Tuesday 29 October 2019

சுந்தரர்   பேரூரில்   ஆடலரசனின்   தெய்வ   கூத்து   தரிசனம்   செய்தபின்   சோழ   நாட்டு   திவ்ய   தேசங்களை   தரிசிக்க   யாத்திரை   புறப்பட்டார் .  தரிசித்து   கொண்டு   கூடலை ஆற்றுறை     நெருங்கினார் .   அவருடைய   இலக்கு   முதுகுன்றம்   சென்று   பழமலைநாதரை    சேவிப்பது .  ஆகையால்   அவ்வூரை   நெருங்காமல்   வேறு   பாதையில்   செல்லலானார் .  முதுகுன்றம்   செல்லும்   பாதையை   தேடி   செல்ல   முனைந்தார் .   ஆனால்    ஆற்றுர்      ஐயனுக்கு   தேன்தமிழ்   சுந்தரர்   பாடலை   கேட்க  மிக்க   ஆவல்    உண்டாயிற்று

Wednesday 23 October 2019

சுந்தரர்   மழபாடியில்   சில   நாள்   தங்கி   ஆசைதீர  அவரை   சேவித்துக்கொண்டு   திருவானைக்கா   புறப்பட்டார் .  அந்த   ஈசனை   பாராட்டி   பதிகங்கள்   பாடி   மகிழ்வித்தார் .   அங்கு   ஆற்று   வெள்ளத்தில்   விழுந்த   சோழ   மன்னனின்   முத்துமாலையை    திருமஞ்சனத்திற்கு   கொண்டு   சென்ற    குடத்தில்    வரவழைத்த   அந்த   ஈசனின்    திருவிளையாடல்    சுந்தரரை    மெய்சிலிர்க்க   வைத்தது .   அக்கருணையை   நினைந்து   நினைந்து   உருகி   போற்றினார் .    அங்கிருந்து   புறப்பட்டு   திருபாலாச்சிரமம்   சென்று   அங்கு   குடிகொண்டிருந்த   ஈசனை   பாடி   பொன்   பெற்றார் .  அங்கிருந்து   புறப்பட்டு     திருப்பைஞிலி ,   ஈங்கோய்மலை      சென்று   சேவித்துக்கொண்டு   மேலை   சிதம்பரம்   என்று  கொண்டாடப்படும்   பேரூர்   அடைந்தார் .  அங்கு    கூத்தப்பிரானின்   தாண்டவ   கோலத்தை   தரிசித்து   ஆனந்தம்   அடைந்தார் .   அங்கு   அவருக்கு   தில்லை   அம்பலக்கூத்தனை   தரிசனம்   செய்யவும்   ஆவல்   எழுந்தது .

Sunday 20 October 2019

சுந்தரருக்கு     மீண்டும்    ஐயன்   ஞாபகம்   மறுபடி    தல யாத்திரை   புறப்பட்டார் .  நன்னிலம்   சென்று   பரமனை   தரிசித்து     கொண்டு   திருவீழிமிழலை   ஆவடுதுறை   மற்றும்   பல   தலங்களை   தரிசித்துக்கொண்டு    திருக்குடந்தை   எம்பெருமான்   திருவடி   தொழுது   அவர்   மீது    பாடல்கள்   புனைந்து   பாடி   மகிழ்ந்து   புறப்பட்டார் .    அங்கிருந்து   திருவலஞ்சுழி    திருநல்லூர்   திருவையாறு   எல்லாம்   சென்று    திருஆலம்பொழில்     அடைந்தார் .  இரவு  நேரம்    ஆகிவிடவே   அங்கேயே   படுத்து   உறங்கி   போனார் .    பக்கத்தில்   மழபாடி   எனும் ஊர்    உளது .   அங்கு   குடிகொண்டுள்ள   ஈசனுக்கு   தம்   அருமை   பக்தன்   தன்னை   வணங்காமல்    போய்விடுவானோ   என்று    அச்சம்   எழுந்தது    போலும் .   சுந்தரர்    கனவில்   தோன்றி   ''   வன்தொண்டனே   மழபாடி    வர   மறந்தனையோ ?'' என்று      கேட்டு   மறைந்தார் .  திடுக்கிட்டு  எழுந்தா ர்  .  சந்தரர்    நேராக   திருஆனைக்கா     செல்ல தான்    எண்ணி   இருந் தார் .  தன்னை   நினைவு   படுத்தி   மழபாடிக்கு   அழைத்த   அவர்   பேரன்பை   எண்ணி   சுந்தரர்   மனம்   பாகாய்   உருகியது .   இரவில்லாம்   அதே   மகிழ்ச்சி .   ஐயன்   கருணையை   எண்ணி   சொல்லணா   இன்பம் .    விடிந்ததும்   சொல்லொணா   ஆனந்தத்துடன்   கோயில்   சென்றார்   .ஓங்கி உயர்ந்த   கோபுரம்   கண்டு   மெய்சிலிர்த்தார் .  உள்   சென்று   'பொன்னார்   மேனியனே '   என்று   பதிகம்   பாடி   தொழுது   மகிழ்ந்தார் .   

