Thursday 29 August 2019

பொன்னடிக்கே   மனம்   வைத்த   புகழ்த்துணைக்கும்   அடியேன் |

சேருவிலி வித்துர்  என்றொரு   ஊர் .  அங்கு   சிவமறையோர்   குலத்தில்   பிறந்த   புகழ்த்துணையார்   எனும்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  எம்பெருமானிடம்   அளவு   கடந்த   பக்தி   கொண்டிருந்தார் .  அபிஷேக   பிரியரான   எம்பெருமானை   ஆறு   காலமும்   அபிஷேகம்   செய்வதை   பேரின்பமாக   கருதி   செய்து   வந்தார் .  அவருடைய   போதாத   காலம்   அவரை   வறுமை   வாட்ட   தொடங்கியது .   இருந்தாலும்   விடாமல்   தன்   கடமையை   செய்து   வந்தார் .  நாள்   செல்ல   செல்ல   வறுமை   அவருடைய   உடல்   நிலையை   பாதித்தது .  உடல்   மெலிந்து   சக்தி   இழக்க   தொடங்கினார் .  ஒரு   நாள்   குடம்   தண்ணீரை   தூக்கி   அபிஷேகம் செய்யும்    போது   கை தவறி     குடம்   ஐயன்   மேல்   விழுந்து     விட்டது .  அவர்   பதறி ப்போய்   தன்   தவறை    மன்னிக்க   முடியாமல்   அங்கேயே   மயங்கி   விழுந்தார் .   கருணை   கடலான   ஐயன்   அவர்   கனவில்   காட்சி   தந்து   '' அன்பனே    வருந்தாதே .  உன்   வறுமை   தீரும்வரை   உமக்கு  தினம்   ஒரு   பொற்காசு   அளிப்போம்.  வருந்தாதீர் .  என்று   கூறி   மறைந்தார் .   எழுந்த   அவர்   ஒரு   பொற்காசு    இருப்பதை   கண்டு   மிகமகிழ்ந்தார் .  சந்தோஷமாக   தன்   திருத்தொண்டை   தொடர்ந்தார் .  சிலகாலம்   வாழ்ந்து    ஈசனடி   சேர்ந்தார் .  

Friday 23 August 2019

அடுத்து   நாம்   பேசப்போகும்   நாயனார்   நமக்கு    அறிமுகமானவரே .   தஞ்சை   நகரில்   வேளாண்குடியில்   குடியில்   பிறந்த   செருத்துணையார் .  அவர்    சிவபெருமான்   மீது   அளவு   கடந்த   பக்தி   உடையவர் .  அவரே   பல்லவ   மன்னன  திருவாரூர்     தியாகேசரை   தரிசிக்க   வந்தபோது   அரசியார்   ஈசனுக்கு   மாலை   தொடுக்க   வைத்திருந்த   மலரை   முகர்ந்த   தவறை   செய்ததற்கு   அவருடைய   மூக்கை   வெட்டி  எறிந்தவர் .  முன்   கதையில்    இதை   பார்த்தோம் .    

Thursday 22 August 2019

அரசன்   அவர்   பதிலை   கேட்டு   நெகிழ்ந்து   போனார் .    நாத்தழுதழுக்க   ''ஐயனே   இதை  என்னிடம்   நேரில்   கேட்டிருந்தால்   என்   பொக்கிஷத்தையே    திறந்து   விட்டிருப்பேனே?   இப்போதும்   ஒன்றும்   கெட்டு   விடவில்லை .  வேண்டியதை   எடுத்துக்கொள்ளும் .   என்று   சொல்லி   பொக்கிஷ   அறையை   திறந்து   விட்டான் .   அப்படியே   சிவ   தொண்டு   செய்பவர்கள்   யாரானாலும்    எவ்வளவு   ஆனாலும்   எடுத்துக்கொள்ளலாம்   என்று   பறை   சாற்றினான் .   அவருடைய   அந்த   மேன்மையான   குணத்தை   பாராட்டாதவர்   யாரும்   இல்லை .  இவ்வாறே   பெரும்    தொண்டு   செய்து   கொண்டே   பலகாலம்   வாழ்ந்து   சிவனடி   சேர்ந்தார் .   

