Thursday 30 November 2017

தாயனாரின்   செல்வம்   குறைய   தொடங்கியது .அப்போதும்   அவர்   தன்   திருத்தொண்டை   நிறுத்தவில்லை .  ஆட்களை   வைத்து   வேலை   வாங்கி   வந்த   அவர்   செல்வம்  எல்லாம்   இழந்த   நிலையில்   ஒருவரிடம்   கூலி   வேலைசெய்து   அந்த  வருவாயிலும்   தவறாமல்   ஐயனுக்கு   தாம்   செய்து   வந்த   தொண்டினை   தொடர்ந்து   செய்து   வந்தார் .  தமக்கு   கிடைத்த   கூலியில்   செந்நெல்லை   இறைவனுக்கு   அமுது   படைக்க   எடுத்துக்கொண்டு     கார்நெல்லை   தானும்   தன்மனைவியும்   உண்ண   உபயோகித்து   கொண்டார் .  வறுமையிலும்   விடாது   தொண்டு   செய்து   வரும்   அவருடைய   அப்பெரும்  அன்பை   மேலும்   சோதிக்க   எண்ணி   அவ்வூரில்   விளையும்   எல்லா   நெல்லையும்   செந்நெல்லாக   மாறச்செய்தார் .  தன்   கொள்கையிலிருந்து   சிறிதும்   மாறாத   தாயனார்   கூலியாக   கிடைத்த   மொத்த   நெல்லையும்   ஈசனுக்கே   படைத்தார்.   அவர்   மனை வி    தோட்டத்தில்    விளையும்   கீரையை   சமைத்து  அதில்    இருவரும்   பசியாறினர் 

Tuesday 28 November 2017

எஞ்சாத   வாட்டாயர்   அடியார்க்கும்   அடியேன் |

சோழ   நாட்டில்   கணமங்கலம்   என்ற   ஊரில்  வேளாளர்   குலத்தில்   பிறந்தவர்   தாயனார்   என்பவர் .  அவர்   வேளாளர்   குல   தலைவர் .  அவ்வூரில்   எழுந்தருளி   இருக்கும்  நிதிநெறிநாதரிடம்    அளவு   கடந்த   பக்தி   கொண்டிருந்தார் .  தினமும்   அவருக்கு செந்நெல்   அரிசியில்   அன்னமும்   செங்கீரையும்   மாவடுவும்   செய்து   கொண்டு   சென்று   நைவேத்யம்   செய்து   அங்கு   வரும்   சிவனடியார்களுக்கு   அளிப்பதை   தமக்கு   கிடைத்த   பாக்கியமாக   சிரத்தையாக   செய்து   கொண்டு   வந்தார் .தாயானார்   மேற்கொண்டிருக்கும்   இத்தொண்டினையும்   அவருடைய   பக்தியையும்   உலகுக்கு   உணர்த்த   இச்சை   கொண்டான்   ஐயன் .   

Saturday 25 November 2017

மானக்கஞ்சாறர்   வெட்டிய   கூந்தலை   கையில்   எடுத்து   இதோ   பிடியுங்கள்   என்று   அடியாரிடம்   நீட்டினார் .  அதை   அடியார்   வாங்கி   கொள்வார்   என்று   திரும்பியவர்   அவர்   மறைந்து   விட்டது   கண்டு   திகைத்தார் .  கூந்தலும்   பழையபடி   தன்   பெண்ணின்   தலையில்   இருப்பதை   கண்டார் .  அப்போது   ஈசன்   வானில்   தோன்றி   ''அப்பனே   உன்   உயரிய   பக்தியை   உலகுக்கு   காட்டவே   இவ்வாறு   செய்தோம் .''   என்று   கூறி   மறைந்தார் .  மானக்கஞ்சாறர்   மெய்சிலிர்த்து   பலவாறு   ஐயனை   போற்றி   துதித்தார் .  மானக்கஞ்சாறரின்   பெண்ணின்   கூந்தல்   முன்னினும்   அதிக   காந்தியுடன்   விளங்கியது .  இதனிடையே   மணமகனின்   வீட்டார்   மண வீட்டை   நெருங்கி   கொண்டிருந்தனர் .  அவர்கள்   மணமகளின்   கூந்தலை   வெட்டி   கொடுத்த   செய்தியை   கேள்விப்பட்டு   கூந்தலில்லாத   மணப்பெண்ணை   மணப்பது   சாஸ்திர   விரோத மாயிர்றே   என்று   கவலை   கொண்டனர் .  ஆனால்   சிறிது   நேரத்தில்   வந்தது   சிவபெருமானே   என்றும்   பெண்ணின்   கூந்தல்   இப்போது   அதிக   காந்தியுடன்   இருப்பதாக   கேள்விப்பட்டு   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தனர் .  திருமணம்   இனிதே   நடந்து   முடிந்தது .
இதன்   பிறகு   மானக்கஞ்சாறர்   இன்னும்   பக்தியுடன்   சிவனடியார்களுக்கு   சிறந்த   சேவை   செய்து   சில  காலம்   வாழ்ந்து   பிறகு   சிவனடி   சேர்ந்தார் .  