Friday 18 October 2019

ஈசன்   சுந்தரரின்   பிரார்த்தனையை   நிறைவேற்ற   முடிவு   செய்து   விட்டார பின்பு    கேட்பானேன் .  அவர்   அருளால்   சுந்தரருக்கு   தூக்கம்    வந்தது .  அங்கு   கோயில்   திருப்பணிக்காக   அடுக்கி   வைத்திருந்த   செங்கல்கள்   சிலவற்றை   எடுத்து   போட்டுக்கொண்டு   அதை   தலையணையாக்கி   ஒரு   துண்டை   விரித்து   படுத்து   உறங்கி   போனார் .  விடிந்து   எழுந்து   பார்க்கையில்   செங்கல்கள்   அனைத்தும்   தகதக   என்று   பொன்னாய்   மிளிர்வதை   கண்டார் .  அவருக்கு   இறைவன்   அருளை   நினைக்கும்போது   கண்கள்   நீரை   சொரிந்தன .  உள்ளம்   உருகி   புகலூர்   ஐயனை   அவர்   சன்னதியில்   வந்து   நின்று   மெய்யுருக    "  தம்மையே   புகழ்ந்து     இச்சை   பேசினும் "    எனும்   பதிகத்தை   பாடி   தம்   நன்றியை    தெரிவித்தார் .  வழியில்   சில   தலங்களை   சேவித்துக்கொண்டு      ஆரூர்   வந்தார் .   பரவையார்      மாளிகையில்    பங்குனி   உத்திரம்   கோலாகலமாக   கொண்டாடப்பட்டது .   அடியார்களெல்லாம்   மிக்க  மகிழ்ச்சியுடன்   கொண்டாடி    அமுது     உண்டு   களித்தனர் .      

Wednesday 16 October 2019

ஆரூரில்   சுந்தரரும்   பரவையாரும்   ஆருரனிடம்   அளவு     பக்தியுடன்  இணைந்து   வாழ்ந்து   வரும்   பொது    பங்குனி   மாதம்   நெருங்கும்போது   பறவையாருக்கு    பங்குனி   உத்திர   நன்னாளை   விமரிசையாக   கொண்டாடி   ஈசனை   மகிழ்விக்க   ஆவல்       உண்டாயிற்று .    அதை   அவர்   சுந்தரரிடம்   தெரிவித்தார் .  சுந்தரர்   மகிழ்ச்சி   தெரிவித்தார் .    ஆனால்   அவரிடம்    அதற்கு   தேவையான   பொருள்   வசதி   இருக்கவில்லை .  அடியார்களிடம்    தெரிவித்தால்   தேவைக்குமேல்   பொருள்    கிடைத்திருக்கும்.  அனால்   சுந்தரர்   அவ்வாறு   செய்ய    விரும்பவில்லை .  தம்மை   ஆட்கொண்ட    எம்பெருமானையே   கேட்டு   பெற    எண்ணம்   கொண்டார் .   பரவையாரிடம்    ஐயனை   பல   தலங்கள்   சென்று   சேவித்து   வர    விரும்புவதாக   கூறி   விடை    பெற்றுக்கொண்டு   யாத்திரை   புறப்பட்டார் .     திருப்புகலூரை    அடைந்தார்  . மகாதேவரை   உளமார   தரிசித்து   தம்   உள்ள   தாபத்தையும்   தெரிவித்து   கோயிலை      வலம்   வந்து     பிராகாரத்தில்   தங்கினார் .    அம்பலக்கூத்தன்  தன்   பக்தனின்   விண்ணப்பத்தை   பூர்த்தி   செய்ய    முடிவு     செய்தார்  .     