Wednesday 21 August 2019

மடல்   சூழ்ந்த   தார்நம்பி    இடங்கழிக்கும்     தஞ்சை
மன்னவனாம்   செருத்துணைதன்  அடியார்க்கும்  அடியேன் |

கோனாட்டில்   கொடும்பாளூர்   என்றொரு   நகரம் .  அதை   ஆண்ட   குறுநில   மன்னர்   இடங்கழியார்   ஆவார் .  சிவபக்தி    மிகுந்தவர் .  ஆலயங்களின்   திருப்பணி    செய்யவும்   நித்திய   பூஜைக்கும்    தாராளமாக   திரவியம்    வாரி   வழங்குவார் .  ஒரு   சமயம்   தானிய    கிடங்கில்   திருட்டுத்தனமாக   புகுந்து   தானியம்   கொள்ளை   அடித்த   ஒருவனை   காவலர்கள்   பிடித்து   கொண்டுவந்து   அரசர்   முன்   நிறுத்தினர் .  அவரை   பார்த்தால்   அப்படி   தவறான   செய்கை   செய்ய   கூடியவராக   தென்படவில்லை .   சிவபக்தராகவே    தோன்றினார் .   மன்னன்   அவரை   பார்த்து   'உம்மை    பார்த்தால்   கொள்ளை   அடிப்பவராக   தோன்றவில்லை  .  ஆனால்   குற்றவாளியாக   நிறுத்தப்      பட்டிருக்கிறீர் .   இது   உண்மையா ?'  என்று   வினவினார் .   அதற்கு   அவர்   ஆம்   ஐயா .   நான்   சிவனடியார்களுக்கு   அமுதுபடைக்கும்  பணி     மேற்கொண்டிருக்கிறேன் .  ஆனால்   என்னிடம்   தானியம்    தீர்ந்து   விட்டது .  ஆகையால்தான்   இவ்வாறு   செய்ய   நேர்ந்து   விட்டது என்று   பணிவுடன்   பதிலுரைத்தார் .     

Saturday 17 August 2019

அரசியார்   மலரை   முகர்ந்ததை   மாலை   கட்டும்   திருப்பணியில்   ஈடு   பட்டிருந்த  செருத்துணையார்    என்பவர்    கண்டார் .  ஈசனுக்கு   அர்ப்பணிக்க   வைத்திருந்த   மலரை   முகந்தது   பெரும்     சீற்றத்தை   அளித்தது .   வேறெதுவும்   யோசியாமல்   கையிலிருந்த   கத்தியால்   அவள்  மூக்கை   சட்டென்று   அறுத்து   விட்டார் .  அரசியார்   வலி   பொறுக்காமல்   அலறினாள் .  அந்த   அலறல்   சப்தம்   கேட்டு    ஈசன்   சன்னதியிலிருந்த   அரசன்    பதைத்து   போய்   ஓடிவந்தான்.  ரத்தம்   சொட்ட   வேதனையில்  தவித்து   கொண்டிருந்த    மனைவியை   கண்டு   பதறிப்போய்   இக்கொடிய   செயலை   செய்தவர்   யார் ?  என்று   வினவினார் .  செருத்துணையார்   அங்கு   வந்து   நடந்ததை   விவரமாக   சொன்னார் .   அரசன்   கோபம்   திசை   மாறி   ஈசனுக்கு   சமர்ப்பிக்க   இருந்த   மலரை    தொட்ட   அக்கையை    அல்லவோ   முதலில்   தண்டித்து    இருக்க   வேண்டும்   எ ன்று   சொல்லி   தன்   வாளை   உருவி   அவள்   கையை   வெட்டினார் .   அரசனுடை ய   அதிசயமான   பக்தியை   வானவர்களையும்    வியக்க    செய்தது .  ஐயன்   உடனே   தோன்றி  அரசனுக்கு   திவ்ய   தரிசனம்   அளித்து    அரசியின்   மூக்கும்   கையும்   பழையபடி   வளர   செய்து   அரசனையும்   வாழ்த்தினார் .

