Wednesday 27 February 2019

இதற்கு   பிறகும்   சமணர்களுக்கு   தோல்வியை   ஒப்புக்கொள்ள   மனமில்லை .  ஈசன்   திருவிளையாடல் .  வைகை   ஆற்றில்   ஓலையை   விட்டு    பரிக்ஷிக்க   கோரினர் .  அப்போது    அமைச்சருக்கு   கோபம்   தாங்காமல்   இதில்   தோற்றால்   என்ன   தண்டனை   என்று   வினவினார் .  விதி   யாரை   விட்டது .   சமணர்கள்   'அரசன்   அவர்களை   கழுவில்    ஏற்றுவான்   என்று   கூறினர் .   அரசன்   வைகை    ஆற்று   கரையை   புடை   சூழ   சென்றடைந்தான் .   சமணர்கள்   முந்திக்கொண்டு    தங்கள்   ஓலையை   ஆற்றில்   இட்டனர் .   ஆற்று   வெள்ளத்தில்   அது   அடித்து   கொண்டு   போயிற்று .    சம்பந்தர்   வாழ்க   அந்தணர்   என்று பதிகத்தை   ஒரு   ஏட்டில்   எழுதி   ''எம்பெருமானே   முழுமுதற்கடவுள்   என்பது   உண்மையானால்   இந்த    ஏடு    கரை   சேரும்''  என்று   எழுதி   அதை   ஆற்றில்   இட்டார் .
ஞானப்பிள்ளையும்    தானும்   அவ்வாறே   செய்வதாக    கூறனார் .   அரசன்   சம்பந்தர்   ஒப்புக்கொண்டதால்   அவையோர்களை     கூட்டி   அங்கு   தீ   குண்டம்    கட்டி   அதில்   தீ   மூட்டுமாறு    ஆணை   இட்டார் .   அவ்வாறே   தீ   மூட்டப்பட்டது .   காழிப்பிள்ளை   தன்   ஓலை   சுவடிகளை   எடுத்து   அவற்றிலிருந்து   ஒரு   ஓலை   சுவடியை   எடுத்தார் .   அதில்   ''போகமார்ந்த    பூண்முலையாள் ''    என்ற   திருநள்ளாற்று   பதிகம் .   அதை   எடுத்து    நள்ளாறப்பனை   மனமுருக   வேண்டிக்கொண்டு   ஐயன்  மீது    பதிகம்   பாடிக்கொண்டே   அதை    தீயில்   இட்டார் .  என்ன   அதிசயம் !   தீ   அதை   தீண்டாமல்   சுற்றி   வந்தது..  சந்தோஷத்தில்   மக்கள்   ஆரவாரம்   வானை   எட்டியது .  அரசன்   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தான் .  அவன்   சமணர்களை      நோக்க   அவர்கள்   தாங்களும்     ஒரு    ஓலையை    இட     அது   பஸ்மாமாகியது .   சம்பந்தர்    தம்    ஓலையை    கண்களில்     ஒற்றியபடி   எடுத்து    கொண்டார்.    மக்கள்   மிகுந்த   சநதோஷம்   அடைந்தனர் .

Tuesday 26 February 2019

அரசன்    தாம்   இத்தனை   நாட்கள்   அறியாமையால்    ஈசனை   மறந்து   பிற   சமயத்தை   நாடியதை   நினைத்து    வெட்கம்   அடைந்தார் .   சம்பந்தர்   கால்களில்    விழுந்து   வணங்கி   தன்னை   மன்னித்து   திருநீறு   அளிக்குமாறு   வேண்டினார் .   அரசியாரும்   குலச்சிறையாரும்    அடைந்த   மகிழ்ச்சி   சொல்ல   வார்த்தை   இல்லை .   இப்போது   சம்பந்தர்   சமண   தலைவர்களை    நோக்கி   அவர்கள்    கொள்கைகளை   விளக்குமாறு   கேட்டார் .  அரசன்   தன்   உடல்   உபாதையை   தீர்க்க   முடியாத   அவர்களிடம்   என்ன   விளக்கம்   தேவை ?   என்று   கூறினார் .   ஆனால்   சமணர்கள்   விடுவதாக   இல்லை .   அனல்   வாதம் செய்ய    முற்பட்டனர் .  அவர்கள்   தாம்  செய்யுள்   எழுதி    அனலில்   விடுவதாகவும்   சம்பந்தரும்   அவ்வாறு     செய்ய   வேண்டுமென்று     கூறினர் .