Monday 14 October 2019

பரவையாருடைய   இச்செயல்   எல்லோரையும்   மகிழ்வித்து   அவரை   பாராட்ட   வைத்தது .  இவ்வாறு   இருக்கையில்    ஒருநாள்   திருநாட்டியத்தான்குடி   எனும்   ஊரை   சேர்ந்த   கோட்புலியார்   எனும்   அடியார்   சுந்தரரை   தரிசிக்க    ஆரூர்   வந்து   அவரை   தம்   ஊருக்கு   எழுந்து   அருளுமாறு      வேண்டிக்கொண்டார் .   சுந்தரரும்    சம்மதித்து   அவ்வூருக்கு   சென்றார் .  கோட்புலியார்    தம்பிரான்    தோழருக்கு   மிக   சிறப்பான    வரவேற்பு   அளித்து   அமுது   படைத்து   மகிழ்ந்தார் .  அதன்   பின்   தன்    இரு   மகள்களையும்   அவரை    வணங்க   செய்து   இருவரையும்   ஏற்றுக்கொள்ளுமாறு   வேண்  டுகோள்   விடுத்தார்  சுந்தரர்      அவர்கள்    இருவரையும்    மடியில்   அமர்த்திக்கொண்டு    உச்சி   முகர்ந்து    இவர்கள்   இருவரும்       என்   மகள்கள்   அன்றோ   என்று    கூறி   ஆலயம்   சென்று  ஈசன்     மீது   பதிகம்   பாடி   ஊர்    திரும்பினார்.     

Sunday 13 October 2019

ஈசன்   உடனே   இன்றிரவே   இந்நெல்   பூராவும்   ஆரூரில்   சேர்ப்போம்   என்று      அருளினார் .  ஐயன்   ஆணைப்படி   சிவகணங்கள்    பூரா   நெல்லையும்  ஆரூர்   கொண்டு   சேர்த்தன .  விடிந்து   ஆரூர்   வாசிகள்   தெரு   புரா      குவிக்கப்பட்டிருக்கும்   நெற்குவியலை   கண்டு   அதிசயித்தனர் .  அவை   பரவை நாச்சியாருக்கு    அனுப்பப்பட்டது   என்று   கேள்விப்பட்டு   எங்கே    சேமிப்பார்கள்   என்று   அதிசயப்பட்டனர் .  ஆனால்   பரவையார்   இத்தனை   நெல்லையும்   தாமே   எடுத்துக்கொள்ள   விரும்பாமல்   ஆருரவாசிகளை   அவரவர்   வீட்டு   வாயிலில்   உள்ள   நெல்மணிகளை   அவரவர்களே   எடுத்துக்கொள்ள   சொல்லி   பறை   சாற்றினார் .  அவருடைய   நல்ல   உள்ளத்தை   பாராட்டாதவர்   இல்லை .   

Saturday 12 October 2019

வெளியே   வந்து   பார்த்த   கிழார்   அசந்து   போனார் .  என்னே   ஐயன்   கருணை   ஆச்சர்யத்தில்  மூழ்கி    போனார் .  ஊர்   முழுவதும்     நெற்குவியல் .   இத்தனை  நெற்குவியல்களை     ஆரூர்   சேர்ப்பது   எப்படி ?   என்று   அசந்து   போனார்   கிழார் .  சுந்தரரையே  கேட்போம்   என்று   கிளம்பினார் .  ஆனால்   சுந்தரருக்கு   முன்பே   இந்த   செய்தி    தெரிவிக்கப்பட்டு   விட்டதால்   அவர்  அங்கு   வந்து  சேர்ந்தார் .  தெருவெல்லாம்  நெற்குவியல்  கண்டு  அசந்து   போன   சுந்தரர்         இது   ஐயனால்   மட்டுமே   சாத்தியம்   என்பதால்   அவரையே   கேட்போம்   என்று   சொல்லி   பக்கத்திலுள்ள   அரன்   கோயிலுக்கு   சென்று   அவரை   வணங்கி   'நீளநினைந்து   அடியேன் ''    எனும்   பதிகம்   பாடி   உன்   அருளன்றி   இத்தனை   நெல்  . குவியல்   பரவையார்   வீட்டிற்கு   செல்வது   எவ்விதம் ?  தாங்களே   வழி   செய்ய   வேண்டும்    என்று   மனமுருக     வேண்டினார்.  சுந்தரர்   கேட்டு   மறுப்பாரா   ஆரூரர் .   இன்றிரவே   சேர்ப்போம் .  என்று    அருள்    வாக்கு    கிடைத்தது .     

