத்தை   தேடி   கடைசியில்   ஈசன்   அருளால்   அருகில்   ஒரு   லிங்கத்தை   கண்டுபிடித்தார் .  அவருக்கு   ஆனந்தம்   தாளவில்லை ,  மகிழ்ச்சியி,  மகிழ்ச்சியில்   கூத்தாடினார் .  கீழே   கிடந்த   சிறு   சிறு   கற்களை   வீசி   லிங்கத்தின்   மேல்   எறிந்து   கல்லால்   அருச்சனை   செய்து   ஆனந்தம்   அடைந்தார் .   பித்தனைப்போல்   கூத்தாடினார் .    தாம்   கல்லால்   அர்ச்சனை   செய்ய   தூண்டப்பட்டது   எவ்வாறு   என்று     யோசித்தார்    . ஐயன்   சித்தம்   அதுதான்   இருக்கும்   என்று   மனசமாதானம்   அடைந்தார் .  இனியும்     அவ்வாறே   செய்ய   முடிவு   செய்தார் .

Friday 26 April 2019

வார்  கொண்ட   வனமுலையாள்   உமைபங்கன்   கழலே
 மறவாது   கல்லெறிந்த   சாக்கியர்க்கும்   அடியேன்

திருச்சங்கமங்கை   எனும்   ஊரில்   வேளாளர்   குலத்தில்   பிறந்த   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவருக்கு   ஒரே   லக்ஷியம்   பிறப்பு   இறப்பு   இல்லாத     நிலை   அடைய   வேண்டுமென்பதே .   அதற்காக   ஊர்   ஊராக   சென்று   பல   சமய   நூல்களை   அலசி   ஆராய்ந்தார் .   அப்படி   ஆராயும்போது   காஞ்சி   அடைந்து   பௌத்த   சமயத்தில்   சேர்ந்து   சாக்கியனாகி   புத்த   சமயத்தை   ஆராய்ந்தார் .   அவருக்கு   அதிலும்   மன   அமைதி   கிடைக்க வில்லை .  கடைசியாக   சிவபெருமான்   அருளால்     ஈசன்   காலை   பற்றித்தான்    தன்னுடைய   எண்ணம்    நிறைவேறும்   என்று   முடிவுக்கு   வந்தார் .  அவர்   தன்   கோலத்தை   மாற்றவில்லை .   ஐயனுக்கு   எல்லா   தோற்றமும்    சமமே   மனம்   அவரிடம்   லயித்தால்   போதுமென்று   முடிவு   செய்தார் .   சிவலிங்கத்தை   தரிசிக்காமல்   உணவு   உண்பதில்லை   என்று   முடிவு   செய்தார் .  அந்த   வைராக்கியத்தில்   உறுதியாக   இருந்தார் .  

Wednesday 24 April 2019

அம்பரான்   சோமாசிமாறனுக்கும்   அடியேன் |
சோழ   நாட்டில்   திரு  அம்பர்   என்றொரு   ஊர் .  அங்கு 
சோமாசிமாறர்   என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  சிவனடியார்களிடம்   மிகுந்த   பக்தி   கொண்டவர் .  அடியார்க்கு   அடியாராக   தம்மை  எண்ணிக்கொண்டு   அவர்களுக்கு  சேவை   செய்து   வந்தார் .  பஞ்சாக்ஷ்ரத்தை   சதா   ஓதிக்கொண்டிருப்பார் .   அடியார்களிடம்   எந்த   பேதமும்   பார்க்க  மாட்டார் .  எல்லோரையும்   சிவ   சொரூபமாகவே   பார்ப்பார் .   மலர்ந்த   முகத்தோடு   வரவேற்று   அமுது   படைத்து   மகிழ்விப்பார் .   தம்பிரான்   தோழனான   சுந்தரர்   பெருமையை   கேள்விப்பட்டு   அவர்மீது   அளவிலா   பக்தி   கொண்டு   ஆரூர்   சென்று    அவருக்கு   தொண்டுகள்   பல   புரிந்தார் .  முடிவில்   ஈசன்   திருவடி    அடைந்தார் .    