Monday 25 February 2019

சம்பந்தர்   பதிகம்   பாடி   அதை   அரசன்   ரசித்ததும்   சமணர்களால்   தாங்கி   கொள்ள   முடியவில்லை .  அவர்கள்   மயில்   இறகை   ஏந்திக்கொண்டு   மந்திரங்கள்   ஓதிக்கொண்டு   அவருடைய   இடப்பாகத்தை   தாங்கள்   குணப்படுத்துவதாக       கிளம்பினார்கள் .   அரசன்   வேதனை   அதிகமானது .  அரசன்   துடித்தான் .   கோபமாக    அவர்களை   விரட்டி   விட்டு   சம்பந்தரை   நோக்கி   சுவாமி    என்னால்   பொறுக்க   முடியவில்லை .  நீங்கள்   தயை   செய்யுங்கள்   என்று   வேண்டினார் .    'மந்திரமாவது   நீறு '   எனும்   பதிகம்   பாடி   அரசரது     வலது   பாகத்தில்    நீறு  பூச  வலது    பாகம்   பூர்ண   குணமாகி   இடது    பக்கம்   பின்னும்   மோசமானது.      அரசன்   சம்பந்தரை   வணங்கி   'ஐயனே   உம்   கருணையே   கருணை '      என்று   வணங்கி    இடது   பக்கத்தையும்   குணமாக்க   பணித்தார் .   அவரும்   அவ்வாறே       செய்தார் .

Friday 22 February 2019

சம்பந்தர்   அமைச்சரை   சமாதானம்   செய்து   ஆலவாயான்   அருளால்   அரசரையும்   குணமாக்கி    சமணர்களையும்   வாதிட்டு      வெல்வேன்.  என்று   சொல்லி   ஆலயம்   சென்று   எம்பெருமானின்   ஆசி    பெற்று    கிளம்பினார் .    அரண்மனையை   அடைந்ததும்    அரசியார்    அவரை   மிக்க   அன்புடன்    வரவேற்று    அரசனிடம்   அழைத்து    சென்றார் .    அரசரிடம்    ஸ்வாமி    அவர்   வந்திருக்கிறார்   என்றதும்    அரசன்   தலையை   தூக்கி   அவரை   வணங்கி     வரவேண்டும்   என்று   வரவேற்று    பக்கத்திலிருந்த   பொற்பீடத்தை   காட்டி   அமரவேண்டும்   என்று   கேட்டுக்கொண்டார் .   சமணர்களுக்கு    அதை   கண்டதும்    பெரும்  பீதி    உண்டாயிற்று .   அரசன்  அவரை   தங்கள்   ஊர்   எது   என்று   வினவ    பிரமனுர்  வேணுபுரம்    என்று   பதிகம்   பாடி    விளக்கினார் .       