Friday 11 October 2019

குண்டையூர்   கிழார்   என்பவர்   குண்டையூரில்   வாழ்பவர் .  அவர்   சுந்தரரை   பற்றி   கேள்விப்பட்டு   அவரமீது   மிக்க    மதிப்பும்   மரியாதையும்   கொண்டார் .  அவர்   ஆரூர்   வந்து   அவரை   தம்பிரான்   தோழனாக   கண்டதும்    அவர்   மரியாதை   மிக   அதிகமாகி   அவருடைய   அடியாரானார் .  ஆரூர்   பெருமான்   சுந்தரர்   மீது   வைத்திருக்கும்    அன்பு   அவரை   மிக்க    வியப்பில்   ஆழ்த்தியது .  அதுமுதல்    அவரும்   மனைவியும்   அமுது   செய்ய  கிழார்    நெல்லை   தன்   களஞ்சியத்திலிருந்து    அனுப்புவதை   வாடிக்கையாக    கொண்டார் .  ஒரு   சமயம்   மழை   இல்லாமல்   வறண்டு   நெல்   விளைச்சல்   குறைந்து    சுந்தரருக்கு   அனுப்பகூட    நெல்   இல்லை .  கிழார்   மனம்   நொந்து   போனார் .  அடியார்க்கு   அனுப்ப   நெல்   இல்லாமல்   போனது   அவரை   மிக   துக்கத்தில்   ஆழ்த்தியது  .  இரவு   உணவு   உண்ணாமல்    உறங்கினார் .   பக்தனின்   துன்பத்தை     பொறுக்காத    ஐயன்   அவர்   கனவில்   தோன்றி   'அடியாற்கு   கொடுக்க   நெல்   குவித்து   விட்டதாக   கூறினார் .'

Thursday 10 October 2019

என்னவனாம்   அரனடியே   அடைந்திட்ட   சடையன்
இசைஞானி   காதலன்   திருநாவலர்கோன்
அன்னவனாம்   ஆரூரன்   அடிமை   கேட்டுவைப்பார்
ஆரூரில்   அம்மானுக்கு   அன்பராவாரே | 

சுந்தரர்   பாணர்   பெருமையை   பாடி   பிறகு   தன்னை   பெற்றவர்களான   சடையனாரையும்   இசைஞானி   அம்மையாரையும்   போற்றி   பாடி   இவர்கள்   எல்லோருக்கும்   தான்   அடியேன்   என்று   பாடி   தம்   தொண்டர்   தொகையை     நிறைவு   செய்தார் .
      தேவாசிரிய   மண்டபத்தில்   குழுமி   இருந்த   அத்தனை   அடியார்களும்   சுந்தரர்   அடியார்கள்   மீது   கொண்டிருந்த   பக்தியை   கண்டு   மெய்சிலிர்த்து   போனார்கள் .  அவர்   மீது   தவறான  அபிப்ராயம்    கொண்டமைக்கு   மிக   வருந்தி  சுந்தரர்   காலில்   விழுந்து   மன்னிப்பு   கோரினர் .    

