Tuesday 28 July 2015

thiruvasakam2

ஆடவல்லான்  இந்த  எண்ணம்  மனத்தில்  கொண்டு  இத்தேனை  வரும்  கால  மக்களுக்கு  கொண்டு  சேர்ப்பதை  முக்கிய   கடமையாக  கொண்டார் . உடனே  ஒரு  முதியவராக  உருமாறி  மாணிக்க வாசகரை  அணுகினார் . தாங்கள்  பாடிய  திருவாசகம்  எழுத்து  வடிவில்  உள்ளதா  என  வினவினார் . மணிவாசகர்  இல்லை  என  பதில்  உரைத்தார் . உடனே  ஈசன்  தாம்  அதற்காகவே  வந்திருப்பதாகவும்  அவருக்கு   மறுப்பு  ஏதும்  இல்லை  என்றால்  தானே  அவர்  சொல்ல  சொல்ல  ஓலையில்  எழுதி  கொள்வதாக  கூறுகிறார் .மணிவாசகரும்  ஒப்புக்கொண்டு  பாட  ஆரம்பிக்கிறார் . ஈசனும்  எழுதி  கொண்டே  போகிறார் . மிகவும்  ரசித்து  எழுதுகிறார் .முடிந்ததும்  ஈசன்   எல்லா  பாக்களும்  மிக  அருமையாக  இருப்பினும்  எல்லாம்  அறம்  சார்ந்ததாகவே  இருப்பதாக  கூறி  ஈசனை  நாயகனாக  பாவித்து  தன்னை  காதலியாக  பாவித்து அந்த  பாவத்தையும்  பாடுமாறு  விண்ணப்பிக்கிறார் . ''பாவை  பாடிய  வாயால்  கோவை  பாடுக '' என்று  கேட்டுக்கொள்கிறார் . அவரும்  அவ்வாறே  பாடுகிறார் . அதுவே  திருக்கோவையார்  ஆகும் . 

Monday 27 July 2015

thiruvsakam

தில்லையில்  மடம்  அமைத்து  மாணிக்கவாசகர்  ஈசனை  துதித்தவாறு  அமைதியாக  வாழ்ந்து  வந்தார் .தில்லை  அம்பலத்து  ஈசனுக்கு  திருவாசகம்  வரும் சந்ததியினருக்கு   கிடைக்க  பெறாமல்  போய்விடுமோ  என்ற  அச்சம்  உண்டாயிற்று . மாணிக்கவாசகர்  பாடிகொண்டே  இருந்தாரே  தவிர  அதை  எழுதி  வைக்கும்   மனநிலையில்  அவர்  இருந்ததில்லை . அவர்  மனம்  முழுமையாக  அம்பலவாணன்  திருவடியிலேயே  லயித்து  இருந்ததால்  அவருக்கு  அந்த  எண்ணமே  எழவில்லை .  

Wednesday 22 July 2015

punitha payanam

மாணிக்கவாசகர்  தம் புனித  பயணம்  தொடங்கி  திருப்பெருந்துறை ,உத்திரகோசமங்கை .திருவாரூர் ,திருவிடைமருதூர் ,சீர்காழி ,திரு  அண்ணாமலை  என்று  எல்லா  தலங்களையும்  தரிசித்து  தேனினிய  திருவாசகங்கள்  பாடிக்கொண்டே  தில்லையை  அடைகிறார் . அங்கு  தில்லை  கூத்தனிடம்  மனம்  பறிகொடுத்து  அங்கேயே  ஒரு  மடம்  நிறுவி   அதிலேயே  தங்கி  விடுகிறார் .

Tuesday 21 July 2015

manivasagar8

தன தவறை  உணர்ந்து  மிக்க  அதிர்ச்சி  அடைந்த  அரிமர்தன  பாண்டியன்  மாணிக்கவாசகரை  தேடி  ஓடி  சென்று  அவர்  கால்களில்  வீழ்ந்து  மன்னிப்பு  கோருகிறான் . மாணிகவாசகரும்  பெருந்தன்மையுடன்  எல்லாம்  ஈசன்  திருவிளையாடல் ,ஆதலால்  வருந்தவேண்டாம்  தனக்கு  அவர்மீது  வருத்தம்  ஏதும்  இல்லை  என்று  சொல்லி  தேற்றினார் . அரசன் அவரை மீண்டும்  அமைச்சராக   வருமாறு  அழைத்தார் . ஆனால்  அவர்  தனக்கு  பதவியில்  நாட்டமில்லை  என்றும்  பல  சிவாலயங்களுக்கு  சென்று  ஈசனை  மனமுருக  பாடுவதையே  தம்  மனம்  விரும்பி நாடுவதாகவும் , தனக்கு  விடை  கொடுக்குமாறு  கோருகிறார் . அரசனும்  அதை  தடுக்க  மனமில்லாமல்  விடை  கொடுக்கிறார் . மாணிக்கவாசகரும்  தன்  புனித  பயணத்தை  தொடங்குகிறார் . தமிழுலகத்திற்கு  திருவாசகம்  எனும் விலை  மதிக்க  முடியாத  பொக்கிஷத்தை  அடையும்  பேறு  கிடைக்கிறது .   

