Saturday 30 March 2019

ஞானசம்பந்தர்   மயிலை   விட்டு   புறப்பட்டு   திருவான்மியூர்   சென்று   அங்கு   பாடி   துதித்து   கழுங்குன்றம்   சென்று   வேதகிரியை   வலம்   வந்து   கடைசியாக   தில்லை   அம்பலக்கூத்தனை   வணங்க   அங்கு   சென்றார் .  சிவபாதவிருதயர்   மகன்   சிதம்பரம்   வந்திருப்பதை   அறிந்து   அங்கு   சென்று   மகனை   பணிந்து    தோணிபுரம்   திரும்ப   அழைத்தார் .  அவரும்   ஆடவல்லானிடம்   வேண்டி   விடை   பெற்றுக்கொண்டு   ஊர்   திரும்பினார் .  தந்தைக்கு   மகனை   திருமணக்கோலத்தில்   காண   அவா   எழுந்தது .   சுற்றத்தாருடன்   கலந்து   பேசி   நம்பியாண்டார்   நம்பியின்   மகளை  ஏற்ற   வரனாக   தேர்ந்தெடுத்தார் .  சம்பந்தர்   முதலில்   மறுத்தாலும்  ஈசன்     சித்தம்   அதுவானால்   அப்படியே   நடக்கட்டும்   என்று   சம்மதித்தார் .     சிபாதவிருதயர்   சுற்றத்துடன்   நல்லூர்   சென்று   முறைப்படி   பெண் கேட்டு  மணம்   நிச்சயிக்க      விரும்பினார் .  

Friday 29 March 2019

சம்பந்தர்   கபாலீச்சரம்   ஐயனுக்கு   நடக்கும்   ஒவ்வொரு   திருருவிழாவையும்    விவரித்து   இவற்றை   எல்லாம்   காணாமல்    இவ்வளவு    அவசரமாக     போவாயோ   பூம்பாவாய்   என்று   ஒவ்வொரு   திருவிழாவையும்        வர்ணித்து   கொண்டே   போனார் .   அவர்   பாட  பாட   குடத்தில்   எலும்புகள்   வளர   ஆரம்பித்தன .  அவர்   பதிகம்   பாடி   முடித்ததும்   குடத்தை   உடைத்து   கொண்டு   பூம்பாவை   வெளியே   வந்து   சம்பந்தர்   கால்களில்   விழுந்து   வணங்கினாள் .  மக்களின்   ஹர ஹர   எனும்   கோஷம்   வானை   எட்டியது .   சிவநேசர்   எல்லை   இல்லா   ஆனந்தம்   அடைந்தார் .  அவர்   தம்   மகளை   சமபந்தருக்காகவே   வளர்த்ததாக   கூறி   அவளை   ஏற்றுக்கொள்ளும்படி   வேண்டினார் .   ஆனால்  சம்பந்தர்   தன்னால்   உயிர்   பெற்ற   அவள்   தன்   மகளுக்கு   சமான மானவள்         என்று   கூறி      எம்பெருமானிடம்   பக்தி   கொண்ட     நல்ல   மாப்பிள்ளையாக     பார்த்து   மணமுடிக்குமாறு   கூறினார்.   அவரும்  சம்மதித்தார் .  ஆனால்   பூம்பாவை     எம்பெருமான்   சேவைக்கே   அர்ப்பணித்து    கொள்ள   விரும்புவதாகவும்   மணம்    செய்து  கொள்ள   விருப்பமில்லை ,  என்று   கூறி   மறுத்து   விட்டாள் .   