Monday 22 April 2019

தொண்டை   நாட்டில்   திருவேற்காடு   என்றொரு   இடம் .  அங்கு  வேளாண்குடி   தலைவர்   ஒருவர்   இருந்தார்   அவர்   சிறந்த   சிவபக்தர் .  சிவனடியார்களுக்கு   அமுது   படைப்பதை   தன்   பெரும்   தொண்டாக   செய்து   வந்தார் .   அவர்களுக்கு   அமுது   செய்வித்து   கடைசியில்   தான்   அவர்    உணவு   அருந்துவார் .   அடியார்கள்   கூட்டம்   நாளுக்கு   நாள்   அதிகரித்தது .   ஆனாலும்   மனம்   கோணாமல்   தொண்டை   தொடர்ந்தார் . தன்   சொத்துக்களையெல்லாம்   விற்று   தொண்டை   தொடர்ந்தார் .  அனால்   அவையும்   தீர்ந்தது .  ஆனாலும்   அவர்   தளரவில்லை.   அவர்   சூதாட்டத்தில்   வல்லவர்   சூதாடி   பணம்   சம்பாதித்து   அறப்பணியை   தொடர்ந்தார் .  அவர்    தொடர்ந்து   வென்றதால்   அவருடன்   சூதாட   யாரும்    தயாராக   இல்லை .  அவர்   ஆதனால்   பக்கத்திலுள்ள   சிவாலயங்களுக்கு   சென்று   அந்த            ஊர்களில்   ஆடி   அங்குள்ள   அடியார்களுக்கு    அமுது   படைத்து   மகிழ்ந்தார் .  ஆனால்   விதி   யாரை   விட்டது .   அவர்   திருக்குடந்தை   வந்து   சேர்ந்தார் .  அங்கு   அவர்   தோல்வி   காண   ஆரம்பித்தார் .  இருந்தும்   மனம்   தளராமல்   ஆடி   வெற்றி   கண்டார் .   எதிராளிகள்   அவருடன்   தகராறு   செய்ய   ஆரம்பித்தனர்  .  அவர்   எதிரிகளை   வாள்   தாக்கி   பணிய   வைத்தார் .  அதனால்   அவர்க்கு   மூர்க்கர்   என்ற   பெயர்   நிலைத்தது .  அவ்வாறே   தொண்டு   செய்தே  வாழ்ந்து   ஈசன்   அடி   சேர்ந்தார் .    

Thursday 18 April 2019

மனமுடைந்த   அடிகள்   ஆலயம்   சென்று   தியாகேசரி டம்     தம்   மனவருத்தத்தை   சொல்லி   புலம்பினார் .  துக்கத்துடன்   மடம்   சென்று   உறங்கினார் .  இரவு   அவர்   கனவில்   ஈசன்   தோன்றி   அன்பனே     கவலை   வேண்டாம்   உமக்கு   கண்   அளிப்போம்   என்று   கூறினார் .  ஈசன்   மன்னருடைய   கனவில்   தோன்றி   'மன்னா   எம்பக்தன்   எமக்கு   பணிபுரியும்   போது   சமணர்கள்   அவனை   தடுத்து   அதோடு   மிகவும்   அவமானம்   செய்து   விட்டனர் .   பக்தனின்   உள்ளம்   அறிந்து   அவனுக்கு   நீதி   வழங்கு'  என்று   கூறினார் .  உடனே   மன்னன்   புறப்பட்டு   தண்டியடிகளை   காண  வந்தார் .  அடிகள்   அரசனிடம்   நடந்ததை   அப்படியே   சொல்லி   தனக்கு   கண்   வந்து   அவர்கள்   கண்களை   இழந்தால்   ஊரைவிட்டே   சென்று   விடுவதாக   கூறியதையும்      தெரிவித்தான் .   சமணர்களும்   அவ்வாறு    தாங்கள்   சொன்னதை   ஒப்பு   கொண்டனர் .    அன்று    அடிகள்   கண்ணீர்மல்க    ஐயனை    துதித்தார் .   அப்போது   அந்த   அதிசயம்   நேரந்தது .   அடிகள்   தம்   கண்ணொளியை   பெற்றார் .  அதே   நேரத்தில்   சமணர்கள்   தங்கள்   பா ர்வை     இழந்தனர் .   மன்னர்   தன்   ஆட்களை   விட்டு   சமணர்களை            வெளியேற்றினார் .   தண்டி   அடிகள்   பலகாலம்   ஈசனுக்கு   தொண்டு   செய்து   கொண்டு      வாழ்ந்து      பிறகு    தியாகேசரின்   பாதாரவிந்தம்           சேர்ந்தார் .    

