Friday 31 March 2017

ஈசன்   கோபத்துடன்   சிறிது   நேரம்   முன்புதானே   கொடுத்து   சென்றேன் .  அதற்குள்   யார்   இதை   எடுப்பார்கள்   நன்றாக   தேடி   பாரும்    என்று   கடுமையாக   உரைத்தார் . இடிந்து   போன   அமர் நீதியார்    நன்றாக   தேடிவிட்டேன்   ஸ்வாமி  தயவு   செய்து   இதை   பெற்று   கொள்ளவும்   என்று    சொல்லி   பட்டு   கோவணத்தை   காட்டினார் .  நன்றாக   இருக்கிறதே  எனக்கு    நான்   கொடுத்து   சென்ற   துணிதான்   தேவை .   நான்   முன்பே   அது   சாதாரணமானது   அல்ல   என்று  சொன்னேன்   அதை   மறைத்து   வைத்துக்கொண்டு   நாடகமாடுகிறாயா ?   உன்னை   நம்பி   அதை   ஒப்படைத்தேன் .  என்று   கோபமாக   கத்தினார் .  அமர் நீதியார்    மிகுந்த   வருத்தமடைந்தார் .  இப்பெரும்   அபவாதத்தை   கேட்டு   மனமுடைந்து   போனார் .  ஐயா   பிறர்   பொருளுக்கு   நான்   என்றுமே   ஆசைப்பட்டதில்லை .  என்   மீது   இந்த   அபவாதத்தை   என்னால்   தாங்க   முடியவில்லை .  இதற்கு   ஈடாக   நான்   என்னிடமுள்ள   எதையும்   தர   சித்தமாக   இருக்கிறேன் .     தயை   செய்து   தாங்கள்   ஏதாவது   வழி   சொல்லுங்கள்   என்று   மன்றாடினார் .  ஈசனும்   ஒரு   துலாக்கோலை   எடுத்து   வர   செய்து   ஒரு  தட்டில்   தண்டத்தில்   கட்டி   இருந்த   மற்ற   கௌபீனத்தை     வைத்து   அதற்கு   எடையாக   பொருள்   ஏதேனும்   கொடுக்க   சொல்கிறார் .  அவரும்  மகிழ்ச்சியுடன்   வீட்டிலுள்ள   துணிகள்   எல்லாவற்றையும்   கொண்டுவர     மற்ற   தட்டில்   வைக்கிறார் .  ஆனால் ஈசன்   வைத்த   துணி   இருந்த   தட்டு   துளிக்கூட   எழும்ப வில்லை .   வீட்டிலுள்ள   மற்ற   பொருள்களை   வைக்க   சம்மதம்   கேட்டு   அவைகளையும்   வைக்கிறார் .ஆனாலும்   அந்த   தட்டு   துளி கூட   எழும்பவில்லை ..  தான்   தினம்   வணங்கும்   நல்லூர்   ஈசனை   மனதார   த்யானித்தபடி   இனி   வீட்டில்   இருப்பது   தாம்   தம்   மனைவி   தம்   குழந்தை   மட்டுமே   என்று   பெரிய   துலாக்கோலாக   வரவழைத்து   அதை   வல ம்  வந்து   அவருடைய   துணிக்கு   ஈடாக    தாங்கள்   மூவரும்   துலா   தட்டில்   அமர்கின்றனர் .  உடனே   மேகத்திலிருந்து   மலர்மாரி   பொழிகிறது .  சிவனடியார்   மறைந்து   ஈசன்   காட்சி   கொடுத்து   அம்மூவரையும்   தன்னிடம்   சேர்த்துக்கொள்கிறார் .

