Monday 30 June 2014

sivam

படைக்கப்பட்ட  ஆன்மாக்கள் ஒவ்வொரு  நிலையாக  தத்தம்  கடமைகளை செய்து உயர  சிவபெருமான்  வழி  நடத்துகிறார் . ஆன்மாக்கள்   அவர்  அருளால்  உயர் வடைந்து  மானிட  பிறப்பை  எய்துகன்றன . மானிடர்கள்  அவரவர்  பாப  புண்ணீ யத் திர்கேற்ப  பிறப்பை  எய்துகின்றனர். வேதம்  வாழும்  மார்கத்தை  காட்டுகிறது .

Monday 23 June 2014

sivam

'அன்பே  சிவம் '  இது  திருமூலர்  வாக்கு .சைவர்கள்  சிவனையே   முழு   முதற்  கடவுளாக ஏற்றவர்கள் .அவர் எங்கும்  நீக்கமற  நிறைந்தவர் .வேண்டுதல்  வே ண்டாமை இலாதவர் .நமது கற்பனைக்கு  எட்டாத  பெரும் ஆற்ற ல்   படைத்தவர் ,'' ஆக்கி  அழித்து  உலகை  நீக்கி  மறைத்தருளி , ஐந்தொழில்  புரிந்திடும்  அம்பலவானரே '' என்று  ஒரு  கவி  பாடியுள்ளார் .தன்  ஆற்றலால்  எல்லா  ஜீவராசிகளையும்  படைத்து  காத்து  ரட்சித்து .பிரளய காலத்தில்  அழித்தும்  வாழும்  காலத்தில் அவைகளை  காக்க  பல  திருவிளையாடல்களும்  புரிந்தும்  அருளுகிறார் .

Friday 20 June 2014

saivam

எல்லா மன்னர்களும்  சிவ  மற்றும்  விஷ்ணு  ஆலயங்கள்  வேற்றுமை  இல்லாமல்  நிறைய  நிர்மாணித்தார்கள் . பல  தேவார  பாடலகளில்  விஷ்ணு வை  உயர்த்தி  பாடி உள்ளார்கள் . ஆழ்வார்களும்  சிவனை  உயர்த்தி  பாடிய   பாசுரங்கள்  உள்ளன . திருமங்கை  ஆழ்வார்  திருனாரையூர்  பாசுரத்தில்  சிவனை  பாடியுள்ளார் . மேலும் அவர்  70  சிவாலையம்  கட்டிய  சோழ  மன்னனையும்   பாடியுள்ளார் . மேலும்  சங்கரன்கோயில் , சுசீந்திரம்  மேலும்  சிதமபரம்  ஆகிய  கோயில்களில்  சிவன் , விஷ்ணு  இருவரும்  கோயில்  கொண்டிருப்பதை  காணலாம் . 

Thursday 19 June 2014

பத்து , பதினைந்து  நூற்றாண்டுகளூக்கு  முன்பு  சோழ , பல்லவ  மன்னர்கள்  காலத்தில்  பிரதானமாக  இரு  சமயங்கள்  காணப்பட்டன . அவை  சைவம்  மற்றும்  வைணவம் .இசை மார்கமாக  பக்தியும்  பரப்ப  பட்டது  சிவனை  பிரதான  தெய்வமாக  துதித்தவர்கள்  சைவர்கள் . விஷ்ணுவை   பிரதான  தெய்வமாக  துதிப்பவர்கள்  வைணவர்கள் . இதற்கு  சான்றா க   தமிழகத்தில்  இன்றும்  ஆயிரகணக்கான  சிவா, விஷ்ணு  ஆலயங்களை   காண முடிகிறது . இரு  பிரிவினரும்  அவரவர்கள்  மார்கத்தை  கடைப்பிடித்து  ஒற்றுமையாக  வாழ்ந்ததாக  அறிகிறோம் . 

Wednesday 18 June 2014

பன்னிரு  திருமுறை , நாலாயிர  திவ்யபிரபந்தம் ,மேலும்  சில  தமிழிசையில்  தலையாயதும்  மிகவும்  போற்ற படுவதுமான  பாடல்களை  பற்றி  காண்போம் .