Saturday 29 December 2018

காழிப்பிள்ளை   தன்   புனித   பயணத்தை   தொடர்ந்து   செங்காட்டங்குடி   வந்து   அங்கு   சிலகாலம்   தங்கி   இருந்தார் .  அங்கிருந்தபோது   அருகில்   திருமருகல்   எனும்   இடத்தில்   ஈசனை   தரிசிக்க   சென்றார் .   ஒரு   நாள்   இரவு   பக்கத்திலுள்ள   மடத்திலிருந்து   ஒரு   பெண்ணின்   பரிதாபமான   அழும்   குரல்   கேட்டு   பதறிப்போய்   சம்பந்தர்   வெளியே   வந்து    அப்பெண்ணிடம்   சென்று   பார்த்தார் .   பாம்பு   கடித்து   மாண்டு   போன   ஒரு      இளைஞன்   உடலின்   மீது   புரண்டு  கதறி   அழும்   பெண்ணை   கண்டார் .  அவர்  மனம்   பாகாய்   உருகியது .  அப்பெண்ணை   அணுகி   அவள்   கதறலுக்கு   காரணம்   கேட்டார் .   அழுதுக்கொண்டே   அப்பெண்   தன்   கதையை   கூறினாள் .

Tuesday 18 December 2018

சம்பந்தர்   பொற்கிழியுடன்   தந்தையை   சீர்காழி   அனுப்பிவிட்டு    அவர்   ஆவடுதுறையில்   சிலகாலம்   தங்கி   ஈசனை   மனதார  தொழுதார் .  பிறகு   பல   தலங்களை   சேவித்துக்கொண்டு   நீலகண்ட   யாழ்ப்பாணர்  வேண்டுகோளுக்கு       இணங்கி   அவர்  பிறந்த  ஊரான   தருமபுரம்   சென்றார் .  அங்கு   அவ  ருக்கு  பலமான   வரவேற்பு   மக்களுக்கு   சந்தோஷம்   சொல்லில்   அடங்காது .  யாழில்   பாணர்   காழிப்பிள்ளை   பதிகங்களை   கேட்டு   மெய்ம்மறந்தனர் .  பாணர்   யாழில்   அவருடன்   வாசிப்பதால்   அவர்   பாடல்கள்   மேலும்   இனிமை   பெறுவதாக    பேசிக்கொண்டனார் .  அதை   கேட்டு  பாணர்   மிக்க   அதிர்ச்சி   அடைந்தார் .  ஈசன்    பேரருளால்   அன்றோ   தனக்கு  பெரும்பேறு   கிட்டி   இருக்கிறது .  அப்படி   இருக்க   தன்   யாழால்   அவர்   பாடல்  மேன்மை   பெறுவதாக   தம்   மக்கள்      பேசுவது   அவருக்கு   பெரும்   மனவருத்தத்தை   அளித்தது .  அவர்   காழிப்பிள்ளையை   வணங்கி   தன் வருத்தத்தை   விளக்கி   தன்  யாழுக்கு   அப்பாற்பட்டதாக   ஒரு   பாடலை   பாடுமாறு   வேண்டிக்கொண்டார்.  அவரும்   அவ்வாறே  'மாதர்   மடப்பிடியும் '  எனும்   பதிகத்தை   பாடினார் .  அவர்   மேலே   மேலே   பாட   பாணரால்   ஈடு   கொடுக்க   முடியாமல்   தந்தி   அறுந்தது.  அவர்   யாழை   உடைக்க   விழைகிறார் .  சம்பந்தர்   அவரை சமாதானம்   செய்து   யாழை   அவரிடம்   கொடுத்து   அவர்   பாடிய   அப்பண்ணிற்கு   'யாழ்முரி 'என்று   பெயர்   சூட்டுகிறார் .

Sunday 16 December 2018

இவ்வாறு  தல   யாத்திரையில்   நாட்கள்   கடந்தன .  சிவபாதவிருதயர்   யாத்திரை   கிளம்புமுன்   ஒரு   யாகம்   செய்ய  எண்ணம்     கொண்டிருந்தார். .அது   இப்போது   நினைவு   வர   சம்பந்தரிடம்   அதற்கு   ஏற்பாடு   செய்ய    வேண்டும்   பணமும்   திரட்ட   வேண்டுமென   ஊர்   திரும்ப   யோசனை    கேட்டார் .  அதை     கேட்ட   பிள்ளை   திருஆவடுதுறை   ஐயனை  வேண்டி    'இடரினும்  தளரினும்'   எனும்   பதிகம்   பாடி   வேண்ட   ஒரு   சிவபூதம்   ஆயிரம்   பொற்காசுகள்   கொண்ட   பொற்கிழியை   பலிபீடத்தில்   வைத்து   விட்டு   ஈசன்   சொற்படி   ஆயிரம்   பொற்காசுகள்   கொண்ட   பொற்கிழியை    பலிபீடத்தில்   வைத்திருப்பதாக   சொல்லி   மறைந்தது .   தந்தை   நன்றி   பெருக்குடன்   அப்பணத்தை   பெற்றுக்கொண்டு   ஊர்   திரும்பினார் . 