Thursday 16 July 2015

cont 7

கூலி  ஆளாக  வந்தியின்  சார்பில்  வந்த  ஈசன்  தானும்  ஒரு  வேலையும்  செய்யாமல்  மற்றவரையும்  வேலை  செய்யவிடாமல்  கூத்தாடுகிறார் .இதைக்கண்ட  சேவகன்  அரசனிடம்  சென்று  முறை  இடுகிறான் . அரசன்  வெகுண்டு  அவனை  இழுத்து  வருமாறு  ஆணை  இடுகிறார் .இதனிடையில்  மணிவாசகரும்  மக் களுக்கு  ஏற்பட்ட  அவதியை  கேள்வியுற்று  மிக  மன  வேதனை  அடைகிறார் .ஈசனை  பிரார்த்திக்கிறார் . அரசன்  கூலி  ஆளாக  வந்த  ஈசனை  கடுமையாக  விசாரிக்கிறார் . அவருடைய  பதில்களால்  மேலும்  கோபமுற்று  பிரம்பால்  ஈசனை  அடிக்கிறார் . ஆனால்  பிரம்படி மன்னன்  உள்ளிட்ட  அனைத்து  ஜீவராசிகள்  முதுகிலும்  விழ  அரசன்  அதிர்ந்து  போகிறான் .உடனே  ஈசன்  கரைதானே  அடைபடவேண்டும் .  நானே  அடைக்கிறேன்  என்று  சொல்லி  ஒரு  பிடி  மணலை  எடுத்து  போட  கரை  அடைபடுகிறது . உடனே  ஈசன்  மாணிக்கவாசகர் என்று  எம்மால்  பெயர்  சூட்டப்பட்ட  எம் பக்தனை  இவ்வாறு  கொடுமை  செய்வதை  பொறுக்காமல்  யாமே  இத்திருவிளையாடல்  புரிந்தோம் . இனியாவது  அவரது  பெருமையை  உணருங்கள்  என்று  சொல்லி  மறைந்தார்  

Tuesday 14 July 2015

cont.6

ஈசன்  வந்தி  கிழவியிடம்  கூலியாக  என்ன  தருவாய் ? என  வினவுகிறார் . அதற்கு  அவள்  தன்னிடம்  வேறு  என்ன  உள்ளது  அவள்  செய்யும்  பிட்டில்  உதிர்வதை  உனக்கு  கொடுக்கிறேன்  என்று  கூறினாள் . அன்று  அவள்  செய்த  மொத்த  பிட்டும்  உதிர்ந்து  விட்டது . அவளும்  மகிழ்ச்சியுடன்  அத்தனையும்  கொடுத்தாள் . மீதம்  இருந்தால்  அவள்  அதை  விற்று  அதனால்  அவளுக்கு  மீண்டும்  வினை  சேரும் . அதன்  பயனை  கழிக்க  இப்புவியில்  இன்னும்  சிறிது  காலம்  வாழ  வேண்டியதாகிவிடும்  என்பதால்  அன்பே  உருவான  ஈசன்  அவ்வாறு  செய்கிறான் .அவன்  கருனைதான்  என்னவென்பது ? அவளை  தன்னிடம்  சேர்த்தும்  கொள்கிறான் . அவருடைய  விளையாடல்  தொடர்கிறது . அவர்  கரையை  அடைக்கும்  பணி  நடந்து  கொண்டிருக்கும்  இடத்தை  அடைகிறார் .

