Friday 16 November 2012

இப்போது   சில   பண் களுக்கு  உரிய   ராகங்களை   காண்போம் .
 நட்டபாடை -  நாட்டை , இந்தளம் -மாயாமாளவகௌளை , 
கொல்லி ,காந்தாரம் ,பியந்தை காந்தாரம்   இவை   மூன்றும்   மத்யம   சுருதியில்   பாடப்படும்   நவரோஜ்  ராகத்தை   ஒத்திருக்கும்   ராகங்கள் ,புறநிர்மை -பூபாளம் ,  தக்கராகம் -காம்போதி   பழந்தக்கராகம் -சுத்தசாவேரி ,     மேகராக குறிஞ்சி - நிலாம்பரி ,  காந்தாரபஞ்சமம் -கேதாரகௌளை
பழம்பஞ்சுரம் -சங்கராபரணம் ,  சீகாமரம் -மாயாமாளவகௌளை
வியாழக்குறிஞ்சி -சௌராஷ்டிரம் ,  குறிஞ்சி -ஹரிகாம்போதி
நட்டராகம் -பந்துவராளி ,  கௌசிகம் -பைரவி ,  பஞ்சமம் -ஆஹிரி
செந்துருத்தி -மத்யமாவதி ,  சாதாரி -பந்துவராளி ,  செவ்வழி -யதுகுலகாம்போதி ,  ஆந்தாளிகுரிஞ்சி -சாமா ,  தக்கேசி -
 காம்போதி ,  யாழ்முறி -அடாணா ..
அந்த   காலத்தில்   யாழ் பக்க  வாத்தியமாக   இருன்திருக்க   வேண்டும் .
நீலகண்ட யாழ்ப்பாணர்   எனும்   பக்தர்   குழந்தை   ஞானசம்பந்தர்
பாடும்போது   பக்க வாத்தியம்   வாசிப்பது   வாடிக்கை   ஒருமுறை .
சம்பந்தர்   திருமபுரம் பதியை   (மாதர்மடபிடியும் )   தன்னை
மறந்து   பாட   யாழ்   அதற்கு   ஈடு   கொடுக்க  முடியாமல்   தந்தி
அறுந்து  விட   யாழ்பாணர்   மனம்   ஒடிந்தார் .  சம்பந்தர்   அவரை
சமாதானம்   செய்து   அந்த  பண்ணுக்கு   யாழ்முறி   என்று
பெயர்  சூட்டினார்   என்று   வரலாறு  

  

Thursday 15 November 2012

திருவெண்ணெய் நல்லூர்   ஈசன்  சுந்தரருக்கு (பிதாபிறைசூடி   ) என்று   முதல்பாட்டிற்கு   அடி   எடுத்து   கொடுத்தார்   என்றும்   பெரிய  புராணம்   பாடிய   சேக் கிழாருக்கு   (உலகெலாம்   உணர்ந்து )  என்று  தில்லை   அம்பலவாணன்  முதலடி  எடுத்து
கொடுத்தார்   என் று   வரலாறு . நாயன்மார்களை   பாடிய   புராணம்
பெரியபுராணம்   என்று  பெருமை   பெறுகிற  து . மணிவாசகர்  . திருவாசகம்   அற்புதமானது .திருவாசகத்திற்கு   உருகாதார்   எவ்வாசகத்திற்கும்   உருகார்   என்பது   பெரியோர்   வாக்கு .
          இயல் ,  இசை ,  நாடகம்   என்ற   முத்தமிழை   வளர்க்க 
சிவபெருமானால்   அமைக்க   பெற்ற    தமிழ்சங்கம்    இன்னும் 
பழைமை   வாய்ந்தது   என்பது   குறிப்பிடத்தக்கது .
        திருமுறைகளை    தொகுத்ததோடு    நில்லாமல்   ராஜராஜ 
சோழன்    எல்லா   சிவாலயங்களிலும்    ஓதுவார்களை   நியமித்து    தினமும்   ஓதப்படவும்    வகை   செய்தான் .   இப்பெரும்    தொண்டால்   இன்று வரை    தேவாரம்   நிலைக்க 
செய்துள்ளது




  

