Thursday 31 December 2015

இத்தகைய  மானிட  பிறவிக்கே  எக்காலத்தை  சேர்ந்தவர்கள்  ஆனாலும்  பொருந்தும்  சிறந்த  அறிவு  பொக்கிஷமாக  நமக்கு  கிடைத்த  இரு  நூல்கள்  திருக்குறளும் , திருமந்திரமும்  ஆகும் . ஆனாலும்  திருமந்திரம்  அவ்வளவு    புரிந்து  கொண்டு  பின்பற்றுவது  என்பது  மிகக்கடினம் . குறள்  பல  பாஷைகளில்  மொழி பெயற்க்கப்பட்டுள்ளது . தமிழர்கள்  இதற்காக  பெருமை  கொள்ளலாம் .
திருமூலரின்  வழி  நடந்தவர்கள்  என்று  இருவரை  கூறலாம் . அவர்கள்  தாயுமானவர்  மற்றும்  வள்ளலார்  ராமலிங்க  அடிகளார் .
திருமந்திரம்  9 தந்திரங்களாக  பிரிக்கப்பட்டு  எழுதப்பட்டது . ஒவ்வொரு  தந்திரமும்  ஒவ்வொரு  ஆகமத்தை  விளக்குகிறது . ஆடவல்லானின்  பெருமைகளையும்  அவருடைய  திருவிளையாடல்களையும்  முதல்  சில  தந்திரங்கள்  குறிப்பிடுகின்றன .மற்ற  தந்திரங்கள்  வேதத்ததை  மூலமாக  கொண்டு  ஜாதி ,இனம் , மதம்  என்ற  எந்த  வேறுபாடும்  இன்றி  மனித  இனத்திற்கே  உயர்ந்த  வாழ்வு  வாழ்ந்து  ஈசனை  அடையும்  உயர்ந்த  மார்கத்தை  போதிக்கிறது . இது  உலக  பொது  மறை .  "யாம்  பெற்ற  இன்பம்  பெருக  இவ்வையகம் " இது  திருமூலர்  வாக்கு .எத்தகைய  பெரிய  உள்ளம்  அப்பெருமகனார்க்கு .

Monday 28 December 2015

திருமந்திரம்   எனும்  அரிய  நூல்  சிவபெருமான்  தம்  திருவாக்கால்   உலகம்  உய்ய  அளித்த  9 ஆகமங்களை  மக்களுக்கு   புரியும்  வகையில்    திருமூலரால்  தமிழில்  எழுதப்பட்டது .ஒவ்வொரு  பாடலும்  அவரால்  ஒரு  வருட  த்யானத்திற்கு  பின்  எழுதப்பட்டதாக  கூறப்படுகிறது.    

Wednesday 23 December 2015

திருமுலர்  தன்  குருவான  அகத்தியரை  வணங்கி  அவர்  ஆசியுடன்  நூலை  தொடங்குகிறார் . திருமந்திரம்  ஓர்  அரிய  படைப்பு  . திருஆவடுதுறையில்  ஒரு  மரத்தின்  பொந்தில்  த்யானத்தில்  அமர்ந்து  கொண்டு  வருடத்திற்கு  ஒரு  பாடலாக  3000   பாடல்கள்  எழுதியாதாக  கூறப்படுகிறது . அவை  இனம்  மொழி , நாடு  என்ற  பாகுபாடு  இன்றி  மனித  குலத்திற்கே  பொதுவான  படைப்பாகும் '.ஒன்றே  குலம்  ஒருவனே  தேவன் " இது  திருமூலரின்  வாக்கு . மனித  இனமே  மேம்பட  அவர்  உலகுக்கு  ஈந்த  கொடை . " என்னை  நன்றாக  இறைவன்  படைத்தனன்  தன்னை  நன்றாக  தமிழ்  செய்யுமாறே ."  இது  அவர்  வாக்கு . 

