Thursday 27 August 2015

pope

போப்  அவர்களின்  கடிதத்தை  கண்ணுற்ற கிருஸ்துவ  சமய  பாதிரிமார்கள்  கிருஸ்துவ  மதத்தை  பரப்ப  அனுப்பப்பட  போப்  அவர்கள் சைவ  சமய  பாக்களில்  இவ்வாறு   உணர்ச்சி  வசப்பட்டு  அனுபவிப்பதை  காண  சகியாமல்  அவரை  கண்காணிக்க   மற்றொரு  பாதிரியாரை  அனுப்புகிறார்கள் .அவர்  திருவாசகத்தை  படித்துவிட்டு  மெய்மறந்து  இத்தகைய  பாக்களை  படித்துவிட்டு  இதுவரை  மதம்  மாறாமல்  அவர்  இருப்பதே  அவருடைய  மேன்மையை  காட்டுவதாக  இருப்பதாகவும்  அவரை  சந்தேகிக்க  வாய்ப்பில்லை  என்று  எழுதுகிறார் . அத்தகைய  பெருமை  வாய்ந்தது  திருவாசகம் .
 மற்ற  சிவனடியார்கள்  தொழுது  தொழுது  ஈசனை  பாட  மாணிக்கவாசகர்  மட்டும்  அழுது  அழுது  அரற்றி  ஈசனை  சரணடைகிறார் . அவர் படுகிறார் ,
   யானே  பொய்  என்  நெஞ்சும்  பொய்  என் அன்பும்  பொய்
   ஆனால்  வினையேன்  அழுதால்    உன்னை  பெறலாமே |

Monday 24 August 2015

இலங்கையை  சேர்ந்த  புத்த  பிக்ஷுக்கள்  சிலர்  சிதம்பரத்தில்  இருந்தனர் . அவர்கள்  சிவபெருமானின்  பெருமையை  உணராதவர்கள் . அவரை  பலவாறு  இகழ்ந்து  பேசிவந்தனர் . ஐயனின்  ஆணைப்படி  அவர்களுக்கு  அறிவு  புகட்ட  மாணிக்கவாசகர்  ஓர்  ஊமை  பெண்ணை  பேச  வைக்கிறார்  அவளுடன்  சேர்ந்து   பிக்ஷுக்களுடன்  வாதிட்டு  அவர்களை  வென்று  அவர்களை  பேச  முடியாத  ஊமை  ஆக்குகிறார் . அவர்களும்  தங்கள்  தவறை  உணர்ந்து  மாணிக்கவாசகர்  அருளால்  மீண்டும்  பேசும்  திறனை  அடைந்து  அம்பலகூத்தனை  சரணடைகின்றனர் .
   திருவாசகம்  பாடல்கள் எவ்வாறு  நெஞ்சை  உருக்கும்  என்பதை  உணர்த்தும்  சம்பவம்  காணலாம் . கி.உ. போப்  எனும்  ஆங்கிலேயர்  தமிழ்  ஆராய்ச்சி  செய்ய  தமிழகம்  வந்தவர் . அவர்  திருவாசகத்தை  படித்து  அதில்  நெஞ்சை  பறிகொடுத்தவர் .அதை  ஆங்கிலத்தில்  மொழி  பெயர்க்கிறார்   ஒரு  கடிதத்தில்  திருவாசகத்தை  எழுதுகையில்  உணர்ச்சி வசப்பட  அவர்  கண்கள்  கண்ணீர்  சிந்துகின்றன . அவரும்  அதை  மறைக்க  நினைக்காமல்  அப்படியே  அதை  அனுப்பி  விடுகிறார் . 

