Friday 29 January 2016

cont.

தட்சிணா மூர்த்தியின்  சின்முத்திரை  அதையே  விளக்குகிறது . அவர் சொல்லாமல்  சொல்லும்  விளக்கம்  இது . பசு பதியுடன்  இணைந்து  அவருள்  ஐக்கியமாவது . அந்நிலை  அடைய  திருமுலர்  நமக்கு  அளிக்கும்  உபதேசம்   திருமந்திரமாகும் .

Wednesday 27 January 2016

pasupathi

திருமூலரின்  உபதேசம்  நாம்  உய்வதற்கு  பெரும்  வழிகாட்டி . பசு , பதி .பாசம்  இவை பற்றி  விளக்குகிறார் . பதி  சிவம் . பசு  ஆன்மாக்கள் . பாசம்  மாயை . இம்மூன்றுமே  அநாதியானது . அழிவில்லாதது . அந்த ஈசன்  அருளால்  ஆன்மாக்கள்  அவரவர்  பாவபுண்ணியங்களை  பொறுத்து  இம்மண்ணில்  பிறவி  எடுக்கின்றன . இவ்வுலகில்  மாயையில்  சிக்குண்டு  பல  வகை  பாவ புண்ணியங்களுக்கு  ஆளாகின்றன .  ஈசனால்  உண்டாக்கப்பட்ட  வேத  ஆகமங்கள்  நமக்கு  வழி  காட்டுகின்றன . அதையே  அடிப்படையாக  கொண்டு  திருமுலர்  நமக்கு  இவ்வுபதேசத்தை  வழங்குகின்றார் . இதை  பின்பற்றி  வாழ்பவர்கள்  பிறவா  நிலை  எய்துகின்றனர் .

Friday 22 January 2016

திருமந்திரம்  என்கிற  நூலை  நமக்கு  அளித்த  பெருமானார்  'தான்  பெற்ற  இன்பம்   பெருக  இவ்வயகம் ' என்ற  தம்  கூற்றுக்கு  ஒப்ப   தாம்  நந்தி  தேவரிடம்  கற்ற  அனைத்தையும்  இவ்வுலகம்  உய்வதற்கு  நமக்கு  கொடையாய்  அளித்துள்ளார் . எவ்வாறு  பெரும்  யோகிகள்  பல்லாண்டு  எவ்வித  பிணியும்  இல்லாமல்  நீண்ட  ஆயுளுடன்  நலமாக  பலவிதமான  யோக  சித்திகளுடன்  வாழ்கிறார்கள்  என்பதை  விளக்குவதே   இவ்வரிய  நூல் . நிறைய  அரிய  பயிற்ச்சிகள்  தேவை படுவதை    விளக்குகிறார் .

Friday 15 January 2016

திருமூலர்  திருமந்திரத்தை  தை  மாதம்  முதல்  நாள்  எழுத  தொடங்கியதாக  கூறப்படுகிறது .  தன்னுடைய  இப்பெரும்   படைப்பை  சிவபிரானின்   பெருமையை  சொல்லி  தொடங்குகிறார் . நந்தி  தேவரை   ஈசனுக்கு  ஒப்பானவராகவே  குறிப்பிடுகிறார் . நந்தி  தேவரிடம்  கல்வி  பெற்றதை  விளக்குகிறார் .
நந்தி  அருள்  பெற்ற  நாதரை  நாடிடின்  நந்திகள்  நால்வர்  சிவயோக  மாமுனி
மன்று  தொழுத  பதஞ்சலி  வியாக்ரமர்  என்றிவர்  என்னோடெண் மரு மாமே |

சனகாதி  முனிவர்கள்  நால்வர் , சிவயோக  மாமுனி , பதஞ்சலி  மற்றும்  வியாக்கிரபாதர்  போன்றோருடன்  எண்மர்  நந்தி  தேவரிடம்  ஆகமங்கள்  பயின்றதாக  குறிப்பிடுகிறார் .



 

Sunday 10 January 2016

அன்பும்  சிவமும்  இரண்டென்பர்  அறிவிலார்
அன்பே  சிவமாவது  யாரும் அறிகிலார்
 ஈசனை  அடைய  ஒரே  மார்க்கம்  அன்பு,  அனபு  ஒன்றே . அது   அன்றி  வேறில்லை  .
''அன்போடு  உருகி  அகம்  குழைவார்கன்றி '' வேறு  யார்க்கும்  எய்த  ஒண்ணாதே . என்று  அழுத்தமாக  கூறுகிறார் . உடலை  வருத்தி  செய்யும்  எவ்விதமான  பிரார்த்தனைகளோ , சடங்குகளோ  ஈசனை  குளிர  வைக்காது , அன்பே  அவரை  மகிழ்விக்கும் .அன்புக்கு  கட்டுப்படும்  அவர்  தம்  அடியோர்களுக்காக  எத்தனை  இறங்கி  வருகிறார்  என்பதை  நாயன்மார்கள்  கதைகளில்  நாம்  கண்டோம் . கூலி  ஆளாக  வந்து  பிரம்படி  படுகிறார் . பொதி  சோறு  சுமக்கிறார் . வீதியில்  நடந்து  தூது  போகிறார் .அன்புக்கு  அடிபணிந்து  எதையும்  செய்ய  தயங்காதவர் . திருமூலர்  இதையே  அழுத்தமாக  கூறுகிறார் . 

Tuesday 5 January 2016

thirumandiram

திருமுலர்  தன்  திருமந்திரத்தை  சிவபெருமானின்  பெருமைகளை   சில  பாடல்களின்  மூலம்  உரைக்கிறார் .
சிவனோடு  ஒக்கும்  தெய்வம்  தேடினும்  இல்லை
அவனோடு  ஒப்பார்  இங்கு  யாவரும்  இல்லை ,
புவனம்  கடந்தன்று  பொன்னொளி  மின்னும்
தவள  சடைமுடி  தாமரையானே | (பாடல் 5)

அவனை  ஒழிய  அமரரும்  இல்லை
அவன ன்றி   செய்யும்  அருந்தவம்  இல்லை
அவனன்றி  மூவரால்  ஆவதொன்றில்லை
அவனன்றி  ஊர்  புகுமாறு  அறியேனே |(6)
அன்பே  சிவம்  என்று  வலியுறுத்தி  சொல்கிறார் . ஈசனை  அடைய  அன்பே  சிறந்த  மார்க்கமாக  திட்டமாக  உரைக்கிறார் . உடலை  வருத்தி  செய் யும். தவம்  தேவையில்லை . மனமுருக  பக்தியுடன்  போற்றுதலே  ஈசனை  குளிர்விக்கும்  என்பதை  அழுத்தமாக  பல  பாடல்களில்  கூறுகிறார் .