Friday 18 December 2015

ஆவினங்களின்  மீது  தன்  உயிரையே  வைத்திருந்த  மூலன் . அவ்வாவினங்களு க்காக  தன்  ஆன்மாவை  ஈந்த  சித்தர்  இவர்களின்  அன்பை  கண்ட  ஈசன்  உமை  அன்னை  தன்னை  பசுவின்  வடிவில்  பூசித்த  திரு ஆவடுதுறை   என்னும்  இடத்தை  தேர்ந்து  எடுத்து  அவ்விடத்தில்  தன்  மேலான  பணியை  தொடங்குமாறு   திருமூலருக்கு  ஆணை  இடுகிறார் . அவ்வாறே  திருமூலரும்  மூலனின்  மனைவியிடம்   விடை  பெற்றுக்கொண்டு    புறப்படுகிறார் .  

Thursday 17 December 2015

thirumoolar cont.

விதி  தன்  விளையாட்டை  ஆரம்பிக்கிறது . சுந்தரநாதர்  கிராம  மக்களை  அழைத்துக்கொண்டு  தான்  தன்  உடலை  மறைத்து  வைத்த  இடத்தை  அடைகிறார் . பெரும்  அதிர்ச்சிக்கு  உள்ளாகிறார் . அங்கு  அவர்  மறைத்து  வைத்த  இடத்தில்  அவர்  உடலை  காணவில்லை . மனம்  நொந்து  ஈசனை  துதிக்கிறார் .   உலகுக்கு  தான்   செய்ய  வேண்டிய  கடமை  செய்ய  தனக்கு  அந்த  உடலின்  அவசியத்தை  எண்ணி  மலைக்கிறார் .  தன்  குருவான  அகத்தியரிடம்  ஆசி  பெற்று  சைவ  ஆகமங்களை  எளிய  தமிழில்  தொகுத்து  மக்களுக்கு  அளிக்க  வேண்டிய  தன்  கடைமையை  செய்ய  முடியாமல்  போய்விடுமோ  என்று  அஞ்சி  ஈசனை  மனமுருக  வேண்டுகிறார் . ஈசனும்  தானே  அவர்  உடலை  மறைத்ததாகவும்  மூலன்  தன்னை  அடைந்துவிட்டதாகவும்  கூறுகிறார் .  வயது , அறிவு  முதிர்ச்சியால்  பாமர  மக்களுக்கு  புரியும்  வகையில்  தமிழ்  மறையை  எழுத  மூலன்  உடலில்  இருந்துகொண்டு  எழுதுவதே  பொருந்தும்  என்று  தானே  அவ்வாறு  செய்ததாக  கூறூகிறார் அசரீரியாக.  அந்த  மக்கள் அதை  கேட்டு   மெய் சிலிர்த்து  அவரை  வணங்கி  வழி  அனுப்புகின்றனர் .  சுந்தரநாதர்  திருமூலர்  ஆகிறார் .

Friday 11 December 2015

thirumoolar

பசுக்கள்  மூலனை  உயிருடன்  கண்டதும்  அடைந்த  மகிழ்ச்சி  சொல்லில்  அடங்காது . சுந்தரநாதரும்  அவைகளை   கொட்டிலில்  சேர்த்துவிட்டு  கிளம்ப  எண்ணினார் .விதிவசத்தால்   அங்குள்ள  மக்களுக்கு  விளக்கமளிக்க  நேர்ந்தது .முதலில்  நம்ப  மறுத்த  மக்கள்  பிறகு  நம்பி  மூலனின்  உடலை  ஒப்படைத்து  முறைப்படி  இறுதி  சடங்குகளை  முடிக்க  உதவுமாறு  வேண்டுகின்றனர் . அவரும்  சம்மதிக்கிறார் .

Tuesday 8 December 2015

moolan

 சுந்தரநாதர்  அன்று  மாலை  இறங்கி  மலை  அடிவாரத்தை  அடைந்தபோது  அவர் கண்ட  காட்சி
அவரை  திடுக்கிட  வைத்தது. அவர்  அந்த  காட்சியை  கன்டு  மிகுந்த  வேதனை யுற்றார் . மூலன்  அங்கு  உயிரற்ற  நிலையில்  இருந்தான் . பசுக்கள்  அவனை  சுற்றி  கண்ணீருடன்  புல்லை  கூட  அருந்தாமல்  மிக்க  விசனத்துடன்  கத்திக்கொண்டிருந்தன . சித்தர்  ஞான  திருஷ்டியால்  அவன்  விதி  முடிந்து  ஈசனை  அடைந்துவிட்டதை  உணர்கிறார் . அந்த  வாயில்லா  ஜீவன்களின்  துக்கம்  அவரை  மிகவும்  நெகிழ  வைக்கிறது . அவைகளை  எப்படியாவது  சமாதானம்  செய்து  அவைகளின்  இருப்பிடத்தை  அடைய  செய்ய  வேண்டும்  என  தீர்மானிக்கிறார் . உடனே  மலைமேல்  ஒரு  மறைவான  இடத்தை  அடைந்து  தன்  உயிரை  மூலனின்  உடலில்  பிரவேசிக்க  செய்து   மூலனை  உயிர்  பெற  செய்கிறார் . தன்  உடலை  மறைவான  இடத்தில்  கிடத்துகிறார் . 