Tuesday 16 April 2019

தண்டி அடிகள்   அவ்வாறு   குளத்தை  ஆழமாக்க   முனைவதை   கண்ட   சமணர்கள்   பொறுக்காமல்   அவரை   அவ்வாறு   தோ ண்டுவதால்   புழு   பூச்சிகள்    இறக்கும்   ஆதலால்     அவர்   தோண்டுவதை    நிறுத்துமாறு   கூறினர் .   அதற்கு     அடிகள்   ஐயனுக்கு   சேவை   செய்யும்போது    அது    பாவமாகாது    என்று   கூறிவிட்டு   வேலையை   தொடர்ந்தார் .   அவர்கள்   மீண்டும்   மீண்டும்   அவரை   எச்சரித்தனர் .  இவர்  அதை   பொருட்படுத்தாமல்   தொடர்ந்தார் .   அவர்கள்   கோபமடைந்து   கண் தான்   குருடு    என்றால்   காதும்   செவிடு   போலும்   என்று   ஏளனம்   செய்தனர் .  அவர்   மனம்   பொறுக்காமல்   'மூடர்களே   நான்   மனக்கண்ணால்   ஐயனை     தினம்   காண்கின்றேன் .  அதை   அறியாமல்   ஏளனம்   செய்கிறீர்கள் .  நாளை   எனக்கு  கண்  கிடைத்து   உங்கள்   கண்   போனால்   என்ன   செய்விர்கள் ?'      என்று   மிக   வேதனையுடன்   கேட்டார் .  அவர்கள்   அப்படி  ஆனால்    நாங்கள்   இந்த   ஊரை   விட்டே   சென்று       விடுவோம் .  என்று     பதில்      உரைத்தனர் .    

Monday 15 April 2019

நாட்டமிகு   தண்டிக்கும்    மூர்க்கர்க்கும்   அடியேன் |     

திருவாரூரில்    தண்டி   அடிகள்   என்றொருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   பிறவி   குருடர் .  சிறந்த   சிவபக்தர் .   மனக்கண்களாலேயே   ஈசனை   உளமார   கண்டு   சேவிப பார்.  பஞ்சாக்ஷ்ரம்   ஜபித்தபடியே   இருப்பார் .  அக்கோயிலின்    திருக்குளம்   கமலாலயம் .    அவ்வூரில்   சமணர்கள்   அதிகம் .  கமலாலயத்தின்      மேற்கு   கரையில்   அவர்கள்   ஆக்ரமித்து   கொண்டு   இருந்தார்கள்.   அதனால்   திருக்குளம்   தூர்ந்து   குளம்   சிறியதானது .    சமணர்களை   அவரால்   ஒன்றும்     செய்ய   முடியாது .  என்பதால்    ஆழமாக்க  தூர்வார    முனைந்.தார் .   கண்    தெரியாத    காரணத்தாஅந்த ல்    குளத்தில்   ஒருகம்பை   நட்டு   அதில்   ஒரு   கயிற்றை     கட்டி     அந்த   கயிற்றின்   மறு முனையை    கரையில்   இன்னொரு    கம்பு   நட்டு    அதில்  கட்டினார் .   அக்கயிற்றை   பிடித்து   கொ ண்டே   குளத்து   மண்ணை   தோண்டி   கரையில்   கொட்டி   தன்   வேலையை   தொடர்ந்தார் .