Thursday 21 February 2019

குலச்சிறையார்   உடனே   கிளம்பி   சம்பந்தர்   தங்கியுள்ள   மடத்திற்கு   சென்றார் .   அங்கு   பிள்ளையை   கண்டதும்    அவர்   கண்கள்   நீரை    ஆறாய்   சொரிய   அவர்    காலில்   விழுந்தார் .     ஞானப்பிள்ளை   அவரை   தூக்கி   சமாதானம்   செய்தார் .     அமைச்சர்   அவரிடம்   'நேற்று   சமணர்களால்   தங்கள்   மடம்     எரிக்கப்பட்டதும்   மேலும்   தங்களை   கொல்லவும்    முயற்சி   நடந்ததும்   கேள்விப்பட்டு      அரசியாரும்    நானும்   துடித்து   போனோம் .   தாங்கள்   தப்பித்த    செய்தி    கேட்டதும்   கொஞ்சம்    நிம்மதி    அடைந்தோம் .   அதன்      எதிரொலி    மன்னன்   நோய்வாய்ப்பட்டு   மிக்க     அவதிக்கு   உள்ளாகி    இருக்கிறார்     என்று   நாங்கள்   நினைக்கிறோம் .    அதனால்   தங்கள்   கையால்   திருநீறு   பூசி    மன்னனை   குணப்படுத்த  வேண்டும் ,'   என்று    வேண்டினார் .     அவரு ம்   எம்பெருமான் அருள்   இருக்க   கவலை    வேண்டாம்    என்று    சமாதானம்   செய்தார் .

Wednesday 20 February 2019

சமணர்கள்  தங்கள்  நிலை   மோசமாவதைக்கண்டு     அரசனிடம்   அவர்   உங்கள்  நோயை   தீர்த்தாலும்   அவரை   உடனே   அனுப்பிவிட்டு   அதை   மறந்துவிட   வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டார்கள்   வேதனையால்   துடித்துக்கொண்டு   இருந்த   அரசன்   அடக்க   முடியாத   கோபத்துடன்   சீறி   விழுந்தான் .  உங்களால்   என்  அவஸ்த்தையை   தீர்க்க  முடியவில்லை .   இன்னொருவர்   செய்தால்   அதை   நன்றி   இல்லாமல்    மறப்பதா    என்ன   கொடுமை ?  என்று    எரிந்து   விழுந்தான் .  சமணர்கள்   வாயடைத்து   போனார்கள் .   காழிப்பிள்ளை   வருவது   உறுதி   ஆயிற்று 

Monday 18 February 2019

அரசியாரும்   மந்திரியாரும்       ஞானப்பிள்ளையை   அழைத்து   வர   முடிவு   செய்ததும்   அரசியார்   மெதுவாக   கணவரை   அணுகி   நேற்று   யாரோ   சமணர்களால்    ஈசனிடம்   ஞானபாலுண்ட   ஐயன்   தங்கி   இருக்கும்   மடத்திற்கு   தீ   வைத்து   அவரையும்   கொல்ல   முயற்சி   நடந்ததாக   தெரிகிறது .  அதன்   காரணமாகவே   இந்நோய்   வந்திருப்பதாக   தோன்றுகிறது .  ஆகையால்    அத்தெய்வ   திருமகனை   அழைத்து   திருநீறு  பூச   செய்யலாம்   என்று   நினைக்கிறேன்   என்று   கூறினார் .  அரசனுக்கும்   அப்பெயரை   கேட்டதுமே   புல்லரித்து .    அரசன்   உடனே   ஒப்பு   கொண்டான் .  சமணர்கள்   எதிர்த்தனர் .  அரசன்   வெகுண்டெழுந்தான் .   பயந்த   சமணர்கள்   வாயடைத்து   போனார்கள் .  