Friday 16 August 2019

கடல்   சூழ்ந்த   உலகெல்லாம்   காக்கின்ற   பெருமான்
காடவர்கோன்   கழற்சிங்கன்   அடியார்க்கும்   அடியேன் |

பல்லவ   குலத்தில்   பிறந்த   கழற்சிங்கன்   எனும்   அரசன்   நாட்டை   ஆண்டு   கொண்டிருந்தான் .   அவன்  சிவபெருமானிடம்   அளவற்ற   பக்தி   கொண்டவன் .   அவ்வீ சன்   பேரருளால்   பகைவர்களை   வென்று  சைவநெறி   எங்கும்   தழைக்க   செய்து   நல்லாட்சி   புரிந்து   வந்தார் .    அப்போது   அவருக்கு   அரனார்   ஆலயங்களையெல்லாம்    சேவித்து   வர   பெரும்   ஆவல்   உண்டாயிற்று .   மனைவியுடன்   தல   யாத்திரை   புறப்பட்டார் .   அவ்வாறு   ஆலயங்களை   தரிசித்து   கொண்டு   திருவாரூர்   வந்து   சேர்ந்தனர் .   அங்கு   ஐயன்   ஆலயத்தில்   நுழைந்ததும்   அரசர்   எம்பெருமான்   சன்னதிக்குள்   சென்று   அவரை   மனம்   குளிர   தரிக்கலானார் .   ராணியார்   பிரகாரங்களை   சுற்றி   பார்க்க   கிளம்பினார் .சுற்றி   பார்த்துக்கொண்டு   வந்தவர்   அழகை   ரசித்தபடி    எம்பெருமானுக்கு   பூத்தொடுக்கும்   மண்டபம்   வந்தடைந்தார் .  அங்கு   கீழே  விழுந்திருந்த    ஒர்   அழகிய   மலரை   எடுத்து   முகர்ந்தார் .    

Tuesday 13 August 2019

அறைகொண்ட   வேல்நம்பி   முனையடுவார்க்கு   அடியேன் |

பொன்னி   நாட்டிலே   திருநீடூர்   என்றொரு   தலம்   உள்ளது .  அவ்விடத்தில்   வேளாளர்   மரபில்   பிறந்த   ஒரு   சிறந்து   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .   சிவனடியார்களிடத்து   பெரும்   பக்தியும்   மரியாதையும்   உடையவர் .  யுத்தத்தில்   தோற்றவர்கள்    இவரிடம்  திரவியம்   கொடுப்பதாக   கூறினால்   இவர்   படை   திரட்டிக்கொண்டு   அவர்களின்   பகைவர்களை   வென்று   பணம்   பெற்றுக்கொண்டு    அதை   அப்படியே  எம்பெருமான்    திருப்பணிக்கே   செலவிட்டு   ஆனந்தம்   அடைவார் .   அதன்    காரணமாக   அவர்   முனையடுவார்   என்று   அழைக்கப்பட்டார் .    அவர்   அடியார்களை   அன்புடன்   வரவேற்று   அறுசுவை   உணவிட்டு    மகிழ்வார் .  இவ்வாறு   பல   திருப்பணிகள்   செய்துகொண்டு   நெடுநாள்   வாழ்ந்து   ஐயன்   தாள்   புகுந்தார் . 

Monday 12 August 2019

துறைக்கொண்ட   செம்பவள   இருளகற்றும்   சோதித்
தொன்மயிலை   வாயிலான்   அடியார்க்கும்   அடியேன் |
.
திருமயிலையில்  கடை  சாதியில்  பிறந்த   சிவனடியார்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .வாயிலார்   என்னும்   அப்பெரியார்   எம்பெருமானை   உள்ளமெனும்   பெரும்   கோயிலில்   இருத்திக்கொண்டு   மனம்   குளிர   வழிப்பட்டு   வந்தார் .  ஞான   விளக்கை   நெஞ்சுக்குள்ளே   ஏற்றி   ஒளி   மிளிற   செய்தார் .   மனதிலேயே   எல்லா  உபசாரங்களையும்   செய்து   மகிழ்வார் .   மங்கள   நீராட்டுவார்  .  அடியார்களிடம்   தாம்   கொண்டிருக்கும்   அன்பையே   பேராமுதாக   நெய்வேத்தியம்   செய்வார் .  எம்பெருமான்   வழிபாட்டையெல்லாம்   மனமுருகி   உள்ளத்திலேயே   குறைவர   செய்து      களங்கமில்லா   பக்தியுடன்   ஐயனை     மனம்  கரைய   வைத்தார்.ஐயன்   மனம்   மகிழ்ந்து   அவரை   தன்னில்   சேர்த்துக்கொண்டார் .