Friday 24 November 2017

இப்போது   ஈசன்   தன்   அன்பனின்   பக்தியை   சோதிக்க   எண்ணம்   கொண்டார் .  தன்   பக்தனின்   பெருமை   உலகு   அறிய   வேண்டாமா ?  சைவ   சமயத்தில்  ஒரு   சாரார்   சிவபெருமானை  எலும்பு   மாலை   தரித்த   மூர்த்தியாக   த்யானிப்பர் .  அவர்கள்  நெற்றியில்   திருநீறும்   தலையில்   கேசத்தை   முடித்து   அதில்   எலும்பு   செருகிக்கொண்டும்   மார்பில்   மயிரினால்   ஆன   பூணுலும்   அணிந்திருப்பர் .  சிவபெருமான்   அக்கோலத்தில்     திருமண   மண்டபத்தை   அடைந்தார் .  சிவனடியார்   வந்திருப்பது   கண்டு   மானக்கஞ்சாறர்   ஓடோடி   வந்து   பக்தியோடு   அவரை   வணங்கி   வரவேற்றார் .  ஈசன்   ஒன்றும்   அறியாதவர்போல்   இங்கு   என்ன   விசேஷம் ?  என   வினவினார் .  மானக்கஞ்சாறர்   தன்   மகள்   விவாகம்   நடக்கப்போவதாக   சொல்லி   அவளுக்கு   ஆசி   வழங்குமாறு   கூறி   அவளை   அழைத்து   அடியாரை   வணங்க   கூறினார் .  அவளும்   அவர்   காலில்   வீழ்ந்து   வணங்கினாள் .   நீண்ட   அவள்   கூந்தலை   கண்டு   ஈசன்   ஆஹா   இந்த   கூந்தல்   பூணுலுக்கு   ஏற்றதாக  இ ருக்கும்   என்று   அவர்   சொல்லி   முடிப்பதற்குள்   மானக்கஞ்சாறர்   தன்   வாளை   உருவி   பெண்ணின்   கேசத்தை   வெட்டி   எடுத்து   அடியார்   கையில்   கொடுத்தார் .  அவர்   பெண்ணும்   முகத்தில்   புன்னகை   மாறாமல்   தன்   தந்தை   செயலுக்கு   எந்த   மறுப்பும்   சொல்லாமல்   முகமலர்ச்சியுடன்   அவர்   செயலை   ஏற்றுக்கொண்டாள் .   

Thursday 23 November 2017

பெற்றோர்     தகுந்த   இடத்தில்   மகளை   மணமுடித்து   கொடுக்க  ஆவல்   கொண்டனர்.  தகுந்த   மாப்பிள்ளையை   தேடினர் .  அப்போது பக்கத்து   ஊரிலிருந்து   அவளை   பெண்கேட்டு   வந்திருந்தனர் .  அவர்களும்   இவர்களுக்கு   சம   அந்தஸ்து   உடையவர்கள்.  ஏயர்கோன் கலிக்காமர்   என்ற   அவரும்   சேனைத்தலைவர் .  நல்ல   குடும்பத்தை   சேர்ந்தவர் .  மானக்கஞ்சாறருக்கு   பரிச்சியமானவர் .  எல்லாம்   நல்லபடியாகவே   முடிய   அவர்கள்   பேசி   நல்ல   நாள்   குறித்து   மணமுடிக்க   நிச்சயித்தனர் .  மணநாளும்   வந்தது .  சேனாதிபதி   வீட்டு   திருமணம்.  ஏற்பாடுகள்  கோலாகலமாக   நடைபெற்றன .  மாப்பிள்ளை   வீட்டார்   திருமணம்   முடித்து   செல்ல   கோஷ்டியுடன்   வந்து   கொண்டிருந்தனர் .