Tuesday 13 November 2012

ராஜராஜசோழன்  அரசாண்ட   காலத்தி.ல் சில  சிவ பக்தர்க்ளிடமிருந்து   நாயன்மார்களால்  பாடப்பெற்ற   பாடல்கள்  கொண்ட   ஓலைசுவடிகள்   சிதம்பரம்  ஆலயத்தில்  ஓர்  
அறையில்   பூட்டப்பட்டு   தீ க்ஷிதர்கள்  வசம்   திறவு கோல்   உள்ளதா   கேள்விபட்டான் .  ராஜராஜன்   பெறும்   முயற்ச்சி   செயது   அவைகளை  மீ ட்டான்.   அவற்றை   நம்பிஆண்டார்நம்பி
என்ற   பெரும்   சிவ பக்தரிடம்   ஒப்படைத்தான் .  அவரும்   சிவ
பெருமானின்  பேரருளால்  பேரழிவு   நிலையில்   இருந்த   சுவடிகளை   மீட்டெடுத்து    12  திருமுறைகளாக   மிகுந்த   சிரமத்திற்கு   பிறகு   தொகுத்து   அளித்தார்.  முதல்  7 திருமுறைகள்  ஞானசம்பந்தர் ,  திருநாவுக்கரசர் ,  சுந்தரர்   இவ்  மூவரும்   பாடியவை .  8  திருமுறை     மாணிக்கவாசகர்   பாடிய
திருவாசகம்  மற்றும்   சில , 9 திருமுறை   திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு   போன்று   சில  நாயன்மார்களால்  பாடப்பட்டவை .  10  திருமூலரின்   திருமந்திரம் . 11 திருமுறை   11  பக்தர்களால்   பாடப்பட்டவை .  12 திருமுறை 
பிற்காலத்தில்   63  நாயன்மார்களின்   வரலாற்றை   சேக்கிழார் 
பெருமானால்   தொகுத்து   பாடப்பட்ட   பெரியபுராணம்   ஆகும்                

Saturday 10 November 2012

திருமுறை 
63  நாயன்மார்கள் . இவர்கள்   பெரும்  சிவ   பக்தர்கள் . பெரிய
சிவாலயங்களில்  இவர்க ளின்  மூர்த்திகளை   காணமுடியும் .
இவர்களால்   பாடப்ப்ட்டவையே   திருமுறைகள் . அதில்  நால்வர்
மிக  பெருமை  வாய்ந்த.வர்கள்   திருஞனசம்பந்தர் , அப்பர் , சுந்தரர் ,
மாணிக்கவாசகர் . முதல் 8 திருமுறைகள்   இவர்கள்   பாடல்களே .
இபபொக்கிஷம்   கிடைக்கப்பெற்ற்.. வராலாறு   காண்போம் .

  

Wednesday 7 November 2012

நா லா யி ர ம் ,தே வா ர ம்  இ வை    தொ கு க்க ப் ப ட் டு  1500 ஆ ண் டு க ள்  ஆ கி ன் ற ன  எ ன் றா லு ம்  இ வை  பா ட ப் ப ட் டு
எ த் த னை  ஆ ண் டு க ள்  ஆ கி ன் ற ன   எ ன் ப து  ச ரி யா க  கூ ற
இ ய லா து .தி ரு மூ ல ர்  போ ன் ற  சி த் த ர் க ள்  வா ழ் ந் த  காலம்
நா ம அ றி   யோ ம் .ஆ க  த மிழ்  இசை   இன்னு ம்   தொன்மை
வாய்ந்தது .நம்  சங்கீத   ஆராய்ச்சி யாளர்கள்   சுமார் 24 பண்களுக்கு 
உரிய  ராகங் களை   கண்டு  பிடித் து  உளளனர்    

Sunday 4 November 2012

தமிழ் இசை


தமிழ் இசை

தமிழ் இசை மிக தொன்மையானது.1500 ஆண்டுகளூக்மாகு முன்பே ஆழ்வா ர்களும் நாயன்மார்களும் இசை மார்க்கமாக பக்தியை பரப்பினர்.

இசை பக்தியை பரப்ப பெரும் சாதனமாக திகழ்ந்தது    நாயன்மார்கள் 63, சிவபெருமானை ஆராதித்தனர்.அழ்வார்கள் 12 சிறந்த விஷ்ணு

பக்தர்கள் இவை சிறந்த பண்ணிசை பாடல்கள்.சைவர்களின் தேவார பாடல்கள் 12 திருமுறையாக தொகுக்கபட்டன. அழ்வார்களின் பாடல்கள்

நாலாயிரதிவ்யபிரபந்தமாக தொகுக்கபட்டன..நம் முனன்னோர்களின்  இடையறா முயற்சியின் பயனாய் கிடைக்கப் பெற்றோம் இப்பொக்கிஷத்தை.