Friday 9 August 2019

 நிறைகொண்ட   சிந்தையால்   நெல்வேலி   வென்ற
நின்ற சீர்   நெடுமாறன்   அடியார்க்கு   அடியேன் |

பாண்டியர்கள்   வம்சத்தை   சேர்ந்த  நெடுமாறன்   என்பவர்   மதுரையை   ஆட்சி   செய்து   வந்தார் .   பூர்வ   ஜென்மத்தின்   புண்ணியத்தின்   பயனாக   சிறந்த   சிவ   பக்தையான   மங்கையற்கரசியாரை   துணைவியாக   அடைந்தார் .   நெடுமாறன்   சமணர்கள்   போதனையால்   மயங்கி   சைவம்   துறந்து   சமணத்தில்   சேர்ந்தான் .  அரசியவர்கள்    அதனால்   பெரும்   துக்கம்   அடைந்தார் .  அப்போது   ஞானசம்பந்தர்    சைவத்திற்கு   பெரும்   தொண்டாற்றி   கொண்டிருந்தார் .  அதை   அறிந்த   அம்மையார்   அவர்   காலில்   விழுந்து   சரணடைந்தார் .   அவர்    பாண்டிய   நாடு   வந்து   சமணர்களை   வாதில்    வென்று   திருநீறு பூ சி   அரசனையும்   மாற்றினார்   நீறு   பூசியதால்   கூன்   விழுந்த   அவர்   முதுகும்   நிமிர்ந்து   அவர்   நின்றசீர்   நெடுமாறன்   என்று   ஆனார் .  அது   முதல்  அவருக்கு    சிவபெருமானிடம்   குன்றாத   பக்தி   ஏற்பட்டது .     சிவாலயங்களை   அமைத்து    பல   ஆலய  திருப்பணிகள்   செய்யலானார் .   வடபுலத்து   மன்னர்களை     நெல்வேலியில்   வென்று   தொடர்ந்து   ஈசனுக்கு   பல   கைங்கர்யங்கள்   செய்து   கொண்டு   வாழ்ந்து   முடிவில்  ஈசனடி   சேர்ந்தார் .
  .            

Wednesday 7 August 2019

திருக்கடவுரில்    காரியார்   என்று   பெயர்   கொண்ட   அந்தணர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார்  எம்பெருமான்    பக்தரான   அவர்   தமிழில்   மிக்க   பாண்டித்தியம்   உடையவர் .   அவர்   இனிய    தமிழில்   கோவை   பாடி   மூவேந்தர்களிடமும்   சென்று   அவர்கள்   மனம்   குளிர  அப்பாடல்களுக்கு விளக்கமும்   கூறி    அவர்களை   சந்தோஷ   படுத்துவார் .  அவர்களும்   மிக்க  மகிழ்ந்து   அவருக்கு   பரிசுகள்   வழங்குவார்கள் .  அதை  காரியவர்கள்   பெற்று   கொண்டு   தாம்   வணங்கும்  ஐயனுக்கு   ஆலயங்கள்   கட்டி   அநேக   தொண்டுகள்   புரிந்து   வந்தார் .   சிவபெருமான்   அவருடைய   இத்தகைய   அரிய   சேவையில்   மிக்க   மகிழ்ந்து   தன்   நிழலில்   ஏற்றுக்கொண்டார் .

Tuesday 6 August 2019

கறைக்கண்டன்   கழலடியே   காப்புக்   கொண்டிருந்த
கணம்புல்ல   நம்பிக்கும்   காரிக்கும்   அடியேன் |