Wednesday 29 March 2017

ஈசன் சிரித்து   கொண்டே   சென்றார் .  அமர் நீதியார் அதை   பயபக்தியுடன்   பத்திரமாக   ஓர்   இடத்தில்   வைத்தார் .  சிறிது   நேரத்தில்   நல்ல   மழை   பெய்ய   ஆரம்பித்தது .  சிறிது   நேரத்திற்கு   பிறகு   அடியார்   வந்தார் .  தெப்பலாக   நனைந்திருந்த   அவர்   தன்னை   நன்றாக   துடைத்துக்கொண்டு   பிறகு  அமர் நீதியாரை  பார்த்து   நான்   கொடுத்து   சென்ற   கோவணத்தை   கொண்டுவர   சொல்கிறார் .  அவரும்   இதோ எடுத்து   வருகிறேன்   என்று   சொல்லி   உள்ளே   செல்கிறார் .  ஆனால்   என்ன  அதிர்ச்சி !  அவர்   வைத்த   இடத்தில்   அதை   காணவில்லை .  எங்கு   தேடியும்   கிடைக்கவில்லை .  ஈசன்    வெளியிலிருந்து   எத்தனை   நேரம்   இவ்வாறு   ஈரத்துடன்   நிற்பது   என்று   கோபத்துடன்   வினவினார் .  அமர்நிதியார்    உடல்   பதறியது .  அவரை   வெகு  நேரம்    காக்க   வைக்கவும்   முடியாது .  அவசரமாக   ஒரு  புதிய   பட்டு   கோவணத்தை   எடுத்து    வந்து   கொடுத்தார் .  பயபக்தியுடன்   மன்னிக்க   வேண்டும்    நான்   வைத்த   இடத்தில்   அதை   காணவில்லை .  எங்கு   தேடியும்   கிடைக்கவில்லை   என்று   பதற்றத்துடன்   கூறினார் 

Sunday 26 March 2017

ஈசன்   அமர் நீதியாரை   பார்த்து   நீங்கள்   சிவனடியார்களுக்கு   செய்யும்   சிறந்த   தொண்டினை   பற்றி   அதிகம்   கேள்விப்பட்டிருக்கிறேன் .  மிக்க    மகிழ்ச்சி   என்று கூறினார் .  அதற்கு   அமர் நீதியார்   இச்செல்வமும்   ஈசன்   கொடுத்தது   அதை   இவ்வாறு   அடியார்களுக்கு   அளிக்க   செய்வதும்   அவனே   ஆகவே   இச்செல்வம்   எல்லாம்   அவனடியாக்களை   சேரவேண்டியதே   என்று   பதிலுரைத்தார் .  அந்த   சமயம்   மேகம்   கறுத்து   கொண்டு   வந்தது .  உடனே   ஈசன்   ஒன்றும் இல்லை   மழை   வரும்   போல்   இருக்கிறது .  துணிகள்   நனைந்து  விட்டால்   மாற்று   ஆடை   இல்லை .  என்னுடைய   இந்த   கோவணத்தை   பத்திரமாக   வைத்திருந்து   நான்   திரும்ப  வந்து   கேட்கும்போது   கொடுத்தால்   போதும் .  அது   சாதாரண   துணி   என்று   எண்ணிவிடாதே .  என்று   சொல்லி   அவர்   தண்டத்தில்   கட்டி   வைத்திருந்த   ஒரு   கௌபீனத்தை   கொடுத்தார் ..  அவரும்   சரி   ஸ்வாமி   என்று   மரியாதையுடன்   பெற்று   கொண்டார் .

Saturday 25 March 2017

அமரநீதியார்   நல்லூரில்   அடியார்களை  சேவையில்   குறை   நேரக்கூடாது   என்ற   எண்ணத்தில்  அதை   தானே   நேரில்   கவனித்து   செய்ய   எண்ணி    தானே      குடிபெயர்ந்தார் .  இவருடைய   இவ்வறிய   சேவை   உலகறிய   செய்ய   வேண்டும்   என்று   ஈசனுக்கு    இச்சை   உண்டாயிற்று .  அன்று   நல்லூரில்   கோவிலில்   எதோ   உத்சவம் .  ஐயன்   பிரம்மச்சாரி   சிவனடியாராக   மாறி   நல்லூர்   வருகிறார் .  பிரம்மச்சாரி   கோலத்துடன்   கையில்   ஒரு   தண்டம்   அதில்   இரண்டு   காவி   கௌபீனங்கள்   கட்டி  தொங்கின .  அவரை   கண்ட     அமர் நீதியார்   மகிழ்ச்சியுடன்   வரவேண்டம்   வரவேண்டும்   என்று   வரவேற்றார் .  அவரும்   உங்களை   பற்றி   நிறைய   கேள்விப்பட்டிருக்கிறேன் .  எனக்கு   ஒரு   உதவி   தேவை   என்று   கூறினார் .