Wednesday 9 October 2019

மனநிறைவுடன்   பாணர்   மதுரையை   விட்டு   புறப்பட்டு   பல    எம்பிரான்   க்ஷேத்திரங்களில்     தன்   யாழிசையால்   புகழ்ந்து   பாடி  மகிழ்ந்து   ஐயனையும்    மகிழ்வித்து   ஆரூரை   வந்தடைந்தார் .  அங்கு   கோபுர     வாயிலில்   நின்று   ஆரூரர்   மீது   பக்தி   இசையை   யாழில்   வாசித்து   தம்   உளமார்ந்த   பக்தியை   சமர்ப்பித்தார் .  அவர்   இசையில்   மயங்கிய   ஆரூரர்   ஆலயத்தின்   வடக்குப்புறம்   ஒரு   வாயிலை   அமைத்து   பாணரை   தன்   சன்னிதானத்தில்   வந்து   வாசிக்கும்படி   அழைத்தார் .  பாணர்  மிக்க   மகிழ்ச்சி   அடைந்து   அவர்   சன்னிதானத்தில்   மனம்   குளிர   வாசித்து   மகிழ்ந்தார் .  அப்போது   அவர்   ஆளுடைப்பிள்ளை   சம்பந்தர்   பெருமையை    கேள்விப்பட்டு   அவரிடம்    வந்தார் .  அவருடனேயே   இருந்து  அவர்   பாடல்களை   வாசிக்கும்   பெரும்      பேறு   பெற்றார் .   மிக்க   மகிழ்ச்சியுடன்   அவருடனேயே   தங்கும்   பாக்கியம்   பெற்றார் .  பல   திருத்தலங்களில்    அவருடனேயே   இசைத்து   சம்பந்தப்பெருமானுடைய  திருமணத்தில்   கலந்து   அவருடனேயே    ஈசனில்   ஐக்கியமானர் .   

Tuesday 8 October 2019

அன்று   இரவு   ஆலய   அன்பர்கள்   கனவில்   ஆலவாயர்   தோன்றி   பாணரை   தம்   ஆலயத்திற்கு   உள்ளே   அழைத்து   வந்து   வாசிக்க   செய்யும்படி   கட்டளை   இட்டார் .  அவ்வாறே   மறுநாள்   அவர்   வாசிக்க   கோபுர   வாயில்   வந்தபோது    கோயில்   உள்ளிருந்து   அன்பர்கள்   ஈசன்   கட்டளையை   தெரிவித்து    அவரைஏ   உள்ளே   வரும்படி   அழைத்தனர் .  பாணர்   ஈசன்   இச்செயலை   கேட்டு   நெக்குருகி    அவர்   அன்பை   எண்ணி   உள்ளம்   உருகி   போனார் .  உள்ளே   சென்றார் .  ''பாணர்   தரையில்   நின்று   வாசித்தால்    சீ தத்தால்   தந்தி      பாழாகும் .  ஆதலால்   சுந்தர பலகை   இடுங்கள்   என்று   அசரீரி   வாக்கு   எழுந்தது .  அவ்வாறே   அன்பர்கள்   தங்க   பலகை   எடுத்து   வந்தனர் .   இதை   கேட்ட   பாணர்   ஈசன்   அன்பை   நினைக்க   மலைத்து   போனார் .  உள்ளம்   சிலிர்த்தார் .   அந்த   பொற்பலகையில்   ஏறி   நின்று   மெய்மறந்து   ஐயனை  துதித்து    யாழ்   இசைத்தார் .   ஐயன்   அன்பை   எவ்வாறு   வர்ணிக்க .  
திருநீலகண்டத்து   பாணனார்க்கு    அடியேன் |

எருக்கத்தம்புலியூர்   எனும்   இடத்தில்   பாணர்   குலத்தில்   பிறந்த   நீலகண்ட   யாழ்ப்பாணர்   வசித்து   வந்தார் .  யாழ்   வாசிப்பதில்   மிக்க   தேர்ச்சி   பெற்றிருந்தார் .  அதனாலேயே   அவர்   அவ்வாறு   பெயர்   பெற்றார் .  அவர்  எம்பெருமான் மீது   அளவற்ற   பக்தி   கொண்டிருந்தார் .  சிவாலயங்களில்   கோபுர   வாசலில்   நின்றபடி   ஐயன்   மீது   பாடப்பட்ட   பாடல்களை   மனம்   உருக   வாசிப்பதை    வாடிக்கையாக   கொண்டிருந்தார் .    அன்பே   உருவான   ஈசன்   இவரை   காணாமல்   இருப்பாரா ?  ஒரு   சமயம்   பாணர்   பாண்டிய   நாடு   சென்றார் .    அங்கு   ஆலவாயர்   கோயிலுக்கு   சென்று   கோபுர     வாசலில்   ஆலவாய்   அண்ணலின்       மேல்   பாடல்களை   கேட்பவரை   உருக்கும்   வண்ணம்   யாழில்   வாசித்தார் .  அன்புக்கடலான   ஐயன்   மனம்   உருகியதில்   அதிசயம்   இல்லை .  