வட  வெள்ளாற்றின்   தென்கரையில்  இருக்குவேளூர்   என்றொரு   ஊர்   உள்ளது .  அவ்வூரில்  சிறந்த   சிவபக்தர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   அவ்வூர்   எம்பெருமான்   ஆலயத்தில்   தினமும்   திருவிளக்கேற்றும்   தொண்டிலே   ஈடுபட்டிருந்தார் .  அவரை   சோதனையாக   வறுமை   சூழ்ந்தது .   அப்போதும்   அவர்   அத்திருப்பணியை   விடவில்லை .  ஒரு   சமயம்   தில்லை   சென்று   அம்பலக்கூத்தனை  வணங்க   சென்றார் .   அப்போது    தன்   சொத்தையெல்லாம்   விற்று   எடுத்துக்கொண்டு   தில்லையில்          உள்ள   திருப்புலீச்சரம்   குடியேறி   அங்குள்ள   எம்பெருமான்   ஆலயத்தில்  தன்   விளக்கேற்றும்   திருப்பணியை   தொடர்ந்தார் .   கொண்டுசென்ற   பணம்   கரைந்தது .  அவர்   மனம்   தளராமல்   வயற்காட்டில்   புல்   வெட்டி   விற்று   தம்   திருப்பணியை   தொடர்ந்தார் .  அதன்   காரணமாக   அவர்   கணம்புல்லர்   என்று   அழைக்கப்பட்டார்.   ஐயன்   சோதனை   யாரை   விட்டது .  ஒரு   நாள்  புல்   விருபடவில்லை .    உடனே   அவர்   அசரவில்லை   ஈசனை    மனதில்   நிறுத்தி   புல்லையே   திரியாக்கி   விளக்குகளை   ஏற்றினார் .  ஈசன்   லீலை  விளக்குகள்   எரிந்தன .  ஆனால்   சோதனை   புல்   தீர்ந்தது   ஆனால்   சில   விளக்குகள்   மீதம்   இருந்தன .  சிறிதும்   தயங்காமல்   தன்   தலைமயிரை   திரியாக்க   துணிந்தார் .  ஈசன்   தோன்றி   அவரை  தன்னில்   சேர்த்துக்கொண்டார் .   

Saturday 3 August 2019

ஐயடிகள்   காடவர்கோன்   அடியார்க்கும்   அடியேன் | 

தொண்டை   நாட்டிலே   காஞ்சிபுரத்தை   தலைநகராக   கொண்டு    ஆட்சி   செய்த   பல்லவ குலத்து   அரச   பரம்பரையில்   பிறந்தவர்   ஐயடிகள்   காடவர்கோன்   என்பவர் .  அவருக்கு   மக்கள்   எல்லோரும்   எம்பெருமான்   சேவையில்   ஈடுபட்டு   பேரின்ப   வாழ்வு   வாழ   வேண்டும்   என்ற   பேரவா.  இவ்வாறு   சைவம்   தழைக்க   ஆட்சி   புரிந்து   வரும்   நாளில்   அவருக்கு    ஐயன்   கோயில்   கொண்டுருக்கும்   ஆலயங்களை   தரிசித்து   மகிழ்ந்து   வாழ்நாளை   கழிக்க   பேராவல்   உண்டாயிற்று .  ஆட்சி   பொறுப்பை   தன்   மகனிடம்   ஒப்படைத்து   விட்டு   தலயாத்திரை   கிளம்பினார் .  முதலில்   தில்லை   சென்றார் .  அங்கு   அம்பலக்கூத்தனை   தரிசித்து   அவர்   திருக்கூத்தை   கண்டு   களித்து   செந்தமிழ்   வெண்பாக்கள்   பாடி   மகிழ்ந்தார் .  அதன்பின்   பல   தலங்களை   தரிசித்து   ஒவ்வொரு   தலத்திலும்   ஒவ்வொரு   வெண்பா   பாடி   மகிழ்ந்தார் .  இவ்வாறாக   ஐயன்  திருப்பணி   செய்து   கொண்டு   பல   காலம்   வாழ்ந்து   ஈசன்   அடி   சேர்ந்தார் .      

Friday 2 August 2019

சோழ   நாட்டில்   வரிஞ்சையூர்   எனும்  ஊர்  ஒன்று.  அங்கு   வேளாளர்   குலத்தில்  பிறந்த   ஒரு   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .  அவருக்கு   சிவனடியார்கள்    மீது   பக்தியானது   சொல்லில்   அடங்காதது .   அவர்களை   யாராகிலும்   தரக்குறைவாக   பேசினால்   அவர்கள்   நாக்கை   தயங்காது   துண்டித்து   விடுவார் .  இதன் காரணமாக   அவர்   சத்தியார்   என்று   அழைக்கப்பட்டார் .  அவர்   இவ்வாறு  சிவத்தொண்டர்களை   நிந்திப்பவர்களை   தண்டித்து   வந்து   முடிவில்   எம்பெருமான்   அடி   சேர்ந்தார் .