Tuesday 21 November 2017

ஈசன்   அத்தம்பதியற்கு   எல்லா   வசதிகளையும்   கொடுத்திருந்தார் . இன்பமான   வாழ்க்கை   தான்.  ஆனால்   அவர்களுக்கு   பிள்ளை   பேறு   அளிக்காதது      பெரும்   குறை .  ஐயனை   மனமுருக   பிரார்த்தனை   செய்தனர் .  ஈசன்   தன்   அருமை   பக்தர்களை   கவனிக்காமல்   இருப்பாரா? சிலகாலத்தில்   அவர்   மனைவி   கருத்தரித்து   ஒரு   அழகான   பெண்   குழந்தையை   ஈன்றெடுத்தாள் .  அவர்கள்   ஆனந்தத்திற்கு   அளவேது ?  அருமை   பெருமையுடன்   குழந்தை   வளர்ந்தது . குழந்தையும்   குலப்பெருமையை   காக்கும்   பண்பு   மிக்கவளாக   வளர்ந்தாள் .  பெற்றோர்   ஆனந்தத்திற்கு   அளவேது ?  அவள்   மணப்பருவம்   எய்தினாள் . 

Thursday 16 November 2017

மலைமலிந்த   தோள்   வள்ளல்   மானக்கஞ்சாறன் |

சோழ   நாட்டில்   கஞ்சானுர்   என்கிற   ஒரு   தலம்    இருக்கிறது .   அவ்வூரில்   வேளாளர்   குடியில்   பிறந்தவர்   மனக்கஞ்சாறர்   என்பவர் .  அக்குடும்பம்   பரம்பரையாக   அரசர்களிடம்   சேனாதிபதியாக   பதவி   வகித்து  வாழ்ந்து   வந்தவர்கள்.மானக்கஞ்சாறர்   சிவபெருமானிடம்   அளவு   கடந்த    பக்தி  கொண்டிருந்தார் ..  சிவனடியார்களை   மீது   அளவு   கடந்த  மதிப்பு   வைத்து   அவர்களுக்கு   வேண்டிய   வசதிகளை   செய்து   அதையே   தம்   லட்சியமாக   கொண்டு   இருந்தார் . அவர்   மனைவியும்   சிறந்த   சிவபக்தை .  இருவரும்   மனமொத்த   தம்பதிகளாக   வாழ்ந்து   வந்தனர் 

Tuesday 14 November 2017

சந்தோஷத்துடன்   மனநிறைவோடு   கலயர்   ஊர்   திரும்பி   இன்னும்   அதிக   பக்தியோடு   தன்   பணியை   தொடங்கினார் .  இவ்வாறு   வாழ்ந்திருந்த   காலத்தில்   அப்பர்   சம்பந்தர்   தங்கள்   பரிவாரங்களோடு   அவ்வூர்   சென்ற ..போது   அவர்களை   அன்போடு   வரவேற்று   அமுது   படைத்து   உபசரித்தார் .  இவ்வாறு   மனநிறைவோடு   வாழ்ந்து    பிறகு   சிவனடி    சேர்ந்து   குங்கிலியகலய   நாயனாராகி   சிவாலயங்களில்   சிலையாக   இன்றும்   அமர்ந்திருக்கின்றார் .  வாழ்க !

