Thursday 18 May 2017

குறிப்பிட்டபடி   குறிப்பிட்ட   இடத்தில்   ஏனாதியரும்   அதிசூரனும்   கத்தி   கேடயத்துடன்   சண்டைக்கு   தயாரானார்கள்   அதிசூரன்   தன்   முகத்தை   கேடயத்தால்   மறைத்து   கொண்டிருந்தான் .      இருவரும்   கத்தியை   சுழற்றிக்கொண்டு   சண்டை   இட்டனர்   அதிசூரன்   முகத்தை   மறைத்தபடியே   சண்டை   இட்டான் .   ஏனாதியார்   வெற்றி   பெரும்   நிலையில்   கத்தியை   ஓங்க   எத்தனிக்கையில்   திடீரென்று   அதிசூரன்   தந்திரமாக   கேடயத்தை   விலக்கினான் .   ஏனாதியார்   திடுக்கிட்டார் .  அவன்   முகத்தில்   பட்டையாக   திருநீறு   பூசி  இருந்தான்   அவனுக்கு   ஏனாதியரை   நன்றாக   தெரியுமாதலால்   சிவனடியார்களை   அவர்   நிச்சயமாக   பெரிதும்   மதிப்பார்   என்றும்   அவர்களுக்கு   தீங்கு   ஏதும்   செய்யமாட்டார்  என்றும்   உணர்ந்திருந்தான் .  ஏனாதியார்   அவன்   சிவனடியாராக   மாறி   விட்டான்   என்று   தீர்மானித்து   கத்தியை   கீழே   போட நினைத்தவர்   ஆயுதமற்றவனை   கொன்றான்   என்ற   பழி சொல்   சிவனடியாராக   மாறியவனுக்கு   வந்துவிட   கூடாதென்று    கத்தியை   கையில்   பிடித்து   கொண்டு   நின்றார் .  அதுவே   நல்ல   தருணம்   என்று   அதிசூரன்   கத்தியால்   குத்தி  அவரை   மாய்த்தான் .  உயிர்   துறக்கும்   தருவாயில்   ஈசன்   ஏனாதியருக்கு   காட்சி   கொடுத்து   தன்னுடன்   சேர்த்துக்கொண்டார் .

Friday 12 May 2017

ஏனாதியார்   சொன்னபடி   ஒரு   மைதானத்தில்   இரு   கட்சியினரும்    மோதினர் .   எதிர்பார்த்தபடி   ஏனாதியின்   கட்சி   பெருத்த   வெற்றி   பெற்றது .  அதிசூரன்   கட்சி   பெருத்த   சேதத்துடன்   தோல்வியுற்றது .   அதிசூரன்   ஏனாதியரை   வெற்றி   பெறுவது   எளிதல்ல   என்பதை   அறிந்து   கொண்டான் .  அவரை   சூழ்ச்சி   செய்து   வெற்றி   அடைவது   என்று   தீர்மானித்தான் .  அதை   நிறைவேற்ற   யோசனையில்   ஆழ்ந்தான் .  ஏனாதியர்   சிவனடியார்கள்   மீது   கொண்ட   அதீத   பக்தியை   உபயோகிக்க   முடிவு   செய்தான் .  அவன்   ஏனாதியரை   அழைத்து   இவ்வாறு   பலர்   பலியாவதை    தவிர்க்க   தாம்   இருவரும்   மட்டுமே   போரிட்டு   தீர்த்துக்கொள்ளலாம்   என்று   யோசனை   தெரிவித்தான் . அவரும்   ஒப்புக்கொண்டார் .

Saturday 6 May 2017

அதிசூரன்   ஏனாதியாரின்  மீது   அவர்   புகழ்   காரணமாக   மிக வெறுப்பு   கொண்டான் .  அவரை   எப்படியாவது   பழி    வாங்கும்வெறியுடன்    இருந்தான் .  ஒரு   நாள்  அவன்   கத்தியுடன்   ஏனாதியாரை  சந்திப்பதற்கு   தன்   சீடர்களுடன்   அவர்   வீட்டிற்கு    சென்றான் .  ஏனாதியருக்கு   இவர்களை   காண   இவர்கள்   எதற்காக   வந்திருப்பார்கள்   என்று   புரியாமல்   ஆச்சர்யத்துடன்   பார்த்தார் .  உடனே   அதிசூரன்   இவ்வாறு   இருவரும்  ஒரே   தொழிலில்    ஈடுபட்டிருப்பது   இருவருக்கும்   சங்கடம் .  ஆகையால்   நாம்   இருவரும்   சண்டையிட்டு   யார்   வெல்கிறார்களோ   அவரே   இத்தொழிலில்   இருக்கலாம்   என்று   அவரை   போட்டிக்கு   அழைத்தான் .  இதற்குள்   ஏனாதியின்   சீடர்களும்   அங்கு குழுமி   விட்டனர் .  இதை   கண்ட   ஏனாதியார்   இத்தனை   பேர்கள்   சேர்ந்து   விட்டதால்   இங்கு   சண்டை   இடுவது  சரியல்ல   வேறு   மைதானத்தில்  போட்டியை    வைத்துக்கொள்ளலாம்   என்று   கூறினார் .     

Monday 1 May 2017

எனாதிநாதன்  தன்   அடியார்க்கு   அடியேன் |

சிவனடியார்   சின்னம்   தரித்த   எதிரிக்கும்   அருளிய   பெருந்தகை   ஏனாதிநாதர்   ஆவர் . சோழ   நாட்டில்  எயினனுர்    என்றொரு   ஊர் .  அங்கு   வசிப்பவர்   ஏனாதி   எனும்   சிறந்த   சிவபக்தர் .  அவர்  வாள்   வித்தையில்   சிறந்தவர் .  வீரர்களுக்கு   வாள்   பயிற்சி   கொடுப்பது .  அவர்   தொழில் . அரசாங்கத்தில்   ஒரு   படை   பிரிவிற்கு   அவர்   தலைவர் .   வித்தை   கற்றுக்கொடுத்து   ஈட்டிய   பொருளில்   பெரும்   பகுதி   சிவனடியார்களுக்கே   செலவு   செய்தார் .. அவர்களுக்கு   சௌகரியங்கள்   செய்து   கொடுத்தார் .  அதனால்   அவர்   புகழ்   பரவியது .  அவரிடம்   பயிலும்   மாணவர்கள்    எண்ணிக்கை   கூடிற்று .  அவரைப்போல்   வாள்   வித்தை   பயிற்சி   அளிப்பவன்   அதிசூரன்   என்பவன் .  அவனுக்கு   ஏனாதியார்   புகழ்   ஓங்குவது   பெரும்   பொறாமையை   உண்டாக்கியது .   அவருடைய   புகழால்   இவருக்கு   மாணவர்கள்   வருகை   குறைந்து   வருமானமும்   குறைந்தது