Thursday 28 March 2019

மயிலையில்   சம்பந்தர்   எம்பெருமான்   மீதுள்ள  காதலால்   உடனே   ஆலயம்   சென்று    கபாலீஸ்வரரை   கண்குளிர   தரிசித்து   பதிகங்கள்   பாடி மகிழ்ந்தார் .   பிறகு   சிவநேசரை   அழைத்து   பூம்பாவை   அஸ்தி   வைத்துள்ள   குடத்தை   எடுத்துவர   பணித்தார் .    ஆனந்தம்   தாங்காமல்   சிவநேசர்   மாளிகை   சென்று   கன்னிமாடத்திலிருந்து   அக்குடத்தை   எடுத்து   வந்து   சிவிகையில்   ஏற்றி   மேளதாளத்துடன்   எடுத்து   வந்தார் .  அதற்குள்   இந்த  செய்தி     ஊரில்   பரவி   மக்கள்   கூட்டம்   கோவிலை   அடைந்தனர் .   குடத்தை   சம்பந்தப்பெருமானிடம்   கொடுத்து சிவநேசர்   வணங்கினார் .   கபாலீச்சரம்  அமர்ந்தானை    சம்பந்தர்   மனமுருக    வேண்டிக்கொண்டு   மட்டிட்ட  ' புன்னையன் '  எனும்   பதிகம்   பாடி   உத்திராபல்கணத்தார்    செய்யும்   திருக்கோலங்களை     விவரித்து    இவைகளை    காணாமல்   அவச  ரமாக        போனாயோ   பூம்பாவாய்   என்று   அவைகளை   விவரித்து   பாடினார் .       

Wednesday 27 March 2019

 அப்போது   சம்பந்த   பெருமான்   தொண்டை   நாட்டு   தலங்களை   சேவித்து   கொண்டு   திருவொற்றியூர்   வந்திருப்பதை   கேள்விப்பட்டு   சிவநேசர்   அவரை   மயிலை   அழைத்து   வர   பெரும்   ஏற்பாடுகள்  செய்து    தம்   தொண்டர்களுடன்   தகுந்த   மரியாதையுடன்   அவரை   அழைத்து   வர   கிளம்பி   சென்றார் .  அதற்குள்   கபாலீஸ்வரர்   மீதுள்ள   அடங்கா   காதலால்   அவர்   மயிலையை   காண   புறப்பட்டார் .  சிவநேசர்   அவரை  வழியில்   சந்தித்து   அவரை   வலம்    வந்து   வணங்கினார் .  கூட   வந்தவர்கள்  மூலம்    சிவநேசர்   பெருமையையும்   அவருக்கு   தன்மீ து   உள்ள   அத்யந்த   பக்தியை யும்   கேள்விப்பட்ட   காழிப்பிள்ளை   பல்லக்கைவிட்டு   இறங்கி   அவரை   அன்போடு   அணைத்து   கொண்டார் .  பின்பு   இருவரும்   மயிலை   வந்து   சேர்ந்தனர் .

Monday 25 March 2019

சிவநேசர்   மகள்   பூம்பாவையை   தம்   மாளிகையில்   கன்னிமாடம்   கட்டி   அதில்   தோழியருடன்    தங்க   வைத்தார் .   ஒரு   அரச   குமாரிபோல்   வாழ்ந்து   வாழ்ந்தாள்   பூம்பாவை .   அச்சமயம்   காழிப்பிள்ளை   பாண்டிய   நாட்டில்    சமணர்களை   வென்று   அவர்கள்   கைப்பாவையாக   இருந்த   மன்னனின்   நோய்   நீக்கி   அவரை   சைவத்தின்மீது   பெரும்    பக்தி   கொள்ள   செய்து    அவர்   கூனையும்   நிமிர்த்தி   பெரும்   சாதனை   செய்ததை   கேள்விப்பட்ட    சிவநேசர்   பரமானந்தம்   அடைந்தார்.   தான்   தன்   செல்வம்   அனைத்தும்   தம்   மகளும்   அவருக்கே   சொந்தம்   என்று   எண்ணிக்கொண்டு   பெரும்   மனக்கோட்டை   கட்டிக்கொண்டிருந்தார் .  ஆனால்   விதி   விளையாடியது .  ஒரு   நாள்   பூம்பாவை   மலர்   கொய்து   கொண்டிருந்தபோது   அவளை   அரவம்          தீண்டியது.     அவள்   பாம்பு    கடித்து   விட்டது   என்று   அலறியபடி   விழுந்தாள் .        தோழியர்   அவளை தூக்கி    சென்று   வீட்டில்    கிடத்தினர் .  பதறி   அடித்து   கொண்டு   வந்த   தந்தையார்   பல   வைத்தியர்களை   வரவழைத்து   வைத்தியம்   பார்த்தார்   அரச   வைத்தியர்களையும்   வரவழைத்தார் .  மூன்று  நாள்     சென்றது .   ஒரு   பலனும்   இல்லை .     மனமொ டிந்த   அவர்   அவளை   எரியூட்டி   அவளுடைய  எலும்பையும்    சாம்பலையும்   ஒரு   தங்க   குடத்திலிட்டு   பட்டாடை   சுற்றி   அவள்   படுக்கை   மீது  வைத்து   தினம்   தூப   தீபம் நைவேத்தியம்   எல்லாம் செய்து   பாதுகாத்து   அதை  சம்பந்தரிடம்   ஒப்படைக்க  எண்ணினார் .