Sunday 17 February 2019

சிவனடியார்களை   எரிக்க   அனுமதித்த   பெரும்   பாதகமான   செயலால்    அரசன்    உடல்   வெப்பமாக   தகித்தது .  நாழியாக   ஆக   சுரவேகம்   அதிகரித்தது .  அரசியாரும்   குலச்சிறையாரும்    ஞானப்பிள்ளை   தங்கிய   மடத்தை   எரிக்க   நடந்த   முயற்சியை   கேள்விப்பட்டு   அவரை  காண  கிளம்பியவர்கள்   அரசனின்   நிலைமை   கண்டு   மிக்க   கவலையுடன்   அவரை   காண   சென்றனர் .  அரண்மனை   வைத்தியர்கள்   ஏதேதோ    சிகிச்சை   செய்தும்   சிறிதும்   முன்னேற்றமில்லை.   அதற்குள்   சமணர்கள்   செய்தி   கேள்விப்பட்டு   தங்கள்   தீவினையால்   அரசன்   நோய்   கொண்டிருப்பதை   அறியாமல்   தாங்கள்   சிகிசிச்சை   செய்து   அரசனின்   நம்பிக்கையை   பெறலாம்   என்ற   பேராசையால்   மயில்இற கும்   மந்திரித்த   ஜலத்தையும்   எடுத்துக்கொண்டு   ஓடிவந்தனர் .    அவர்கள்   முயற்சி   சிறிதும்   பயனளிக்கவில்லை .   மாறாக   அரசனின்   அவஸ்த்தை    அதிகமானது .   அரசன்   வெகுண்டான் .   அதற்குள்   அரசியாரும்   மந்திரியாரும்   இந்த   நிலைக்கு   காரணமே   அநியாயமாக   மடத்திற்கு   தீ   இட்டு    காழிப்பிள்ளையை   கொல்ல   முயன்றதுதான்   என்று   முடிவு   செய்து   அவரை   அழைத்துவர   முடிவு   செய்தனர் .   

Friday 15 February 2019

ஆனால்   சிவன டியார்கள்    பாண்டியநாட்டின்   நிலைமை   அறிந்திருந்ததால்   இவ்வாறு   அசம்பாவிதங்கள்   நடக்கக்கூடும் .   சம்பந்தர்   உயிருக்கும்   ஆபத்து   விளைவிக்கும்   முயற்சி   கூட   நடக்கக்கூடும்   என்று   எதிர்பார்த்து   இருந்ததால்   இரவு   புரா   விழிப்புடன்   இருந்தனர் .  அதனால்   நெருப்பை    பரவாமல்   உடனே   அணைத்து   விட்டனர் .  சம்பந்தர்   என்ன   நடந்தது   என்று   வினவ    அவர்கள்   மடத்திற்கு   தீ   வைக்க   முயற்சி   நடந்ததையும்   தாங்கள்   விழித்திருந்து   அத்  தீயை    அணைத்ததையும  விவரித்தனர் .  உடனே   சம்பந்தர்   தங்களை   காத்த   ஐயனை   பதிகம்   பாடி   துதித்து   பிறகு   அவர்   அரசனின்   சம்மதம்   இல்லாமல்   இவ்வாறு   துணிந்திருக்க   மாட்டார்கள்   என்று   முடிவு   செய்து   தன்னை   கொல்ல   முயற்சி   என்றாலும்   சிவனை   ஆராதிக்கும்   பக்தர்களுக்கு   கேடு   விழைவிக்கும்   முயற்சி   என்பதால்   அவர்   மன்னிப்பிற்கு    உகந்தவர்   அல்ல   என்று   முடிவு   செய்து   'சமணர்கள்   இட்ட   தீ   மெல்ல   சென்று   அரசனையே   பீடிக்கட்டும் '  என்றார் .   வெப்பம்   அரசனை   பற்றிக்கொண்டது .    