Friday 24 March 2017

அவர் வாழ்ந்த   ஊருக்கருகில்   நல்லூர்   என்னும்   சிவக்ஷேத்திரம்   இருந்தது .  அமர் நீதியார்   அங்கு   அடிக்கடி   சென்று   ஈசனை   வழிபடுவதை   வாடிக்கையாக   கொண்டிருந்தார் .  அங்கு   வரும்   பக்தர்களுக்கு   அமுது   படைப்பதை   மிக   மகிழ்ச்சியுடன்   செய்து   வந்தார் .  மேலும்   அங்கு   வரும்   அடியார்களுக்கு   ஆடையும்   கௌபீனமும்   அளிப்பதையும்   வாடிக்கையாக   கொண்டிருந்தார் .  அதற்காக   அங்கு   ஒரு   மடத்தையும்   கட்டி   வைத்தார் .  இவருக்கும்   அங்கு   அடிக்கடி   போய்வர   நேர்ந்ததால்   அவரும்   அங்கேயே   தங்கி   விட்டார் .

Thursday 23 March 2017

அல்லி   மென்   முல்லையந்தார்  அமர் நீதிக்கு   அடியேன் !
காவேரி   தீரத்தில் குடந்தைக்கு   அருகே    பழையாறை   என்னும்   ஊரில்   பெரும்   சிவபக்தர்களான   வணிக   குளத்தில்   பிறந்தவர்   அமர் நீதியார்.  சிவபெருமானிடத்தில்   அளவற்ற   பக்தி   கொண்ட   இவர்   தரும   நெறி   தவறாமல்   வாழ்ந்து   வந்தார் .  மக்களுக்கு   தேவையான   பொருள்களை   மொத்தமாக   வாங்கிவந்து     அவைகளை   மிகுந்த   குறைந்த   லாபத்திற்கு   விற்று   வந்தார் .  அதனால்   அவர்   பெருமை   அக்கம் பக்கத்து   ஊர்களிலும்   பரவி   அவர் வியாபாரம்   வெகுவாக   பரவியது .  அமர் நீதியாருக்கு     சிவனடியார்கள் பால்   மிகுந்த   பக்தி .  அவர்களுக்கு   அமுதளிப்பதை   பெரும்   பாக்கியமாக   கருதினார் .

Thursday 16 March 2017

அந்த   சிவபெருமானே   தனக்கு   தேவை   இல்லை   என்று   விறன்மிண்டர்   முழங்கியதும்   சுந்தரரை   வெகுவாக   பாதித்தது .  அதிர்ந்து   போய்   ஈசனிடம்   சரணடைந்தார் .  தடுத்தாட்கொண்ட   ஈசனே !  என்   மனமெல்லாம்   அடியார்களிடம்   உள்ளபோது   நான்   புற   வணக்கம்   செய்யாததால்   என்னை   இவ்வாறு   பழி   சுமக்க   ஆளாக்கி   விட்டாயே ?என்று   புலம்பினார் .   ஈசன்   சுந்தரா   கலங்காதே   என்னை   பாடுவதை   போல்   என்   அடியார்களையும்   பாடு   அவர்கள்   தொண்டும்   உலகம்   அறியட்டும் .  என்று   கூறினார் .  சுந்தரர்   அவர்களை   பற்றி   தனக்கு   எதுவும்   தெரியாதே   என்று   வருந்த   இறைவன்   ''தில்லை   வாழ்   அந்தணர்   தம்   அடியார்க்கு   அடியேன் "  என்று   முதலடி   தொடங்கி   கொடுத்து   பாட   சொல்கிறார் .  சுந்தரரும்   அவ்வாறே   தேவாசிரிய   மண்டபத்திற்கு   சென்று  ஒவ்வொரு   தொண்டரையும்   பெருமை   படுத்தி   சொல்லி   அவர்க்கு   தான்   அடியார்க்கு  அடியேன்   என்று   பாடுகிறார் . "விரிபொழில்சூழ்   குன்றையார்   விறன்மிண்டர்க்கு   அடியேன் "  என்று   சுந்தரர்  பாடியதும்   நெகிழ்ந்து    போன   விறன்மிண்டர்   அவர்   காலடியில்   விழுகிறார் .  ஈசனும்   மகிழ்ந்து   விறன்மிண்டரை   தன்னுடன்   சேர்த்துக்கொள்கிறார் .  இறைவன்   தன்னை   வேண்டாம்   என்று   ஒதிக்கியவரையும்   தன்   தொண்டர்களை   உளமாற    நேசித்தால்   அவர்களை   ஏற்றுக்கொள்ளும்   தன்மை   நம்மை   மெய் சிலிர்க்க   வைக்கிறது .  சுந்தரரை   சொல்லும்போது   இந்த   சம்பவம்   நாம்  கண்டிருக்கிறோம் .  இந்த   பாடலின்   பெருமையையும்   அறிந்தோம் .