Saturday 23 March 2019

திரு   கற்பகாம்பாள்   உடனுறை   கபாலீஸ்வரர்   கோவில்   கொண்டிருக்கும்   திருமயிலாப்பூரில்   வைசிய   குலத்தை   சேர்ந்த   சிவநேசன்   என்றொரு   வணிகர்   குடி   இருந்தார் .  அவர்   பெரும்   தனவான் .   அதே  அளவு   ஈசனிடம்   பெரும்   பக்தியும்   உடையவராக   இருந்தார் .   கபாலீஸ்வரர்   மீது  அளவு    கடந்த   பக்தி   உடையவராக   இருந்தார் .  சீர்காழி   செல்வர்   சம்பந்தரிடம்   பெரும்   மரியாதை   உடையவராக   இருந்தார் .  ஐயனின்   பேரருள்   பெற்ற   அவரை   பற்றிய   செய்திகள்   கேட்டு   புல்லரித்து   போவார் .  எல்லாம்   இருந்தும்    அவருக்கு   குழந்தை   பாக்கியம்   இல்லாத   குறை   இருந்தது .   ஊர்   பெரியோர்கள்   எல்லாம்    அவர்   மீது   இரக்கம்   கொண்டு   அவரை   மகேஸ்வர   பூஜை   செய்தால்   பலன்   கிடைக்குமென்று   அறிவுரை      குறினர் .  அவரும்   மிக்க   சிரத்தையுடன்   அப்பூஜையை    செய்தார் .  அப்பூஜை   பலனளித்தது .   அவர்   மனைவி    அழகான   பெண்   குழந்தையை    ஈன்றெடுத்தாள் .  பெற்றோர்   மகிழ்ச்சிக்கு   அளவில்லை .  அக்குழந்தைக்கு       பூம்பாவை   என்று   பெயரிட்டு   அருமை         பெருமையுடன்    வளர்த்தனர் .

Thursday 21 March 2019

சம்பந்தர்   காலையில்   எழுந்ததும்   எம்பெருமான்   திருவருள்   செய்ததையும்   தான்   அவர்   மேல்   பதிகம்   பாடி   மகிழ்ந்ததையும்   தொண்டர்களிடம்   மகிழ்ச்சியோடு    பகிர்ந்து   கொண்டார் .  தொண்டர்கள்   அதை   கேட்டு    புல்லரித்து   போனார்கள் .  ஐயனின்   பேரன்பு   அவர்களை   பிரமிப்பில்      ஆழ்த்தி யது .     பிறகு   அவர்   அங்கிருந்து   புறப்பட்டு   பக்கத்திலுள்ள   சில   சிவஸ்தலங்களை   சேவித்து   கொண்டு   திரு காளத்தி   சென்றடைந்தார் .   தனது   வலது   பக்கத்தை   கண்ணப்பருக்கு    அளித்த   களத்திநாதரை    மனமுருக   வணங்கினார் .   அங்கிருந்தே   வட   தேசத்திலுள்ள   உத்திர  கைலாசம் ,  கேதாரம் ,  திருக்கோகர்ணம்   முதலான   புண்ணிய      தலங்களை   மனக்கண்ணால்    தரிசித்து   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் .   அங்கு  சில   நாள்   தங்கி   பிறகு   திருவொற்றியூர்   வந்தார் .