Saturday 13 April 2019

யோகியார்   மாடுகளை   அவையவை   இடங்களில்   சேர்த்துவிட்டு   ஒருமடத்தில்  த்யானத்தில்   அமர்ந்து   விட்டார்.   மூலனின்   மனைவி   எவ்வளவு   அழைத்தும்      அவர்   அசைவதாக   இல்லை .  அவள்   ஊர்மக்களிடம்   உதவி   கேட்டு   அழுதாள் .  அவள்மேல்   இரக்கம்கொண்டு   மக்கள்   அவரை   அழைக்க   சென்றனர் .  ஆனால்   அவர்   நிலையை   கண்டு   அவனை   த்யானத்திலிருந்து   எழுப்புவது     சாத்தியமில்லை   என்று   தெரிந்து  கொண்டு   மூலன்   மனைவியை   சமாதானம்   செய்து   அதுதான்   விதி   என்று   ஏற்றுக்கொள்வது   தவிர   வேறு   வழியில்லை   என்று   கூறினர். யோகியார்  தன்   உடலை   ஒளித்து   வைத்த   இடத்தில்   தேடினார் .   அது   காணாததால்   அதுதான்   விதி   என்று   முடிவு   செய்து   தாம்   நந்திதேவரிடம்   கற்ற   ஆகமங்களை   தமிழில்   மக்களிடம்   சேர்க்கவேண்டியது   கடமை     என்று   முடிவு   செய்து   ஆவடுதுறை   சென்று இறைவன்    ஆலயத்தில்   ஒரு   மூலையில் அரச  மரத்தின்கீழ்   அமர்ந்து  வருடத்திற்கு   ஒரு   பாட்டாக   மூவாயிரம்   பாடல்களை    திருமந்திரம்    என்று   தொகுத்து    உலகுக்கு   ஈன்று   பெரும்    பேறு   பெற்று    பின்   சிவபெருமானிடம்   இரண்டற    கலந்தார் .   இவ்வாறு    திருமந்திரம்   எனும்   பொக்கிஷம்   நாம்   பெற்றோம் .       

Friday 12 April 2019

யோகியார்    வழியில்   ஒரு   கிராமத்தில்    ஒரு   இடையன்   இறந்து   கிடந்ததையும்   அவனை   சுற்றி     மாடுகளும்   கண்ணீர்   மல்க   கதறிக்கொண்டு   இருந்தன .   தினம்   அவைகளை  மேய்ச்சலுக்கு   அழைத்து   வருவான்   போலும் .   ஆவினங்கள்   அவன்   மேல்   உயிரை வைத்திருக்கும்    போல்   தோன் றுகிறது .   விதிவசத்தால்   அவன்   இறந்து   விடவே   மாடுகள்   கண்ணீர்   விட்டு   கதறிக்கொண்டிருந்த ன .   அதை   கண்ட   யோகியின்   மனம்   உருகியது .  அவன்   உயிர்   பிழைத்தால்தான்   அந்த   ஆவினங்கள்   மனசாந்தி   அடையும்   என்று   முடிவு   செய்து   தன்   உயிரை   அந்த   உடலில்   கூடுவிட்டு   கூடுபாயும்   யோக   சக்தியால்   செலுத்தினார் .  அந்த   வாயில்லா   ஜீவன்கள்   அடைந்த   ஆனந்தம்  சொல்லில்   அடங்காது .  தன்    உடலை   ஒரு   மறைவான   இடத்தில்   கிடத்திவிட்டு   மாடுகளை   அவைகள்   இடங்களில்   சேர்த்தார் .  அங்கு   இறந்த   இடையன்   மூலன்   என்று  அறிந்து   கொண்டார் .   