Thursday 14 February 2019

மன்னன்   அச்சமணர்களின்    வருகைக்கு   காரணம்   வினவினார் .  அதற்கு   அவர்கள்   தோணிபுரத்திலிருந்து   ஒரு   அந்தண   சிறுவன்   வந்திருக்கிறானாம் .  நிரம்ப   கற்றவனாம்.   அவனுக்கு   அமோக   வரவேற்பு   வழங்கப்பட்டதாம் .  மன்னன்   அதிக   சுவாரஸ்யம்   காட்டாமல்   அதற்கு  என்ன   செய்ய   வேண்டும் ?  என்று   கோபமாக   வினவினார் .   அதற்கு   அவர்கள்   நாங்கள்   எங்கள்   மந்திர   சக்தியால்   அவர்   தங்கியுள்ள   மடத்தை   தீப்பற்றி   எரிய   செய்கிறோம் .    அவன்   பயந்து   ஓடி   விடுவான் . என்றனர் .   அரசனும்   அதற்கு   சம்மதம்   அளித்தான் .  உடனே   காரியத்தில்   இறங்கினர்   சமணர்கள் .  மடத்திற்கு   எதிரில்   மறைவான   இடத்தில்   அமர்ந்து   கொண்டு   சமணர்கள்   மந்திரம்   ஜபிக்கலானார்கள் .   மடத்தில்   ஓதப்படும்   பஞ்சாக்ஷரத்தின்   முன்   அவர்கள்   மந்திரம்   எடுபடவில்லை .   அவர்கள்   முயற்சி   வீணாயிற்று .   நடுங்கி   ஓடிவந்தனர் .  அரசன்   காதில்   இந்த   விஷயம்   எட்டினால்   ஆபத்து   என்று   பயந்து   சில   ஆட்களை   நிறைய   பொன்   கொடுத்து   மடத்தை   எரிக்க   ஏற்பாடு   செய்தனர் .  

Wednesday 13 February 2019

சம்பந்தப்பெருமான்   தம்   அடியார்களுடன்   அரசியார்    தங்களுக்காக   ஏற்பாடு   செய்திருந்த   மடத்திற்கு    எழுந்தருளினார் .   அரசியாரும்   மந்திரியாரும்   மனம்   நிம்மதி   அடைந்தவர்களா க    அரண்மனை   சென்றனர் .   அவர்   வருகை   சமணர்கள்     இடையே   பெரும்   கலக்கத்தை    உண்டாக்கியது .  அவர்கள்   சம்பந்தர்   பெருமையை   கேள்விப்பட்டிருக்கிறார்கள் .   அது   அவர்களுக்கு   பயத்தை   உண்டாக்கியது .         அவர்கள்   தங்கி   இருந்த   மடத்திலிருந்து   எழும்   வேத   ஒலியும்   வேள்வி   புகையும்   அவர்கள்   கலக்கத்தை     மேலும்    அதிகமாக்கியது .   அவர்கள்   அனைவரும்   கூடி   ஆலோசனை   செய்து   தங்கள்   மந்திர   சக்தியால்   மடத்தை   எரித்துவிட   முடிவு   செய்தனர் .  அதற்கு    மன்னருடைய   அனுமதி   பெற   எண்ணினர் .   எல்லோரும்   கூடி   மன்னரிடம்    சென்றனர் .  மன்னர்   அவர்களின்   வாடிய      முகத்தை   கண்டு   அவர்கள்   வருகையின்     காரணம்   வினவினார் .  

Tuesday 12 February 2019

ஆலயம்   தொழுது   வெளியே   வந்த   சம்பந்தரை   குலச்சிறையார்   பல்லக்கை   வலம்   வந்து   அவர்   கால்களில்   விழுந்து    வணங்கினார் .  பிறகு   அரசி   வந்திருப்பதையும்   கூறினார் .  மங்கையர்க்கரசியார்   ஞானப்பிள்ளை   பாதங்களில்   விழுந்து   வணங்கினார் .   அம்மையை   தூக்கி   விட்டு   ஆலவாய்   ஈசன்   அருளால்   நல்லதே   நடைக்கும்   என்று   வாழ்த்தினார் .  பாண்டிய   நாடு    துயர்   நீங்கி   வாழ   தாங்கள்தான்   உதவ     வேண்டும் .  மன்னன்   சமணர்கள்   கைப்பாவையாகி   சைவம்   துறந்தான் .  தாங்கள்தான்   பாண்டிய    நாட்டில்   மீண்டும்      சைவம்   செழித்து   அரசனும்    சைவத்தை   தழுவி   நாடு   செழிக்க   செய்ய   வேண்டும்    என்று   வேண்டி   கொண்டாள் ..   சம்பந்தரும்    ஆலவாயான்   பேரருளால்   எல்லாம்   இனி தே   நடைபெறும்   என்று  வாழ்த்து   கூறினார் .   அரசியார்   பெரும்   நிம்மதி   அடைந்தார் .