Wednesday 20 March 2019

ஆண்   பனைகள்   குலை   தள்ளிய   இப்பெரும்   அதிசயம்   மக்களை   பரவசத்தில்   ஆழ்த்தியது .   ஈசனுக்கு   சம்பந்தர் பால்    உள்ள   ஈடு   இணை   இல்லாத   இப்பாசத்தை   கண்ட   மக்கள்   அசந்து    போனார்கள் .   அதிசயத்தில்   பேச்சற்று   நின்றார்கள் .   சமணர்கள்   இதை   கண்டபின்   மலைத்துப்போய்    சைவத்திற்கு    மாறினர்   அல்லது   ஊரைவிட்டு   ஓடினர் . பின்னர்    சம்பந்தர்   பல    தலங்களை   சேவித்துக்கொண்டு    காஞ்சி   மாநகர்   வந்து   கச்சி   ஏகம்பனை   பதிகங்கள்    பாடி   சேவித்து   மகிழ்ந்தார் .பிறகு   காரைக்கால்   சென்றார் .  புனிதவதி   அம்மையார்   கால்   தரையில்   படைக்கூ டாதென்று   தலையால்   நடந்த   அப்புனித   இடத்தை   கால்பட   நடக்க   விரும்பாத   காழிப்பிள்ளை   வெளியே   தங்கி   மனதார    துதித்தார் . ஈசன்   தன்   அன்பு   மகன்    தன்னை   பாடாது   வெளியே   இருப்பது   சகிக்காமல்   இரவில்   அவர்    கனவில்     தோன்றி   ;சம்பந்தா   என்னை   பாட   மறந்தாயோ '   என்று   வினவினார்.   திடுக்கிட்ட   சம்பந்தர்   ஐயனின்   அன்பு கண்டு    நெகிழ்ந்து   நெக்குருகி   வெளியிலுருந்தே   பதிகங்கள்   பாடினார் .

Tuesday 19 March 2019

சீர்காழியிலிருந்து   கிளம்பிய   சம்பந்தர்   முதலில்   தில்லை   சென்று   நடராஜ   பெருமானை   கண்குளிர   தரிசித்து   கொண்டார் .   பிறகு   சமணர்களால்   கல்லை   கட்டி   கடலில்   வீசப்பட்ட   அப்பர்   பெருமானை   சிறிதும்   காயமின்றி   கரை   சேர்த்த   திருப்பாதிரிப்புலியூர்    ஈசனை   சேவித்துக்கொண்டு   அப்பரேடிகளை   நோய்   தீர்த்து    நாவுக்கரசர்   எனும்   பெயர்  சுட்டி    பாடவைத்த   அண்ணலை   திருவதிகை   விரட்டானேஸ்வரரை   நன்றியுடன்   வணங்கிக்கொண்டார் .   நாரணனும்   பிரமனும்   தேடி   அடி   முடி   காண   முடியாத   தீ   பிழம்பாக   காட்சி   தந்து  பிறகு   அவர்களுக்கு   அருளிய   தலமான   திருவண்ணாமலை   சென்று   ''உண்ணாமுலை    உமையாளொடும் ''   எனும்    பதிகம்   பாடி   மகிழ்ந்தார் .   பிறகு   வேதங்கள்   புசித்த   வேதநாயகர்   குடிகொண்டிருக்கும்   தி ருவோத்தூர்   சென்றார் .  அங்கு   மக்கள்    மகிழ்ச்சியுடன்    பெரும்   வரவேற்பு    அளித்தனர் . நெகிழ்ந்து     போனார்    காழிப்பெருமான் .    அங்கு   சேவிக்கும்போது    ஒரு   பக்தர்   தன்   குறையை   கூறினார் .   அவர் ''  ஐயனுக்காக    பனை   மரங்களை     வளர்த்தேன் .    ஆனால்   என்ன   காரணமோ   எல்லாம்    ஆண்   பனையாக   குலை   தள்ளவே   இல்லை .   சமணர்களின்   பெரும்   கேலிக்கு   ஆளாகி   விட்டேன் ''  என்று   கூறி   வருந்தினார் .   உடனே   சம்பந்தர்    ஐயனை   மனதார      வேண்டி   ''புத்தேர்ந்தாயின ''  எனும்   பதிகம்   பாடினார் . என்ன   அதிசயம் .  இறைவன்      அருளால்    எல்லா     மரங்களும்       குலை    தள்ளின .