Sunday 12 November 2017

இச்செய்தியை   கேட்ட   கலயர்   தன்   பக்தைக்காக  சிரம்    தாழ்த்திய   எம்பெருமானை   காண  மிக்க   ஆவலுடன்  உடனே   திருப்பனந்தாள்   புறப்பட்டார் .   கவலை   தோய்ந்த   முகத்துடன்   இருந்த   அரசனை   கண்டார் .யானைகள்   சங்கிலியால்   இழுத்து   லிங்கதிருமேனியை   நிமிர்த்த   முடியாமல்   தவிப்பதையும்   கண்டார் . இத்திருப்பணிக்கு   உதவாத   தன்   திருமேனி   எதற்கு   என்று   எண்ணி   லிங்கத்தில்   கட்டி   இருந்த   கயிற்றை   எடுத்து   தன்   கழுத்தில்   மாட்டிக்கொண்டு   ஈசனை   தியானித்து   கண்ணை   மூடிக்கொண்டு   இழுத்தார் .  அதிகாரத்திற்க்கு   கட்டுப்படாத   ஐயன்   அன்புக்கு   உடனே   கட்டுப்பட்டு   நிமிர்ந்தார் .  சந்தோஷத்தில்   அரசனும்   அங்கிருந்த   எல்லோரும்   ஆரவாரத்துடன்   அவர்   காலில்   விழுந்து   வணங்க   விரைந்தனர் .கலயர்   நெஞ்சு   தழுதழுக்க ஏழையின்   அன்புக்கு   கட்டுப்பட்டு   நிமிர்ந்த  உன்னை   என்   சொல்லி   போற்றுவேன்   என்று   கண்ணீர்   மல்க   நின்றார் .  ஈசன்   தன்   மெய்யன்பனின்   பெருமையை   உலகுக்கு   உணர்த்த   தன்   திருவிளையாடலை   ஆடி   முடித்தார் .

Saturday 11 November 2017

இவ்வாறு   க லயர்   அமைதியாக   வாழ்ந்து   வந்த  வேளையில்   அவர்   ஒரு   செய்தி   கேட்டார் .  அதாவது   திருக்குடந்தை   அருகில்   திருப்பனந்தாள்   எனும்   ஊரில்   நடந்த   ஒரு   சம்பவம்   அவரை   அவ்வூருக்கு   சென்று   அந்த   ஐயனை   சேவிக்க   ஆவலை   தூண்டி  யது .  அவ்வூரில்   தாடகை   என்னும்   அம்மையார்   வாழ்ந்து   வந்தார் .  சிறந்த   சிவபக்தை .  தினமும்   காலையில்   நீராடி   குளத்திலிருந்து   நீர்   கொண்டுவந்து   அவ்வூர்   ஈசனுக்கு   அபிஷேகம்   செய்வதை   வாடிக்கையாக   கொண்டிருந்தாள் .  ஒரு   நாள்   அவள்   குடத்தை   இடுப்பிலிருந்து   எடுத்து   அபிஷேகம்   செய்ய   கை   தூக்க   எத்தனிக்கையில்   அவள்   சேலை   நழுவியது .  அதை   பிடித்துக்கொண்டு   குடத்தை   தூக்க   முடியாமல்   தவித்தார் .  தன்   பக்தை   தவிப்பதை   காண   சகியாத   ஈசன்   தானே  குனிந்து   நீரை   ஏற்றுக்கொண்டார் .  தன்   முடியை   தன்   பக்தைக்காக   சாய்த்த   அத்திரு   கோலத்தை  உலகம்   காண   அப்படியே    இருந்து   விட்டார் .   சோழ   அரசன்   ஈசனின்   அந்த   கோலத்தை   அவ்வாறே   இருப்பதை   விரும்பாமல்   தன்   ஆள்பலத்தால்  அவரை   நிமிர்த்த   யத்தனித்தான் .  இம்மிகூட    அசையவில்லை .  யானைகளை   கொண்டு   கட்டி   இழுத்து   நிமிர்த்த   யத்தனித்தான் .  ஒன்றும்   பலனில்லை .  அரசன்   நொந்து   போனான் .