Monday 13 July 2015

manivasakar cont

அன்பே  வடிவான  ஈசன்  தன்  அடியனான  மணிவாசகர்  இவ்வாறு  அவதி யுறுவதை  கண்டு பொறுப்பாரா ? வறண்டு  கிடந்த  வைகையில்  வெள்ளம்  பெருக  வைக்கிறார்  கரையிலுள்ளொர்  பெரும்  அவதிக்கு  ஆளானார்கள் . மன்னனிடம்  செய்தி  தெரிவிக்கப்பட்டது . திடீரென  இவ்விதம்  நேர  என்ன  காரணம்  என வியந்தார் . உடனே  வீட்டுக்கொரு  ஆள்  அனுப்பி  எல்லோரையும்   கரையை  அடைக்கும்  பணியில்  ஈடுபடுத்துமாறு  ஆணை  இட்டான் . அந்த ஊரில்  வந்தி  எனும்  பிட்டு  விற்கும்  கிழவி  இருந்தாள்  சிறந்த  சிவபக்தை . அவள்  யாருமற்ற  அநாதை .அனுப்ப  அவள்  வீட்டில்  யாரும்  இல்லை . ஈசன்  லீலை தான்  என்னவென்பது ? ஈசனே  ஒரு  கூலி  ஆளை போல்  அவளிடம்  வந்து  மன்னனின்  ஆணையை  நிறைவேற்ற  அவளுடைய  சார்பாக  தான்  செல்வதாக  கூறுகிறார்   

Friday 10 July 2015

manivasakar cont

நள்ளிரவு  ஆனதும்  நரிகள்  தங்கள்  சுயரூபம்  அடைந்தன .அவை  அங்கு  இருந்த  குதிரைகளை  கடித்து  குதறிவிட்டு  ஊருக்குள்  ஓடி  ஜனங்களை  அச்சுறித்தன .மன்னனுக்கு  செய்தி  சென்றது . மன்னன்  கடும்  கோபம்கொண்டு  வாதவூரரை  கடும்  சித்திரவதை  செய்ய  கட்டளை  இட்டான் .வறண்டு  கிடந்த  வைகை  மணலில்  அவரை  நிற்க  வைத்து  தலையில்  பெரும்  பாறை  ஏற்றி  கைகால்  கட்டி  நிற்க  வைத்து  சித்திரவதை  செய்தனர் . கொதிக்கும்  மணலில்  தலையில்  பாரத்துடன்  அவர்  அவதிப்படுவதை  கண்டு  மகிழ்ந்தனர் . ஆனால்  மாணிக்கவாசகரோ  எவ்வித  உணர்வும்  இன்றி  பஞ்சாக்ஷரம்  ஓதியபடி  அமைதியாக  இருந்தார் .  

Wednesday 8 July 2015

manivasakar cont3

மன்னனும்  மணிவாசகர்  சொன்னதுபோல் ஆவணி  மூலம்  வரை  காத்திருக்க  சம்மதிக்கிறான் . நாள்  நெருங்க  நெருங்க  குதிரைகள்  அனுப்பிய  தகவல் எங்கிருந்தும்  கிடைக்காதலால்  சஞ்சலம்  அடைந்து  வாதவூரரை  சிறையில்  அடைக்கிறான் .வாதவூரர்  என்று  முன்பு  அழைக்கப்பட்ட  மாணிக்கவாசகர்  சிறிதும்  சலனமின்றி  இருந்தார் . ஈசனிடம்  தன்னை  ஒப்படைத்தவர்  இனி  எது வாயினும்  அவன்  பொறுப்பு  என்று  அமைதியாக  த்யானத்தில்  இருந்தார் . இந்த  பாட்டு  அவருடைய  நிலையை  சொல்லும் .
அன்றே எந்தன்  ஆவியும்  உடலும்  உடைமை யெல்லாமும்
குன்றே  அனையாய் யென்னை யாட்கொண்டபோதே  கொண்டிலையோ
இன்றோர்  இடையூரெனக்குண்டோ  முக்கண்  எம்மானே
நன்றே  செய்வாய்  பிழை  செய்வாய்  நானோ  இதற்கு  நாயகமே
  இப்பாடலுக்கு  உருகாத  நெஞ்சம்  உண்டோ ? அவர் அமைதியாக  இருந்தாலும்  ஈசன்  பொறுப்பாரா ? தன்  விளையாட்டை  ஆரம்பித்தார் . காட்டில்  நரிகளை  பிடித்து  அவைகளை  குதிரைகளாக  மாற்றி  ஆவணி  மூலத்தன்று  தானே  குதிரை  வியாபாரியாக  வந்து  அரசனிடம்  குதிரைகளை  ஒப்படைத்து  கயிறு  மாற்றிக்கொண்டு  இனி  எது  நேர்ந்தாலும்  தனக்கு  பொறுப்பு  இல்லை  என்று  சொல்லி  மறைந்தார் . அரசனும்  குதிரைகளின்  அழகில்  மயங்கி  ஒபுகொண்டுவிட்டார் 