Monday 18 March 2019

மடத்தில்   வாகீசப்பெருமானும்   காழிப்பிள்ளையும்   பேசிக்கொண்டிருந்த   போது    பிள்ளை   பாண்டிய   நாட்டில்   தம்   அனுபவங்களை   விளக்கி   கூறினார் .   அரச   தம்பதிகளுடன்   தான்   பாண்டிய   நாட்டில்   சிவத்தலங்களை   சேவித்ததை   விளக்கினார் .   அதை   கேட்டு   அப்பர்   பெருமானுக்கு    தானும்   அத்தலங்களை     சேவிக்க    வேண்டுமென்ற   பேரவா   உண்டாயிற்று .   அதேபோல்   சம்பந்தருக்கு    வாகீசர்    சொல்ல   கேட்டு   தொண்டைநாட்டு   தலங்களை   காணவேண்டுமென    ஆவல்   பெருகிற்று .    ஆளுடைப்பிள்ளை   அப்பர்   பெருமானிடம்   விடை     பெற்று   கொண்டு   காவிரி   கரையில்   திருப்பழனம்   திருவையாறு   மற்றும்   சில   தலங்களை   தரிசித்துக்கொண்டு    சீர்காழி   வந்து   சேர்ந்தார் .  வெகு   நாட்களுக்கு   பிறகு    தோணியப்பரை   காணும்   ஆவலுடன்   ஆலயம்   சென்று   மனமார    தரிசித்தார் .   தந்தையிடம்   தொண்டை   நாட்டு   தலங்களை   சேவிக்க   தனது   அவாவை   தெரிவித்தார் .   தந்தை   தானும்   கூட   வர   ஆவல்   தெரிவித்தார் .  சம்பந்தர்   மறுத்து   யாகம்   செய்ய   வேண்டிய   அவசியத்தை     கூறி   தோணிபுரத்தில்   தங்கி         இக்கடமைகளை   முடிக்குமாறு   கூறி    அவர்   தம்    தொண்டை   நாட்டு   பயணம்   புறப்பட்டார் .

Wednesday 13 March 2019

பின்னர்    காழிப்பிள்ளை   பௌத்தர்களை   சைவத்தை     தழுவ   செய்த   மன    நிறைவுடன்   திரு க்கடவூர்   சென்று   காலாந்தக   பெருமானை    சேவித்து   கொண்டு   வந்தார் .   அப்போது   திருப்பூந்துருத்தியில்   அப்பர்   பெருமான்    தங்கியிருப்பதாக   கேள்விப்பட்டு    அங்கு    சென்று    அவரை    சேவிக்க    ஆவல்     கொண்டார் .   உடன்   அவரை   பார்க்க   விரைந்தார் .  திருப்பூந்துருத்தி    அடைந்தவுடன்    அப்பர்பெருமான்    எங்கே,எங்கே   என்று   அவலுடன்   வினவினார் .   அப்போது   நாவுக்கரசர்   கீழிருந்து    வெளியே   வந்து   ''இதோ    இருக்கிறேன்   இன்றுதான்    தங்களை    சுமக்கும்   பாக்கியம்     பெற் றேன் .''  என்று   கூறிக்கொண்டே    வந்தார் .   உடனே   சம்பந்தர்    என்னை   இப்பாவத்திற்கு   ஆளாக்கி   விட்டிர்களே   என்று    கூறி   கொண்டு    அவர்    காலில்   விழ   எத்தனித்தார் .   அதற்குள்   அப்பர்    இவர்    காலில்   விழுந்தார் .  இருவரும்   திருமடம்   சென்றனர் .