Thursday 11 April 2019

நம்பிரான்   திருமூலன்   அடியார்க்கு   அடியேன் | 

இமய   மலையில்   கைலாசத்தில்   நந்திதேவரிடம்   ஆகமங்கள்   பயின்று   அவர்   அருள்   பெற்ற   யோகிகள்   பலர்   அதில்   ஒருவர்   அகத்தியரிடம்   கல்வி   பயில   தென்னாடு   நோக்கி   புறப்பட்டார் .   அவர்   கைலாயத்திலிருந்து   கேதாரம்    நேபாளம்   பசுபதிநாதர்   கோயில்   கங்கை   கரை   வந்து   காசி   விஸ்வநாதரையும்      சேவித்து   கொண்டு   தென்   திசை   நோக்கி   பயணமானார் .   ஸ்ரீசைலம்,  காளஹஸ்தி    முதலிய   தலங்களை   சேவித்து   கொண்டு   தில்லை   வந்தடைந்தார் .   அங்கு          அம்பலக்கூத்தனின்   ஆனந்த   நடனம்   கண்டு   களித்து     தென்திசை   நோக்கி   வந்தார் .      காவிரியில்   நீராடி   திருஆவடுதுறையை   அடைந்து   அங்கு   ஐயனை      சேவித்து   கொண்டு   பயணம்   தொடர்ந்தார் .   அ  வர்    வழியில்    கண்ட    காட்சி   அவர்   உள்ளத்தை   உருக்கியது .      

Tuesday 9 April 2019

சுந்தரரை   கண்ட   அம்மையார்   அவரை   அவமதிக்க   மனம்   வராமல்   அவரை   வரவேற்று   அமரச்சொல்லி    தன்   கணவர்   பூர்ண   குணமடைந்து   உறங்குவதாக   கூறினாள் .  சுந்தரர்   ஈசன்   குணமாக்க   தம்மை   அனுப்பி   இருக்கும்போது   அவர்   எவ்வாறு   குணமாகி   இருக்க    முடியுமென்று   சந்தேகப்பட்டு    நான்   அவரை   கண்டே   ஆகவேண்டும்   ஈசன்   கட்டளை   என்று   கூறி   வற்புறுத்தினார் .   அம்மையார்     மீற     முடியாமல்   அவரை   உள்ளே   அழைத்து   சென்றார் .   அவர்   உடலை   கண்ட   சுந்தரர்   கலங்கி   போனார் .   ''ஐயனே  என்னை   காண   மாட்டேன்   என்ற    அவருடைய   சபதத்தை   அவர்     நிறைவேற்றிக்கொள்ள    நீ   எவ்வாறு   அனுமதித்தாய் ?''  என்று   மிக   துக்கத்தோடு   வினவினார் .  கலிக்காமர்   இறந்த   பிறகு   நான்   வாழ்வதில்   பொருளே   இல்லை .  நானும்   வருகிறேன் .  என்று   கூறி   உடை  வாளை    உருவினார் .   அப்போது   கலிக்காமர்   உறக்கத்திலிருந்து    எழுந்தவர்போல்   சுந்தரர்   கையிலுருந்து   வாளை         பிடுங்கி   எறிந்துவிட்டு   அவர்   காலில்  விழுந்தார் .  இறைவனின்   பேற ன்பிற்கு   பாத்திரமான    தங்களை   நான்   புரிந்து   கொள்ளாமல்   தவறு   செய்து   விட்டேன் .  என்னை   மன்னியுங்கள்   என்கிறார் .  சுந்தரர்   அவரை   நெஞ்சார   தழுவிக்கொண்டார் .   இருவரும்   சேர்ந்து   ஆரூர்   சென்று   அங்கு   தங்கி   இருந்து   விட்டு    கலிக்காமர்  ஊர்    திரும்பினார் .   கலிக்காமர்  பக்தி  நெறி  தவறாது   சில காலம்   வாழ்ந்து   பிற கு   சிவபதம்   அடைந்தார் .