Wednesday 19 August 2015

manivasakar

முக்திநெறி  அறியாத  மூர்க்கரொடு  முயல்வேனை
பக்தி நெறி  அறிவித்து  பழவினைகள்  பாறும்  வண்ண
சித்தமலம்  அறுவித்து  சிவமாக்கி  எனை  ஆண்ட
அத்தன்  எனக்கருளியவாறு  ஆர்  பெறுவார்  அச்சோவே |

மாணிக்கவாசகர்   சிவமாகிய  அக்காட்சி  எல்லோரையும்  மெய்சிலிர்க்க  வைக்கிறது . அச்சோவே  பதிகங்கள்  அவர்  கடைசியாக  பாடியது . மாணிக்கவகரின்  பாடல்கள்  ஈசன்  கைப்பட  எழுதப்பட்ட  காரணத்தால்  நமக்கு  முழுமையாக  கிடைத்தது . மற்ற  தேவார  பாடல்கள்  நமக்கு  முழுமையாக . கிடைக்கவில்லை . அப்பர், சம்பந்தர்  சுந்தரர்  இவர்கள்  பாடிய  பதிகங்கள்   முழுமையாக  பெறு ம்
பாக்கியம்  நமக்கு  கிட்டவில்லை . இயற்கையின்  சீற்றத்துக்கு  அவை  தப்பவில்லை . ஈசனே  தன்  கைப்பட  எழுதி  கையொப்பமிட்டு  வைத்த  அதிசயத்தை  விட  மணிவாசகருடைய  பெருமையை  விளக்க  வேறு  சான்று  தேவையில்லை . ஆனாலும்  தில்லையில்  நடந்த  ஒரு  நிகழ்ச்சி  குறிப்பிட  தக்கது
 

Tuesday 18 August 2015

thirruvasakam4

மாணிக்கவாசகர்  ஓடி  சென்று  ஈசனிடம்  தன நன்றியை  தெரிவிக்கிறார் . தில்லை  தீக்ஷிதர்கள்  அவரிடம்  வந்து  அவர் பாடல்களின்  பொருளை  விளக்குமாறு  வேண்டுகின்றனர் .  மணிவாசகர்  தில்லை  கூத்தன்  சன்னதியில்  பாடல்களின்  பொருளை  விளக்குவதாக  கூருகிறார் . இச்செய்தி   பாண்டிய  அரசர்  மற்றும்  சான்றோர்களுக்கும்  அறிவிக்க  படுகிறது .  எல்லோரும்  ஆவலுடன்  அம்பலவாணன்  சன்னதியில்   கூடுகின்றனர் .மாணிக்கவாசகர்   எல்லா  பாடல்களுக்கும்  பொருள்  ஒன்றே . அது  அதோ  அந்த   அம்பலவாணன்  மட்டுமே  என்று  நாத்தழுதழுக்க   இருகைகளும்  கூப்பி  அவரை  நெருங்கி  ஜோதியில்  கலக்கின்றார் . அனறு  ஆனி  மகம் .

Friday 14 August 2015

thiruvasakam3

ஆடவல்லான்  மாணிக்கவாசகர்  பாடிய  திருவாசகம்  ,திருக்கோவையார்  சேர்ந்த  1000 பாடல்களை ஏடுகளில்  பிரதி  எடுத்து  அதில்  மாணிக்கவாசகர்  பாட  சிற்றம்பலத்தான்  கைப்பட  எழுதியது  என்று  கையொப்பமிட்டு  தில்லை  அம்பலவாணன்  சன்னதி  வாயிற்படியில்  வைத்து  மறைகிறார் . மறுநாள்  காலை  சன்னதி  திறந்த  கோயில்  தீட்சிதர்கள்  அந்த  ஓலை  சுவடிகளை  கண்டு  பெரும்  அதிசயம்  அடைந்து  அதை  எடுத்துக்கொண்டு  மாணிக்கவாசகரை  தேடி  வருகின்றனர் .இத்தனை  காலம்  இத்தகைய  மகான்  கோயில்  அருகிலேயே  இருந்தும்  கவனிக்க  தவறியதை  எண்ணி  மனம்  வருந்தி  மாணிக்கவாசகரிடம்  இந்த  ஓலையை  காண்பித்து  அவரை  வணங்குகின்றனர் . முதியவராக  வந்து  தன்  பாடல்களை  எழுதிக்கொண்டவர்  தில்லை   கூத்தன்  என்று  உணர்ந்த  மணிவாசகர்  ஈசனின்  கருணையை  நினைந்து  நெக்குருகி   கண்ணீர்  மல்க  ஸ்தம்பித்து  நின்றார் .