Monday 13 March 2017

விறன்மிண்டர்   சுந்தரர்   அவ்வாறு   அந்த   மண்டபத்திலுள்ள   அத்தனை   அடியார்களையும்   வணங்காமல்   தாண்டி   சென்றது   அவருக்கு   பெரும்   கோபத்தை   ஏற்படுத்தியது .  கோபம்   தாளாமல்   இத்தகைய   அடியார்கள்   கூட்டத்தை   மதியாமல்   தாண்டி   சென்ற   வன்தொண்டர்   சுந்தரர்   நமக்கு   தேவை   இல்லை   என்று   சுந்தரர்   காதில்   விழுமாறு   உரக்க   சொன்னார் .   அதை   செவிமடுத்த   சுந்தரர்   அதிர்ந்து   போனார் .  மனத்தால்   தான்   அவர்களிடம்   இத்தனை   மரியாதை   வைத்தும்   புற  வணக்கத்தையே   மதித்து   அவர்   சொன்ன   சொற்கள்   அவரை   முள்ளாக   தைத்தன .  விறன்மிண்டர்   அதோடு   நிறுத்தாமல்   இவ்வாறு   செய்த   சுந்தரரை   ஆட்கொண்ட     சிவபெருமானும்   தேவை   இல்லை   என்று   உரக்க    சொன்னார் .  

Sunday 12 March 2017

இவ்வாறு   இவர்   ஈசன்   மீதும்   ஈசனடியார்கள்   மீதும்   கொண்ட   பக்தி   வளர்ந்தது .  அவருக்கு   ஈசனை   பல   திவ்ய   க்ஷேத்திரங்களுக்கு   சென்று   அங்கெல்லாம்   வழிபட   ஆவல்   எழுந்தது . காவியும்   ருத்திராக்ஷமும்   தரித்து   தல   யாத்திரை   கிளம்பி   ஈசனையும்   அடியார்களையும்   வணங்கியவாறே   சென்றார் .  பல   இடங்களில்   ஈசனை   தரிசித்து விட்டு   திருவாரூர்   வந்து   சேர்ந்தார் .  ஒருநாள்   அவர்  தேவாசிரிய   மண்டபத்தில்   அடியார்களுடன்   இருந்தபோது    சுந்தரர்  கோவிலுக்கு   வருகை   தந்தார் .        அவர்   மனமெல்லாம்  அங்கிருந்த   அடியார்களையெல்லாம்     கண்டு   மிக்க  பக்தி   மேலிட்டு   இவர்களைப்போல்   தானும்   ஆவது   எப்போது   என்ற   எண்ணம்   மேலிட்டவாறு    கருவறையை   நோக்கி   நடந்தார் .  அங்குள்ள   அனைவரும்   எழுந்து   அவருக்கு   மரியாதை   செலுத்தினர் .  விறன்மிண்டர்   எல்லோராலும்   வணங்கப்பட்ட   அவர்   யார்   என்று   வினவ  அவர்கள்   திருமணத்தன்று   எம்பெருமானால்   தடுத்தாட்கொள்ளப்பட்டவரும்   அவரால்   வன்தொண்டர்   என்று   அழைக்கப்பட்டவருமான   சுந்தரர்   என்று   பதிலுரைத்தனர்            