Monday 8 April 2019

சுந்தரர்   ஈசன்   கட்டளையை   சிரமேற்கொண்டார் .  அவர்   வரப்போகும்   செய்தி   அறிந்த   கலிக்காமர்   ''எத்தனையோ   தவமியற்றிய   ஞானிகளுக்கும்   எட்டாத   பரம்பொருளை   வேலைக்காரனாக   நடத்திய   அவனை   கண்டால்   உயிரோடு   விடமாட்டேன் .   சிவனடியாரை   கொன்ற   பாவம்    செய்வதை   விட   உயிரை   விடுவதே   மேல்   என்று   முடிவு   செய்து   தன்   உடைவாளை   எடுத்து   தன்னை   மாய்த்துக்கொண்டான் .  கணவன்   இறந்தபின்   தான்   வாழ   விரும்பாத   கலிக்காமரின்   மனைவி   தன்னை   மாய்த்துக்கொள்ள   எத்தனித்தாள் .  அதற்குள்   சுந்தரர்   அங்கு   வந்தார் .   
கலிக்காமர்   மிக்க   வேதனைக்கு   உள்ளானார் .  அப்போது   ஈசன்   அவர்   கனவில்   தோன்றி   'அன்பனே   இந்நோய்   சாதாரணமாக    தீரக்கூடியது   அல்ல .   ஆரூரில்   உள்ள   என்   அன்பன்   வன்தொண்டனால்   மட்டுமே   தீர்க்க   முடியும் '  என்று   கூறினார் .  இதை   கேட்ட   கலிக்காமர்   மிக்க   வேதனையுடன்  'ஐயனே! இதென்ன   கொடுமை   பரம்பரையாக   உன்னையே   வழிப்பட்டு   வரும்   குடும்பத்தில்   வந்த   என்னை   வாட்டும்   நோயை   தீர்க்க   உன்னிடம்   வாதிட்ட    அந்த   வன்தொண்டன்   தான்   சிகிச்சை   செய்ய   வேண்டுமா ?  உன்னை   வீதியில்   அலையவிட்ட   அவனும்   ஒரு   தொண்டனா ?  அவன்   கையால்   குணமாகி   வாழ்வதை   விட   இந்த   உயிரை   விடுவதே   மேல் '  என்று   புல ம்பினார்.  ஈசன்   சுந்தரர்  முன்   தோன்றி   'என்   அன்பன்   கலிக்காமன்  நம்   திருஉள்ளத்தால்   சூலை   நோயினால்   வருந்துகிறான் .  அதை   தீர்த்து   வை '  என்றார் .

Saturday 6 April 2019

கலிக்காமருக்கு   நெஞ்சம்   ஆறவேயில்லை .  எவ்வாறு   ஐயனை   இவ்வாறு  காலத்  தேய   தெருவில்   நடக்க   வைப்பார்  .  இந்த   எண்ணம்   அவரை    வெகுவாக   வாட்டியது .   எல்லோரிடமும்   சொல்லி   சொல்லி   புலம்பினார் .    அவருக்கு   ஆறவேயில்லை .  அவரை   கொல்ல   வேண்டும்    என்ற   வெறி.  இதை   உணர்ந்த   சுந்தரர்   மிக்க   துயரம்      அடைந்தார் .  தினமும்   ஆரூர்   ஈசனிடம்   சொல்லி      மாய்ந்து   போனார் .  ஆரூரருக்கு   தன்   பக்தன்   படும்    துயரம்    பொறுக்கவில்லை .   சுந்தரர்   ஆரூரரிடம்   உள்ள   பெரும்   அன்பினால்   சலுகை   மிக   எடுத்துக்கொண்டு   வன்தொண்டர்   ஆனார் .  ஆனாலும்   அவருக்கு   ஈசன்   அடியார்களிடம்   மிக்க   மதிப்பு   உண்டு .   அவ்வாறு      இருக்க   தம் மீது   இப்படி   பழி   ஏற்பட்டதை   அவரால்   தாங்கிக்கொள்ளவே    முடியவில்லை .   ஐயனிடம்   புலம்பினார் .  ஐயன்   மனம்   இறங்கியது .  அவர்   தம்   பக்தர்களிடையே      ஏற்பட்ட   இந்த   பிணக்கை   நீக்க   எண்ணம்   கொண்டார் .  கலிக்காமருக்கு    சூலை   நோயை    வர   செய்தார் .  அவர்   நோயின்   வேதனையால்   மிக   நொந்து போனார் .  