Thursday 9 November 2017

   'வீடு   செல் ,  மனைவி    உனக்காக   காத்திருப்பாள் '  என்று   ஐயன்   கனவில்   சொன்னதும்     கலயன்   திடுக்கிட்டு   விழித்தான் .  வீடு   செல்லவும்   மனமில்லாமல்    ஈசன்   ஆணையை   மீறவும்   முடியாமல்   மெள்ள   உள்ளத்தை   திடப்படுத்திக்கொண்டு   வீடு   சென்றான் .  வாயிக்கதவு   திறந்து   இருப்பதை   கண்டு   திடுக்கிட்டு   உள்ளே   நுழைந்தான் .  அவன்   மனைவி   அவன்   காலில்   விழுந்து   நீங்கள்   தினம்   வணங்கும்   அமுதகடேஸ்வரர்   இன்று   அருள்   புரிந்து   விட்டார் .  உள்ளே   அமுது   உண்ண   வாருங்கள்   என்று   அழைத்தாள் .  உள்ளே   நுழைந்த   அவர்   நன்றி   பெருக்கால்   கண்ணில்   நீர்   பெருக   ஐயனை   தொழுதார் .  காலை   சிவத்தொண்டர்களை   எல்லாம்   வர  செய்து   எல்லோருக்கும்   அமுது   படைத்து   தன்   நன்றியை   வெளி   படுத்தினார் .  மறுபடியும்    ஐயனுக்கு   தன்  தொண்டை   குறைவர   செய்ய   தொடங்கினார் .  அமுதகடேஸ்வரர்   தன்   அருமை   தொண்டரின்   பெருமையை   உலகறிய   செய்ய   வேண்டாமா ?  தன்   திருவிளையாடலை   துவங்கினார் .

Wednesday 8 November 2017

கனமான   இதயத்துடன்   கலையர்  அந்த   பொன்   மாங்கல்யத்தை   எடுத்துக்கொண்டு   பசியாற்ற  ஏதாவது   வாங்கி   வர   புறப்பட்டார் .  ஈசன்   விளையாட்டை   யார்   அறிவார் ?  அவர்   சென்ற   பாதையில்  எதிரே   ஒருவன்  வண்டியில்   குங்கிலியம்   வியாபாரம்   செய்து   கொண்டிருந்தான். அதை   கண்டவுடன்   அவர்   மனம்   பேதலித்தது .  தான்   வந்த   காரியம்   மறந்தது .  தான்   வாடிக்கையாக   செய்வதே  மனதில்  நினைவு    வந்தது .  ஒன்றும்   யோசியாமல்   பொன்னை   கொடுத்து   வேண்டிய   குங்கிலியம்  வாங்கிக்கொண்டு  மன   மகிழ்ச்சியுடன்   ஆலயத்தில்   அதை   சேர்ப்பித்து    அந்த   திருப்பணி   நன்றாக   முடிந்ததில்   மெய்மறந்து   கோவிலை   வலம்   வந்தார் .  எல்லாம்   முடிந்த   பின்புதான்   அவருக்கு   வீடு   நினைவு   வந்தது .  குழந்தைகளின்   பசியால்   வாடிய   முகம்   ஞாபகம்   வந்தது .  துடிதுடித்து   போனார் .  வீடு   செல்ல   மனம்   வரவில்லை .  துவண்டு   போனார் .  ஈசன்   சும்மா   இருப்பாரா ?  பக்தனை   அவ்வாறு   துடிக்க   செய்வாரா ?  அவருடைய   வீட்டில்   சகல   விதமான   செல்வங்களும்   குவிய   ஆரம்பித்தன .  அவர்   மனைவி   குழந்தைகளுக்கு   சநதோஷம்   தாங்கவில்லை .  ஆலயத்தில்   கலயன்   கனவில்   ஈசன்   தோன்றி   பசியுடன்   இருப்பாய்   வீடு  செல்   என்றார் .

Tuesday 7 November 2017

குங்கிலிய   தீபம்   ஈசனுக்கு   இடும்   பணியில்   அவர்  மிக்க  தீவிரமாக   தன்னை   ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் .  ஒரு   நாளும்   தவறாமல்   செய்து   வந்தார் .  சிவபெருமான்   அவருடைய   தீவிர   பக்தியை   சோதிக்க   எண்ணம்   கொண்டார் .  செல்வத்தோடு   வாழ்ந்த   அவர்   குடும்பம்   ஏழ்மை   நிலையை   நோக்கி   செல்ல   ஆரம்பித்தது .  நாள்   செல்ல   செல்ல   ஏழ்மை   அதிகரித்தது .  அன்றாடம்   வயிற்று   பிழைப்பிற்கே   சங்கடம்   நேரலாயிற்று .  ஒரு   நாள்  சாப்பாட்டிற்கே   ஒன்றும்   இல்லாமல்   குழந்தைகள்   மிக   துன்பம்   அடையும்   நிலை   வந்தது .  கலையரின்   மனைவி   குழந்தைகளின்   வேதனையை   காண   சகிக்காமல் .  தன்   திருமாங்கல்ய   கயிற்றில்   இருந்த   தங்க   மாங்கல்யத்தை   கழற்றிக்   கொடுத்து   பெரியவர்கள்   எப்படியாவது   பசியை   தாங்கலாம் .  குழந்தைகள்   என்ன   செய்யும் ,  இதை   விற்று   ஏதாவது   வழி   செய்யுங்கள்  என்று   சொல்லி  அவரிடம்   கொடுத்தாள் .  திடுக்கிட்டு   போன   கல யன்   என்ன   காரியம்   செய்துவிட்டாய்   என்று   பதறி   போனான் .  அதற்கு   அவள்   அவன்   கட்டிய   மஞ்சள்   கயிறு   இருப்பதே   போதும்   இன்று   குழந்தைகள்   உண்ண   ஏதாவது   வழி   செய்தால்   போதும் ,  என்று   சமாதானம்   கூறினாள் .