Wednesday 2 October 2019

செங்கணான்   சோழ   அரியணை   ஏறியதும்   அவர்    சிவபெருமான்   திருவருளால்    பூர்வஜென்ம   நினைவுகளை   பெற்றார் .  அவர்   உடனே   திருவானைக்கா   சென்று   வெண்நாவல்   மரத்தடியில்   இருந்த   சிவலிங்கத்தை   கண்டு   அதற்கு   கோயில்   அமைக்க   திட்டமிட்டான் .  முன்   ஜென்மத்தில்   யானையால்   நேர்ந்த   துன்பம்   நினைவில்   வர   யானைகள்   ஏற   முடியாவண்ணம்   மாடக்கோயில்கள்   அமைத்தார்    .   சோழ   நாட்டில்   அநேக   சிவன்கோயில்கள்   கட்டுவித்தார்  .  தந்தையை   போலவே   தில்லை   நடராஜரிடம்   அளவற்ற   பக்தி   கொண்டு   சிதம்பரம்   சென்று   அங்கு    இறைவன்   தொண்டில்    ஈடுபட்டு   பெரும்   சேவைகள்   செய்தார் .  அந்தணர்களுக்கு   மாளிகைகள்   கட்டி   வைத்தார் . இவ்வாறு    இறைவன்   சேவையில்   தன்னை   அர்ப்பணித்து    கொண்டு  பல     காலம்     வாழ்ந்து   இறைவன்   அடி   சேர்ந்தார் .  

Tuesday 1 October 2019

சோழ   நாட்டை   சுபதேவன்   எனும்   அரசன்  ஆண்டு   வந்தான்.  அவர்   மனைவி   கமலவல்லி   எனும்   மாதரசி .     அவர்கள்    குழந்தை    செல்வம்   வேண்டி   தில்லை   நடராஜ  பெருமானை   மனமுருகி   துதித்தனர் .   ஐயன்   மனமிறங்க   அரசி   கர்ப்பம்   தரித்தாள் .   பிரசவ   காலம்   நெருங்கியது.  அரண்மனை   சோதிடர்கள்   இன்னும்   ஒரு   நாழிகை   சென்று   அக்குழந்தை   பிறக்குமானால்   அக்குழந்தை   மூவுலகும்   போற்ற   தக்க   பெருமை   வாய்ந்ததாக  இருக்கும்  என்று     கூறினர் .  அதை   கேட்ட   அரசி   அந்த   நாழிகை    வரும்வரை   தன்னை   தலை   கீழாக   கட்டி     தொங்க   விடுமாறு   கேட்டுக்கொண்டாள் .   என்னே   தியாக   சிந்தனை   அம்மாதிற்கு .அந்த   நாழிகை   வந்ததும்    அவளை   இறக்கி   விட   செய்து   அழகிய   ஆண்   குழந்தையை   பெற்றாள் .   தாமதித்து  பிறந்ததால்   குழந்தையின்       கண்கள்   சிவந்து   இருந்தன .  அரசியார்   ஆசை   தீர   பார்த்து   'என் ராஜா   செங்கண்ணனோ '  என்று   கொஞ்சினாள் .   ஆனால்   துரதிஷ்டவசமாக   பிரசவ   வேதனை   காரணமாக   சீக்கிரம்   மாண்டு   போனாள்  அந்த   மாதரசி   என்னே   அவள்   தியாகம் .  மன்னன்   மிக்க   துக்கமடைந்தான் .  குழந்தைக்கு   செங்கணான்   என்றே   பெயர்   சூட்டினான் .  உரிய   பருவம்   அடைந்ததும்   அவனை   அரசனாக   முடிசூட்டி   அரசன்   தவ   வாழ்வை   ஏற்றான் .