Monday 11 February 2019

சமணர்கள்   இரவு   துர்சொப்பனங்களை   கண்டனர் .  துர்சொப்பனங்களும்   துர்சகுனங்களும்   அவர்களை   ஆட்டிப்படைத்தன .   காரணம்   புரியாமல்   தடுமாறினார் .  அதே   சமயம்   பாண்டிய   அரசிக்கும்   மந்திரியாருக்கும்   பல   நற்சகுனங்கள்   தோன்றி    அவர்களுக்கு   நம்பிக்கை   ஊட்டின .  காரணம்   என்னவாக   இருக்கும்   என்று   யோசித்தனர் .  அப்போது   அவர்களுக்கு   காழிப்பிள்ளை   மதுரை   நெருங்கும்   செய்தி   கிட்டியது .  அவர்கள்   மகிழ்ச்சி   சொல்லில்   அடங்காது .    ஞானபாலுண்ட   பிள்ளை   மதுரை   நெருங்கி   விட்ட   செய்தி   கேட்டதும்   மகயற்கரசியார்   மந்திரியாரை   அழைத்து   சம்பந்த   பெருமானை   தக்க   மரியாதையுடன்   அழைத்துவர   ஆணையிட்டார் .   குலச்சிறையாரும்   அவ்வாறே   குறையின்றி   வரவேற்பதாக   கூறி   புறப்பட்டார் .   அடியார்கள்   கூட்டம்   திரண்டிருந்தது .  அவர்கள்   அவரை   வாழ்த்தி   எழுப்பிய   கோஷம்   வானை   முட்டியது .   சம்பந்தரும்   ஆலயம்   சென்று   ஆலவாய்   அண்ணலை   மனதார   தொழுது   வெளியே   வந்தார் .  

Sunday 10 February 2019

சம்பந்தர்   பாண்டிய   நாட்டு   தூதர்களிடம்   அரசியாரிடம்   தாம்   உடனே   வருவதாக   தெரிவிக்குமாறு   சொல்லி   அனுப்பினார் .   தூதர்களும்   மிக்க   மகிழ்ச்சியோடு   புறப்பட்டனர் .  பிள்ளையார்   வாகீசரிடம்   தாம்   சமண   ஆதிக்கத்திலிருந்து   பாண்டியநாட்டை   மீட்கும்   பொருட்டு     மதுரை  செல்ல   போவதை   வாகீசரிடம்   தெரிவித்தார் .   பெரியவர்   சமணர்களிடம்   தாம்   அனுபவித்த   கொடுமைகள   நினைவிற்கு     வர   திடுக்கிட்ட   தானும்   உடன்   வருவதாகவும்   கிரக   நிலை   சரியில்லாததால்   தனியே   செல்ல   வேண்டாம்   என்று   தடுத்தார்.   'வேயுறு   தோளிபங்கன் '  என்று    தொடங்கும்   பதிகத்தை   பாடி   காழிப்பிள்ளை   விடமுண்ட கண்டன்   துணை   இருக்க   பயம்   எதற்கு ?  என்று   அவரை   சமாதானம்   செய்து   பல்லக்கில்   ஏறி   கிளம்பினார் .  வழி   நெடுக   உள்ள   சிவாலயங்களில்   ஈசனை   துதித்தபடி   மதுரையை   நெருங்கினார் .  அப்போது   சமணர்கள்   பள்ளிகளில்   துர்சகுனங்கள்    பல  தோன்றின .