Saturday 4 November 2017

கடவூரில்   கலையன் தன்   அடியார்க்கு   அடியேன் |

சோழநாட்டில்   திருக்கடவூரில்   ஒரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவருக்கு  அவர்   பெற்றோர்    கலயன்   என்ற   அவ்வூர்   பெருமானின்   திருநாமத்தையே   வைத்திருந்தனர் .  அவர்  சிவபெருமானிடம்   அலாதி   பக்தி   வைத்திருந்தார்.   அவர்   தினமும்   குங்கிலிய   தீபம்   ஈசனுக்கு   இடும்   பணியை   வாடிக்கையாக   கொண்டிருந்தார் . 

Wednesday 1 November 2017

தன்   கண்   பொருத்தி   ஐயன்  கண்   சரி   ஆனது   அவனுக்கு   அளவிலா   ஆனந்தத்தை   அளித்தது .  தன்   கண்ணை   கொடுத்ததால்   அவனுக்கு   சிறிதும்   மன   வருத்தம்   இல்லை .  மனம்   எல்லை   இல்லா   மகிழ்ச்சியை   அடைந்தது .  ஆனால்   அந்தோ !  அந்த   மகிழ்ச்சி   சிறிது   நேரம்   கூட   நிலைக்கவில்லை .  அவரது   இடது   கண்ணிலிருந்து   ரத்தம்   பெருக   ஆரம்பித்தது .  திண்ணன்   சிறிதும்   தயங்காமல்   தனது   இடது   கண்ணை   எடுக்க   அம்பை   எடுத்தான் .  திடீரென்று   அவனுக்கு   நினைவு   வந்தது .  அந்த   கண்ணையும்   எடுத்து   விட்டால்   தன்னால்   ஐயன்   கண்   இருக்குமிடத்தை   அறிய   முடியாதே   என்பது   மனதில்   உதித்தது .   உடனே   தன்   காலை   இடது   கண்   இருக்குமிடத்தில்   அடையாளமாக   வைத்துக்கொண்டு   அம்பினால்   தன்   இடது   கண்ணை   தோண்டி   எடுக்க   யத்தனித்தான் .  அந்தக்கணமே   ஈசன்   தோன்றி   'நில்   கண்ணப்ப '  என்று   அவன்   கையை   பிடித்தார்  தனது   வலது   பக்கத்தில்   அவனை   இருத்திக்கொண்டார் .  .'திண்ணா   உன்      கண்ணை   எனக்கு   ஈந்து   நீ   கண்ணப்பன்     ஆகிவிட்டாய் .  நீ   என்றும்   எனது   வலது   பக்கத்தில்   இருப்பாய்   உன்னுடைய   அளவிலா   பக்தியை   உலகம்   உணர   செய்யவே   இவ்வாறு   கண்ணில்   உதிரம்   கொட்ட   செய்தோம் '.  என்று   கூறி   தன்னில்  செர்த்துக்கொண்டார்.  மறைந்து   நின்று   இக்காட்சியை   கண்ட   அந்தணர்    மெய்சிலிர்த்துப்போனார் .  ஒன்றும்   அறியா   வேடன்   திண்ணன்   கண்ணப்ப   நாயனாராகி   சிவாலயங்களில்   சிலையாக   இருக்கிறார் .