Tuesday 7 July 2015

cont2

மாணிக்கவாசகரின் பக்தி  வியக்கத்தக்கது . தன்  குருவைத்தவிர  வேறு  எந்த  சிந்தனையும்  அவருக்கு  இல்லை .அவர்  சொல்லே  வேதவாக்கு . அதன்  விளைவை  பற்றி  அவருக்கு  எவ்வித  கவலையும்  இல்லை . சரணாகதி  நிலை .ஈசனும்  அவருக்கு  தீக்ஷை  கொடுத்துவிட்டு  சென்று  விட்டார் . அவரால்  உலகுக்கு  கிடைக்க  வேண்டிய  பொக்கிஷம்  கிடைக்கும்  வரை  அவர்  வாழ  வேண்டுமே . அவருக்காக  மெய்சிலிர்க்க  வைக்கும்  திருவிளையாடல்கள்  ஆட வெண்டும்  அல்லவா ? மாணிக்கவாசகர்  குரு  சொற்படியே  மன்னனிடம்  சென்று  அந்த  மாணிக்கத்தை  கொடுத்து  ஆவணி  மூலம் அன்று  குதிரைகள்  வந்துவிடும்  என்று  உரைய்க்கிறார் .

Monday 6 July 2015

cont.

தக்ஷிணாமூர்த்தியால்  தீக்ஷை  பெற்ற  மாணிக்கவாசகரின்  வாக்கிலிருந்து  அருவியாக  வந்த  பாடல்களில்  ஈசன்  மயங்கியதில்  ஆச்சர்யம்  என்ன  உள்ளது . அவரும்  தன்னை  மறந்து  பாடிக்கொண்டு  கையிலுள்ள  திரவியத்தை கொண்டு  கோயில்  கட்டும்  பணியில்  மும்மரமாக  ஈடுபட்டிருந்தார் . அப்போதுதான்  அரசனின்  ஆட்கள்  அவரை   தேடி  வந்தனர் . மணிவாசகர்  தன்  குருவை  நாடினார் . குரு  அவரிடம்  ஒரு மாணிக்க  கல்லை  கொடுத்து  இதை  அச்சாரமாக  கொடுக்க  சொல்லி  ஆவணி  மூலம்  அன்று  குதிரைகள்  வரும்  என்று  சொல்ல  செய்தார் .    

Sunday 5 July 2015

maikavasakar2

ஈசனே  வந்து  தனக்கு  தீக்ஷை  தந்தார்  என்பதையும்  தனக்கு  மாணிக்கவாசகர்  என்று  பெயர்  சூட்டினார்  என்பதையும்  அவர்   அறியவில்லை .மாணிக்கவாசகர்  ஈசனை  மனமுருகி  துதித்து  பாடியவாறே  திருகொயில்களை  தரிசித்தவாறே  நாட்கள்   கழித்து  கொண்டிருந்தார் . வெகு  நாட்களாகியும்  குதிரைகளுடன்  அமைச்சர்  வராத  காரணத்தால்  அரசன்  கடும்  கோபம்  கொண்டான் .

Friday 3 July 2015

manivasakar

வாதவூரர்  தமிழக  கீழ்கடற்கரையை  நோக்கி  புறப்பட்டார் . அவர்  மனம் மட்டும்  நல்ல  குருவை  தேடிய  வன்ணமே அலைந்து  கொண்டு  இருந்தது .ஈசன்  தன்  விளையாடலை  தொடங்குகிறார் . வாதவூரர்  வழியில்  திருப்பெருந்துறையை  அடைகிறார் . அங்கு  ஒரு குருந்தை  மரத்தடியில்  ஒரு  சிவனடியார்  தன்  சிஷயர்கள்  புடை  சூழ  அமைந்திருப்பதை  காண்கிறார் . அவரை  கண்ட  மாத்திரத்திலேயே வாதவூரர்  மனம்  சிலிர்க்கிறது . ஓடி  சென்று  அவர்  காலடியில்  வீழ்கிறார் . அவரும்  வாதவூரரை  ஆசீர்வதித்து  பாததீக்ஷை  வழங்குகிறார் . வதவூரரும்  அளவிலா  ஆனந்தம்  அடைகிறார் .அவ்வளவே . அவர் தன்னை  மறக்கிறார் . தான்  அமைச்சர்  தன்  கடமைகள்  எல்லாம்  மறந்து  விடுகிறது . குருவின்    பின்னே  செல்கிறார் . குருவும்  அவரை  ஈசனை  பாடவும் திருப்பெருந்துறை  கோவிலை  புனருத்தாரணம்  செய்யவும்  பணிக்கிறார் . வாதவூரரும்  அவ்வாறே  சிவபுராணம்  பாடுகிறார் . குருவும்  மெய்மறந்து  ரசித்து  இனி  நீ  மாணிக்கவாசகர்   என்று  அழைக்கப் படுவாய்  என்று  ஆசி  கூறுகிறார் . வாதவூரர்  இவ்வாறு  மாணிக்கவாசகர்  ஆகிறார் .