Monday 11 March 2019

திருநள்ளார்   சென்று   திரும்பிய   சம்பந்தர்    அடுத்து   திருத்தெளிச்சேரி   சென்று   அங்கு   ஈசனை   சேவித்துக்கொண்டு   வந்தார் .  அடியார்கள்   சிவம்    தழைக்க   செய்த   சிலர் ,   சமணரை   வென்ற   சீர்காழி   பெருமான்   வருகிறார்   என்று    கோஷமிட்டு   கொண்டே   வந்தனர் .   அவர்கள்   பௌத்தர்கள்   வசிக்கும்   பள்ளியை   நெருங்கினர் .  பௌத்தர்கள்   அவர்கள்   அவ்வாறு   கோஷமிடுவதை    ஆக்ஷேபித்தனர் .  வாய்   மூடிக்கொண்டு   செல்ல   வேண்டும் .   இல்லாவிடில்   வேறு   மார்க்கமாக   செல்லும்படி   வற்புறுத்தினர் .   அவர்கள்   தலைவன்   புத்தநந்தி   சிறுவன்தானே   என்று   மிக   அலட்சியமாக   பேசினான் .  சினமடைந்த    சம்பந்தர்   ஐயன்    மேல்   பதிகம்   பாடி   அவன்   இடிவிழ    வேண்டுமென்று   வேண்டினார் .   உடனே  பளிச்சென்று   மின்னல்    தோன்றி    அவர்   தலையை   தாக்கி   அங்கேயே    வீழ்ந்தார் .   மற்றவர்கள்   பயந்து   ஓடிவிட்டன ர.    சம்பந்தர்    பக்கத்தில்   மண்டபத்தில்   பல்லக்கை   இறக்க   சொல்லி   அவர்களை   வாதுக்கு   அழைத்தார் .   சாரிபுத்தன்   என்பவன்    அடியார்களுடன்   வாதத்திற்கு   வந்தா ன் .  சம்பந்தர்    அவர்களுக்கு    அன்பேமயமான    சிவபெருமானின்   பெருமைகளை  எடுத்துரைத்தார் .  அவர்களால்   பிள்ளையாரை    எதிர்த்து   வாதம்   செய்ய     முடியவில்லை .   எல்லோரும்   அவரிடமே   திருநீறு    வாங்கி    பூசிக்கொண்டு   சைவம்   தழுவினர் .