Friday 10 March 2017

விரிபொழில்சூழ்   குன்றையார்   விறண்மிண்டற்கு   அடியேன் !
பரசுராம   க்ஷேத்திரமான   மலை   நாட்டில்  திருச்செங்குன்று  எனும்    ஊரில்   வேளாளர்   குலத்தில்  பிறந்தவர்   விறன்மிண்டர் .  சிறு   வயது   முதலே   சிவபெருமான்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டிருந்தார் .   தினமும்   சிவாலயம்   செல்வதையும்    அவர்   நாமங்களை   சதா   உச்சரிப்பதையும்  தவறாமல்   செய்து   வந்தார் .  வயது   ஏற   ஏற   அவர்   பக்தியும்   வளர்ந்தது .  சிவனடியார்கள்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டு   அவர்களுக்கு  தொண்டு   செய்வதை  தன்   கடமையாக   கொண்டார் .   சிவபெருமானுக்கு   தன்னை   தொழுபவர்களை   விட   தன்   அடியார்களை   தொழுபவர்கள்   மீது   கருணை   அதிகம்   என்பதை   அவர்   உணர்ந்திருந்தார் . அடியார்களை   கண்டு   விட்டால்   அவர்களை   தொழுத   பின்பே   ஈசனை   தொழுவார் .

Tuesday 7 March 2017

அரசன்  உறங்கி  கொண்டிருந்தான் .  மனைவி   காலடியில்   உட்கார்ந்து   கொண்டிருந்தாள் . முத்தநாதன்   அங்கு   இருந்த   ஆசனத்தில்   அமர்ந்தான் .  ராணி   அரசனை     சிவனடியார்   வந்திருக்கும்   சேதிசொல்லி   அரசரை   எழுப்புகிறாள் .  அரசன்   திடுக்கிட்டு   எழுந்து   சிவனடியார்   காலில்   விழுந்து வணங்கி   தங்கள்   வரவு   மிக்க   மகிழ்ச்சி   அளிப்பதாக   கூறி   அன்புடன்   வரவேற்றார் .  முத்தநாதன்   ஈசன்   தன்   திருவாயால்   மலர்ந்தருளிய   ஆகம   நூலை   கொண்டு   வந்திருப்பதாக   கூறுகிறான் .  இதை   உபதேசிக்கும்போது   ஸ்த்ரீகள்   இருப்பது   உசிதமல்ல   என்று   சொல்லி   ராணியை   அங்கிருந்து   தந்திரமாக   வெளியே அனுப்புகிறான்,.
ராணி யை   பார்த்தும்   தத்தனுக்கு   சந்தேகம்   வலுக்கிறது.  அவன்   ஓடி   வருவதற்குள்   அசம்பாவிதம்   நடந்து   முடிந்து   விடுகிறது .  முத்தநாதன்   துணியில்   சுற்றி   கொண்டுவந்த   குறுவாளை   அரசனின்   நெஞ்சில்   பாய்ச்சிவிட்டான் . தத்தன்    துரோகி    என்று   கத்திக்கொண்டே  ஓடி  வந்தான் .  அரசன்   தத்தா   நில் , அவனுக்கு   ஒரு   தீங்கும்   நேராமல்   நாட்டின்   எல்லை   வரை   அனுப்பி   விட்டு   வா  என்று   தடுமாறியவாறே   கட்டளை   இட்டு   பிறகு   சாய்ந்தான் .  அப்போது   பெரும்   ஒளி   தோன்றியது .  ஈசன்   அன்னையுடன்   காட்சி   தந்து ''மெய்ப்பொருள்  என்னிடம்     நீ   கொண்ட   பக்தியும்   என்   அடியார்களிடம்   நீ   காட்டிய   அன்பும்   மெச்ச   தக்கது .  வஞ்சகனாக   இருந்தாலும்   என்   சொரூபத்தை   கொண்டதால்   அவனை   மன்னித்த   உன்   உள்ளத்தை   கண்டு   நான்    பெரிதும்   மகிழ்ந்தேன் .  இனி   நீ   எப்போதும்   என்னுடனே   இருப்பாயாக   என்று   கூறி   மறைந்தார் .  சிவனடி   சேர்ந்த   மெய்ப்பொருள்   மெய்ப்பொருள்   நாயனாராகிறார் 

 