Friday 4 December 2015

thirumoolan

ஒருநாள்  மூலன்  பசுக்களை  சுந்தரர்  தியானத்தில்  அமர்ந்திருந்த  மலை  அடிவாரத்தில்    மேய  விட்டிருந்தான் . அவன்  தியானத்தில்  அமர்ந்திருந்த  சித்தரை  கண்டு  அவர்  மீது  மிக்க  அனுதாபத்துடன்  அவரை  அணுகி  இங்கு  உணவு  ஒன்றும்  கிடைக்காது  பசியுடன்  இருப்பீர்கள்  என்று  தன்னுடைய  சாப்பாடை  எடுத்து  கொள்ளுமாறு  வற்புர்த்துகிறான் . அவர்  தன்போன்ற   சித்தர்களுக்கு  பசி  தாகம்  எதுவும்  கிடையாது  என்று  கூறியும்  மூலன்  நம்ப  மறுக்கிறான் . அவரும்  அவன்  அன்பான  கோரிக்கையை  மறுக்க  மனமில்லாமல்  அதை  பெற்றுக்கொள்கிறார் . இந்த  அன்புக்கு  பிரதியாக  தான்  ஏதாவது  செய்ய  விரும்புவதாக  கூறுகிறார் . ஆனால்  மூலன்  தான்  ஒரு  குறையும்  இல்லாமல்  சந்தோஷமாக  இருப்பதால்  தனக்கு  ஏதும்  தேவை  இல்லை  என்று  மறுக்கிறான் . அவரும்  தேவை  வரும்போது  தருவதாக கூறி  விடை  பெறுகிறார் . 

Thursday 3 December 2015

moolan

இப்போது  திருமூலராக  புதுப்பிறவி  எடுக்கும்  மூலனை  பற்றி  காண்போம் . சாத்தனூர்  கிராமத்தை  சேர்ந்த  மூலன்  ஒரு  அபூர்வ மான  மனிதன் . அன்பும்  மனிதநேயமும்  மிகுந்தவன் . அங்குள்ள  எல்லா  பசுக்களையும்  மேய்த்து  பாதுகாப்பவன் . அவன் பால்  ஐந்து  அறிவு  கொண்ட  அந்த  ஜீவன்கள்  காட்டும்  நன்றியும்  அன்பும்  யாரையும்  வியக்க  வைக்கும் . அவ்வூர்  மக்கள்  அவனிடம்  தங்கள்  பசுக்களை  ஒப்படைத்து  விட்டு  கவலையற்று  இருந்தனர் . அவனும்  அவன்  மனைவியும்  அவைகளை  தங்கள்  குழந்தைகளைப்போல்  பாதுகாத்து  வந்தனர் .

Tuesday 1 December 2015

thirumoolar

பயிற்ச்சி  முடிந்து  கைலையில்  இருந்து  புறப்பட்டு  சுந்தரர்  அகத்தியரை  காண  தெற்கு  நோக்கி  புறப்படுகிறார் .அவர்  நேபாளம்  பசுபதி  நாதர்,  கேதாரிநாதர்  காசி , திருகாளத்தி  காஞ்சி  மற்றும்  பல  க்ஷேத்திரங்களில்  சிவபெருமானை  சேவித்துகொண்டு  வருகிறார் . திரு ஆவடுதுறை   நோக்கி  வருகிறார் . வழியில்  சாத்தனூர்  எனும்  கிராமத்தை  அடைகிறார் . அங்கு  அவர்  ஓரிடத்தில்   த்யானத்தில்  அமர்கிறார் .