Wednesday 6 March 2019

சம்பந்தருக்கு   வில்லவனேஸ்வரரை   காண   வெள்ளம்   வடியும்   வரை   காக்க   பொறுமை   இல்லை.   கட்டி   வைத்திருந்த   ஓடம்   ஒன்றை    அவிழ்த்து   அதில்   அடியார்களை    அமர   செய்தார் .   தானும்   ஏறி   அமர்ந்தார் .   ஐயனை   மனமார   துதித்து   பதிகம்   பாடினார் .   செல்வ   மகன்   கேட்டு      மறுப்பாரா     தந்தை ?  அவன்   திருவருளால்   ஓடம்   சலனமில்லாமல்    மிதந்து   அக்கரை   சேர்ந்தது .  எல்லோரும்   ஆலயம்   சென்று    ஈசனை   மனமார    துதித்தனர் .   அங்கேயே   சில    நாட்கள்   தங்கி ஈசனை   துதித்தார் .   அப்போது   அவருக்கு   தீயிலிட்டபோது   ஆலவாயில்   தன்   ஏட்டை   கருகாமல்   காப்பாற்றிய     திருநள்ளாறப்பன்   நினைவு   வர   உடனே   அவரை   சேவித்து   தனது   மனமார   நன்றி   தெரிவிக்க   பேரவா   எழுந்தது .  உடனே   கிளம்பி திருநள்ளாறு       அடைந்து   அவரை   மனமுருக   தொழுதார் .
சம்பந்தப்பெருமான்   இன்னும்   சில   தலங்களை   சேவித்துக்கொண்டு   குலச்சிறையார்   பிறந்த   ஊரான   மணமேல்குடி   சென்று    அங்கு   சேவித்து   கொண்டா ர் .    அதன்   பிறகு    அவர்   தன்   வழி    செல்ல   அனுமதி   கேட்டார் .   அரச   தம்பதிகளுக்கு   அவரை   பிரிய   மனமே   இல்லை .   தாங்களும்   கூட   வர வேண்டுமென்று     விரும்பினர்.   சம்பந்தர்   அவர்களை  தடுத்து    ராஜாங்க    காரியங்களை   விடுவது    சரியல்ல .  நீங்கள்   செவ்வனே   ஆட்சி   செய்து   மக்களுக்கு   நல்ல   வாழ்வு   கொடுத்து   சிவத்தொண்டு    புரிந்து   வாழ்வதையே   நான்   விரும்புகிறேன்  என்றார்  .    அரசனும்   அவர்    ஆணையை     ஏற்று   கொண்டு   அவரை   வழி    அனுப்பினார் .    அங்கிருந்து      கிளம்பிய   சம்பந்தர்   சில   தலங்களை   சேவித்து   கொண்டு   முள்ளி    வாய்க்காலை     அடைந்தார் .   அக்கரையில்    கொள்ளத்தூரை    அடைய   அவா .  வில்வவனேஸ்வரரை   சேவிக்க    ஆவல்   ஆனால்   வெள்ளம்  இரு    கரையிலும்   பெருகி   ஓடியது .   ஓடங்கள்   கரையில்   கட்டி   வைக்க    பட்டிருந்தன .   

Tuesday 5 March 2019

சம்பந்தர்   தந்தையுடன்   மகிழ்ச்சியுட ன்   இருந்தார் .  அவருக்கு   தான்   வந்த   நோக்கம்   நிறைவேறியவுடன்   பாண்டியநாட்டில்   தங்குவதில்   விருப்பம்   இல்லை .   இன்னும்   தொண்டை   மண்டலத்திலுள்ள   சிவஸ்தலங்களை   சேவிக்க   மனம்     விழைந்தது .  அவர்    பாண்டிய   மன்னனிடமும்   அரசியிடமும்   விடை   பெற்றுக்கொள்ள   சென்றார் .  அவர்களுக்கு   சம்பந்தரை   பிரிய   மனமே   இல்லை .  ஆனாலும்    அவர்  ஞாயமான   கோரிக்கையை   நிராகரிக்க   இயலவில்லை .  சம்பந்தர்   அவர்களை   சமாதானம்   செய்து   பாண்டிய   நாட்டில்   உள்ள   சிவாலயங்களை   தன்னுடன்   வந்து   சேவித்து   பிறகு   தனக்கு   விடை   அளிக்குமாறு   கேட்டுக்கொண்டார் .  அவர்களும்   மகிழ்ச்சியுடன்   சம்மதம்   தெரிவித்தனர் .  திருப்பரங்குன்றம்   திருநெல்வேலி   இன்னும்   பல   தலங்களை   சேவித்து   கொண்டு   சேதுக்கரை   அடைந்து   ராமபிரான்   வணங்கிய   எம்பெருமானையும்   வணங்கி   அங்கிருந்த  படியே  இலங்கையில்   திரிகோணமலையையும்   திருக்கேதீச்சரத்தையும்    வணங்கி   கொண்டார் .    

