Sunday 29 September 2013

venkatakavi

வேங்கட கவி  சம்ஸ்க்ருதம் ,தமிழ் ,மராட்டி  மூன்று  பாஷைகளிலும்  புலமை  பெ ற்று  இரு ந்தார் .அவர்  பாடல்களில் 
காவடி சிந்து ,கிருதி , தில்லானா ,அபூர்வ  தாளங்கள்  என  பல புது
அம்சங்கள்  வெளி படு கின்றன .பக்தி , எளிமை   பறை  சாற்ருகின்றன .அளவு  கடந்த  பக்தி  புலனா கிறாது.



 

Thursday 26 September 2013

venkata

வெங்கடகவீயின் பாடல்கள் 500 க்கு மேல் இப்பொழுது நமக்கு கிடைத்துள்ளன. அதற்கு நாம் வெங்கடகவீன் சகோதரருக்கும்

அவர் சந்ததியினருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

Wednesday 25 September 2013

venkadakavi

அந்த  பாடல்கள்  நம்மையும்  உருக  வைக்கும் . அவ  ருக்கு  மானிட  குருவாக  வழி  காட்டியவர்  பாஸ்கரராயர்  என ரூ  சொல்லப்படுகிறது .அபூர்வ  ராகங்கள் , அபூர்வ  எடுப்புகள் ,பாடல்  நடுவில்  மத்யம  காலத்தில்  சரணங்கள்  என  புதுமைகள்  பல  இவர்  பாடல்களில்  காணலாம்.  
வெங்கட சுப்பய்யர் காளீங்க நர்த்தன க்ருஷ்னனை மனமுருக துதித்து அவரையே குருவாக மதித்து பாட தொடங்கினார். அவர்  குரு  பெருமையை  நெகிழ்ந்து  உருகி  நிறைய பாடல்கள்  பாடிஉள்ளார .

Sunday 22 September 2013

oothukadu

ஊததுகாடு   வேங்கடகவி  என்ற  ம ஹான்  தமிழ்   நாட்டில்   ஊத்துகாடு  கிராமத்தில்  (1700-1765) ல்  வாழ்ந்தவர் . அவர்  பெற்றோருக்கு  ஐந்து  குழந்தைகளில்   மூத்த  மகனாக  பிறந்தார் .
அவர்  குடும்பம்  மன்னார்குடியை  சுற்றி  சில  கிராமங்களில்  வாழ்ந்து  பிறகு  ஊத்துகாடு  கிரா மத்த்தில் குடியேறினர் . வேங்கட கவியின்     இயற்பெயர்  வேங்கடசுப்பையர் . அவருக்கு  சிறு  வயது  முதலே  சங்கீதத்தில்  மிகுந்த  ஆர்வம் .  நல்ல  குருவை  தேடி அலைந்தார் . குரு  கிடைக்காமல்  மனம்  நொந்த  அவர்  அந்த  ஊர்  காளீங்க  நர்த்தன  கிருஷ்ணர்  கோவிலை  அடைந்தார்     

oothukau

மும்மூர்த்திகளின்  சமகாலத்தில்  வாழ்ந்த  மற்றொரு   மகா  கவி  ஊத்துகாடு  வேங்கடகவி  ஆவார் . 

Tuesday 17 September 2013

kavikunjara

கவி  குஞ்சர  பாரதி  சிவகங்கை  ஆஸ்தான  வித்வான்  ஆனார் . அவருடைய  அழகர் குறவஞ்சி  கோவில்களில்  நாடகமாக  நடிக்கப்பட்டன . இது  மக்களால்  பெரிதும்  பாராட்ட  பட்டது . ராமநாதபுரம்  மன்னனும்  இவர்  பாடல்களால்  பெரிதும்  கவரப்பட்டு , அவரை  தன்னுடைய  ஊர்  ஆஸ்தான  வித்வானாக  நியமித்தார் . குஞ்சரபாரதி  கந்தபுராண  கீர்த்தனைகள்  சுப்ரமண்ய  அவதாரம்  குறித்த  பாடல்கள்  புத்தகமாக  வெளியிட்டார் . அவர் பாடல்கள்  அதிகம்  தெரியவில்லை .' எல்லோரையும்  போலவே' சுத்ததன்யாசி  ப்ரபலமானது . அழகர்  குறவஞ்சி   மாலழகர்  மேல் மையலுற்ற  பெண்  பாடுவது  போல்  அமைக்கப்பட்டது .பாரதி 86 வயது வறை   தவ  வாழ்வு   வாழ்ந்தார் .மழை  இல்லாமல்  மக்கள்  வாடிய  போது  வெண்பா  பாடி  மழை  வரவழைத்தார்  என்று  கூறப்படுகிறது . 86ஆவது  வயதில்  அவருடைய  பக்தர்கள்  பக்தி  பாடல்கள்  பாட  அவ்வாறே  அவர் இறைவன்  அடி  சேர் ந்தார்   என்று  கூறப்படுகிறது . 

Saturday 7 September 2013

koteeswara3

கோடீஸ்வரர்   18 வயதானபோது  கடுமையாக  நோய்வாய்ப்பட்டார் . அப்போது  அவர்  கனவில்  அந்த  ஊர்  அம்மன்  தோன்றி  தன்னை  போற்றி  பாடல்  புனையும்படி  கேட்டு  கொண்டாளாம் .உடனேயே   அவர்   நலமடைந்து   பாடல்  புனைய  துவங்கி  விட்டதாக   கூறப்படுகிறது . கோவிலில்  அம்மனை  துதித்து   பாடினாராம் . இவருடைய   முக்கிய  படைப்புகள்  அழகர்  குறவஞ்சி , அழகரை  துதித்தும் ,அடைக்கலமாலை ,கயற்கண்ணி மாலை  இரண்டும்   மீனாக்ஷி  அம்மையை   துதித்தும் ,திருவேங்கடமாலை   வேங்கடவனை  போற்றியும்  பாடப்பெற்றன .சிவகங்கை ஜமீந்தார்  அவர்  பாடல்களி ல்  மயங்கி  அவருக்கு ' கவிகுஞ்சரம் '    என்று  பட்டம் வழங்கி  ஒரு  கிராமத்தையும்  பரிசளித்தாராம் .

Tuesday 3 September 2013

koteesvara

இவருடைய  தாய்தந்தையர்  முருகனை  பக்தியுடன்  பிரார்த்தித்து  அவனருளால்  பிறந்தவர்  கோடீஸ்வரன் . சிறு  வயது  முதலே  அவர்  தமிழ் , சம்ஸ்க்ருதம்  இரு   பாஷை களிலும்   தேர்ச்சி  பெற்று  விளங்கினார் .12 வய  திலேயே மதுரகவி பாரதியுடன்  மிக அறிவுபூர்ந்த  தர்க்கங்களில்  ஈடுபடுவாராம் . கவிதை , சங்கீதம்  இவைகளிலும்  தேர்ச்சி  பெற்று  விளங்கினாராம் .சிறு  வயதிலேயே   தன்  இஷ்ட  தெய்வங்களான   மீனாட்சி அம்மை , முருகன்  பேரில்  பாடல்  புனைய   தொடங்கினாராம் .