Saturday 9 February 2019

எம்பெருமானை   நேரில்   கண்குளிர   தரிசித்து   பெருமகிழ்ச்சி   அடைந்த   இரு   திருவருட்ச்செல்வர்களும்   திருவாய்மூர்   ஈசனை   பதிகம்   பாடி   மனம்   குளிர   சேவித்து   விட்டு   திருமறைக்காடு   சென்று   சில   நாட்கள்   தங்கி   எம்பெருமானை    சேவித்தனர் .    அப்போது    பாண்டிய   நாட்டிலிருந்து   தூதர்கள்   சம்பந்தரை   காண   வந்தனர் .   சம்பந்தர்   அவர்களை   வரவேற்று   விசாரித்தார் .  அவர்கள் பாண்டிய   நாட்டு   பட்டத்தரசி   மங்கையற்கரசியாரும்    மந்திரி   குலச்சிறையாரும்   தங்களை   அனுப்பியதாக   கூறினர் .  அப்போது   பாண்டிய   நாட்டில்   நிலைமை   சரியில்லை   என்றும்   அங்கு   சமணர்களின்    ஆதிக்கம்  அதிகம்   ஆகிவிட்டதாகவும்   மன்னரும்   அவர்கள்   கைப்பாவையாகி   சைவம்   மறந்து   போனதாகவும்   சிறந்த   சிவ   பக்தர்களான   அம்மையாரும்   குலச்சிறையாரும்   மிக்க   வேதனை   அடைந்திருப்பதாகவும்   ஞானபாலுண்ட   சம்பந்த   பெருமான்   பெருமை   அறிந்தவர்கள்   ஆதலால்   ஆவர்   வந்தால்தான்   பாண்டிய   நாடு   விடுதலை   பெரும் .  ஆதலால்   அவரை   அழைத்து   செல்ல   வந்ததாக   கூறினர் .

Friday 8 February 2019

அப்பர்   அளவிலா   மகிழ்ச்சியுடன்   ஈசனை   பின்தொடர்ந்தார் .  ஐயன்   சிறிது   தூரம்   வாகீசர்   பின்தொடர   நடந்து   சென்று   பின்   ஒரு   ஆலயத்தில்   நுழைந்து   மறைந்து   போனார் .  இதனிடையில்   சம்பந்தர்   அப்பரடிகள்   திருவாய்மூர்   சென்ற   செய்தி   கேட்டு   அவரும்   அங்கு   வந்து   சேர்ந்தார் .   ஈசன்   இத்தனை   தூரம்   அழைத்து   வந்து   மறைந்தது   கண்டு   துக்கித்து   காழிப்பிள்ளை   வந்திருக்கிறார்   அவருக்கும்   தரிசனம்   கொடுக்க   எம்பிரானை   மனமுருக   வேண்ட   அவ்வாறே   அவர்   காட்சி   கொடுத்து   இருவரையும்   மகிழ   செய்தார் .  சம்பந் தர்     பெரியவருக்கு   மனதார   நன்றி   கூறி   அவர்   அழைப்பிற்கு   இசைந்து தான்   ஐயன்   தனக்கு   காட்சி   தந்தார்   என்று   மனதார   நன்றி  கூறினார் .

Wednesday 6 February 2019

சம்பந்தர்   ஒரே   செய்யுள்   பாடியதும்   ஆலய   கதவு   முடிக்கொண்டது .  மக்களுக்கு   சங்கடம் நீங்கி    ஆலயம்   செல்ல   மிக   வசதியானது   கண்டு   அப்பரடிகளுக்கு   மிக்க   மகிழ்ச்சி.  ஆனாலும்  அவர்   மனம்   நிலையில்லாமல்   தவித்தது .  தான்   அத்தனை   செய்யுள்கள்   பாடும்   வரை   திறக்காத   கதவு   பிள்ளை   ஒரு   பாட்டு   பாடியதும்    மூடிக்கொண்டது   அவரை   மிக்க   வேதனைக்கு   உள்ளாக்கியது .  தன்   பக்தியில்   குறை   உள்ளதோ   என்ற   சஞ்சலம்   அவரை   வாட்டியது .  இருந்தாலும்   காழிப்பிள்ளை   சின்னஞ்சிறு   வயதில்   வேதங்களை   கற்று   அதில்   புலமை   கண்டது   அவருக்கு   பிள்ளையின்   மேன்மை   புரிந்தது .  இவ்வாறு   அலைபாயும்   மனதுடன்   படுத்திருந்த   அவரை   ஈசன்   தனக்கு   இருவரில்   பேதம்   இல்லை   என்பதை   உணர்த்த   இச்சை   கொண்டார் .  அவருடைய   கனவில்   தோன்றி   யாம்   திருவாய்முரில்   இருப்போம்   எம்மை   தொடர்ந்து   வரும்படி   பணித்தார் .  அப்பரும்   எழுந்து   வந்து   வாயிலில்   அவரை   கண்டு   அவரை   பின்   தொடர்ந்தார் .