Tuesday 11 December 2018

திருஆனைக்காவிலிருந்து   புறப்பட்டு  பல   க்ஷேத்திரங்களை   சேவித்துக்கொண்டு   சம்பந்தர்   நல்லூர்   வந்தார் .  சென்ற   இ டமெல்லாம்   சிவனடியார்கள்,   பக்தர்கள்   அவரை   வாழ்த்தி   வணங்க   அவர்   நல்லூர்   வந்து   சேர்ந்தார் .   திருவலஞ்சுழி   பழையாறு   முதலிய   தலங்களை   சேவித்து    பிறகு   பட்டிஸ்வரம்   கிளம்பினார் .  அப்போது   கோடை   காலமாதலால்   வெய்யில்   சுட்டெரித்தது .  அடியார்கள்   நடக்க   மிகுந்த   சிரமத்திற்கு   ஆளானார்கள் .  அதை   காண   சகிக்காத   ஈஸ்வரர்   சிவபூதத்தை   ஏவி   அவர்களுக்கு   நிழல்   தர   முத்து   பந்தலை   அளிக்குமாறு   கட்டளை   இட்டார் .     பூதமும்   பட்டிஸ்வரர்   கட்டளை   பேரில்   அவர்களுக்கு   வெய்யிலுக்கு   இதமாக   இப்பந்தலை   வழங்குவதாக   கூறிற்று .  சம்பந்தருக்கு   ஐயனின்   கருணை   மனநெகிழ்ச்சியையும்   ஆனந்தத்தையும்   அளித்தது .  அவர்   கருணையை   நெஞ்சார   உருகி பாடுகிறார்.  

Sunday 9 December 2018

தாயுமானவரை   கண்குளிர   சேவித்துக்கொண்டு   யானைக்கும்   சிலந்திக்கும்   முக்தி  கொடுத்து  தன்   ஒப்பில்லாத   கருணையை   காட்டி   தனக்கு   எல்லா   ஜீவன்களுமே    சமம்   என்று   உணர்த்திய   ஜம்புகேஸ்வரரை   மனம்   குளிர   பதிகம்   பாடி   வணங்கி னார் .   அவர்   சென்ற   இடங்களிலெல்லாம்    இவர்    வருகையை   கேள்விப்பட்டதுமே  ஆனந்தம்   அடைந்த   அவரை   மக்கள்   கூட்டம்   சகல   விதமான   மரியாதைகளுடன்      வரவேற்றன .   

Tuesday 4 December 2018

மன்னரிடமிருந்து   விடை   பெற்றுக்கொண்டு   சம்பந்தர்  சில   ஆலயங்களை   தரிசித்து   கொண்டு    செங்குன்றம்   வந்தார் .   அங்கு   அவரை   தரிசிக்க   மக்கள்   திரண்டு   வந்தனர் .  அவரை   மகிழ்ச்சி   ஆரவாரத்துடன்  வரவேற்று   உபசரித்தனர் .  அங்கு   ஈசனை   வணங்கி   பாடி   மகிழ்ந்து   அங்கிருந்து   புறப்பட்டார் .   அப்போது   பனிக்காலம்    ஆதலால்   மக்கள்   குளிர் ,  சுரம் கண்டு   அவ திப்பட்டனர் .  சம்பந்தர்   மனம்   வருந்தி   ஐயனை   துதித்து   இந்த   அவதியை   நீக்க   வேண்டி   'அவ்வினைக்கிவ்வினை '  என்ற   பதிகம்   பாடி   ஐயன்   அருளால்   யாவரும்   நலம்   பெற   செய்தார் .    அங்கிருந்து   புறப்பட்டு   காவிரியின்   தென்கரையிலுள்ள   க்ஷேத்திரங்களை   சேவித்து   கொள்ள   விரும்பினார் .  திருச்சி  சுற்றி    ஆலயங்களை   சேவித்துக்கொண்டு   நிறைமாதப்பெண்   பிரசவ   வேதனையால்   துடிக்க   காவிரி   வெள்ளம்   காரணமாக   யாரும்   துணை   வரமுடியாத   நிலையில்   தன்னை   சரணமென்று   நம்பி   கதறிய   தாயின்   குரல்   கேட்டு   தானே   மருத்துவம்   பார்த்த   கருணை   கடலான   தாயுமானவரை   மலைக்கோட்டை   ஏறி   சேவித்து   கொண்டார் .

Monday 3 December 2018

மகளை   ஐயன்   காலடியில்   கிடத்திய   மன்னன்   காழிப்பிள்ளை   அவ்வூருக்கு   விஜயம்   செய்யப்போகும்    செய்தி   அறிந்து   மகளை   ஈசன்   காலடியில்   விட்டுவிட்டு   காழிப்பிள்ளையை      வரவேற்கும்   ஏற்பாடுகளை   கவனிக்க   சென்று  விட்டார் .  பக்திசிரத்தையுடன்   அவரை   வரவேற்று   அழைத்து   சென்றார் .  ஈசன்   காலடியில்   பரிதாபமாக   கிடக்கும்  அரசகுமாரியின்    பரிதாப   நிலைக்கண்டு   திடுக்கிட்டு   மனம்   கலங்கிய   சம்பந்தர்   மன்னனை   விசாரித்தார் .  துக்கத்துடன்      தன்மகளின்   பரிதாப   நிலையை   விளக்கினார் .   ஒரு  வைத்தியத்திற்கும்    கட்டுப்ப டாத   அவளுடைய   பரிதாப   நிலையை   கேள்விப்பட்ட   பிள்ளை    ஈசனிடம்   இவ்வாறு   ஒரு   அபலைப்    பெண்ணை   சோதிப்பது   முறையா ?  என்று   உரிமையுடன்   கேட்டு   அவளுக்கு   உடனே   நோய்   தீர்த்து    நல்வாழ்வளிக்க    வேண்டி   ஈசனை   துதித்து    பாடினார் .   காழிப்பிள்ளை   சொல்லி   ஐயன்   மறுப்பாரா   உடனே   அப்பெண்   தூக்கத்திலிருந்து   எழுவது  போல்   எழுந்தாள்.  தாய்தந்தையர்       மகிழ்ச்சிக்கு   எல்லை    ஏது ?