Friday 3 March 2017

முத்தநாதன்   யோசித்து   யோசித்து   சேதி   அரசனை   வீழ்த்த   வழி   தேடினான் .  அரசனின்   சிவபக்தியும்   அவன்   சிவனடியார்   மீது   கொண்டிருந்த   அளவிலா   மதிப்பும்   அவனுக்கு   நினைவு   வந்தது .  அதுவே   அவனுக்கு   ஒரு    மார்க்கம்    காட்டிற்று  .  உடனே   அதை   செயல்   படுத்தினான் .  உடலெல்லாம்   திருநீறு   பூசி   காவியணிந்து   சிவனடியாராகவே   மாறினான் .  குறு   வாளை   ஒரு   பட்டு   வஸ்திரத்தில்   புத்தகம்   போல   சுற்றி   எடுத்துக்கொண்டு   அரண்மனையை   நோக்கி   வேகமாக   நடந்தான் .   அரசனின்   மெய்காப்பாளன்   தத்தன்   என்பவன்   முத்தநாதனை   கண்டதும்   சந்தேகம்   எழ   அவனை   நிறுத்த   முற்பட்டான் .  ஆனால்   முத்தநாதனோ   என்னை   தடுக்காதே ,  நான்   முக்கியமாக   யாரும்   இதுவரை   கண்டிராத   புதிய   ஆகம   நூலை   அரசனுக்கு   போதிக்க   வந்திருக்கின்றேன்   என்று   வேகமாக   அரசன்   மனைவியுடன்   இருக்கும்   அறைக்குள்   நுழைந்து   விட்டான் .

Thursday 2 March 2017

முத்தநாதன்   படையெடுத்து   சேதி   நாட்டை    வெல்ல   முயற்சித்தான் . தில்லை கூத்தனை   முழுமையாக   நம்பும்   மெய்ப்பொருள்   மன்னனின்   படையை   வெல்வது   அவனுக்கு   சாத்தியமாக   இல்லை .  அவன்   எத்தனை   முறை   முயற்சித்தும்   தோல்வியே   கண்டான் .  அவன்   படைபலத்தால்   அவரை   வெல்வது   சாத்தியமில்லை   என்பதை   உணர்ந்தான் .  மெய்ப்பொருள்   சிவனடியார்களிடம்   மிகுந்த   பக்தி   கொண்டிருந்தான் .  அவர்கள்   எதை   விரும்பினாலும்   கொடுக்க   தயங்கியதே   கிடையாது .  முத்தநாதன்   இதை   நன்கு   அறிவான் .  ஆகையால்   ஏதாவது   சூழ்ச்சி   செய்து தான்   அவனை   வெல்ல   முடியும்   என்பதை   உணர்ந்தான் .

Wednesday 1 March 2017

ஐயனுக்குதான்   தன்   அடியார்களை   போற்றுபவர்கள்   மீது   எத்தனை  

பிரீதி ?  அவரே   அடியார்   உள்ளத்தில்   தானே   வாசம்   செய்கிறார் ?தன்னை
வணங்குபவரை   விட   தம்   அடியார்களை   வணங்குபவரை   அதிகம்   நேசிக்கிறார் .  விந்தை யே . அடுத்து ,
வெல்லுமா   மிகவல்ல  மெய்பொருளுக்கு    அடியேன் !
திருக்கோவலூர்   நகரை   தலைநகராக   கொண்ட   சேதி   நாட்டை   ஆண்ட   மன்னன்   மெய்ப்பொருள் . சிறந்த   சிவபக்தன் . நீதி   நெறி   தவறாமல்   நல்லாட்சி   புரிந்துவந்தான் .. நீதி   தவறாத   சிறந்த  சிவபக்த்தனான   அவன்   ஆட்சியில்   பருவம்   தவறாமல்   மழை   பொழிந்து   செழிப்புடனும்    மக்கள்   சந்தோஷத்துடன்   வாழ்ந்ததில்   அதிசயம்   ஒன்றும்  இல்லை .  அவன்   நாட்டு   பாதுகாப்பை   பற்றி   கவலை   பட்டதில்லை .  ஈசன்   மீது   அத்தனை   நம்பிக்கை .  நம்பினோரை   ஈசன்   கைவிடுவாரா ?  முத்தநாதன்   அண்டை   நாட்டரசன் .  அவனுக்கு   சேதி   நாட்டினிமீது   ஒரு   கண் .