Tuesday 5 February 2019

திருமறைக்காட்டில்   கோபுர   பிரதான   வாயில்   திறந்து   மக்கள்  தடையின்றி   ஐயனை   தரிசிக்க   வழி   செய்யுமாறு   காழிப்பிள்ளையார்   வாகீசரை   வேண்ட   அவரும்   அதை   ஆமோதித்து   ''பண்ணின்   நேர்   மொழியாள்   உமை   பங்கரோ ''  எனும்   பதிகம்   பாடி   ஐயனை   கதவை   திறக்க   செய்ய   வேண்டினார் .   அவர்   பல   செய்யுள்கள்   பாடியும்   திறவாத   கதவு   இரக்கம்  ' ஒன்றிலீர் '   என்று   வருந்தி   பாடியதும்   கதவு   திறந்தது . மக்கள்   பேரானந்தம்   அடைந்து   அப்பரை   வாழ்த்  தினர் .  இருவரும்   மகிழ்ந்தனர் .   பிறகு   அப்பர்   பெருமான்   சம்பந்தரை   இவ்வாறு   கதவு   திறந்தே   வைப்பது   உசிதமில்லை   ஆகையால்   கதவு   மூடுவதற்கு   பாடும்படி     வேண்டினார் .  அவரும்   'சதுரம்   மறை '  எனும்   பதிகம்   பாடினார் .  ஆளுடைப்பிள்ளை   ஒரு   பதிகம்   பாடியதுமே   கதவு   மூடிக்கொண்டது .   மக்கள்   ஆரவாரம்   செய்து   கொண்டு    கோயிலில்   நுழைந்து   எம்பெருமானை   உளமார   தரிசித்தனர் .   

Monday 4 February 2019

வாகீசப்பெருமானும்   ஞானப்பிள்ளையும்   இவ்வாறு   ஈசனின்   கொடையால்   பொன்   பெற்று   மக்களின்   பசியாற்றி   பேரானந்தம்   அடைந்தனர் . மக்களும்   அவர்கள்   சேவையால்   மிக்க   மகிழ்ந்து   போற்றினர் .  விரைவிலேயே   மழை   பொழிந்து   நீர்நிலைகளில்   தண்ணீர்   நிரம்பி   நிலைமை   சீர்   அடைந்தது .   மக்கள்   சகஜ   நிலைக்கு   வந்தவுடன்   இருவரும்   தங்கள்  பக்தி   பயணத்தை   தொடங்கினர் .  பல   சிவாலயங்களை   சேவித்து   கொண்டு   ஆரூரில்    சில   தினங்கள்   தங்கி   விட்டு   திருமறைக்காட்டை   அடைந்தனர் .   அக்கோவிலில்   வேதங்கள்   பூசித்து   மூடிய   கதவுகள்   திறக்க   முடியாத   காரணத்தால்   மக்கள்   பக்கத்து   சிறிய   வாயில்   வழியாக   எம்பெருமானை   சேவிக்க   வரவேண்டி  இருந்தது .  இக்கொடுமையை   சகித்து   கொள்ள   முடியாத   காழ்ப்பிள்ளை   அப்பர டிகளை   சேவித்து  ''இது   என்ன   கொடுமை ?  மக்கள்  தடையின்றி  செல்ல    ஆலய   கதவுகளை   திறக்க   செய்ய   தாங்கள்   வழி   செய்ய   வேண்டுமென்று   கேட்டுக்கொண்டார் .