Monday 4 March 2019

சீர்காழியில்   சிவபாதவிருதயருக்கு    தன்   சின்னஞ்சிறு   மகன்    சமணர்களை   எதிர்த்து   வாதிட   பாண்டியநாடு   சென்ற   செய்தி   கேட்ட   நாள்   முதலாக   இருப்பு   கொள்ளவில்லை .      அப்பர்   பெருமான்   சமணர்களிடம்   அவர்    அனுபவித்த   கொடுமையான   தண்டனைகளை   கேட்டிருப்பதால்   அவர்   மனம்   பட்ட     வேதனை   சொல்லில்   அடங்காது .   அவர்   உடனே   புறப்பட்டு   மதுரையை   அடைந்து   சம்பந்தர்   தங்கியுள்ள   மடத்தை   வந்தடைந்தார் .   அங்கு   மகனை   நலமாக   கண்டதும்   அவர்   அடைந்த   நிம்மதி   சொல்லில்    அடங்காது.   மகனை   அணைத்து   கொண்டு   கண்ணீர்   சொரிந்தார் .   மகன்   ''  தோணியப்பர்   துணை   இருக்க   கவலை   எதற்கு ?  என்று   சொல்லி  '  மண்ணில்   நல்ல   வண்ணம் '  எனும்   பதிகம்   பாடி   தந்தையை    தேற்றினார் .

Friday 1 March 2019

அடியார்களின்   ஆனந்தம்   எல்லை   மீறியது .  சைவம்   மீண்டது   எனும்   ஆரவாரம்    வானை   எட்டியது .  அரசன் ''ஈசனே   முழு   முதற்கடவுள்   என்று   நிரூபணமாகி   விட்டது .  இது   நாள்   வரை   நான்   மதியிழந்து   படுகுழியில்   வீழ்ந்திருந்தேன் .   ஐயனே   இன்று   தங்கள்   கருணையால்   கரையேறி    விட்டேன் ''  என்று    தழுதழுக்க   கூறி   சம்பந்தர்   காலடியில்   வீழ்ந்தார் .  அரசியும்   குலச்சிறையாரும்   இத்தனை   காலமாக   தங்களை   வாட்டிய   வேதனை   நீங்கி   சந்தோஷம்   அடைந்தனர் .   சம்பந்தர்   அங்கிருந்து   புறப்பட்டு   ஆலவாய்   அண்ணலுக்கு   ''விடலாலவாயிலாய் ''   என்ற   பதிகம்   பாடி   தன்   நன்றியை   தெரிவித்து   கொண்டு   தம்   மடத்திற்கு   திரும்பினார் .    வா திலே   தோற்ற   சமணர்களை   அவர்கள்   வாயாலேயே   விதித்த   நிபந்தனையின்படி    மந்திரியார்   கழுவிலேற்றி   தண்டித்தார் .  பாண்டிய   நாட்டில்   மீண்டும்   சைவம்   தழைத்தோங்க   மக்கள்   பக்தியுடன்  எம்பெருமானை   தொழலானார்கள் .
சம்பந்தர்   விட்ட ஏடு    வெள்ளத்தை   எதிர்த்து    வேகமாக   சென்றது .    அடியார்கள்   மகிழ்ச்சி    ஆரவாரம்   வானை    பிளந்தது .   அதே   சமயம்   மற்றும்   ஒரு   அதிசயம்   நிகழ்ந்தது .  ''மன்னவன்  ஓங்குக ''  என்று   ஐயன்   பதிகத்தில்   பாடியதால்   அரசனின்  கூன்   வீழ்ந்த   முதுகும்   நிமிர்ந்தது .   அரசனின்    மகிழ்ச்சிக்கு   எல்லை   ஏது ?   அவன்   அமைச்சரை   அழைத்து   சம்பந்தர்   இட்ட   ஏட்டை   பத்திரமாகவும்   மரியாதையுடனும்    எடுத்து   வர   பணித்தார் . அமைச்சரும்   அவ்வாறே    சென்று   ஒரு   ஆலயத்தின்    பக்கத்தில்   ஓலை    கரை யில்    ஒதுங்கி   இருந்தது .  அதுவும்   ஐயனின்   ஆணை படியே    அருகிலேயே   கரை   ஏறியது     அமைச்சருக்கு   ஆச்சர்யத்தை   அளித்தது .   ஏடுகளை   கண்களில்   ஒற்றி க்கொண்டு     ஆனந்தம்   தாங்காமல்   கூத்தாடினார் .   பிறகு   உள்ளே      சென்று   எம்பெருமானை   தரிசித்து    வணங்கி   ஏட்டை   தலையில்    தயங்கியவாறே   வந்து   சேர்ந்தார் .