Friday 5 April 2019

சோழநாட்டில்     திருப்பெருமங்கலம்   என்று   ஒரு   ஊர் .  அங்கு   வாழும்   வேளான்குடி   மரபில்   ஏயர்குடி என்றொரு     பரம்பரை .  அவர்கள்   மன்னரிடம்   சேனாதிபதி   பதவி   வகிப்பவர்கள் .  அதை    சேர்ந்தவர்   கலிக்காமர் . அவர்   சிறந்த   சிவபக்தர் .   அவர்   பக்கத்திலுள்ள   திருப்புன்கூர்   ஆலயத்திற்கு   நிறைய   திருப்பணிகள்   செய்துள்ளா ர் .   பக்கத்தில்   கஞ்சானுரில்    வசிக்கும்   மானக்கஞ்சாறர்    மகளை   மணந்து   கொண்டு   இனிய   இல்லறம்   நடத்தி   வந்தார் .     அப்போது   ஆரூரில்    சுந்தரர்     ஆரூரரின்    அருமை   தோழனாக   பெருமை   பெற்று   வாழ்ந்து   வந்தார் .    சுந்தரருடைய     பக்தி   வர்ணனைக்கு   அப்பாற்பட்டது .  ஒரு   முறை   அவருக்கும்   அவர்   மனைவி   பரவை   நாச்சியாருக்கு   ஏற்பட்ட   பிணக்கை   தீர்க்க   ஆரூர்   தெருவில்   நடந்து    தூது     சென்றார்   எம்பெருமான் .   அந்த   செய்தியை   கேள்விப்பட்ட      கலிக்காமர்   எல்லையில்லா       சீற்றம்   அடைந்தார் .    அவரை   கொலை   செய்ய   கூட    தயாரானார் .    உலகமெல்லாம்  போற்றிப்பணியும்   எம்பிரானை   மனைவியுடனான   பிணக்கை   தீர்க்க   தூது   அனுப்ப   எப்படி     துணிந்தான் .என்று   அவன்   மரண   தண்டனைக்கே   ஏற்றவன்   என்று   கர்ஜனை   செய்தான்.      

Wednesday 3 April 2019

சம்பந்தப்பெருமான்   இவ்வுலகத்திற்கு   தாம்   பிறப்பெடுத்து   வந்த   காரணமான   பெரும்   சாதனைகளை   சிறு   வயதிலேயே   சாதித்து   தாம்   கடமைகளை   செவ்வனே    முடித்து விட்ட   நிறைவோடு   ஈசனை   அடைந்தார் .   தாம்   மட்டும்      அல்லாமல்   தன்னை   பின்பற்றி   வந்த  எல்லா    அடியார்களையும்   தம்முடன்   சேர்ந்து   ஐயனுடன்   இரண்டற    கலக்க   செய்கிறார் .   தேவர்கள்    மலர் மாரி    பொழிய    வேத   கோஷங்கள்  முழங்க   ஜோதியில்   எல்லோரும்    கலந்தனர் .    வேத   கோஷங்கள்      மலர்  மாரி    முடிந்த   பொழுது   சன்னதி   காலியாக   இருந்தது .   எம்பருமான்   அமைதியாக   பெருமிதத்துடன்   காட்சி   அளித்தார் .     வாழ்க    சம்பந்தப்பெருமான்   புகழ் .      

