Friday 30 June 2017

திண்ணன்   பெரியவர்களை   வணங்கிவிட்டு   தன்னை   தயார்   செய்து   கொண்டு   வேட்டைக்கு   புறப்பட்டான் .  அவனுடன்   சிறந்த   வில்லாளிகளான   நாணன்   காடன்   இருவரும்   உடன்   செல்ல   தயாரானார்கள் .  தாரை   தப்பட்டைகள்   முழங்க   வேட்டைக்கு   புறப்பட்டனர்.  தாரை   தப்பட்டை   சப்தத்தை   கேட்ட   மிருகங்கள்   வெளியே   ஓடிவர   தொடங்கின .  இவர்களும்   விருப்பப்படி   மிருகங்களை   வேட்டை   ஆடினார் .  திடீரென   ஒரு   பெரிய   காட்டு   பன்றி   குறுக்கே   ஓடி   வந்தது .  திண்ணன்   அதை   கண்டதும்   அதை   துரத்தி   வேட்டை   ஆட   முற்பட்டான் .அதுவும்   வெகு   தூரம்   ஓடி   அலைக்கழித்தது .  

Sunday 25 June 2017

நாகன் தம்   சாதி   ஜனங்கள்   துன்பத்தை  கண்டு  மிக   வருத்தமுற்றான் .  மகன்   திண்ணன்   குலத்தொழிலில்   மிக   தேர்ச்சி  அடைந்து   விட்டது   நினைவில்   வர   அவனை   குல   தலைவனாக    நியமிக்க   முடிவு   செய்தான்.  அதற்காக   அதை   முறைப்படி   செய்ய  .        வேண்டியவர்களை   வரவழைத்து   விழாவாக   கொண்டாடினான் .  பிறகு   அவனை   சிறந்த   வேடுவர்   இருவர்   துணையுடன்   சாதி   சனங்களின்   துயர்   துடைக்க   அனுப்ப   ஆவன   செய்தான் .

Sunday 18 June 2017

குழந்தைக்கு   திண்ணன்   என்று   பெயரை   சூட்டினான் .  கண்ணும்   கருத்துமாக   குழந்தையை   வளர்த்தனர்   தம்பதியர் .  அவனும்   வளர்ந்து   ஆளானான்  அவன்    தந்தை   அவனுக்கு   முறையாக   தம்   குல   தொழிலுக்கு  தேவையான   பயிற்சிகளை   கொடுக்க   தொடங்கினார் .  அவனும்   அதில்   தேர்ச்சி   பெற   தொடங்கினான் . அவர்கள்   வேட்டை   ஆடுவதிலும்   சில   நியதிகள்   கடைபிடித்தனர்.  கர்ப்பமுற்ற  அல்லது   உடல்   ஊனமுற்ற    மிருகங்களை   தாக்க   கூடாது .  வயது   ஆகாத   மிருகங்களையும்   அடிக்க   மாட்டார்கள் .  இவ்வாறு   குல   தர்மங்களையும்   சேர்த்தே   பயிற்சி   பெற்றான் .  நாகன்   வயது   முதிர்ந்த   காரணத்தால்   வேட்டைக்கு   செல்ல   இயலாதவனாக   இருந்தான் .அப்போது   ஒரு   நாள்   அண்டை   காடுகளை   சேர்ந்தவர்கள்   நாகன்   தொழில்   செய்யாத   காரணத்தால்   அவர்கள்   இருப்பிடத்தில்   காட்டு   மிருகங்களின்   அட்டகாசம்   அதிகரித்து   விட்டதாக   மிக   வருத்தத்துடன்   ஓலமிட்டனர் 

Thursday 15 June 2017

முருகப்பெருமான்   தன  இணையிலா   பக்தர்களின்   மீது   இரக்கம்   கொண்டு   அவர்களுக்கு   வேண்டிய   பரிசை   அளிக்க   இச்சை   கொண்டார்.  அவர்   பேரருளால்   தத்தை   ஒரு அழகான   ஆண   குழந்தையை   பெற்றடுத்தாள்  .   நாகன்   தம்பதியர்   அடைந்த   ஆனந்தத்திற்கு    அளவே  இல்லை. விசாரிக்க  வருவோருக்கு   பரிசுகளை   வாரி   வாரி   வழங்கினான் .    

Wednesday 7 June 2017

கலைமலிந்த   சீர்நம்பி   கண்ணப்பர்க்கு   அடியேன்  |  

அடுத்து   காணப்போவது   இணை   இல்லா   பக்தன்   கண்ணப்பன்   ஆகும் .
உடுப்பூர்   எனும்   ஊரில்   நாகன்   என்பவன்   வாழ்ந்து   வந்தான் .  வனபிரேதசமான   அங்கு   அவன்   வேடர்களின்   தலைவனாக   இருந்தான் .அவன்   வேட்டை   ஆடுவதில் மிக   கெட்டிக்காரன் .   அப்பிரதேச    வேடர்கள்   அவன்   மீது   மிகுந்த   மரியாதை   வைத்திருந்தார்கள் .   காட்டு   மிருகங்களால்   ஆபத்து   நேரும்போதெல்லாம்   நாகனையே   நம்பினார்கள் .  அவன்   மனைவி   தத்தை   என்பவள் .  தங்கள்   குல   தெய்வமான   முருகனிடம்   அபார   பக்தி   வைத்திருந்தார்கள் . அவர்களுக்கு   ஒரே   குறை   மணமாகி   வெகு   நாட்கள்   ஆகியும்   பிள்ளைப்பேறு   இல்லாததே 
கலைமலிந்த   சீர்நம்பி   கண்ணப்பற்க்கு