Tuesday 2 April 2019

பிள்ளையார்   நல்லூர் வருவதை     கேட்டு   ஊர்    மக்கள்   திரளாக   அவரை   தரிசிக்க   வந்தனர் .     ஊரெல்லாம்   அலங்கார   பந்தல்களாலும்   தோரணங்களால்     அலங்கரிக்க   பட்டது .    காழிப்பிள்ளை   நீராடி    புத்தாடை   அணிந்து மாப்பிள்ளை   கோலம்   தரித்து    வந்தார்.    நம்பியாண்டார்  நம்பியும்   அவர்   மனைவியும்   அவரை   ஈசனாக   பாவித்து   ஆசனத்தில்    அமரச்செய்து   பாலால்   கால்   அலம்பி   மரியாதை   செய்து   மகளை    கன்னியாதானம்   செய்தனர் .    நீலநக்கர்    நீலநக்கர்        வைதீக   சம்பிரதாயங்களை    செய்து   வைத்தார் .    திருமண   தம்பதிகள்    அக்கினியை   வலம்   வந்தனர் .   சம்பந்தர்   'இறைவா   இவளுடன்   சேர்ந்து   நான்   உன்   திருவடியை   அடையவே   விரும்புகிறேன் '  என்று   மனமுருக   பிரார்த்தித்தார் .      பிறகு      ஆலயம்    சென்றனர்  .  அங்கு   'நல்லூர்   பெருமணம் '    எனும்   பதிகம்  பாடி      வணங்கினார் .   அப்போது      அதிசயிக்க     வகையில்    பெரும்   ஜோதி    தோன்றியது .   ஒரு      அசரீரி   வாக்கு   'வந்திருந்த   விருந்தினர்   அனைவரையும்       அஜ்ஜோதியில்   புகுந்து    தன்னிடம்   வந்து   சேருமாறு   கூறியது .  எல்லோரும்   மகிழ் ச்சியுடன்   ஜோதியில்       கலந்தனர் .   பிறவி  பற்று   அறுந்தது .     பிறகு   தம்   மனைவி    கரம்   பற்றி     காதலாகி   கசிந்து   எனும்   பதிகம்   பாடி   ஜோதியில்   கலந்து ஈசனுள்   ஐக்கியமானார் .                  

Monday 1 April 2019

சிவபாதவிருதயர்   தம்   உறவினர்களுடன்   மறுநாளே   நல்லூர்   புறப்பட்டார் .நம்பிகளுக்கு   அவர்கள்   வந்த  செய்தி   அறிந்ததும்   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தார் .     ஞானப்பாலுண்ட    அப்பெருமகனை   பற்றி   அவர்   அறிந்திருந்ததால்   அவர்    தம்   மகள்   கொடுத்து   வைத்தவள்  என்று   பெருமிதம்    அடைந்தார் .     அவர்களை   மிக்க   மகிழ்ச்சியுடன்   தம்   சுற்றத்தாருடன்   வரவேற்றார் .  மணம்   பேசி   முடித்து   சம்பந்தரின்   தந்தையார்   ஊர்   திரும்பினார்.     புரோதிகர்களை    கலந்து   பேசி   முகூர்த்த    நாள்   நிச்சயித்தார் .  தோணிபுரமே   விழாக்கோலம்   பூண்டது .  நீலநக்கர்   முருகனார்   எல்லோரும்   திருமணத்தில்   கலந்து   கொள்ள   தோணிபுரம்   வந்து   சேர்ந்தனர் .   திருமண   நாள்   நெருங்கியது .   விதிப்படி  காரியங்கள்    செய்து   முடித்துக்கொண்டு    சம்பந்தர்   ஆலயம்   சென்று    தோணியப்பரை   சேவித்து   கொண்டு    சுற்றத்தாருடன்  நல்லூர்    பயணமானார் .